Tuesday, March 24, 2009

பூநூலே மாட்டிக்குவான் போல!!!

"என்னடா மெஸ்ல நம்ம மக்களையே ஒருத்தனையும் காணோம், முருகா?"

"நீ மூனு வருடம் சென்று திடீர்னு கனடாவிலிருந்து வருவனு யாருக்கும் தெரியாது. திடீர்னு வந்து இறங்கி கல்யாணம் பண்ணப்போறேன் னு பத்திரிக்கையோட நிக்கிற?"

"என்னடா பண்றது? என் நிலைமை அப்படி! எங்கே எல்லோரும்?"

"எல்லோரும் நம்ம மதியழகன் கல்யாணத்திற்கு போயிருக்கார்கள் சென்னையில். எனக்கு நாளைக்கு தீசிஸ் டிஃபென்ஸ், அதான் நானாவது இருந்தேன்"

"எந்த மதியழகன்?"

"அவந்தாண்டா கம்ப்யூட்டர் சயண்ஸ் ல எம் எஸ் முடிச்சான் இல்லை, அப்புறம் பி எச் டி இங்கேயே ஜாயின் பண்ணினான். அடுத்த மாதம் யு எஸ் போறான்"

"ஓ அவனா! என்னோடதாண்டா பேச்சலர்ஸ் பண்ணினான்! சரி, பொண்ணு யாருடா?"

"அவன் க்ளாஸ்மேட் தான். பேரு, ருக்மிணி, பிராமணப் பெண், ரொம்ப அழகா இருப்பாள்"

"ஜோக் அடிக்கிறயா?'

"இல்லைடா. லவ் மேரேஜ் மாதிரி. பேரெண்ட்ஸும் ஒத்துக்கிட்டார்கள். ஏன் இப்படி கேக்கிற?"

"பார்ப்பான், பார்ப்பான்னு ப்ராமின்ஸை எதற்கெடுத்தாலும் கண்ணா பின்னானு திட்டுவான்டா நம்ம மதி! அவனா ஒரு ப்ராமின் பொண்ண கல்யாணம் பண்ணப்போறான்?!!"

"நெஜம்மாவாடா சொல்ற?"

"அய்யோ அவன் ரொம்ப அடாவடியா திட்டுவான்!"

"இப்போ பாப்பாத்தியை கல்யாணம் பண்ணப்போறான் போல!"

"நம்பவே முடியலைடா!"

"அதுவும் கல்யாணம் பிராமண முறைப்படி, அம்மி மிதிச்சு, அருந்ததி, பார்த்து, பெண்ணை தாரை வார்த்து கொடுத்து, இத்யாதி இத்யாதி.."

"நீ சொல்றத பார்த்தா பூநூலே மாட்டிக்குவான் போல!"

"அதென்னவோ உண்மைதான்!"

"என்னவோ போ! வாழ்க பல்லாண்டு!"

-----
இது ஒரு பழைய பாடல்! இது ஒருவகையில் உண்மைதான்!


பிரேமையின் ஜோதியினால்...
பேரின்பம் எங்கும் பொங்கும்
இவ்வையம் தங்கும் மெய்யன்பினால்
பேதமெல்லாம் அழியும் - இப்புவிமேல்
அன்பு மழை பொழியும்.

பாரில் பிரேமை ஒன்றில்லையானால்
சீருலாவிடுமோ.. ஓ...
ஜீவன் வாழ்ந்திடுமோ.... - மெய்யன்பினால்
துன்பம் மறைந்தொழியும் - இப்புவிமேல்
இன்ப மழை பொழியும்.. ஓ..

மனத்தாலே நினைத்தாலும் இனிப்பாகும் எண்ணம்
மாறாது வளர் காதல் கொண்டாலே திண்ணம்..ஓ..
ஆணும் பெண்ணும் அன்பாலே இணைந்தால்
அமர வாழ்வல்லவோ.. மெய்யன்பினால்
ஜாதி மறைந்தொழியும் - இப்புவிமேல்
நீதி மழை பொழியும் .. ஓ..

7 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

ஏதோ சொல்றிங்க என்ன சொல்றிங்கனு இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க...

கதை புரியாமல் நானும் பின்னூட்டம் போட்டுவிட்டால் பிறகு இந்த பக்கம் வராதடானு சொல்லுவிங்க அப்புரம் மெண்டல்னு கூடவே ஒரு ஆப்படிச்சிடுவிங்க... :))

வருண் said...

***VIKNESHWARAN said...
ஏதோ சொல்றிங்க என்ன சொல்றிங்கனு இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க...

கதை புரியாமல் நானும் பின்னூட்டம் போட்டுவிட்டால் பிறகு இந்த பக்கம் வராதடானு சொல்லுவிங்க அப்புரம் மெண்டல்னு கூடவே ஒரு ஆப்படிச்சிடுவிங்க... :))

24 March, 2009 11:41 PM***

வாங்க VIKNESHWARAN!!!

காதல்னு வந்துருச்சுனா, பிராமணத்துவேசம், ஜாதியெல்லாம் பெரிய விசயமில்லை னு சொல்ல வரேன்னு நினைக்கிறேன் :-)))

கயல்விழி said...

ஜாதி ஒழிப்பு கதையா? நல்லா இருக்கு :)

மணிகண்டன் said...

பாட்டுக்கும் கதைக்கும் சுத்தமா ஒத்து வரலையே !

கதை பிராமின பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு பூணூல் போட்டுப்பானு சொல்லுது. பாட்டு மெய்யன்பினால் ஜாதி மறைந்தொழியும்ன்னு சொல்லுதே ! ஏன் இப்படி ? காதல் மூலமா ஜாதி ஒழியாதுன்னு சொல்ல வரீங்களா ? கீழ் ஜாதின்னு சொல்லப்படும் ஜாதில இருக்கறவன் மேல் ஜாதின்னு சொல்லப்படும் ஜாதிக்கு வர காதல் பண்ணனும்ன்னு சொல்றீங்களா ?

ஹி ஹி ஹி. கடுப்பு ஆகாதீங்க ! தினம் தினம் எழுதினா, எழுத்து நடை, எழுதும் விஷயங்கள தெளிவா எழுத முடியும்ன்னு சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா உங்களுக்கு நேர்மாறா இருக்கு. நீங்க முன்னாடி எழுதின பதிவு எல்லாம் சீரா, நேரடியா இருந்தது. அதுக்கு அப்புறம் ஒரே constructive criticism !! பதிவா போட்டுட்டீங்களா ! அதுல உங்க எழுத்தோட ஸ்டைல் மொத்தமா மாறிடுச்சு !

வருண் said...

***கயல்விழி said...
ஜாதி ஒழிப்பு கதையா? நல்லா இருக்கு :)***

நன்றி, கயல் :-)))

வருண் said...

***கதை பிராமின பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு பூணூல் போட்டுப்பானு சொல்லுது. பாட்டு மெய்யன்பினால் ஜாதி மறைந்தொழியும்ன்னு சொல்லுதே !***

பூனூல் அவன் போடலைங்க. பூனூல் போட்டாத்தான் ருக்மிணினு சொன்னா சரினு பூனூல் மாட்டிக்குவான் நு அவன் ஃப்ரெண்ஸ் கேலி பண்ணுறாங்க!

வருண் said...

***ஹி ஹி ஹி. கடுப்பு ஆகாதீங்க ! தினம் தினம் எழுதினா, எழுத்து நடை, எழுதும் விஷயங்கள தெளிவா எழுத முடியும்ன்னு சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா உங்களுக்கு நேர்மாறா இருக்கு. நீங்க முன்னாடி எழுதின பதிவு எல்லாம் சீரா, நேரடியா இருந்தது. அதுக்கு அப்புறம் ஒரே constructive criticism !! பதிவா போட்டுட்டீங்களா ! அதுல உங்க எழுத்தோட ஸ்டைல் மொத்தமா மாறிடுச்சு !***

இதுதான் உண்மையான கன்ஸ்ட்ரெக்டிவ் க்ரிடிசிஸம்ங்க, மணிகண்டன்!

ஆமா எழுத்து இப்போ மாறி இருக்கு. இனிமேல் மறுபடியும் மாறி நல்லா ஆயிடும்ங்க. :-)))