Wednesday, November 17, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே (3) கலாச்சார ஸ்பெஷல்

* வாதம்னா என்ன? விதண்டாவாதம்னா என்ன?

நம்ம பேசுறது வாதம். நம்ம எதிராளி பேசுறதை விதண்டாவாதம்னு சொல்லலாம்.


* புதுமைப்பெண்களின் கலாச்சார லெக்ச்சர்கள் பத்தி?

இன்னைக்கு அவங்க எழுதறத ஒரு பத்து வருசம் சென்று அவங்க வாசிச்சுப் பார்த்து, ஒரு காலத்தில் நான் இப்படி இருந்து இருக்கேன்னு தன்னைத்தானே பார்த்து சிரித்துக்கொண்டு மெடிட்டேஷன் பண்ணப் போறவங்கள நெறைய பார்த்து இருக்காங்களாம் அனுபவசாலிகள். இளம்கன்று பயமறியாதாம், அறியாமையால்! மற்றும் அனுபவம் போதாமையால்.

பத்து வருசத்துக்கு அப்புறம் நான் அப்படி இருக்க மாட்டேன் என்பதை இப்போவே அடிச்சும் பேசுவாங்களாம் இந்த ஞானிகள்- அறியாமையால்.

* பதிவுலகில் இப்போ என்ன நடக்குது?

கருத்துச்சண்டையைவிட கோஷ்டிமோதல்தான் இப்போ அதிகமா நடக்குது. எதுக்கெடுத்தாலும் தன் கருத்தை சொல்றதை விட்டுட்டு எதையாவது செட்டு சேர்ந்துகொண்டு ஒளறுறது. செட்டு சேர்ந்து ஒருவரை ஒருவர் "கவர்" செய்வதால் வாதத்தில் வென்றதா ஆகாது! ஒரு முட்டாள்தனமா கருத்தை ஒருத்தர் சொல்லி அதை பலர் ஆமானு சொன்னாலும் அந்தக் கருத்து சரினு ஆயிடாது.

* ஆமா, இல்லாத கடவுளை பார்க்க முடியிறவங்க, ஏன் இருக்க கலாச்சாரத்தை, அதில் ஏற்படும் கேவலமான மாற்றங்களைப் பார்க்கமுடியாமல் லெண்ஸ் போட்டு தேடுறாங்க?

இன்னைக்கு லிபெரல், லிவிங் டுகெதர் சரினு சொல்லுவாங்க, இதப்பத்தி வாய்கிழிய பேசுவாங்க, கடைசியில் வெட்கமே இல்லாமல் அரேஞிட் மேரேஜ் பண்ணிக்கிட்டு வந்து நிப்பாங்க.

தன்னையே இன்னும் புரிஞ்சுக்காதாவர், கலாச்சாரத்தை அல்லது அது மாறும் விதத்தை எப்படிப் புரியமுடியும்?

* தனிநபர் தாக்குதல்னா என்ன?

ஒரு விவாதத்தில் "இவனுக்கெல்லாம் யாரு யு எஸ்ல விசா கொடுத்தானு தெரியலைனு" நீங்க அமெரிக்கால இருக்கதை தெரிந்ததும் உங்க எதிராளி (மாற்றுக் கருத்து உள்ளவர்) சம்மந்தமே இல்லா இடத்தில் சொல்றது.

அப்புறம், உங்க வாதத்தைப் பார்த்து (இல்லை விதண்டாவாதத்தை) வெறுத்து, உங்களை வெறுத்து, உங்களை "க்ரீச்சர்" அது இதுனு வந்து கேவலமாத் திட்டுறது.

அவங்க தளத்தில் கண்ட நாயையும் அடியாள் மாதிரி விட்டு தனக்கு எதிர் கருத்து சொல்றவனை திட்டவிட்டு கேவலமா மாடெரேஷ்ன் பண்ணுவது.

இதுபோல் செய்வதற்கு எதிர் கருத்தை தூக்கி எறியலாமே குப்பைத் தொட்டியில்?. நீங்கதானே ப்ளாக் அட்மினிஸ்ட்ரேட்டர்?னு கேக்காதீங்க. இது வெள்ளக்காரனிடம் கற்ற கலாச்சாரமா இருந்தாலும் இருக்கும்! அதனால் உயர்வானது!

4 comments:

மதுரை சரவணன் said...

:(

எண்ணங்கள் 13189034291840215795 said...

:)

ரொம்ப பயந்த சுவாபம் உள்ளவர்களும், ( ஏய் நான் ரவுடி தெர்மா, இதெல்லாம் எனக்கு ம*** ) , கருத்துகள் வலிமையா இல்லாதவர்களும் ரொம்ப சவுண்ட் விடுவாங்க...தாக்குதல் என்ற பேரில்...

:)

வருண் said...

***பயணமும் எண்ணங்களும் said...

:)

ரொம்ப பயந்த சுவாபம் உள்ளவர்களும், ( ஏய் நான் ரவுடி தெர்மா, இதெல்லாம் எனக்கு ம*** ) , கருத்துகள் வலிமையா இல்லாதவர்களும் ரொம்ப சவுண்ட் விடுவாங்க...தாக்குதல் என்ற பேரில்...

:)
17 November 2010 8:20 PM ***

வாங்க, சாந்தி!

பொதுவாக அந்த ஒரு சூழ்நிலையில்தான் இந்தப் பிரச்சினை ஆரம்பமாகும். ஒருவர் ஆரம்பிக்க அடுத்தவர் தொடர, கடைசியில் யார் குற்றிவாளினு எல்லாருக்கும் குழப்பமாயிடும்ங்க! :)

பகிர்தலுக்கு நன்றிங்க!

வருண் said...

***Blogger மதுரை சரவணன் said...

:(

17 November 2010 10:28 AM**

வாங்க, சரவணன். என்ன ஒரே சோகமா இருக்கீங்க? :)