Tuesday, April 6, 2010

பிடிக்காத ரஜினி படம்!

ரஜினி படங்கள் பொதுவாக பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாக இருக்கும்! உலகத்தில் எந்த ஒரு மனிதனும் 100 பேரோட சண்டைபோட்டு ஜெயிக்கமுடியாது என்பது எல்லாருக்கும் தெரியும். அது, "சிவாஜி" யா இருந்தாலும் சரி, வேட்டையாடு விளையாடு "ராகவனா" இருந்தாலும் சரி, "அந்நியனா" இருந்தாலும் சரி அது சினிமாலதான் இதெல்லாம் நடக்கும்! இதுபோல் குறைகள் ரஜினி படத்தில் நெறையவே பார்க்கலாம். ஆனால் சினிமா என்பது பொழுதுபோக்குனு மட்டும் பார்த்தால் பொதுவாக ரஜினி படங்களை ரசிக்கலாம்.

மகேந்திரன் மூனாவது முறையாக ரஜினியுடன் இணைந்து எடுத்தப் படம்தான் நான் சொல்ல வருகிற "கை கொடுக்கும் கை". முதல்ப் படம் முள்ளும் மலரும், ரெண்டாவது, ஜானி. இந்த மூனாவது படத்தில் வரும் நாயகி ரேவதி கண் பார்வை இல்லாதவராக நடித்து இருப்பார். இது ஒரு மாதிரி மலையாளப் படம் இல்லைனா புட்டண்ணாவுடைய கன்னடப்படம்போல் ஒரு சீரியஸான படம் இது.

ரஜினி நல்லாவே நடித்து இருப்பார் பாடல்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கும்.ஆனால்...

அதாவது உலகத்தில், கற்பழிப்பு நடந்துகொண்டுதான் இருக்கு, கொலைகள், ட்ரக் எடுக்கிறவங்க, குடிக்கு அடிமையாகி எதைப்பத்தியுமே கவலைப்படாமல் மனைவியைக்கூட வித்து வாழ்பவர்கள். இதெல்லாம் நம்மால செய்ய முடியாது என்பது மட்டுமல்ல நம்மால் இதுபோல் விசயங்களை பார்த்து ரசிக்கவும் முடியாது! ஆனால் ஊர் உலகத்தில் எல்லாமே நடகக்த்தான் செய்யுது. அதைப் போய் சினிமால பார்க்கனுமா என்ன?

கை கொடுக்கும் கை படத்தில் எனக்கு என்ன மிகப் பெரிய பிரச்சினைனா,

* கண் பார்வை தெரியாத அவர் குளிக்கும்போது ஒரு கேரக்டர் அதை வேடிக்கை பார்ப்பது போலவும்,

* கண் பார்வை தெரியாத இவரை கற்பழிப்பது போலவும் சில மிருகத்தனமான காட்சிகள் வரும்.

என்னைப் பொறுத்தவரையில் இந்தப் படம் எடுத்த மகேந்திரன் என்ன மாதிரி நெனச்சு எடுத்தார்னு தெரியலை (edited as per prasanna rajan's suggestion) . இதுபோல் குறையுள்ளவர்களை இதுமாதிரியான இன்னல்களுக்கு ஆளாக்குவது மிருகத்தனம். மிருகத்தைவிட கேவலமான மனித மிருகங்களால்தான் இதெல்லாம் செய்யமுடியும். இல்லைனா மனநிலை சரியில்லாதவர்களால். இதைப்போயி ஒரு படத்தில் காட்டணுமா என்ன? அதனால் யாருக்கு என்ன பாடம் புகட்டப்படுகிறது?

திரு. பிரசன்னா ராஜன் , நான் சொன்ன கருத்தில் உள்ள தவறுகளை இந்த பின்னூட்டங்களில் சொல்லியுள்ளார். வாசிப்பவர்கள் உண்மையை உணரவேண்டும் என்பதற்காக அதை இங்கே தருகிறேன்

Prasanna Rajan said...

மகேந்திரன், ஞாநி அவர்கள் நடத்தும் ‘கேணி’ சந்திப்பில் ஒரு முறை பேசினார். அவரிடம், அவர் இயக்கத்தில் பிடிக்காத படம் என்ன என்று கேட்க, “கை கொடுக்கும் கை” என்று உடனே பதில் அளித்தார்.

மேலும் நீங்கள் குறிப்பிடும் காட்சிகள், மகேந்திரன் விரும்பி எடுத்ததே அல்ல. இதன் மூலப் படத்தில் அந்த காட்சிகள் இல்லவே இல்லை. உண்மையை சொல்லப் போனால் தயாரிப்பாளர், ரஜினியை நச்சரிக்க, ரஜினி பின்னர் மகேந்திரனிடம் அந்த காட்சிகளை இணைக்க சொனார்.

மகேந்திரனை ஒரு ‘சைக்கோ’ என்று ஏன் இப்படி ஒருமையில் விமர்சிக்கிறீர்கள். தமிழ் சினிமாவில் 'Auteur’ என்ற பதத்தில் அழைக்கக் கூடிய, விரல் விட்டு எண்ணக் கூடிய படைப்பாளிகளுள் ஒருவர் அவர். உங்கள் பதிவை மட்டும் படித்து விட்டு பின்னூட்டத்தை படிக்காமல் எத்தனையோ பேருக்கு நீங்கள் சொல்வது மட்டும் தானே சென்றடையும்.

தயவு செய்து உங்கள் பதிவில் உள்ளதை மாற்றி விடுங்கள். இது போன்ற வெளிப்படையான கருத்துகளை தீர விசாரிக்காமல் எழுதாதீர்கள்...

----

Prasanna Rajan said...

மன்னிக்க வேண்டும் வருண். ‘சைக்கோ’ என்ற பதம் மட்டுமல்ல, நீங்கள் மகேந்திரனை பற்றி குறிப்பிட்ட மொத்த கருத்தையும் தவறு என்கிறேன். இருப்பினும் அதை நீக்கியதற்கு நன்றி.

ரஜினி மஹேந்திரன் பக்கம் போகவில்லை என்பதை விட, மகேந்திரன் ரஜினி பக்கம் போகவில்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் இதற்கு அடுத்து மற்றொரு ரீமேக் படத்தில் ரஜினி நடிக்க, மகேந்திரனை இயக்குமாறு தயாரிப்பாளர் அழைக்க மகேந்திரன் மறுத்து விட்டார்.
-------
க்ளிண்ட் ஈஸ்ட்வுட் படமான "ஹை ப்ளைண்ஸ் ட்ரிஃப்டர்" னு ஒரு படம் இருக்கு. அதிலே, க்ளிண்ட், ஒரு பெண்ணை கற்பழிப்பதுபோல படம் பிடிச்சு இருப்பாங்க. ஆனால், அந்தப் பெண் க்ளிண்ட்டிடம் இருந்த மிருகத்தனத்தை தூண்டி, மிருக உணர்வை வெளிக்கொண்டு வந்ததற்காக அது ஒரு தண்டனை என்பது போல இதை எடுத்து இருப்பாங்க! அதனால்அவ்வளவு மோசமான இந்த மிருகத்தனமான கற்பழிப்பு சீன்ல கூட இதுபோல் மிருக உணர்வை யாரிடமும் தூண்டக்கூடாது என்கிற பாடம் சொல்லப் பட்டதாகத்தான் எனக்குத் தோனுது. The rape can be justified to some extent in "High Plains Drifter" but not in "கை கொடுக்கும் கை" என்பது என் தாழ்மையான எண்ணம்!

படம் படுதோல்வினு நம்புறேன். காரணம் என்னனா இந்தப்படத்தை சாதாரண மனிதாபிமானம் உள்ளவர்கள் ரசிக்கவோ, பார்க்கவோ முடியாது! அதுவும் ரஜினி படம் பார்த்து ரசிப்பவர்களுக்கு சாண்ஸே இல்லை!

இந்தப்படத்துக்கு அப்புறம் ரஜினி, மஹேந்திரன் பக்கமே போகலை! (மஹேந்திரன் ரஜினி பக்கமே போலை என்பதுததான் உண்மை என்கிறார் பிரசன்னா ராஜன்- edited later) :)))

24 comments:

ராஜ நடராஜன் said...

உங்க வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற டி.வி.டி விற்கிற கடை பேர் என்னங்க:)

வருண் said...

*** ராஜ நடராஜன் said...

உங்க வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற டி.வி.டி விற்கிற கடை பேர் என்னங்க:)

6 April 2010 12:18 PM***

வாங்க, நடராஜன்!

ஆங்கிலப் படங்கள் எல்லாம் ஃப்ரியாவே இங்கே நூலகத்தில் கெடைக்குது.

பழைய டி வி டி எல்லாம் ரெண்ட் பண்ணுவதில்லை. ஒரு டி வி டி $1 டாருக்கு சேல் ல போட்டுட்டாங்க. அதனால ஒரு கலக்ஷனே இருக்கு! :)) அதன் விளைவுதான் இது போல :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்தப் படத்தினைப் பற்றி மகேந்திரன் ஒரு பேட்ட்டியில் புலம்பியிருந்தார்.

அவர் எதிர்பார்த்த பல காட்சிகளை ரஜினி சொன்னார், ரஜினி சொன்னார் என்றே மாற்றிவிட்டார்களாம். அவரும் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டவரை ஒரு அளவிற்கு மேல் எதிர்க்கக் கூடாது என்று லேசான வாதங்களுக்குப் பிறகு ஏற்றுக் கொண்டு விட்டாராம்.

படத்தின் தோல்வி பற்றி ரஜினியும் அவரும் பேசும் வாய்ப்பு அமைந்த போது இந்த காட்சிகளை நாம் மாற்றி எடுத்ததுதான் காரணம் என்று சொல்ல

ரஜினி. நானும்கூட உங்களிடம் கேட்க நினைத்தேன். முதலில் திட்டமிட்டிருந்த காட்சிகளை நீங்கள் மாற்றியதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இருந்தாலும் ஏதாவது காரணம் இருக்கும் என்று நடித்து முடித்தேன் என்றாராம்.

மகேந்திரனுக்கும் ரஜினிக்கும் இருந்த சிறிய இடைவெளியில் படத்தை சிலர் கற்பழித்துவிட்டார்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

முள்ளும் மலரும்

கதாநாயகனை தலைக்கு மேல் தூக்கி வைத்து

அவனுக்கு இருந்த பல குணக் குறைகளையும் மீறி அவனுக்கு தங்கை மீது இருந்த பாசமும், அதைவிட அவனுக்கு தங்கை காதலை உதறுகிறாள் என்ற உடன் தனது ஈகோவை விட்டுக் கொடுக்கும் மனமும் அவனை அதவாது கதாநாயனை மிக மேலே கொண்டு போய் வைத்த ஹீரோ வொர்ஷிப் படம்தான்.

ஜானியும் அப்படித்தான்.

பலதிருட்டுக்களைச் செய்தாலும் அவனது திருட்டுகளும் கூட வேறொருவரால ஏற்றுக் கொள்ளப் பட்டு இவன் தப்பித்துவிடலாம். ஒரு பெண்ணின் காதலால் அவனுக்கு வாழ்வில் பிடிப்பு ஏற்படலாம். சரியான பெண் தேர்வு இல்லையென்ரால் கொலை கூட செய்யலாம், அவனும் ஹீரோதான் என்று மீண்டும் ஹீரோ வொர்ஷிப் செய்த படங்கள்.

ஆனால் கைகொடுக்கும் கை. வில்லன் வகையறாக்களுக்கு வகை அமைத்துக் கொடுத்த கிறுக்குப் படம்

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...
முள்ளும் மலரும்

கதாநாயகனை தலைக்கு மேல் தூக்கி வைத்து

அவனுக்கு இருந்த பல குணக் குறைகளையும் மீறி அவனுக்கு தங்கை மீது இருந்த பாசமும், அதைவிட அவனுக்கு தங்கை காதலை உதறுகிறாள் என்ற உடன் தனது ஈகோவை விட்டுக் கொடுக்கும் மனமும் அவனை அதவாது கதாநாயனை மிக மேலே கொண்டு போய் வைத்த ஹீரோ வொர்ஷிப் படம்தான்.***

என்ன தலை!!!!!!!!!!!!!!முள்ளும் மலரும்க்கு இப்படி ஒரு விமர்சனம் தந்து இருக்கீங்க! என்னாலகற்பனையே பண்ணமுடியலை!

முள்ளும் மலரும்ல ரஜினி ஆல்மோஸ்ட் வில்லன் தான். ரஜினி செய்வது எதுவுமே எந்த ஒரு பார்வையாள ருக்கும் நியாயமாத் தெரியாது, தலை. ரஜினி வீம்புக்கு செய்ற எல்லாமே வில்லத்தனம்தான்.

நீங்க, அந்தப்படத்தை எப்படி ஹீரோ வொர்ஷிப் படம்னு சொல்றீங்கனு எனக்குப்புரியலை!

ரஜினி நடிப்புத்தான் க்ளாஸ். ஆனால் ரஜினி கேரக்டரை யாருமே வொர்ஷிப் பண்ணலைனுதான் எனக்குத் தோனுது!

வருண் said...

***ஜானியும் அப்படித்தான்.

பலதிருட்டுக்களைச் செய்தாலும் அவனது திருட்டுகளும் கூட வேறொருவரால ஏற்றுக் கொள்ளப் பட்டு இவன் தப்பித்துவிடலாம். ஒரு பெண்ணின் காதலால் அவனுக்கு வாழ்வில் பிடிப்பு ஏற்படலாம். சரியான பெண் தேர்வு இல்லையென்ரால் கொலை கூட செய்யலாம், அவனும் ஹீரோதான் என்று மீண்டும் ஹீரோ வொர்ஷிப் செய்த படங்கள்.***

ஜானி, கமர்சியல்லா ஃப்ளாப் மூவிதான்னு நெனைக்கிறேன். அந்த ரஜினி ரோல் வந்து சிகப்பு ரோஜாக்கள் கமல் ரோல் மாதிரி. ரிஷிமூலமோ என்னவோ ஒரு படத்தில் சிவாஜியும் இதுபோல் நடத்தை தவறிய மனைவியை கொலை செய்வார்னு நினைக்கிறேன்.

சமீபத்தில் இந்தப் படம் (ஜானி) பார்க்கலை. ஞாபகம் இல்லை!

ரஜினி விசிறிகள் எல்லாம் உங்ககூட சண்டைக்கு வரப்போறாங்க! :)))))

வருண் said...

***ஆனால் கைகொடுக்கும் கை. வில்லன் வகையறாக்களுக்கு வகை அமைத்துக் கொடுத்த கிறுக்குப் படம்***

இதை நான் ஒத்துக்கிறேன், தல :)

--------------------

****SUREஷ் (பழனியிலிருந்து) said...
இந்தப் படத்தினைப் பற்றி மகேந்திரன் ஒரு பேட்ட்டியில் புலம்பியிருந்தார்.

அவர் எதிர்பார்த்த பல காட்சிகளை ரஜினி சொன்னார், ரஜினி சொன்னார் என்றே மாற்றிவிட்டார்களாம். அவரும் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டவரை ஒரு அளவிற்கு மேல் எதிர்க்கக் கூடாது என்று லேசான வாதங்களுக்குப் பிறகு ஏற்றுக் கொண்டு விட்டாராம்.

படத்தின் தோல்வி பற்றி ரஜினியும் அவரும் பேசும் வாய்ப்பு அமைந்த போது இந்த காட்சிகளை நாம் மாற்றி எடுத்ததுதான் காரணம் என்று சொல்ல

ரஜினி. நானும்கூட உங்களிடம் கேட்க நினைத்தேன். முதலில் திட்டமிட்டிருந்த காட்சிகளை நீங்கள் மாற்றியதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இருந்தாலும் ஏதாவது காரணம் இருக்கும் என்று நடித்து முடித்தேன் என்றாராம்.

மகேந்திரனுக்கும் ரஜினிக்கும் இருந்த சிறிய இடைவெளியில் படத்தை சிலர் கற்பழித்துவிட்டார்கள்.***

இந்த மேட்டர் இப்போத்தான் கேள்விப்படுறேன், தல. பகிர்தலுக்கு நன்றி, தல :)

Unknown said...

நன்றாக விமர்சிக்கறீர்கள்.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

ராமலக்ஷ்மி said...

மு.ம-வில்

//ரஜினி நடிப்புத்தான் க்ளாஸ். ஆனால் ரஜினி கேரக்டரை யாருமே வொர்ஷிப் பண்ணலைனுதான் எனக்குத் தோனுது!//

கரெக்ட்:)!

தமிழ் உதயம் said...

மகேந்திரனை முழுமையா உணரனும் என்றால், பூட்டாத பூட்டுகள் என்கிற படத்தை பாருங்க. மகேந்திரன் - தோற்றே போய் இருக்கக் கூடாத கலைஞன், தோற்று போயிட்டார். அதற்கு அவர் தான் காரணம். ஆனால் நஷ்டம் தமிழ் ரசிகர்களுக்கு.

வருண் said...

*** தமிழ் உதயம் said...

மகேந்திரனை முழுமையா உணரனும் என்றால், பூட்டாத பூட்டுகள் என்கிற படத்தை பாருங்க. மகேந்திரன் - தோற்றே போய் இருக்கக் கூடாத கலைஞன், தோற்று போயிட்டார். அதற்கு அவர் தான் காரணம். ஆனால் நஷ்டம் தமிழ் ரசிகர்களுக்கு.***

நான் பூட்டாத பூட்டுக்கள் பார்க்கலைங்க.

ஹலோ! நான் மஹேந்திரனை குறை சொல்ல வந்தது, "குறையுள்ளர்களை இதுபோல் காட்டவேண்டியதில்லை " என்கிற என்னுடைய தனிப்பட்ட குற்றச்சாட்டு.

I strongly believe his muLLum malarum is a classic and it is the best movie for rajni until today, may be for ever! :)

Prasanna Rajan said...

மகேந்திரன், ஞாநி அவர்கள் நடத்தும் ‘கேணி’ சந்திப்பில் ஒரு முறை பேசினார். அவரிடம், அவர் இயக்கத்தில் பிடிக்காத படம் என்ன என்று கேட்க, “கை கொடுக்கும் கை” என்று உடனே பதில் அளித்தார்.

மேலும் நீங்கள் குறிப்பிடும் காட்சிகள், மகேந்திரன் விரும்பி எடுத்ததே அல்ல. இதன் மூலப் படத்தில் அந்த காட்சிகள் இல்லவே இல்லை. உண்மையை சொல்லப் போனால் தயாரிப்பாளர், ரஜினியை நச்சரிக்க, ரஜினி பின்னர் மகேந்திரனிடம் அந்த காட்சிகளை இணைக்க சொனார்.

மகேந்திரனை ஒரு ‘சைக்கோ’ என்று ஏன் இப்படி ஒருமையில் விமர்சிக்கிறீர்கள். தமிழ் சினிமாவில் 'Auteur’ என்ற பதத்தில் அழைக்கக் கூடிய, விரல் விட்டு எண்ணக் கூடிய படைப்பாளிகளுள் ஒருவர் அவர். உங்கள் பதிவை மட்டும் படித்து விட்டு பின்னூட்டத்தை படிக்காமல் எத்தனையோ பேருக்கு நீங்கள் சொல்வது மட்டும் தானே சென்றடையும்.

தயவு செய்து உங்கள் பதிவில் உள்ளதை மாற்றி விடுங்கள். இது போன்ற வெளிப்படையான கருத்துகளை தீர விசாரிக்காமல் எழுதாதீர்கள்...

Prasanna Rajan said...

Idiosyncracy and oddities என்ற பதங்களை அறிந்திருப்பீர்கள். அந்த குணாதிசயங்கள் நம்மில் யாரிடம் தான் இல்லாமல் இல்லை.

அது போன்றதொரு குணம் தான் முள்ளும், மலரும் படத்தில் வரும் ரஜினியின் பாத்திரமும். உண்மையில் சொல்லப் போனால், தன் மேலதிகாரியிடம் கொண்டு இருக்கும் ஒரு விதமான ஈகோ தான் அவனை அப்படி எல்லாம் செய்யத் தூண்டுகிறது.

என்னைக் கேட்டால் அதுவும் ஒரு விதமான ஹீரோயிசம் தான். வில்லன் என்று சொல்வதை விட Anti Hero என்ற பதம் தான் பொருந்தும்...

வருண் said...

Prasanna rajan:

I will remove that word, but that was disturbing. If it was rajni's suggestion, I would not mind calling hims a "the same manner" either.

வருண் said...

***Prasanna Rajan said...
மகேந்திரன், ஞாநி அவர்கள் நடத்தும் ‘கேணி’ சந்திப்பில் ஒரு முறை பேசினார். அவரிடம், அவர் இயக்கத்தில் பிடிக்காத படம் என்ன என்று கேட்க, “கை கொடுக்கும் கை” என்று உடனே பதில் அளித்தார்.

மேலும் நீங்கள் குறிப்பிடும் காட்சிகள், மகேந்திரன் விரும்பி எடுத்ததே அல்ல. இதன் மூலப் படத்தில் அந்த காட்சிகள் இல்லவே இல்லை. உண்மையை சொல்லப் போனால் தயாரிப்பாளர், ரஜினியை நச்சரிக்க, ரஜினி பின்னர் மகேந்திரனிடம் அந்த காட்சிகளை இணைக்க சொனார். ***

யார் ஐடியாவா இருந்தாலும் இது ரொம்ப மட்டமான டேஸ்ட் தான். :(

வருண் said...

***Prasanna Rajan said...

Idiosyncracy and oddities என்ற பதங்களை அறிந்திருப்பீர்கள். அந்த குணாதிசயங்கள் நம்மில் யாரிடம் தான் இல்லாமல் இல்லை.

அது போன்றதொரு குணம் தான் முள்ளும், மலரும் படத்தில் வரும் ரஜினியின் பாத்திரமும். உண்மையில் சொல்லப் போனால், தன் மேலதிகாரியிடம் கொண்டு இருக்கும் ஒரு விதமான ஈகோ தான் அவனை அப்படி எல்லாம் செய்யத் தூண்டுகிறது.

என்னைக் கேட்டால் அதுவும் ஒரு விதமான ஹீரோயிசம் தான். வில்லன் என்று சொல்வதை விட Anti Hero என்ற பதம் தான் பொருந்தும்...

7 April 2010 12:07 PM***

anti-hero, heroism எல்லாம் ஓ கே தாங்க! நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால், நண்பர் சுரேஷ், "ஹீரோ வொர்ஷிப்" னு ஒரு வார்த்தை பயங்படுத்தினார். அதுதான் என் மறுப்புக்குக் காரணம் :)

இதுபோல் "காளி" களை நான் பார்த்து இருக்கேன். :)

Prasanna Rajan said...

மன்னிக்க வேண்டும் வருண். ‘சைக்கோ’ என்ற பதம் மட்டுமல்ல, நீங்கள் மகேந்திரனை பற்றி குறிப்பிட்ட மொத்த கருத்தையும் தவறு என்கிறேன். இருப்பினும் அதை நீக்கியதற்கு நன்றி.

ரஜினி மஹேந்திரன் பக்கம் போகவில்லை என்பதை விட, மகேந்திரன் ரஜினி பக்கம் போகவில்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் இதற்கு அடுத்து மற்றொரு ரீமேக் படத்தில் ரஜினி நடிக்க, மகேந்திரனை இயக்குமாறு தயாரிப்பாளர் அழைக்க மகேந்திரன் மறுத்து விட்டார்.

வருண் said...

***Prasanna Rajan said...

மன்னிக்க வேண்டும் வருண். ‘சைக்கோ’ என்ற பதம் மட்டுமல்ல, நீங்கள் மகேந்திரனை பற்றி குறிப்பிட்ட மொத்த கருத்தையும் தவறு என்கிறேன். இருப்பினும் அதை நீக்கியதற்கு நன்றி.***

நான் ஒண்ணு பண்ணுறேன். உங்க பின்னூட்டதை காப்பி செய்து பதிவில் போட்டுவிடுகிறேன். வாசிக்கிறவங்க என் தவறை நீங்க திருத்தியதையும் படிச்சு உண்மையைத் தெரிஞ்சுக்குவாங்க!

**ரஜினி மஹேந்திரன் பக்கம் போகவில்லை என்பதை விட, மகேந்திரன் ரஜினி பக்கம் போகவில்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் இதற்கு அடுத்து மற்றொரு ரீமேக் படத்தில் ரஜினி நடிக்க, மகேந்திரனை இயக்குமாறு தயாரிப்பாளர் அழைக்க மகேந்திரன் மறுத்து விட்டார்.

7 April 2010 12:41 PM***

பிரசன்னா ராஜன்: I did not think Rajni will get involved in director's business this much!!!

வருண் said...

பிரசன்னா ராஜன்: உங்க பின்னூட்டங்களைப் பதிவிலேயே நுழைத்துவிட்டேன்! நன்றி :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

1.தன்னைப் போன்ற,

2.தான் செய்ய விரும்புவதை ஆனால் தான் செய்ய முடியாததை செய்யும்

ஒரு பிம்பமாக காளி பாத்திரம் பெரும்பாலான நபர்களால் பார்க்கப் பட்டிருக்கும் பாத்திரமாக காளி இருந்திருக்கும் என்பதே என் கருத்து.

முள்ளும் மலரும் ரஜினி, ஒரு கமெர்சியல் ஹீரோதான்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ரஜினி எந்தக் காலத்திலும் இயக்குநர்கள் விரும்பி எடுப்பதையோ, தயாரிப்பாளர்கள் விரும்புவதையோ தடுக்க நினைத்தகாக நாம் பார்த்திருக்கிறோமா?

கண்டிப்பாக கை கொடுக்கும் கை படத்திலும் ரஜினியின் விரும்பத்திற்காகவெல்லாம் மாற்றங்கள் நடந்திருக்காது.

நான் சொன்ன மகேந்திரன் பேட்டி எப்போது ஒளிபரப்பானது என்று நினைவில் இல்லை. ஆனால் ரஜினி சொன்னதாக தயாரிப்பாளர் குழு அல்லது வேறு சிலர் மகேந்திரனிடம் சொல்லி செருகிய காட்சிகள் பெரும்பாலான மக்களிடம் படத்தை அந்நியப் படுத்திவிட்டது.

இதில் மகேந்திரன் மேல் எனக்கு கோபம் மாத்ரியான கருத்துக்கள் என்ன என்று தெரியவில்லை.

ஒரு கருத்துப் பரிமாற்ற இடைவெளி நாயகனுக்கும், இயக்குநருக்கும்.

அதில்தான் இந்தப் படத்தின் தோல்வி உருவாகி இருக்கிறது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஏனென்றால் இதற்கு அடுத்து மற்றொரு ரீமேக் படத்தில் ரஜினி நடிக்க, மகேந்திரனை இயக்குமாறு தயாரிப்பாளர் அழைக்க மகேந்திரன் மறுத்து விட்டார்.
//

இதை நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

//ரஜினி மஹேந்திரன் பக்கம் போகவில்லை என்பதை விட, மகேந்திரன் ரஜினி பக்கம் போகவில்லை என்பது தான் உண்மை. //

இது எப்படி என்று தெரியவில்லை. என்னால் இந்த வாசகத்தை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு அமைந்து ஆனால் விரும்பாமல் விலகிக் கொண்டதாக செய்திகள் எதுவும் வந்தது போல் தெரியவில்லை.

அதாவது அந்தப் படத்தில் ரஜினி ஹிரோ என்பதற்காக மகேந்திரன் விலகிக் கொண்டதாகவோ, ம்கேந்திரன் இருக்கிறார் என்பதற்காக ரஜினி விலகிக் கொண்டார் என்பதகாவோ செய்திகள் இருப்பதாக தெரியவில்லை.

வருண் said...

*** SUREஷ் (பழனியிலிருந்து) said...

1.தன்னைப் போன்ற,

2.தான் செய்ய விரும்புவதை ஆனால் தான் செய்ய முடியாததை செய்யும்

ஒரு பிம்பமாக காளி பாத்திரம் பெரும்பாலான நபர்களால் பார்க்கப் பட்டிருக்கும் பாத்திரமாக காளி இருந்திருக்கும் என்பதே என் கருத்து.

முள்ளும் மலரும் ரஜினி, ஒரு கமெர்சியல் ஹீரோதான்.

7 April 2010 2:33 PM***

உண்மைதான். ஆனால் ரஜினி ஒரு கையை இழந்த பிறகு பாதிப்படம் இருக்கு! கை இழந்த பிறகு வருகிற ரஜினியிடம் "ஹீரோயிஸம்" கிடையாது. வெறுப்பு, விரக்தி, ஃப்ரெஸ்ட்ரேஷன்தான் இருக்கும். இதை யாருமே ஒரு ஹீரோவிடம் எதிர் பார்க்க மாட்டாங்க! இந்த ரோல் கொஞ்சம் வேறு மாதிரியானது தல!

16 வயதினிலே வருகிற பரட்டைகூட சாகிறவரை அந்த "திமிரோட"தான் இருக்கிறார்போல காட்டுவாங்க. ஆனால் இந்தப்படத்தில் ரஜினி ஒரு தாழ்வுமனப்பான்மையுடன், இயலாமையுடன் நடிப்பது ஹீரோயிஸம் இல்லை, தல>

smart said...

Congrats Varun. You have deserved the Third Rank. All the best