Monday, April 12, 2010

திருவள்ளுவருக்கும் சாதிச் சாயம்!


இப்போ எதுக்கு இந்த சாதி மேட்டர்னு கோபம் வருதா? நம்ம விக்கில திருவள்ளுவர் பற்றி என்ன போட்டிருக்காங்கனு பார்த்தால் அவர் சாதியைத்தான் பெருசா ரிசேர்ச்ப் பண்ணி மொதல்ல போட்டு இருக்காங்க!

திருவள்ளுவர் ஒரு பார்ப்பனராக இருந்தாலும் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. காரணம்? அவர் வெஜிட்டேரியன், கடவுள் நம்பிக்கை உள்ளவர். மேலும் அந்தக்காலத்தில் பார்ப்பனர்களைத் தவிர வேற யாரு படித்து இருந்தா? வேற யாரையும் கோயில்கள் மற்றும் பள்ளிக்கூடம் பக்கத்திலேயே விடவில்லையே!

படிச்சவங்கதானே குறளெல்லாம் எழுதமுடியுமானு கேக்காதீங்க? மேலும் அவர் புலால் உண்ணுவதை தப்புனு சொல்லியிருக்கார் அதனால அவர் பார்ப்பனராகத்தான் இருக்கனும் என்று நம்புபவர்கள் பலர் இருந்தாலும் எதுக்கு வம்புனு ஒரு சிலர் வெளியே சொல்வதில்லை. வெளியே ஒரு சிலர்தான் சொன்னாலும், திருவள்ளுவர் ஒரு வெஜிட்டேரியன் என்பதே இதற்கு அடிப்படைக்காரணம்.

புலால் உண்ணுவது தப்புனு சொல்லிட்டு திருவள்ளுவரே அந்தத் தப்பை செய்தும் இருக்கலாம் னுகூட விதண்டாவாதம் பண்ணலாம். நம்ம மக்களிடம் எப்போவுமே உபதேசம் ஊருக்குத்தானே? நம்ம எது சரினு சொல்வதை நாமே ஃபாலோ பண்ணுவதில்லை! ஏன் னா நாமெல்லாம் கேவலம் மனுஷர்கள் (திருவள்ளுவரையும் சேர்த்து)

ஆனால் இன்னொரு பக்கம் திராவிடத் தமிழர்கள் திருவள்ளுவர் யாரா வேணா இருந்துட்டுப் போகட்டும், ஆனால் பார்ப்பனர்ங்கிறதை மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கங்கனம்கட்டி, திருவள்ளுவர் பார்ப்பனராக இருக்கவே முடியாது என்பதை பலவிதமாக நிரூபிக்க முயன்று ஓரளவு வெற்றியும் அடைந்துள்ளனர். திருவள்ளுவர் ஒரு சமண மதத்தைச் சார்ந்த "ஜெயின்" னாக இருக்கலாம் என்று பலர் ஒரு முடிவே செய்துட்டாங்க! திருவள்ளுவர் ஒரு சமண மதத்தை சேர்ந்த "ஜெயின்", ஆனால் தமிழர்னு பலரும் நம்புறாங்க!

சமீபத்தில் இவர் சாதி/மதம்/குலம் பத்தி என்ன சொல்றாங்கனு பார்த்தால், "வள்ளுவர்" என்கிறது ஒரு ஆதி திராவிட வகுப்பைக்குறிக்கும். அதனால் திருவள்ளுவர் ஒரு ஆதி திராவிடராகத்தான் இருக்கும் என்று நெறையா ரிசேர்ச் பண்ணி சொல்லியிருக்காங்க! திருக்குறள்ல திருவள்ளுவர், "வள்ளுவர்" னு கையொப்பம் இட்டு இருந்தாரா? இவருடைய பெயர் வள்ளுவர்னு நமக்கு எப்படி தெரிந்தது? னு எனக்குத் தெரியலை. இந்த ஆதி திராவிடர் என்கிற தியரி அவருடைய பெயர் வள்ளுவர் என்று இருப்பதால் வந்த தியரி.

நல்லவேளை, திருக்குறளோட ஒரு தன் சாதிச்சான்றிதழையும் இவர் வைச்சிட்டுப் போகலை! திருவள்ளுவர் காலத்தில் ஜாதியெல்லாம் இருந்து இருக்குமானும் எனக்குத் தெரியலை.

அப்புறம் மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப் படத்தில் உள்ள மாதிரி திருவள்ளுவர் இருந்து இருப்பார்னு ஒரு நம்பிக்கை. சிவன், விஷ்ணு, லக்ஷ்மி, சரஸ்வதி, முருகன், விநாயகர் படங்கள் சிலைகள் மாதிரித்தான் திருவள்ளுவர் படமும். திருக்குறளுடன் சேர்ந்து இவர் ஓவியம் அல்லது சிலை எதுவும் கிடைக்க வில்லைனு நினைக்கிறேன்!

மேலும் சில நம்பிக்கைகள் .

* திருக்குறள் (எல்லாக் குறளுமே) ஒருவரால் எழுதப்பட்டது என்று நம்புகிறார்கள்!! பலரால் எழுதப்பட்டு "வள்ளுவர்" அதை தொகுத்து வழங்கவில்லை என்று நம்பப்படுகிறது!

* திருவள்ளுவர் ஒரு பெண்ணா இருக்க முடியாது என்று நம்பப் படுகிறது. காரணம்? திருக்குறளில் கொஞ்சம் பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தி இருப்பதாகவும் பெண்ணியவாதிகள் சொல்றாங்க!

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு!

என்கிற குறளை திருவள்ளுவரைப் பற்றிய தியரி களுக்கும் நாம நிச்சயம் "apply" பண்ணனும்

8 comments:

Chitra said...

1330 vs சாதி - என்ன கொடுமை சார், இது!?

smart said...

என்னங்க அந்த போஸ்ட் போணியாகலை என்றது அடுத்து ஒரு சாதி போஸ்ட?

ஏதாவது பகுத்தறிவோடு எழுதியிருந்தா நிறைய ஓட்டு விழுந்துருக்குமோ!!!

வருண் said...

***Chitra said...

1330 vs சாதி - என்ன கொடுமை சார், இது!?

12 April 2010 12:02 PM***

"வெட்டிவேரு" வாசம் பாட்டுக்கேட்டு இருக்கீங்களா?

சாதிமத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்! :(

வருண் said...

***smart said...

என்னங்க அந்த போஸ்ட் போணியாகலை என்றது அடுத்து ஒரு சாதி போஸ்ட?

ஏதாவது பகுத்தறிவோடு எழுதியிருந்தா நிறைய ஓட்டு விழுந்துருக்குமோ!!!

12 April 2010 12:33 PM***

ஓட்டா! :))))

தல! நானே என் பதிவுக்கு ஓட்டெல்லாம் போடுவதில்லை! உங்களுக்கு என் கேரக்டரே இன்னும் புரியலை. :)))

இப்போயெல்லாம் உங்களை மாதிரி ஆட்கள்தான் பகுத்தறிவைப் பத்தி ரொம்ப பேசுறாங்க பாருங்க! :)))

smart said...

//ஓட்டா! :))))

தல! நானே என் பதிவுக்கு ஓட்டெல்லாம் போடுவதில்லை! //

நீங்க தான் தமிழிஷ்ல இணைச்சுருக்கேங்களே

போஸ்ட் போணியாகலை

வருண் said...

***smart said...
//ஓட்டா! :))))

தல! நானே என் பதிவுக்கு ஓட்டெல்லாம் போடுவதில்லை! //

நீங்க தான் தமிழிஷ்ல இணைச்சுருக்கேங்களே

போஸ்ட் போணியாகலை

12 April 2010 12:50 PM ***

உங்களுக்குத் தெரியாதா? தமிழிஷ் கணக்கு எப்போவுமே கிடைத்த ஓட்டுக்கள் - உங்கள் ஓட்டு (1) னுதான் கணக்குப் பண்ணனும்! :)

கோவி.கண்ணன் said...

சமண / பவுத்த சமயங்களில் பரிந்துரை தான் புலால் அற்ற உணவு. புலால் உண்ணுவது விலங்குகளை பலி இடுவது வேதவழி பார்பனர் வழக்கம், புலால் மறுத்தல் பற்றி வேதங்களில் மூச் விடவில்லை. திருவள்ளுவர் சமண்ராகவோ புத்தமதத்தினராகவோ இருக்க வாய்ப்புகள் மிகுதி. சம்மணமிட்டு அமர்ந்திருப்பவர்களும் அந்த மதத்தினரே. யோகமொல்லாம் அறிமுகப்படுத்தியவர்கள் அவர்களே.

திருவள்ளுவர் பார்பனர் சைவ சமயத்தினர் என்பது கட்டு மற்றும் இட்டுக்கதை.

வருண் said...

***கோவி.கண்ணன் said...

சமண / பவுத்த சமயங்களில் பரிந்துரை தான் புலால் அற்ற உணவு. புலால் உண்ணுவது விலங்குகளை பலி இடுவது வேதவழி பார்பனர் வழக்கம், புலால் மறுத்தல் பற்றி வேதங்களில் மூச் விடவில்லை. திருவள்ளுவர் சமண்ராகவோ புத்தமதத்தினராகவோ இருக்க வாய்ப்புகள் மிகுதி. சம்மணமிட்டு அமர்ந்திருப்பவர்களும் அந்த மதத்தினரே. யோகமொல்லாம் அறிமுகப்படுத்தியவர்கள் அவர்களே.

திருவள்ளுவர் பார்பனர் சைவ சமயத்தினர் என்பது கட்டு மற்றும் இட்டுக்கதை.

12 April 2010 8:02 PM***

சமண/பெளத்த மதத்தை சேர்ந்த தமிழர்னு சொறதுதான் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து என்பதென்னவோ உண்மைதான் கோவி!

உங்க கருத்துக்கு நன்றி :)