Monday, June 21, 2010

ஸர் மணிரத்னத்திற்கு ஒரு சபாஷ்!


காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் சொல்லுகிற யோசிக்கவைக்கிற ஒரு காமெடி என்னனா, "எல்லாம் கெடச்சாச்சு! கதை மட்டும்தான் கெடைக்கலை! அது மட்டும் கெடச்சிருச்சுனா!" இந்த ஓஹோ ப்ரடக்ஷன்ஸ் ஓஹோனு ஆயிடும்! ஒரு படத்திற்கு கதை கெடைக்கிறது பெரிய விசயம்னு ஸ்ரிதர் சொல்லாமல் சொல்லியிருப்பாரு! ரஜினியும், கதை கெடச்சா நடிக்கலாம்னு ஒரு காலத்தில் சொல்லிக்கிட்டேதானே இருந்தாரு? ஆனால் நம்ம மணிரத்னம் மட்டும் இந்த கதை மேட்டர்ல ரொம்ப வித்தியாசமானவர்தான். நம்மட்ட இருக்க கதையையே ஒரு மாதிரி "மாடர்னைஸ்"ப் பண்ணி எடுத்துட்டு வந்திருவாரு! இருவர் உள்ளம் மெளனராகமாச்சு, கர்ணன் தளபதியாச்சு! இப்போ, ராவணன்! ஆனா ஒண்ணு ஹாலிவுட் கதையைத் திருடினால்த்தான் காப்பி ரைட்ஸ் பத்திப் பேசமுடியும்! இதுபோல் இதிகாசங்களை "திருடினால்" திட்டவெல்லாம் முடியாது! முடிஞ்சாப் பாராட்டலாம்! இல்லைனா விட்டுடலாம்! Because Mani would plead guilty or not?

ஆமா அதென்ன "ஸர்" மணிரத்னம்னு தலைப்பில்? நான் கொடுத்த பட்டமெல்லாம் இல்லை! மணிரத்னத்துக்கு சார் போட்டு கேவலமா ஆயிலடிக்கிறாரு யாரோ ஒரு பெரிய விமர்சகர்! அதை வாசிக்க்கும்போது அறையலாம் போல இருந்துச்சு அவரை! ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதும்போது இதெல்லாம் தேவையே இல்லாத மரியாதை! நம்ம ஊர் மக்கள்ட்ட உள்ள ஒரு கெட்ட பழக்கம் என்னனா ஒரு படத்தை விமர்சனம் பண்ணும்போதுகூட அடைமொழியில்லாமல் "மணிரத்னம்"னு எழுதினால் ஏதோ மரியாதைக் குறைவு வந்துவிடும்னு நெனச்சுக்கிறது. Rediff review படிச்சுப்பாருங்க! நான் பொதுவா Rediff review மேலே எப்போவுமே ஓரளவுக்கு மதிப்பு வச்சிருப்பேன்! ஆனால் இதுபோல் "ஸார்" அடைமொழி எனக்கு பயங்கர எரிச்சலைக்கிளப்பியது! Lack of professionalism, I would say! எங்கே இருந்து இதுகளை பிடிச்சுட்டு வர்றானுகனு தெரியலை ரிவியூ எழுதுவதற்குனு!

ராமாயாணத்திலே எல்லாருக்கும் ஒரு சந்தேகம் மட்டும் வரும்! சீதை, ராவணனை காதலிச்சாளா? இல்லை வெறுத்தாளா? இல்லைனா மதித்தாளா? She liked him! Not for anything else. It is just because he treated her fairly and, he behaved like a gentleman! அதனால சீதையின் மேலே ராமனுக்கு மட்டும் சந்தேகம் இல்லை! நெறையப்பேர்ருக்கு இந்த சந்தேகம் உண்டு! ராவணன் - சீதை என்றாலே எல்லோருக்கும் அவர்கள் உறவைத் தெரிந்துகொள்ளனும்னு ஒரு க்யுரியாஸிட்டி உண்டுனு சொல்லலாம்! கொச்சைப் படுத்தனு சொல்ல முடியாது! ஜஸ்ட் க்யூரியஸ்!

அண்ணே! என்னை பொறுத்தவரையில் ராமாயணம் வால்மிகி எழுதிய ஒரு கதை! கதையிலே யாரை யாரு காதலிச்சா என்ன? ஆனா எல்லாருக்கும் அபப்டி இல்லை! ராமாயணம் வட இந்தியாவில், மற்றும் நம்ம ஊரில் உள்ள ஒரு சில மக்களுக்கும் வெறும் கதை இல்லை! ராமர் கடலுக்குள்ளே பாலம்லாம் கட்டினாருனு நம்புறாங்க! வால்மீகி எழுதிய உண்மைக்கதை என்றும், ராமர் அதில் ஒரு கடவுளோட அவதாரம், அதனால அவரு ஒருகடவுள். அப்படி இப்படினு நம்புறாங்க!

சரி சீதையுடைய இளமை ஊஞ்சலாடுறது பத்தி கொஞ்சம் பார்ப்போம்! உடலால கற்பு எல்லாம் இல்லைனு நம்பும் சுஹாஷினி க்கு மனதால் கற்பெல்லாம் சாண்சே இல்லைனு நம்புறவங்களாத்தான இருப்பாங்க, இல்லையா? சரி, நம்ம சீதை கற்பு மேலே அந்த சந்தேகம் இவங்களுக்கு இருக்காதா என்ன? நிச்சயமா இருக்கும்! ஆனா வெளியிலே சொல்லுவாங்களா? சீதை கற்பை பத்தி பேசினால், சுஹாஷினையை அடிக்க வர்றது மறத்தமிழர்கள் கெடையாது! வேற கூட்டம் அது! இந்த ராவணன் கதை ஒருவேளை சுஹாஷினி யுடைய லீலைகள் (இண்ஃப்ளுயெண்ஸ்) தானோ? ஆமா, ராவணன் விமர்சனம் எங்கே? ராமாயணத்தை அப்படியே "ரிமிக்ஸ்" (நன்றி சுரேஷ் கண்ணன்) பண்ணிய ஒரு படத்திற்கு எதுக்கு விமர்சனம் எல்லாம் எதுக்கு? சுத்தமான போர் அது!

However, at the box office, my gut feeling is that this movie is going touch the sentiments of north Indians. They can not tolerate Ravanan is made as a HERO! In Tamilnadu, most of the people would love Ravanan being the HERO! Ironically the BO results are going to be consistent with this! I believe, Mani can not win north and south crowds at a time! Raavanan is not an exception for this! Mani might win Tamilians at this time!

சரி, மணிரத்னத்திற்கு எதுக்கு ஒரு சபாஷ்? இந்தக் கதை தழுவல்னு வரும்போது மணி, தன்னை என்னைக்குமே ஒரு சாதாரண வியாபாரியாக மட்டும்தான் காட்டியுள்ளார். ஒரு ஹிந்துவாக அல்லது தன்னுடைய மத நம்பிக்கையை எதிலுமே காட்டுவதில்லை! இந்த ராவணனில், ராவணன் மேல் ராமனின் மனைவி சீதை மரியாதை வைத்திருந்தது போலத்தான் பச்சையாகவே காட்டியுள்ளார், மணி. அதுக்குத்தான் இந்த சபாஷ்!

14 comments:

ILA (a) இளா said...

ஆமென். ஒரு புது பதிவு அடிபோட்டுட்டீங்க. எழுதிட்டே இருக்கேன்

வவ்வால் said...

Ravan script written by rensil de silva (rang de basant,luck,kurban) final stagela mani kooda misunderstanding aanathala ,avar peyar illama padam release aanatha news.

கயல்விழி said...

Certain people are considered "above all" and "too good to be criticized" in TN. Illaiyaraja, Manirathnam and some others are in that category. May be Manirathnam is running out of all the possible stories so he has started to remake the epics. I haven't seen the movie yet, but considering all the reviews, I am glad I didn't see this one.

கயல்விழி said...

"சரி சீதையுடைய இளமை ஊஞ்சலாடுறது பத்தி கொஞ்சம் பார்ப்போம்! உடலால கற்பு எல்லாம் இல்லைனு நம்பும் சுஹாஷினி க்கு மனதால் கற்பெல்லாம் சாண்சே இல்லைனு நம்புறவங்களாத்தான இருப்பாங்க, இல்லையா? சரி, நம்ம சீதை கற்பு மேலே அந்த சந்தேகம் இவங்களுக்கு இருக்காதா என்ன? நிச்சயமா இருக்கும்! ஆனா வெளியிலே சொல்லுவாங்களா? சீதை கற்பை பத்தி பேசினால், சுஹாஷினையை அடிக்க வர்றது மறத்தமிழர்கள் கெடையாது!"

இதென்ன சுஹாசினி இந்த படத்துக்கு கதை வசனம் எழுதியதைப்பத்திய விமர்சனமா இல்லை சுஹாசினியைப்பத்திய பொதுவான விமர்சனமா?(கதை வசனம் சுஹாசினி தானே?).

வருண் said...

***Blogger ILA(@)இளா said...

ஆமென். ஒரு புது பதிவு அடிபோட்டுட்டீங்க. எழுதிட்டே இருக்கேன்

21 June 2010 1:03 PM***

எழுதுங்க, நான் வந்து அப்புறமா வந்து பார்க்கிறேன் :)

வருண் said...

***வவ்வால் said...

Ravan script written by rensil de silva (rang de basant,luck,kurban) final stagela mani kooda misunderstanding aanathala ,avar peyar illama padam release aanatha news.

21 June 2010 1:27 PM***

Vavvaal: I think ORIGINAL Ravanaan credit should go to vAlmiki! :)))

வருண் said...

*** கயல்விழி said...

Certain people are considered "above all" and "too good to be criticized" in TN. Illaiyaraja, Manirathnam and some others are in that category. May be Manirathnam is running out of all the possible stories so he has started to remake the epics.***

I think it is hard for him to satisfy the expectations. It is indeed too high :(

*** I haven't seen the movie yet, but considering all the reviews, I am glad I didn't see this one.

21 June 2010 2:19 PM***

I think you would like this movie, kayal if you can put up with Vikram's acting :)

வருண் said...

***இதென்ன சுஹாசினி இந்த படத்துக்கு கதை வசனம் எழுதியதைப்பத்திய விமர்சனமா இல்லை சுஹாசினியைப்பத்திய பொதுவான விமர்சனமா?(கதை வசனம் சுஹாசினி தானே?).

21 June 2010 2:28 PM***

Honestly, I strongly believe in "kaRpu vaazhkkai" of women! I would believe Seetha too! :) But, unlike me, Suhashini has somewhat exceptional thoughts about this subject. I just wondered, What would she think about Seetha? esp in this particular situation.

Also, Suhashini influences a lot in mani's creativity, I strongly believe :)

Chitra said...

நீங்க படம் பாத்துட்டீங்களா? பார்க்க போறீங்களா? பாக்கலியா?

different type of movie review........ :-)

sathishsangkavi.blogspot.com said...

உங்கள் பார்வை வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கிறது...

smart said...

ஸர்,
இந்த வீராவுக்கும் ராவணனுக்கும் அடிப்படை குணங்கள் பல மாறியிருக்கு & எஸ்.பி.கும் ராமனுக்கும் அப்படித்தான். வெறும் பெயர்களும் கட்சிகளும் மட்டும் வைத்து யாரையும் இடைபோடமுடியாது

வருண் said...

***Chitra said...

நீங்க படம் பாத்துட்டீங்களா? பார்க்க போறீங்களா? பாக்கலியா?

different type of movie review........ :-)
21 June 2010 4:12 PM ***

சித்ரா: நான் படம் பார்த்துட்டேன்னு சொன்னாலும் "ஒரு பயலும் நம்பபோறதில்லங்க. நாந்தான் சொல்லிக்கிட்டுத் திரியனும்" (16 வயதினிலே கமல் வசம் இது :) )

அதான் உள்ளே நுழையாமல் மேலோட்டமாக எழுதி முடிச்சுட்டேன் :)))

வருண் said...

*** Sangkavi said...

உங்கள் பார்வை வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கிறது...

21 June 2010 4:30 PM***

தங்கள் புரிதலுக்கு நன்றிங்க சங்கவி :)

வருண் said...

Blogger smart said...

*** ஸர்,
இந்த வீராவுக்கும் ராவணனுக்கும் அடிப்படை குணங்கள் பல மாறியிருக்கு & எஸ்.பி.கும் ராமனுக்கும் அப்படித்தான். வெறும் பெயர்களும் கட்சிகளும் மட்டும் வைத்து யாரையும் இடைபோடமுடியாது

21 June 2010 5:40 PM***

உண்மைதான். நீங்க எடை போடுவதுபோல எல்லாரும் போடுறதில்லை. ராவன் (ஹிந்தி) பெரிய அடி வாங்குறதா சொல்றாங்க!

ஹிந்திக்காரன் ராவணனை ஹீரோவா ஏத்துக்க சாண்ஸே இல்லை என்பது என் நம்பிக்கை :) They look at him in a different perspective :)