Wednesday, May 12, 2010

முடிந்தால் சிரித்துவிட்டு சிந்திக்கவும்!

"என்னண்ணே, நம்ம வினோத் யார்கூடயும் பேசவே மாட்டேன்கிறாரு?"

இன்னும் ரொம்ப பேசுற டைப்தான். பேசுறதுக்கும் டைப்தான் அடிப்பாரு! அதனால அமைதியா இருக்க மாதிரி தெரியும்! டெய்லி ஆண்லைன்ல கெட்ட கெட்ட வார்த்தையாப் பேசி ஒரு பத்து சண்டையாவது போடாமல் இருக்க மாட்டாரு!

"என்னண்ணே இது அநியாயம்! நம்ம சங்கருக்கு எந்தவிதமான குடிப்பழக்கமோ, சிகரெட் பழக்கமோ, இருந்ததாவோ, இல்லைனா யார்ட்டயும் தப்பா நடந்ததாவோ இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. அவரைப்போயி அவர் ஒய்ஃப் டைவோர்ஸ் பண்ணுறாங்க!"

அவருக்கு இதெல்லாம்விட பெரிய அடிக்ஷன்! அதுக்குப்பேர் இண்டெர்னெட் அடிக்க்ஷனாம்! பேசாம, இண்டெர்னெட்டையே கட்டிக்கோ என்ன விட்டுடுனு அந்தம்மா சொல்லிடுச்சாம்!

"கமலஹாஷன் மட்டும் எப்படினே இப்படி புதுப் புது ஐடியாவோட வர்றாரு? அவரு பெரிய ஜீனியஸ்ணே!"

ஹாலிவுட் படம் நெறையா பார்த்தால் நீயும் ஜீனியஸா ஆயிடலாம்!

"அமெரிக்காவில் சிகரெட் குடிக்கிறது கெடுதினு சொல்றாங்க ஆனால் இப்போ கஞ்சாவ லீகலாக்கப் போறாங்களாம்! என்னண்ணே இது நியாயம்? கஞ்சால இருந்து வர்ற புகை உடம்புக்கு நல்லதா? இல்லைனா லங் கேண்சர் கொடுக்காதா?"

பணம் தேவைப்படுது! என்ன பண்றது? நம்ம புரட்சித் தலைவர் கூட படத்துக்குப் படம் குடிக்கக்கூடாதுனு மக்களை பாட்டுப்பாடி, அட்வைஸ் பண்ணி திருத்தினாரு. ஆனால் அவரே, எம்பதிலே சாராயக்கடைய திறந்து மதுவிலக்கை எடுத்துட்டாரு! அதுக்காக அவர் செஞ்சது தப்புனு ஆயிடுமா?

"வாலி எழுதிய பாடல்கள்தான் எம் ஜி ஆர் ஆட்சியைப் பிடிக்க உதவுச்சாமில்ல?"

ஆமா, வாலிதான் "தரைமேல் பிறக்க வைத்தாய்" "கொடுத்ததெல்லாம் கொடுத்தார்" "நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்" எல்லாம் எழுதினாரு. ஆனா, அதே வாலிதான், "எடுத்தான் தடையை (மது விலக்கை) திறந்தான் கடையை (சாராயக்கடையை) இனிமேல் ரொம்ப ஜாலி" னு எம் ஜிஆர் மதுவிலக்கை தளர்த்தியபோது எம் ஜி ஆரை சாடி ஒரு பாட்டையும் எழுதிவிட்டாரு! "It is not personal, just business" they say!

8 comments:

ராமலக்ஷ்மி said...

//"முடிந்தால் சிரித்துவிட்டு சிந்திக்கவும்!"//

முடியவில்லை சிரிக்க!

சிந்திக்க வைக்கிறது நிறைய!

smart said...

"இவருக்கு மட்டும் எப்படினே இப்படி புதுப் புது மொக்கையா வருது, ஒரு வேளை மூளை குழம்பிருச்சோ!"
"அது அப்படித்தான் பகுத்தறிவாளி போல நினைச்சிகிட்ட உனக்கும் மூளை குழம்பிரும்"

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
//"முடிந்தால் சிரித்துவிட்டு சிந்திக்கவும்!"//

முடியவில்லை சிரிக்க!

சிந்திக்க வைக்கிறது நிறைய!

12 May 2010 10:31 AM ***

வாங்க, ராமலக்ஷ்மி! :) இன்றைய உலகம் இதாங்க! :)

வருண் said...

smart said...
"இவருக்கு மட்டும் எப்படினே இப்படி புதுப் புது மொக்கையா வருது, ஒரு வேளை மூளை குழம்பிருச்சோ!"
"அது அப்படித்தான் பகுத்தறிவாளி போல நினைச்சிகிட்ட உனக்கும் மூளை குழம்பிரும்"

12 May 2010 5:45 PM****

smart also said:

About Me
நான் நாத்திகன்தான். எப்போது சமூக வன்முறையை தட்டிக்கேட்க வன்முறையை எடுத்தேனோ அப்போதே ஒரு நாத்திகனுக்குரிய அடையாளங்கள் வந்துவிட்டது எப்போது பகுத்தறிவோடு பிடிவாதமும் வந்ததோ அப்போதே ஒரு நாத்திகனுக்குரிய அடையாளங்கள் வந்துவிட்டது***

LOL!

smart said...

" ...பகுத்தறிவாளி போல.."
LOL

வருண் said...

***smart said...
" ...பகுத்தறிவாளி போல.."
LOL

12 May 2010 6:36 PM***

Yeah, "smart" is pretending like a "rationalist" but he is a believer!

ராமச்சந்திரன் said...

//ஹாலிவுட் படம் நெறையா பார்த்தால் நீயும் ஜீனியஸா ஆயிடலாம்! //

அப்போ நிறைய ஹாலிவுட் படம் பார்த்து நீங்க ஜீனியஸா ஆகுங்க பார்க்கலாம்

வருண் said...

***Blogger ராமச்சந்திரன் said...

//ஹாலிவுட் படம் நெறையா பார்த்தால் நீயும் ஜீனியஸா ஆயிடலாம்! //

அப்போ நிறைய ஹாலிவுட் படம் பார்த்து நீங்க ஜீனியஸா ஆகுங்க பார்க்கலாம்

14 May 2010 5:52 AM***

இனிமேல்த்தான் ஆகனுமா என்ன, ஜீனியஸ் ராமச்சந்திரன்? :)))