Saturday, December 4, 2010

செக்ஸ் என்கிற என்றுமே அடங்காத ஆசை!


இந்தக்காலத்து போர்ன் ஆசாமிகள் நினச்சுக்கிறது என்னனா அந்தக்காலத்தில் வாழ்ந்த நம் மக்கள் எல்லாம் தேவையான அளவு செக்ஸ் பத்தி தெரிஞ்சுக்கலை. ஒருவனுக்கு ஒருத்தினு கட்டுப்பட்டித்தனமா வாழ்ந்து வாழ்க்கைய வீணடிச்சுட்டாங்க! செக்ஸ் பத்தி சரியாத் தெரியாமலே வாழ்ந்து முடிச்சுட்டாங்க. இப்போ நாங்கதான் விதவிதமா தெரிஞ்சுக்கிட்டோம்னு நெனச்சுக்கிறாங்க.

ஆனால் உண்மை என்னனா நீ ஆயிரம் பெண்களுடன், லட்சம் தர உடலுறவு கொண்டாலும், உனக்கு அந்த காம ஆசை (desire for sex ) தீரப்போவதில்லை. ஆயிரத்து ஒண்ணுக்காக நீ நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டுத்தான் அலைவ. 90 வயதான பிறகும் உனக்கு ஒரு “ஹாட் சிக்” பார்த்து அவளோட காமம் கொண்டால் எப்படியிருக்கும்? நு காம ஆசை வந்து அது நிராசையாகத்தான் முடியும். ஆக மொத்தத்தில் நீ எந்த வகையிலும் இந்தப் பாடத்தை படித்து முடித்த திருப்தி ஒருபோதிலும் வருவதில்லை. ஆக, எல்லாம் அறிஞ்ச மேதாவியான உன் வாழ்க்கையிலும் உன் “காம ஆசை” நிராசையாகத்தான் முடியுது.

நம்ம புத்தர் எல்லாரும் மாதிரித்தான் பிறந்து, டீனேஜராக கி, கல்யாணம் பண்ணி செக்ஸ் வச்சுக்கிட்டு பிள்ளையும் பெத்தார். 35 வயசுல இருந்து “காம ஆசை” (desire for sex) யை அடக்கி வாழ ஆரம்பிச்சாராம். எவ்ளோதான் விதவிதமா "காம லீலைகள்" செய்தாலும் “காமம் கொள்ளனும்னு வருகிற ஆசை” யை ஒழிக்க முடியாது. ஆனால் 35 வ்யதில் புத்தர் “காம ஆசை”யை ஒழிச்சுட்டார். அதனால்தான் அவர் உன் முன்னோர்களைவிட, உன்னைவிட “க்ரேட்”!

இந்தக்காலத்து செக்ஸ் மேதாவிகள் தெரிஞ்சுக்க வேண்டியது.. எவ்ளோதான் விதவிதமா நீ செக்ஸ் ஆக்டிவிட்டி விதவிதமா வச்சுக்கிட்டாலும் மறுபடியும் இன்னொரு பெண்ணைப்பார்த்து அவள¨ அனுபவிக்க செக்ஸ் ஆசை வரத்தான் செய்யும். நீதான் எல்லவிதமான செக்ஸ்பத்தியும் செஞ்சிட்ட, அப்புறம் ஏன் இன்னும் அலையிற? செக்ஸ் பத்தி சரியாத்தெரியாதவர்கள்னு நீ நெனைக்கிற முன்னோர்களைவிட நீ என்னத்த பெருசா கிழிச்சுட்ட? உன் மேதாவித்தனத்துப்படி முன்னோர்களெல்லாம் செக்ஸ் தெரியாமலே வாழ்ந்துட்டாங்கனே வச்சுக்குவோம். ஆனா நீ இவ்ளோ செய்த பிறகும் நீயும் அதே குட்டையை சேர்ந்த மட்டைதான்! உனக்கு இன்னொரு பிரச்சினை என்னனா 90 வயசுல வயாகராவும் வொர்க் ஆகாது, உன் காம ஆசைத்தீ மட்டும் பிரகாசமா எரியும்! அதனால செக்ஸ்ங்கிறது ஒண்ணும் பெரிய விசயம் இல்லைங்கிறத இந்தக்காலத்து “போர்ன் மேதாவி”களெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

The activity of sex will never ultimately satisfy the desire for sex.

இது நான் படித்ததில் பிடித்த ஒண்ணு. இது நகல்தான்! ஒரிஜினல் ஆங்கிலத்தில் இங்கே!

4 comments:

பழமைபேசி said...

கட்டுக்குள் வாழ்வு!

வருண் said...

***பழமைபேசி said...

கட்டுக்குள் வாழ்வு!
4 December 2010 6:10 PM ***

இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான்
அதை இருப்பவனும் எண்ணிப்பாக்க மறந்துட்டான்! :(

ராவணன் said...

புத்தரைப் பற்றி நான் ஒன்றும்
கூறுவதிற்கில்லை.

செக்ஸ் எப்போதும் அள்ள அள்ள குறையாத ஊற்று.ஆணுக்கு திறன் உள்ளதோ இல்லையோ அவன் நெஞ்சில் எப்போதும் செக்ஸ் ஊற்று இருந்துகொண்டே இருக்கும்.

எத்தனை கட்டினாலும் வாழ்க்கையில் இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான்.

எனக்கு இப்போது ஏழு காதலிகள்...நம்பமுடியுமா?
பல நாட்டைச் சேர்ந்தவர்கள்.
உயிர் பிரியும்வரை காதல்(காமம்) நம்மை விட்டுப் பிரியாது.

ஜஸ்ட்...லிவிங் டுகெதெர் பாஸ்...
டோன்ட் கேர்......

ஜெய் ஹோ.....!

வருண் said...

***ராவணன் said...

புத்தரைப் பற்றி நான் ஒன்றும்
கூறுவதிற்கில்லை.

செக்ஸ் எப்போதும் அள்ள அள்ள குறையாத ஊற்று.ஆணுக்கு திறன் உள்ளதோ இல்லையோ அவன் நெஞ்சில் எப்போதும் செக்ஸ் ஊற்று இருந்துகொண்டே இருக்கும்.

எத்தனை கட்டினாலும் வாழ்க்கையில் இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான்.

எனக்கு இப்போது ஏழு காதலிகள்...நம்பமுடியுமா?
பல நாட்டைச் சேர்ந்தவர்கள்.
உயிர் பிரியும்வரை காதல்(காமம்) நம்மை விட்டுப் பிரியாது.

ஜஸ்ட்...லிவிங் டுகெதெர் பாஸ்...
டோன்ட் கேர்......

ஜெய் ஹோ.....!

5 December 2010 4:40 AM***

இல்லங்க ராவணன், நான் சொல்ல வந்தது செக்ஸ்ல திருப்தி அடைவது என்பதில்லை என்பதே!