Thursday, April 15, 2010

யார் அந்த மாமி?- கடலை கார்னர் (49)

"பிருந்த்! யார் அது புதுசா ஒரு மாமி காலையிலே உன்னோட திரிஞ்சது?"

"அதை ஏன் கேக்குறீங்க, என் ஃப்ரெண்டோட அத்தை. திடீர்னு காலையிலே கால் பண்ணி, என் ஆண்ட்டி சிகாகோ வந்திருக்காங்க, அவங்களை கவனிச்சுக்கச் சொன்னாள். அவங்க நேர இங்கேயே வந்துட்டாங்க! இன்னைக்கும் இந்த வீக் எண்ட் டும் என்னோடதான் "ஸ்டே"ப் பண்ணப்போறாங்க. "

"அவங்களோட ஆத்துக்காரர் வரலையா?'"

"டைவோர்ஸீ, கண்ணன்!"

"இப்போ சுதந்திரப்பறவைனு சொல்லு! எவனுக்கும் அடிமையா இருக்க வேண்டியதில்லை,பாரு!"

"ஆமா, நல்லா பறந்தாங்க போங்க! அவங்க இருக்க வெயிட்டுக்கு ஓடுறதே கஷ்டம்!"

"ஏய்! அவங்க வயசுல நீ எப்படி இருப்பியோ? ஆனா நீ எப்படி இருந்தாலும் நல்லாத்தான் இருப்ப, பிருந்த்"

"இப்போ எதுக்கு இந்த ஐஸ்?"

"இல்ல, அந்த மாமிட்ட நீங்க ரொம்ப ஸ்லிம்மா அழகா இருக்கீங்கனு சொல்லி நான் அவங்கள நம்பவைக்கவா?"

"அதுக்காக இப்படி ஒரு பச்சைப்பொய் சொல்லனுமா என்ன?"

"ஸ்லிம், குண்டு இதெல்லாம் ரிலேடிவ்தானே? வொர்க் அவ்ட் பண்ணித்தான் இந்த நிலைமையோ என்னவோ! சரி, ஆத்துக்காரனை அடிச்சு வெறட்டியாச்சு சரி! அவங்களுக்கு பிள்ளை குட்டி எதுவும் கெடையாதா?"

"இல்லையாம். அதான் பிரச்சினையோ என்னவோ!"

"அதென்ன பிரச்சினை? ஏன் நிம்மதியா 24 மணி நேரமும் எந்தத்தொல்லையில்லாமல் ரெண்டுபேரும் ஜாலியா காமசாஸ்திரம் படிக்க வேண்டியது தானே?"

"இப்படியும் இதை பாஸிட்டிவா சொல்லலாமா? பிள்ளை குட்டி இருந்தா, அதுக செய்ற பிரச்சினையில் இவங்க ஒற்றுமையா இருந்து இருக்க வாய்ப்பிருக்கு இல்லையா, கண்ணன்?

"ஏய்! நீ பிருந்தா தானே? கொஞ்சம் எழுந்து திரும்பி நில்லு! உன்னக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக்கிறேன்"

"என்னையா கிள்ளிப்பார்ப்பாங்க? உங்களைத்தான் கிள்ளிப் பார்க்கனும்! அதுவும் இங்கேயா கிள்ளுவாங்க?"

"அங்க கிள்ளினாத்தான் உனக்கு வலிக்காது! என்ன இப்படி "பெரிய ஞானி" மாதிரி பேசுற நீ, பிருந்த்?"

"எல்லாம் உங்களோட இண்ஃப்ளுயெண்ஸ்தான்!"

"இப்போ குறை எதுவுமேயில்லாமலே அமெரிக்கன்ஸ்லாம் குழந்தை பெத்துக்கிறதில்லை! சந்தோஷமாத்தானே இருக்காங்க? நம்மதான் குழந்தைதான் ஒலகம்னு நெனைக்கிறது. பெத்து, வளர்த்து ஆளாக்கிவிட்டுட்டு, அப்புறம் "சோதனை மேல் சோதனை" "பாலூட்டி வளர்த்த கிளி" னு தத்துவம் பேசிக்கிட்டு திரியுறது"

"இதெல்லாம் என்ன பழமொழியா?"

"உன்ட்ட போயி சொன்னேன் பாரு! இதெல்லாம் பழைய தத்துவப்பாடல்கள், அம்மணி!"

"அம்மணினா?"

"அம்மணினா ஜானகிராமன் கதையில் வர்ற ஹீரோயின் னு அர்த்தம்!'

"ஜானகிராமன் கதை படிச்சதில்லையே! எந்த நாவல் இது?"

"மரப்பசு! நீ கட்டாயம் படிக்கனும்! ஆண்ட்டிய வாங்கி அனுப்பச் சொல்லு!!"

"சரி, இந்த வாரம் பேசும்போது அம்மாவ வாங்கி அனுப்பச் சொல்றேன்."

"சரி, அந்த மாமி எங்க போச்சு இப்போ, ஆளைக் காணோம்?"

"அவங்களா? வீட்டிலே கொண்டுபோய் விட்டுட்டு வந்திருக்கேன்."

"சிகாகோ சுத்திப் பாக்கத்தான் வந்திருக்காங்களா?"

"இல்லை, கண்ணன், பாஸ்போர்ட் ரினீவ் பண்ண! அது எக்ஸ்பயர்ட் ஆயிடுச்சாம். கவனிக்காம விட்டுட்டாங்களாம். அதான் நேரடியா இங்கே இண்டியன் கான்சலேட்க்கு வந்துட்டாங்க! காலையிலேயே போய் "பேப்பர் வொர்க்" எல்லாம் முடிச்சுட்டாங்களாம்! ஈவெனிங் போய் பாஸ்போர்ட் வாங்கிட்டு வந்துட்டு, ரெண்டு நாள் என்னோட டேரா! வீக் எண்ட் கொஞ்சம் சிகாகோ சுத்திக் காட்டனும்.""

"மாமியக் கூட்டிக்கிட்டு நல்லா ஜாலியா சுத்து!"

"நீங்களும் வாங்களேன்!"

"வந்து என்ன பண்ண? அவங்களப் பக்கத்துல வச்சுக்கிட்டே உன்ன ரொமாண்ஸ் பண்ணவா? பாவம்டா!"

"இதுல என்ன பாவம் இருக்கு? அவங்களுக்கு இப்போ யாராவது புது பாய்ஃப்ரெண்டு இருந்தாலும் இருப்பார்."

"யார் சொன்னா?"

"அவங்கள பார்த்தால் பாவமா எல்லாம் தெரிய்லை, கண்ணன். நிம்மதியா இருக்க மாதிரித்தான் தெரியுது."

"அது சரி! ஹஸ்பண்ட் போர் அடிச்சிருச்சுனு, டைவோர்ஸ் பண்ணிட்டு புதுசா பல அட்வெஞ்சர்லகூட இறங்கி இருக்கலாம்! சரி, அவங்க பேரென்ன?"

"காயத்ரி. ஒண்ணும் ரொம்ப பேசக்கூட இல்லை. என் ஃப்ரெண்டு நந்தினி சொல்லித்தான் பர்சனல் மேட்டர் இவ்வளவும் தெரியும்!"

"பாஸ்போர்ட் வாங்கிட்டு இன்னைக்கே போகவேண்டியதுதானே? எதுக்கு ரெண்டு நாளு இங்கே டேரா?"

"நீங்க ரொம்ப மோசம் தெரியுமா?"

"என்ன மோசம்?"

"உங்க உபசரிப்பத்தான் சொன்னேன்! எப்படி வெறட்டுறது?"

"எல்லாம் ஒரு சுயநலம்தான். நீ வீக் எண்ட் இந்த மாமியோட சுத்துவ. உன் வீட்டுப்பக்கம் வர முடியாது.. எனக்கு போர் அடிக்கும்னு தான்.."

"இல்லைனா வந்து வீக் எண்ட் பூராம் எனக்கு எல்லா இன்பமும் தரப்போற மாதிரித்தான்.."

"இல்ல, ஏதாவது இந்த மாதிரி தொந்தரவு வந்தால்தான் உன் மேலே அன்பு ரொம்ப வழியுது எனக்கு, பிருந்த்! "

"அது ஏன் அப்படி?"

"தெரியலையே."

"அவங்களுக்கு, டெவான் ஸ்ட்ரீட் போயி நெறையா ஷாப்பிங் பண்ணனுமாம்! இங்கே எல்லாம் "சீப்"பா கெடைக்குதாம்!"

"எங்கே இருந்து வர்றாங்க?"

"கான்ஸாஸ் சிட்டி. அங்கேலாம் டெவான்ல இருக்க மாதிரி இந்தியன் ஷாப்ஸ் இருக்காதாம்!"

"எப்படி? பறந்தா?"

"ஆமா, ஏரோப்ளான்ல ஏறி உக்காந்து பறந்துதான் வந்திருக்காங்க. பின்னே என்ன 8 மணி நேரம் ட்ரைவ் பண்ணியா வருவாங்க?"

"இங்கே வந்து கார் ரெண்ட் பண்ணி இருக்காங்களா?"

"இல்லை கண்ணன். டாக்ஸிலதான் போய் வர்றாங்க! சிகாகோ ட்ராஃபிக்ல ட்ரைவ்ப் பண்ண பயமாம்!"

"ஈவெனிங் நீ போய் என் பி சி டவர்ல பிக் பண்ணனுமா?"

"ஆமா. போய் பிக் அப் பண்ணிட்டு வீட்டுக்கு போகனும்."

"சரி, வீட்டுக்குப் போனதும் ஈவனிங் கூப்பிடுறேன்."

"வீக் எண்ட் நீங்களும் கூட வாங்க. இல்லைனா எனக்கு போர் அடிக்கும்!"

"சரி பார்க்கலாம்! என்னை யாருனு சொல்லப்போற?"

"சும்மா ஃப்ரெண்டுனு சொல்றேன்."

"எப்படி ஃப்ரெண்டுனு நொழச்சுக் கேட்டா, சும்மா f'ck buddy னு சொல்லு!அப்போத்தான் சும்மா இருப்பாங்க!"

"ஹா ஹா ஹா!"

-தொடரும்

No comments: