Wednesday, November 3, 2010

கமலஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கை

இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டு இப்போது கல்யாணத்தில் (எதுக்கு இன்னொரு விவாகரத்துனு) நம்பிக்கை இல்லாமல் இருக்கார் கமல். சும்மா அவசரப்படாமல், கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால், வாழக்கை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமையுது. உறவுகள் ஒரு சிலருக்கு நல்லா அமையலாம். ஒரு சிலருக்கு பெரிய உபத்திரவமாக அமையலாம். அதனால யாரையும் சும்மா குற்றம் சொல்லக்கூடாதுனு நமக்குப் புரியும்.

ஒரு சில கணவன் - மனைவி கள் ஒருவரை ஒருவர் பிடிக்கலைனாலும் "காதல்" இல்லாமலே, "அன்பு" இல்லாமலே கணவன் - மனைவியா காலங்காலமாக கட்டி அழுது முடிக்கிறார்கள். ஒரு சிலர், அப்படி வாழ்வதை அதை ஸ்ட்ரெஸ் ஃபுல்லா மேலும் அர்த்தமற்ற வாழ்வாக நினைத்து, விவகாரம் முற்றியவுடன், சரிப் படுத்தமுடியாத நில வந்தவுடன் சட்டப்படி என்ன செய்யமுடியுமோ அதைச் செய்து ஒதுங்கிக் கொள்கிறார்கள். இதில் எது சரி, எது தப்புனு சொல்வது கடினம்.

கமலும், பிடிக்காத ஒருவரை காலங்காலமாக கட்டி அழ இஷ்டமில்லாமல், அவர் ரிலேஷன்ஷிப் ல சமாளிக்க முடியாத பிரச்சினை வரும்போது நாகரிகமாக, சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு ஒதுங்கியுள்ளார். பிடிக்காமல் போய்விட்ட பிறகு எதுக்கு ஒருவரை ஒருவர் போலியாக கட்டியழனும் அவர்?

ஆனால் நம்ம அவரை விட்டுவிட்டாலும், ஒவ்வொரு நேர்முகப் போட்டியிலும், அவர் தனிப் பட்ட வாழ்க்கை சம்மந்தமான கேள்வி, நாகரிகமாக இல்லைனா அநாகரிகமாகவோ எழத்தான் செய்யுது. இப்படி மீடியா அடிக்கடி அவரிடம் கேட்டு அவரைக் கஷ்டப்படுத்தும் போது கமல் அந்தக் கேள்விகளுக்கு சரியாக சொல்லி சமாளிக்கிறாரா என்னனு தெரியலை. இல்லை, எனக்கு அவர் சரியாக பதில் சொல்லுவதாக தோனலை.. He can do better!னு தான் சொல்லுவேன்.

* சமீபத்தில் ஒரு கேரளா சேனலில், இது சம்மந்தமாக கேள்வி வரும்போது, கமல் சொன்னார், "தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகள்" னு எதையோ இதிகாச கல்யாணம் பத்தி சொன்னார். அப்புறம் ஏதோ அதற்கு பதில் சொன்னார். எனக்கு அவர் பதில் திருப்திகரமாக இல்லை. தசரதனை எல்லாம் இழுக்க வேண்டிய அவசியமே இல்லை!

சமீபத்தில் குமுதம் நேர்முகக்கானலில் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் சொன்ன பதிலும், கீழே இருக்கு

* உங்களுடைய சொந்த வாழ்க்கையில் எவ்வளவோ ஏற்றத் தாழ்வுகள். ஆனால் எப்படி தன்னம்பிக்கை குறையாமல் நிற்கிறீர்கள்?

“ஒவ்வொரு வளர்ச்சிக்கும், ஒவ்வொரு வயதிற்கும் ஒரு தேவை இருக்கிறது. தேவை வரும்போது அழுகை வரும். தேவை பூர்த்தியாகிவிட்டால் அழுகை வராது. எல்லோர் வாழ்க்கையிலும் மேடு பள்ளம் இருக்கின்றது. எனக்கும் இருக்காதா என்ன? என்னுடைய சொந்த வாழ்க்கையின் சோகங்களை வெளியே சொல்லத் தேவையில்லை. என் வீட்டு டாய்லெட், பாத்ரூம் வெளியே தெரிய வேண்டாம். அதற்கு கதவு இருக்கின்றது. அந்தப் பக்கமாக பார்க்க முயற்சிக்காதீர்கள். கதவு மூடி இருந்தால் சாவி துவாரத்தின் வழியே பார்க்க்க் கூடாது! மீறி பார்த்தால் உங்களுக்குத்தான் அவமானம். தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லோரையும் போல எனக்கென்று அழுவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. நானும் உங்களைப் போன்ற மனிதன் தானே? அதை வெளியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.”


இந்த பதிலும் எனக்கு திருப்திகரமாக இல்லை! என் பெட் ரூமை பார்க்காதீங்க, என் பாத் ரூமை துவாரத்து வழியாப் பார்க்காதீங்கனு இவர் சொல்லனுமா?

எனக்கென்னவோ கமல், இதுபோல வரும் கேள்விக்கு நல்லா பதில் ப்ரிப்பேர் செய்து, இதைவிட, தன் துரதிஷ்ட வசத்தை, மேலும், உறவுங்கிறது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமையும், நேற்றுபோல இன்னைக்கு இருப்பதில்லை, மாறிக்கொண்டு போகும் ஒண்ணு, என்கிற உண்மையை இன்னொருமுறை சொல்லி, தன்னால் கட்டுப் படுத்தமுடியாத/சமாளிக்க முடியாத ஒரு நிலை வரும்போது, தான் எடுத்த முடிவு எனக்கு மட்டுமல்ல என் பழைய பார்ட்னருக்கும் நல்ல முடிவுனு நம்புவதாக தெளிவாக சொல்லலாம்னு தோனுது.

8 comments:

Philosophy Prabhakaran said...

அதான் என் வீட்டு பாத்ரூமை எட்டி பார்க்காதீங்கன்னு சொல்லிட்டாரே அதுக்கப்புறம் இதுபோன்ற பதிவையெல்லாம் எழுத வேண்டுமா...?

ராம்ஜி_யாஹூ said...

phil prabak is right

வருண் said...

***philosophy prabhakaran said...

அதான் என் வீட்டு பாத்ரூமை எட்டி பார்க்காதீங்கன்னு சொல்லிட்டாரே அதுக்கப்புறம் இதுபோன்ற பதிவையெல்லாம் எழுத வேண்டுமா...?

3 November 2010 4:29 PM***

அவரும் சொல்லிக்கிட்டேதான் இருக்கார், மீடியாவும் கேட்டுக்கிட்டேதான் இருக்கு.

///* உங்களுடைய சொந்த வாழ்க்கையில் எவ்வளவோ ஏற்றத் தாழ்வுகள். ஆனால் எப்படி தன்னம்பிக்கை குறையாமல் நிற்கிறீர்கள்?///

இந்த கேள்விக்கும் பாத்ரூமை எட்டிப்பார்ப்பதுக்கும் என்ன சம்மந்தம்?

இவருதான் சும்மா தேவையில்லாமல் உளருகிறார்!

வருண் said...

**Blogger ராம்ஜி_யாஹூ said...

phil prabak is right

3 November 2010 7:07 PM***

I am beg to disagree, you both are wrong. He should learn to address this issue /answer this kind of questions, in a better manner DOT! :)

பழமைபேசி said...

தளபதி,

நான் என்ன சொல்ல வர்றேன்னா, 101வது தடவையா, இதையும் வழிமொழியுறேன்... ஆனா, நீங்க இன்னும் வடக்கு நோக்கியே இருக்குறது நல்லா இல்ல!

நல்லதை எல்லாம் பொதுவுல வெச்சிப் புகழ் தேடுவீங்க.... கெட்டதை மட்டும் விமர்சிக்கக் கூடாதா?? என்னங்கய்யா இது??

இவர் வேணுமானா, புகழ் விரும்பியா இல்லாம இருக்கலாம். எத்தனை பேர், சின்ன சின்ன காரியங்களை எல்லாம் பெருசாக்கிப் புகழ் அடையுறோம்?

ஒன்னும் இல்ல; மாற்றுத் திறனாளிய ஒருவர் மணம் முடிக்கிறதைப் புகழ்றாய்ங்க... மணம் முடித்தவர் இரசிக்கிறார். இது நியாயமா?? அது எப்படி நியாயம் இல்லையோ, அதேதான் இதுவும். ஆக, அதை நிறுத்தும் போது, இதுக்கு இடம் இல்லாமப் போய்டும். சரி, சரி, வந்து இப்ப நீங்க எங்கதான் இருக்கீங்கன்னு சொல்லிட்டுப் போங்க.

வருண் said...

***பழமைபேசி said...

நல்லதை எல்லாம் பொதுவுல வெச்சிப் புகழ் தேடுவீங்க.... கெட்டதை மட்டும் விமர்சிக்கக் கூடாதா?? என்னங்கய்யா இது??***

கேட்ட கேள்வி இதுதான்,

///* உங்களுடைய சொந்த வாழ்க்கையில் எவ்வளவோ ஏற்றத் தாழ்வுகள். ஆனால் எப்படி தன்னம்பிக்கை குறையாமல் நிற்கிறீர்கள்?///

ரொம்ப நாகரிகமாத்தான் கேட்டு இருக்காக! இவர் சொன்ன பதில்தான் அநாகரிகமா இருக்கு! ஆனா இவ்ரு என்ன எழவைச் சொன்னாலும் வக்காலத்து வாங்க ஒரு படையே இருக்கு!

Unknown said...

The question may look desent. But, only meaning for the question is nothing but his married life. Coz, he has no other personal issues which the news makers aware. So, obviously he will get angry when this kind of questions asked. He should give this kind of answers only to avoid any further questions related to this.

வருண் said...

***Aandavan said...

The question may look desent. But, only meaning for the question is nothing but his married life. Coz, he has no other personal issues which the news makers aware. So, obviously he will get angry when this kind of questions asked. He should give this kind of answers only to avoid any further questions related to this.
9 November 2010 1:11 PM ***

I don't think the whole media is going to shut up from this reaction. If he does not want such questions, he should stop giving interviews even for promoting his movies and for taking advantage of media for his benefits! He cant just use them only for his advantage as he wishes. He should rather prepare to answer the questions in a better manner.