Monday, December 20, 2010

அவர் என்ன போதை மருந்து தயாரிச்சாரா, சார்?

அந்த போலிஸ் ஸ்டேஷனில்தான் டாக்டர் ராமனை பிடிச்சு வந்து அடச்சு வச்சிருந்தாங்க. அங்கே இருந்த காண்ஸ்டபில் முருகனுக்கு ஒரே குழப்பம். இந்த ஆளப் பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்கான்..என்னத்துக்காக இந்த ஆளை பிடிச்சு உள்ள போட்டு இருக்காங்க? அடக்க முடியாமல், மெதுவா ஏட்டு நல்லசிவத்திடம் போனாரு..

"சார் நான் உங்க கிட்ட ஒண்ணு கேக்கவா? என்ன சார் இது ..படிச்சவர் மாதிரி இருக்காரு. இவரைப் பிடிச்சு உள்ள போட்டு இருக்காங்க." என்று மெதுவா ஆரம்பிச்சாரு காண்ஸ்டிபில் முருகன்.

"யாரய்யா பத்தி கேக்கிற?" என்றார் ஏட்டு நல்லசிவம்.

"அவர்தான் சார்.. நேத்து பிடிச்சுட்டுவந்து எஃப் ஐ ஆர் எல்லாம் போட்டாங்களே, டாக்டர் ராமனா என்னவோ?"

"ஆமாயா அவர் டாக்டர் ராமன் தான். ஏதோ மருந்து தயாரிச்சாராம்யா.. அதான் பெரிய இடத்தில் இருந்து இந்த "டாக்டரை" பிடிச்சு வுள்ள போட்டு இருக்காங்க!"

"என்ன மருந்து சார்? போதை மருந்து எதுவுமா?"

"இல்லய்யா... ஏதோ எயிட்ஸுக்கு மருந்தாம். இவரா 10 விஞ்ஞானிகளோட சேர்ந்து காட்டுக்குள்ள ஒரு ஆய்வகம் கட்டி அதில் கிலோக் கணக்கிலே தயாரிச்சு இருக்காருய்யா.."

"அதுல என்ன சார் தப்பு? எயிட்ஸ்னால நம்ம நாட்டிலே எவ்வளவு பேர் சாகிறாங்க இல்லையா?"

"புரியாமல் பேசாதேய்யா! கோடிக்கணக்கான டாலர்கள் செலவழிச்சு, ஒரு அமெரிக்க நிறுவனம் தயாரிச்ச ஒரு எயிட்ஸ் மருந்தை, இவருபாட்டுக்கு இஷ்டத்துக்கு தயாரிச்சு, அதை ஏழை எயிட்ஸ் நோயாளிகளுக்கு கொடுக்க ஆரம்பிச்சுட்டாராம்யா. அதெல்லாம் தப்புயா"

"இவருக்கு எப்படி சார் இந்த மருந்து தயாரிக்கத் தெரியும்?"

"அதெல்லாம் ஏதோ ஒரு ஜேர்னல்ல இல்ல பேட்டெண்ட்ல பிரசுரிச்சு இருப்பாங்கலாம். அதை வச்சு இவரா இவர் நண்பர்களுடன் சேர்ந்து சின்ன ஆய்வுக்கூடம் ஆரம்பிச்சி கிலோக்க்கணக்குல தயாரிச்சுட்டாராம்."

"தயாரிச்சு எயிட்ஸ் நோயாளிகளுக்கு காசுக்கு வித்தாரா, சார்?"

"இல்லைய்யா, நீ வேற! ஏழை எயிட்ஸ் நோயாளிகளுக்குத்தான் கொண்டுபோய் ஃப்ரியாத்தான் சப்ளை பண்ணி இருக்கார்"

"நோயாளிகள் அந்த மருந்தை சாப்பிட்டுவிட்டு நல்லானாங்களா சார்?"

"அவங்களுக்கு நோய் குணமாற மாதிரி இருக்காம். நோய் சரியாகிற மாதிரி இருக்காம்யா. அந்த மருந்து வேலை செய்யுதாம்யா"

"இதுல என்ன சார் பெரிய தப்பு? அவர் என்ன கஞ்சாவா வித்தார்?"

"இது ஒரு மாதிரியான குற்றம்யா..இதெல்லாம் சட்டப்படி தப்புயா, முருகா! பேட்டண்ட் ரைட்ஸ் அது இதுனு இருக்காம்யா"

"என்ன சார் நீங்க? சட்டமாவது கழுதையாவது.. அந்த அமெரிக்க நிறுவனத்துக்கு இதை போட்டு க்கொடுத்தவனை தூக்கி உள்ள போடனும் சார்"

"என்னய்யா சொல்ற?'

"இவர் தயாரிச்சு, ஏழை நோயாளிகளுக்கு கொடுக்கிறதை, எப்படி சார் அமெரிக்க நிறுவனம் கண்டு பிடிச்சது?"

"அதெல்லாம் தெரியாதுய்யா எனக்கு."

"சார், அவர்ட்ட நான் கொஞ்சம் பேசலாமா?"

"சரிய்யா! எதையாவது உளறி வைக்காதீர்"

------------------------------

"உங்க பேருதான் ராமனா சார்? நான் காண்ஸ்டபில் முருகன் சார்!"

"அப்படியா? வணக்கம் முருகன்"

"என்ன சார் அநியாயம் இது? உங்களை யார் சார் காட்டிக்கொடுத்தது?"

"யார் காட்டிக்கொடுப்பா? பொறுப்பான ஒரு தமிழனாத்தான் இருக்கும்..நான் நிரபராதி எல்லாம் இல்லங்க முருகன்"

"ஏன் சார், நீங்க பாட்டுல ஒரு பெரிய கம்பெணில வேலை பார்த்து லட்ச லட்சமா சம்பாரிக்கலாமே சார்? ஏன் இப்படி வந்து.."

"அதிலெல்லாம் திருப்தி இல்லைங்க முருகன்."

"சார்?"

"என்ன முருகன்?"

"என் தூரத்து சொந்தம் ஒருத்தரு.. இந்த வியாதிதான் சார், எயிடுசு. ரொம்ப மோசமான நெலம சார். சாகக் கெடக்கிறாரு சார்.. உங்க கிட்ட ஏதாவது மருந்து இருக்கா? ரொம்ப ஏழை சார் அவரு.."

" என் நண்பன் அட்ரெஸ் தர்றேன். அவர்ட்ட போயி வாங்கிக்கோங்க. ஆனால் இது ஆறு மாத சப்ளைதான். அதுக்கப்புறம் மருந்து தயாரிக்க முடியுமானு தெரியலை."

"ரொம்ப நன்றி சார்... சார்! கவலைய விடுங்க சார். உங்கள வெளிய கொண்டு வர நான் ஏதாவது ஏற்பாடு செய்றேன், சார்."

டாக்டர் ராமன் புன்னகைத்தார்.

6 comments:

நசரேயன் said...

நீங்க சொன்னா சரிதான்

வருண் said...

***Blogger நசரேயன் said...

நீங்க சொன்னா சரிதான்

20 December 2010 1:58 PM** தள(ல): நான் எதுவும் சொல்லல. ஈது ஒரு கற்பனைக் கதை மட்டும்தான் :)

philosophy prabhakaran said...

டாக்டர் ராமன் உண்மையில் இருந்தா நல்லாத்தான் இருக்கும்...

? said...

http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை


அனைவரும் வருக !

வருண் said...

***philosophy prabhakaran said...

டாக்டர் ராமன் உண்மையில் இருந்தா நல்லாத்தான் இருக்கும்...
20 December 2010 4:37 PM ***

அதென்னவோ உண்மைதான் :)

வருண் said...

***? said...

http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை


அனைவரும் வருக !

21 December 2010 3:55 AM**

நன்றிங்க கேள்விக்குறி :)