Monday, December 20, 2010

இதெல்லாம் பெரிய அநியாயம்ங்க , மீனு அவர்களே!

வலையுலக மக்களே! எனக்கிழைக்கப்பட்டது நியாயமானு சொல்லுங்க! நான் ஒண்ணும் பெரிய எழுத்தாளன் எல்லாம் இல்லை! ஆனால் எதையாவது எழுதுவது பொழுதுபோக்கு!

அதுபோல் எழுதிய ஒரு கட்டுரைதான் கமலஹாசன் என்கிற வி்யாபாரி என்கிற நான் எழுதிய ஒரு சிறுகட்டுரை.

இந்தக்கட்டுரையை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி போட்டு இருக்கார், "மீனு" என்கிற இன்னொரு தமிழர். அதை இங்கே பார்க்கவும்!

ஆனால் இந்த மீனு என்பவர், என்னுடைய பேரையோ , இந்த ரிலாக்ஸ் ப்ளீஸ் தளத்தையோ, அல்லது இதற்கான ஒரிஜினல் தொடுப்பையோ கொடுக்கவே இல்லை! விவாதத்தில் இந்த கட்டுரையை யார் எழுதியது என்று கேட்கும் கேள்விக்குக்கூட இந்த "காப்பி-பேஸ்ட் மீனு வாயைத் திறக்கவில்லை! இதெல்லாம் என்னங்க அநியாயம்? இந்த அளவுக்குக்கூட வலையுலக நாகரிகம் தெரியாமல் இருக்காங்க நம்ம மக்கள்?

இவங்களை நெனச்சு சிரிக்கிறதா இல்லை அழுவுறதானு தெரியலை!

16 comments:

philosophy prabhakaran said...

The link that u used is taking me to the comments of that particular post... So use this link:
http://www.eegarai.net/t7847-topic

sriram said...

பதிவுத் திருட்டுக்கு என் கண்டனங்கள். பதிவு எழுதுவதே ஒரு பொழுது போக்கு. இதில இதுக்கு திருடி பதிவு போடணும்னுத் தெரியல.
ஆனா ஒரு விஷயம் வருண், பிறர் திருடிப் போடும் அளவுக்கு உங்க எழுத்து நல்லா இருக்கு.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பார்வையாளன் said...

அது நான் ரசித்த கட்டுரை . அந்த கருத்து பரவுவது நல்லதுதான் . உங்களுக்கு சொல்லிவிட்டு செய்திருக்கலாம்

துளசி கோபால் said...

பதிவுத் திருட்டு :(

என் கண்டனங்கள்.

சேட்டைக்காரன் said...

பதிவுலகில இதெல்லாம் இப்போ ரொம்ப சகஜமப்பா....! 

மதுரை பாண்டி said...

அப்டின்னா நீங்களும் பிரபல பதிவர் ஆயிடீங்க !!! திருடனாய் பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..

இரவு வானம் said...

வாழ்த்துகள் பாஸ் பிரபல பதிவர் ஆகிட்டீங்க, வேற என்ன சொல்ல:-(

வருண் said...

***philosophy prabhakaran said...

The link that u used is taking me to the comments of that particular post... So use this link:
http://www.eegarai.net/t7847-topic

20 December 2010 5:49 PM***

நன்றி, பிரபாகரன். தொடுப்பை மாத்திடுறேன் :)

வருண் said...

***sriram said...

பதிவுத் திருட்டுக்கு என் கண்டனங்கள். பதிவு எழுதுவதே ஒரு பொழுது போக்கு. இதில இதுக்கு திருடி பதிவு போடணும்னுத் தெரியல.***

ஒரு சிலர் இதை தப்புனு தெரியாமலே செய்றாங்க. நம்ம சொல்லாமலேவிட்டால் அவங்க என்னைக்குமே இதே தப்பை செய்துகொண்டே இருப்பாங்க. அதான்..


***ஆனா ஒரு விஷயம் வருண், பிறர் திருடிப் போடும் அளவுக்கு உங்க எழுத்து நல்லா இருக்கு.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

20 December 2010 5:54 PM***

கமலை குறை சொன்னாலே தமிழின துரோகி பட்டம் கட்டுறதுதான் நம்ம பதிவுலகம். நான் கமலிடம் அதிகம் குறை கண்டுபிடிப்பவன். மற்றபடி இந்தப்பதிவில் ஒண்ணும்பெருசா இல்லைங்க, ஸ்ரீராம்.

உங்க கருத்துக்கு நன்றி :)

வருண் said...

***பார்வையாளன் said...

அது நான் ரசித்த கட்டுரை . அந்த கருத்து பரவுவது நல்லதுதான் . உங்களுக்கு சொல்லிவிட்டு செய்திருக்கலாம்

20 December 2010 6:27 PM**

நன்றி, பார்வையாளன் :)

வருண் said...

***Blogger துளசி கோபால் said...

பதிவுத் திருட்டு :(

என் கண்டனங்கள்.

20 December 2010 7:10 PM***

ஒரு மாதிரியான அறியாமைதான் டீச்சர் இது. நம்ம இதைப்பத்தி சொல்லாமல் விடுவது நம் தவறுனு நெனைக்கிறேன். ஒருவர் பதிவை மேற்கோள் காட்டும்போது அவரை சரிவர "சைட்" பண்ணனும்னு இனிமேலாவது கற்றுக்கொண்டால் சரிதான் :)
உங்க கருத்துக்கு நன்றி, டீச்சர் :)

வருண் said...

**Blogger சேட்டைக்காரன் said...

பதிவுலகில இதெல்லாம் இப்போ ரொம்ப சகஜமப்பா....! 

20 December 2010 11:41 PM***

எல்லாமே சகஜம் தாங்க. ஆனால் இதுபோல் தவறை சுட்டிக்காட்டாமல் "பெரியமனதுடன்" நடந்துகொள்வதுபோல போவது சரியல்ல என்பது என் எண்ணம் :)

வருண் said...

***மதுரை பாண்டி said...

அப்டின்னா நீங்களும் பிரபல பதிவர் ஆயிடீங்க !!! திருடனாய் பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..

21 December 2010 12:33 AM***

வலையுலகில் நெறையா அனுபவமில்லாத பதிவர்களும் இருக்காங்கங்க, நம்ம சொல்லலைனா அவங்களுக்கு இது தப்புனே தெரியாமல் போயிடும் :)

வருண் said...

***இரவு வானம் said...

வாழ்த்துகள் பாஸ் பிரபல பதிவர் ஆகிட்டீங்க, வேற என்ன சொல்ல:-(

21 December 2010 5:48 AM***

என்னவோ போங்க! :)

ராமலக்ஷ்மி said...

சமீபத்தில் நிலாரசிகன் கவிதைகள். அது குறித்து பதிவும் இட்டிருந்தார். தொடர்ந்து நடந்து வருகிறது. என் கண்டனங்களும்.

வருண் said...

***ராமலக்ஷ்மி said...

சமீபத்தில் நிலாரசிகன் கவிதைகள். அது குறித்து பதிவும் இட்டிருந்தார். தொடர்ந்து நடந்து வருகிறது. என் கண்டனங்களும்.
21 December 2010 5:28 PM ***

வேணும்னே செய்றாங்களா இல்லை இது தவறுனு தெரியாமல் செய்றாங்களானு எனக்கு தெரிலைங்க! ஆனால் இது தவறுனு சுட்டிக்காட்டனும் என்பதே என் முயற்சி.

உங்க கண்டனக்ன்களுக்கும் கருத்துக்கும் நன்றிங்க, ராமலக்ஷ்மி! :)