Sunday, October 17, 2010

“பரத்தைக்கூற்று” -ஆம்பளைகளின் அசிங்கக்கூத்து!

பரத்தைக்கூற்று பற்றி சில அசிங்கக்கவிதைகளுடன் மாதவராஜின் விமர்சனம் படிக்கும்போது எரிச்சலும் கோபமும் அருவருப்பும்தான் வந்தது. கவிதைகளை ரசிக்கவோ அதைப்படித்து உருகவோ முடியவில்லை! ஒரு பின்னூட்டம் போட்டேன். இன்னும் திருப்தியில்லை!

“பரத்தைக்கூற்று” என்றதும் அதைப்பற்றி எழுதியது லீனா மணிமேகலையா? இல்லை ஒரு தமிழச்சியா? இல்லை இன்னொரு தமிழ்ப் பெண்ணா? இல்லைனா ஆண்களால் வஞ்சிக்கப் பட்ட இன்னொரு பரத்தையா கண்ணீர் வடிக்கிறாள்? நு பார்த்தால் ஏமாற்றம்தான்!

“பரத்தைக்கூற்று” என்று பரத்தைகளின் உணர்வுகளை உள்ளப்பூர்வமாக உணர்ந்து அவர்களுக்கு கண்ணீர் வடிப்பவன் போல கவிதை எழுதுபவர்களும் பரத்தையை உருவாக்கி, பரத்தையிடம் படுத்து எந்திரிக்கும், பரத்தையை கூட்டிக்கொடுக்கும் அதே ஆண்கள்தான்.

“பிரசவ வலி” பத்தி தாய்தான் சொல்லனும்! “பீரியேட்ஸ்” வலி பத்தி பெண்தான் பேசனும்! “பரத்தைக்கூற்று” பற்றி பேசவேண்டியது பெண் இனம்! கசக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று கசக்கப்பட்டவள் சொல்லனும். கசக்குகிறவர்கள் சொல்லக்கூடாது! பரத்தையை உருவாக்கி பரத்தையை அனுபவிக்கும் அசிங்கமான ஆண்கள் இனம் அல்ல இங்கே கவிதை பாட வேண்டியது!

ஒரு ஆண் பரத்தையின் உணர்வைப்பற்றி கற்பனையில் கவிதை என்கிற தமிழ் நயத்துடன் உருகி, உணர்வுகளைக்கொட்டி எழுதும்போது ஆண்களின் “பர்வேர்ஷன்”தான் எனக்குத் தெரிகிறது. அந்த ஆணின் கண்ணீர் தெரியவில்லை! கசக்கி எறியப்பட்டவள் பெண்! இங்கே பரத்தைக் கூற்று அசிங்கக் கவிதையிலும் ஆண்களால் இன்னும் தமிழ்நயத்துடன் கவிதை வளத்துடன் கசக்கப்படுகிறாள்- கவிஞர்களின் வற்றாத நீலிக்கண்ணீருடன்!

எனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்று சொல்லட்டும்! யார்? பரத்தையை உடலால் மற்றும் எழுத்தால் கசக்கும் ஆண்கள் அல்ல! இந்தக்கவிதைகளில் கசக்கப்பட்டிருக்கிற, இந்தக் கவிதை அவர்கள் கண்ணீரை துடைப்பதாகச் சொல்லும் சில பரத்தைகள்! சொல்வார்களா?

13 comments:

மதுரை சரவணன் said...

neengkal antha puththakaththai padiththu pin vimarsikkavum. sila karuththukkal udan pada villai. neengkal solvathu pol naan aaramba nilaiyil irunthaalum , padiththu paarththu vimarsikkavum. pl . thanks for sharing.

வால்பையன் said...

ஒரு பரத்தையிடம் நேர் காணல் செய்து இதை எழுதியிருக்க வாய்ப்புண்டே!

எழுதியதை பார்க்காமல் எழுதியவரை பார்க்கும் மனோபாவம் என்று மாறும்!?

Thekkikattan|தெகா said...

பல பதிவுகள் ரொம்ப அபத்தமாக இருக்கிறது... அதில் இதுவும் ஒன்று! நல்ல மனித நிலையில் உணர்வுகள், வலிகள் மிக நுட்பமாக பரஸ்பரமாக பகிர்ந்து உணர்ந்து கொள்ளும் சாத்தியங்கள் உண்டு - try it!

குட்டிப்பையா|Kutipaiya said...

எழுத்துக்களைப் பார்த்தல் நல்லது. சில கவிதைகளைப் படிக்க நேர்ந்ததில் எந்த ஒரு போலித்தனமும் இல்லாமல் வலிகளைப் பேசிய கவிதைகள் அவை என்று தான் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

எழுத்தாளன் என்பவன் எந்த ஒரு பாத்திரத்திலும் தன்னை வார்த்துக்கொள்ள முடியும். அங்கேயும் பால் வேறுபாடு பார்ப்பது அறியாமையே!!

இரு பாலர்களும் எது போன்று எழுதினாலும், எழுத்தை மட்டும் உணரும் காலம் இப்போதும் இல்லை என்பது வருத்ததிற்குரியதே!

இதை படிக்கும் போது நல்ல வேளை இது ஒரு பெண் எழுதவில்லை என்றும் அபத்தமாக யோசிக்க தோன்றுகிறது... அது எப்படி அவளால் இப்படி எழுத முடிந்தது என எழுதிய தொகுப்பின் பட்டத்தையே அவளுக்கும் கட்டியிருக்கும் சாத்தியக்கூறுகளும் இருக்கும் தான் போல :( :( :(

வருண் said...

***மதுரை சரவணன் said...

neengkal antha puththakaththai padiththu pin vimarsikkavum. sila karuththukkal udan pada villai. neengkal solvathu pol naan aaramba nilaiyil irunthaalum , padiththu paarththu vimarsikkavum. pl . thanks for sharing.

17 October 2010 8:20 AM***

எனக்கு அந்த புக் ரிவியூ ல உள்ள கவிதைகளே தாங்கமுடியலை..மன்னிச்சுக்கோங்க!

வருண் said...

*** வால்பையன் said...

ஒரு பரத்தையிடம் நேர் காணல் செய்து இதை எழுதியிருக்க வாய்ப்புண்டே!

எழுதியதை பார்க்காமல் எழுதியவரை பார்க்கும் மனோபாவம் என்று மாறும்!?***

எழுதியவரைப் பார்க்காமலா இந்த பின்னூட்டமிட்டீங்க? :))))

வருண் said...

*** Thekkikattan|தெகா said...

பல பதிவுகள் ரொம்ப அபத்தமாக இருக்கிறது... **

இந்தப் பதிவைப் பத்தி விமர்சிப்பது நாகரீகம். அது தெரியும்தானே உங்களுக்கு?

வருண் said...

***நல்ல மனித நிலையில் உணர்வுகள், வலிகள் மிக நுட்பமாக பரஸ்பரமாக பகிர்ந்து உணர்ந்து கொள்ளும் சாத்தியங்கள் உண்டு - try it!***

எனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்று சொல்லட்டும்! யார்? பரத்தையை உடலால் மற்றும் எழுத்தால் கசக்கும் ஆண்கள் அல்ல! இந்தக்கவிதைகளில் கசக்கப்பட்டிருக்கிற, இந்தக் கவிதை அவர்கள் கண்ணீரை துடைப்பதாகச் சொல்லும் சில பரத்தைகள்! சொல்வார்களா?

வால்பையன் said...

//எழுதியவரைப் பார்க்காமலா இந்த பின்னூட்டமிட்டீங்க? :)))//

எழுதியவர் ஒரு ப்ளாக்கர் என்பதை தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே!

வருண் said...

***kutipaiya said...

எழுத்துக்களைப் பார்த்தல் நல்லது. சில கவிதைகளைப் படிக்க நேர்ந்ததில் எந்த ஒரு போலித்தனமும் இல்லாமல் வலிகளைப் பேசிய கவிதைகள் அவை என்று தான் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

எழுத்தாளன் என்பவன் எந்த ஒரு பாத்திரத்திலும் தன்னை வார்த்துக்கொள்ள முடியும். அங்கேயும் பால் வேறுபாடு பார்ப்பது அறியாமையே!!

இரு பாலர்களும் எது போன்று எழுதினாலும், எழுத்தை மட்டும் உணரும் காலம் இப்போதும் இல்லை என்பது வருத்ததிற்குரியதே!

இதை படிக்கும் போது நல்ல வேளை இது ஒரு பெண் எழுதவில்லை என்றும் அபத்தமாக யோசிக்க தோன்றுகிறது... அது எப்படி அவளால் இப்படி எழுத முடிந்தது என எழுதிய தொகுப்பின் பட்டத்தையே அவளுக்கும் கட்டியிருக்கும் சாத்தியக்கூறுகளும் இருக்கும் தான் போல :( :( :(

17 October 2010 9:52 AM***

தங்கள் கருத்துக்கு நன்றி! தன்களால் ரசிக்க முடிந்தது என்னால் இயலவில்லை! என்னுடைய இயலாமையை புரிந்து கொள்ளவும், ப்ளீஸ்!

Thekkikattan|தெகா said...

//இந்தப் பதிவைப் பத்தி விமர்சிப்பது நாகரீகம். அது தெரியும்தானே உங்களுக்கு//

அது சரி! அப்போ இந்தப் பதிவு இலக்கிய மனிதர்களின் உள் அரசியலையும் சார்ந்து இருக்கிறதோ - ஒண்ணுமே புரியல ஒலகத்தில...

வருண் said...

***Thekkikattan|தெகா said...

//இந்தப் பதிவைப் பத்தி விமர்சிப்பது நாகரீகம். அது தெரியும்தானே உங்களுக்கு//

அது சரி! அப்போ இந்தப் பதிவு இலக்கிய மனிதர்களின் உள் அரசியலையும் சார்ந்து இருக்கிறதோ - ஒண்ணுமே புரியல ஒலகத்தில...***

I dont know what you are talking about. I just did not like your sweeping statement about "POSTS"!
I was suggesting you to criticize this particular "ABSURD POST"!

akanaaLigai is doing business. May be that is why I get so many -ve votes! BUt, I am not. I am expressing my feelings- NOT for MONEY!

காவ்யா said...

Only a prostitute shd have written this blog post if v accept ur logic.