Monday, December 6, 2010

நடிகர் விஜய் ஒரு இடியட்டா?

நடிகர் விஜய் 3 இடியட்ஸ்ல ஒரு முக்கிய ஹீரோ என்று சொல்லும்போதே எனக்கு ஏதோ ஒரு மாதிரியான ஒரு ஃபீலிங். விஜய், பெரிய இயக்குனர் கீழெல்லாம் நடிக்க முடியுமா? விஜய் என்ன ரஜினியா? இந்த வயதிலும் சங்கரை மதித்து அவர் சொல்படி நடிப்பதற்கு? அதிலும் மூனு ஹீரோ உள்ள படத்தில் ஒரு ஹீரோ. ஃப்ரெண்ட்ஸ் ல சூரயாவுடன் நடித்து சூர்யா புகழைத் தட்டிக்கிட்டு போயிட்டார். இந்தப்படத்தில் என்ன ஆகப்போகுதோ பார்க்கலாம்னு பார்த்தால், விஜய் ஏதோ சாக்குச் சொல்லி இந்த் ப்ராஜெக்ட்ல இருந்து கழண்டு கொண்டதாக செய்தி வந்தது. அது உண்மை என்பதுபோல்இப்போது எல்லாரும் எழுதுறாங்க!

விஜய், சன் ஆஃப் சந்திரசேகரா ஒரு வினோதமான ஆகடர்தான். அப்பா இயக்குனரானதால நடிகரரானார். தனக்கென்று ஒரு இடத்தை தந்திறமையால் வென்றார். ஆனால், இவரை இயக்கும் இயக்குனர்கள் எல்லாம் கொஞ்சம் பெரிய ஆளாக அவர்கள் சொல்லும்படி இவர் கேட்கும்படி நிலைமை வந்தால் இவரால் அவர்களோட இணைந்து வேலை செய்ய முடியுமா? என்கிற கேள்விக்கு நான் பதில் தேடிக்கொண்டு இருந்தேன். அது விஜயால் முடியாது என்பது போல் இருக்கிறது இவர் 3 இடியட்ஸ்ல இருந்து கழண்டு கொண்டது.

யாருமே எதிர்பார்க்காத வகையில் விஜயோட சூப்பர் ஸ்டார் கனவு சூர்யாவால் தகர்க்கப்பட்டு வருகிறது. இவருடைய அரசியல் ஆசை இவரை பாதாளத்தில் தள்ளிக்கொண்டு இருக்கிறது. இந்த் நிலையில் பெரிய இயக்குனர் சொல்ற படி நடிக்கமுடியாத ஒரு நடிகர் விஜய் என்பது உறுதியாகிறது.

விஜயின் இந்த "நான் ஒரு இடியட்டாக இருக்கமாட்டேன்" என்கிற முடிவு முட்டாள்தனமாந்து என பலர் நம்புகிறார்கள். What an idiot this Vijay is, to turn down a Shankar's movie? என்று திட்டுகிறார்கள் பலர். விஜய் ரசிகர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை! விஜய் புத்திசாலியா? இல்லை தன் அரசியல் பேராசையால் சீக்கிரம் வீணாப்போய்விடுவாரா என்பதை காலம்தான் சொல்லனும்!

13 comments:

தம்பி கூர்மதியன் said...

இது உண்மைதானா.??? சங்கரின் படத்தை புறக்கணிக்கும் அளவுக்கு பெரிய ஆளா இவர்... ஆச்சர்யமாக உள்ளது...

வருண் said...

***தம்பி கூர்மதியன் said...

இது உண்மைதானா.??? சங்கரின் படத்தை புறக்கணிக்கும் அளவுக்கு பெரிய ஆளா இவர்... ஆச்சர்யமாக உள்ளது...

6 December 2010 8:04 AM***

உண்மைதாங்க. விஜய் அல்ரெடி தமிழ்நாட்டு முதவராகிவிட்டதா நெனச்சுக்கிட்டு இருக்கார். அரசியல்ல இறங்கி மரண அடி வாங்கினால்தான் புத்தி வரும்.

Chitra said...

விஜய், சன் ஆஃப் சந்திரசேகரா ஒரு வினோதமான ஆகடர்தான்.

.... ஹி,ஹி,ஹி,....

வருண் said...

***Chitra said...

விஜய், சன் ஆஃப் சந்திரசேகரா ஒரு வினோதமான ஆகடர்தான்.

.... ஹி,ஹி,ஹி,....

6 December 2010 9:27 AM***

சங்கர் படத்தில் சந்திரசேகராவுடைய ஆசைகளை எல்லாம் நிறைவேற்ற முடியாது. சந்திரசேகரா மூக்கை நுழைக்க முடியாது!

ஆனா நெறையா உழைக்கனும். விஜய், இப்படியே பாட்டு டாண்ஸ் சண்டைனு க்ஷ்டப்படாம பொழைப்பை ஓட்ட பழக்கப்பட்டுவிட்டார்போல இருக்கு.

கடின உழைப்பு உழைக்கவோ, டைரக்டர் சொல்றபடி கேட்கவோ இந்த வயதிலேயே முடியாத அளவுக்கு "பெரிய மனுஷன்" ஆயிட்டார் விஜய்!

Selva said...
This comment has been removed by the author.
Selva said...

why shankar do a remake.
நடிகர் விஜய made a good decision.
Shankar only a big budget(Note:- with producer's money! Not from his own pocket) song maker. thats all.

பழமைபேசி said...

ஒருவர் மட்டுமே அவ்வளவு பெரிய தொகைக்கு ஊழல் செய்திருக்க முடியாது!

வருண் said...

***Selva said...

why shankar do a remake.
நடிகர் விஜய made a good decision.***

Selva,

The problem with your argument is that, WHY NOW?

Vijay could have said NO in the beginning itself like a gentleman. WHY NOW?

Did not Vijay know all about 3-idiots and the remake of Hindi movie???

வருண் said...

***பழமைபேசி said...

ஒருவர் மட்டுமே அவ்வளவு பெரிய தொகைக்கு ஊழல் செய்திருக்க முடியாது!
6 December 2010 2:24 PM ***

ஆமா ஆமா! ரொம்பச் சரி! :)))

தம்பி கூர்மதியன் said...

@செல்வா: நீங்கள் ஒரு விஜயின் தீவிர ரசிகராக இருக்கலாம் நண்பரே ஆனால் சங்கரை குறை சொல்வது சரியல்ல...
நீங்கள் சொல்லியவாறு சங்கர் ஏன் ஒரு ரீமேக் படத்தை எடுக்கிறார் என எனக்கும் குழப்பம் இருந்தது.. ஆனால் ஒரு சிறந்த படம் நம் மக்களுக்காக கொடுக்கும் போது அது ரீமேக்காக இருப்பதில் ஒன்றும் தவறில்லை என தோன்றுகிறது.. தயாரிப்பாளர் பணத்தை அழிக்கிறார் என புலம்புகிறீரே ஆனால் அவர்களின் முதலீட்டுக்கு மேல் அவர்கள் லாபம் காண்பதை நீங்கள் காணாமல் விட்டுவிட்டீரா.???
அவர் அழிப்பதாக இருந்தால் முதலீட்டளர்கள் பணம் போடாமல் போகட்டும்.. ஒரு சிறந்த டெக்னாலஜி இயக்குனரை இழந்திடுவோம் என்பதே என் கருத்து..

Sathish said...

@Selva,
//why shankar do a remake.
நடிகர் விஜய made a good decision.
Shankar only a big budget(Note:- with producer's money! Not from his own pocket) song maker. thats all.//


Vijay and vijay fans do not like 'remake" movies?!!!!! Thatswhy Viajy moved away from this project....:)
Enna kodumai sir ithu? :)

தம்பி கூர்மதியன் said...

@சதீஷ்: ஹி ஹீ ஹீ.. காமெடி காமெடி..

வருண் said...

தங்கள் கருத்துக்கு நன்றி, தம்பி கூர்மதியன் மற்றும் சதீஷ்! :)