Monday, April 26, 2010

ராமனும் நாந்தான் ராவணனும் நாந்தான்!


விக்ரம் நடிக்க மணிரத்னம் இயக்க ராவன் அல்லது ராவணன் படம் பேரு அறிவிச்சதும் எனக்கு ஒரே குழப்பம். என்ன படம்ப்பா இது? புராணப்படமா இல்லை சமூகப்படமா? இதுபோல் க்யூரியாஸிட்டியை உருவாக்குவதே மணிரத்னத்தின் முதல் வெற்றி! போய் எல்லா விபரத்தையும் படிக்கலாம். எல்லார் கற்பனையும் வாசிச்சால் ஓரளவுக்கு கதை புரியத்தான் செய்யும். ஆனால் தலைப்பை வச்சே படத்தை யூகிப்பதே ஒரு கெட்ட பழக்க மாயிடுச்சு! தளபதி மாதிரி ஒரு சமூகப் படம் போல இருக்கு! அதாவது தளபதி "கர்ணன்" படத்தை தழுவியதுபோல இந்த ராவணன்!

இந்தப் படத்தில் என்ன விஷேசம்னா, நடிகர் விக்ரம் முதல்முறையாக மணிரத்னத்துடன் இணைவதுதான்! இவருடைய நடிப்பையும், திறமையையும் வெளிக்காட்டி ஸ்டார்வால்யுவை மேலே கொண்டுபோக மணிரத்னம் கொடுத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு இது. தமிழில் உள்ள எல்லா டாப் ஸ்டார்களும் விக்ரம் மேல் பொறாமைப் பட வைக்கும் நிலையை ராவன் அறிவிப்பும், படப்பிடிப்பும் உருவாக்கியுள்ளது.

கமலுக்கு அடுத்து விமர்சகர்களால் கண்ணா பின்னானு பாராட்டுப்பெற்ற ஒரே தமிழ் நடிகர் விக்ரம்தான்! கமலே ஒருமுறை விக்ரமைப் பற்றி விமர்சகர்கள் பாராட்டுவதைத் தாங்க முடியாமல் விக்ரமுக்கு காமெடி பண்ணத்தெரியாது என்று சொல்லி தன்னை ஒரு படி மேலே உயர்த்திக்கொண்டார்!

இன்று விமர்சகர்களால் திறம்மைமிக்க நடிகர் என்று பாராட்டப்பட்டது உண்மைதான் என்று உணர்த்தும் அளவுக்கு மணிரத்னமும் விக்ரமை நம்பி எதிரும் புதிருமான ரெண்டு ரோல்களை ரெண்டு வேர்ஷன்ல கொடுத்துள்ளாராம். அதாவது ஹிந்திப்படத்தில் இவர் ஐஸ்வர்யாராயின் போலிஸ் கணவரான தேவ் என்ற பாத்திரத்திலும், தமிழில், "outlaw" மற்றும் ஹீரோ பாத்திரமான "வீரா" வாகும் நடிக்கிறாராம்! மொத்தத்தில் ரெண்டு ரோலுமே படத்தில் முதன்மைப் படுத்தப்பட்ட கேரக்டர்கள்!

இதில் வீரா கேரக்ட்டர்தான் ஹீரோவாக இருக்கும் போல இருக்கு. போலிஸ்காரர் கேரக்டர் ரசிகர்களைப் பொறுத்தவரையில் வில்லந்தான் என்று தோனுது.

இதுமாதிரி, ராமனாகவும், ராவணனாகவும் . ஹிந்தி மற்றும் தமிழில் நடிக்கும் விக்ரம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்!

ஆமா இதில் ராமன் ராவணன் எங்கிருந்து வந்தார்கள்னு கேக்குறீங்களா? ஒரு யூகத்தில் ஈஸீயா சொல்லலாமே.

தேவ் - ராமன்

ராகினி (தேவின் மனைவி)- சீதை

வீரா (beera)- ராவணன்.

அனேகமாக ராகினியை, வீரா கடத்தி வச்சு இருப்பாரு! நிச்சயம் இந்த ராவணன் (வீரா)வும் அவரிடம் பலவந்தமாக தவறாக நடக்காமல் டீசண்டான கைதியாக வச்சிருப்பாரு! :)

ராவன், ஆடியோ ஏப்ரல் 24 ரிலீஸ் ஆயிடுச்சு. ஏ ஆர் ரகுமான் - மணிரத்னம் படப்பாடல்கள் என்னைக்கு சோடை போச்சு?

படம் ஜூன்ல வெளிவரப்போகுதுனு சொல்றாங்க! நிச்சயம் வெள்ளித்திரையில் பார்க்க வேண்டிய படம்தான்!

Let us hope the movie lives up to the expectations! We always expect too much from maNirthnam, which often bring him down these days. :)

6 comments:

ராஜ நடராஜன் said...

//கமலுக்கு அடுத்து விமர்சகர்களால் கண்ணா பின்னானு பாராட்டுப்பெற்ற ஒரே தமிழ் நடிகர் விக்ரம்தான்! கமலே ஒருமுறை விக்ரமைப் பற்றி விமர்சகர்கள் பாராட்டுவதைத் தாங்க முடியாமல் விக்ரமுக்கு காமெடி பண்ணத்தெரியாது என்று சொல்லி தன்னை ஒரு படி மேலே உயர்த்திக்கொண்டார்!//

உண்மைய சொன்னா படி உயர்த்திக்கிறாங்களா?

ராஜ நடராஜன் said...

ராவணன் கதையை நீங்க எங்க திருடுனீங்க?

எனக்கெல்லாம் திருடற பழக்கமே கிடையாது:)திருடனை பிடிக்கிற பழக்கம்தான்.அதனாலேயே ராவண் IIFA.

வருண் said...

***Blogger ராஜ நடராஜன் said...

//கமலுக்கு அடுத்து விமர்சகர்களால் கண்ணா பின்னானு பாராட்டுப்பெற்ற ஒரே தமிழ் நடிகர் விக்ரம்தான்! கமலே ஒருமுறை விக்ரமைப் பற்றி விமர்சகர்கள் பாராட்டுவதைத் தாங்க முடியாமல் விக்ரமுக்கு காமெடி பண்ணத்தெரியாது என்று சொல்லி தன்னை ஒரு படி மேலே உயர்த்திக்கொண்டார்!//

உண்மைய சொன்னா படி உயர்த்திக்கிறாங்களா?***

தல: நானும் உண்மையைத் தானுங்கோ சொன்னேன்!

விமர்சகர் கமல் எல்லாருக்கும் தெரிஞ்ச உண்மையை சொன்னார்னா, நானும் பலருக்குப் புரியாத ஒரு உண்மையைத்தான் சொன்னேன்.

அப்புறம், கமலை யார் கெடுத்ததுனு யோசிச்சுப்பார்த்தால் உங்களை மாதிரி ரசிகர்கள்தான் னு தோனுது! இதுவும் உண்மைதான் தல :)))

வருண் said...

***Blogger ராஜ நடராஜன் said...

ராவணன் கதையை நீங்க எங்க திருடுனீங்க?

எனக்கெல்லாம் திருடற பழக்கமே கிடையாது:)திருடனை பிடிக்கிற பழக்கம்தான்.அதனாலேயே ராவண் IIFA.

26 April 2010 11:27 AM***

தல!

நீங்க வேற, விக்கிலயே இதைவிட தெளிவான ப்ளாட் சொல்லீட்டாங்க.

நீங்க கதையெல்லாம் எழுதுறது, படிக்கிறதுகூட இல்லையே! கதை எழுதுற என்ன மாதிரி ஆளுகளுக்குத்தான் இப்படியெல்லாம் கதைவிடத்தெரியும்!

விக்கில யார்விட்ட கதையோ! :)))

Chitra said...

////Let us hope the movie lives up to the expectations! We always expect too much from ManiRathinam, which often bring him down these days.///


.....வாழைப் பழத்துல ஊசியை சல்னு இறக்கிட்டீங்க ..... :-)

வருண் said...

வாங்க, சித்ரா!

மணிரத்னத்திடம் எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமாயிடுச்சுங்க! என்னுடைய கணிப்பில் அவரால் தமிழ்மக்கள் எதிர்பார்ப்பை ஈடுசெய்ய முடியாமல் போராடுகிறார்னுதான் தோனுது.

அந்தவகையில் ஷங்கர் மக்களை படத்துக்குப் படம் திருப்திப்படுத்து வதில் ஒரு படி மேலேதான்.

ஒரு வழியிருக்கு, மணி மறுபடியும் ஈஸியா கமர்சியல் வெற்றிப்படம் கொடுக்க! :) நம்ம ரஜினியோட இணைந்து இன்னொரு படம் கொடுத்தால் எளிதாக தமிழ்த் திரையுலகில் மறுபடியும் டாப்க்கு போகலாம். இல்லைனா கமலோட சேர்ந்து வொர்க் பண்ணலாம். அதெல்லாம் நடக்கிறமாதிரி தெரியலை :)

ராவணன் தமிழ்ல எப்படிப் போகுதுனு பார்க்கலாம். :)