Friday, December 17, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே (4)

* காதல் பொய்யானதா?

காதலர்கள் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசும்போது பேசுகிற சில வசனங்கள் காலப்போக்கில் பொய் ஆவதுண்டு. அந்த உண்மைகள் அந்த நிமிடத்திற்குத்தான் உண்மை என்பது என் நம்பிக்கை. மற்றபடி காதல், காதல் தான்! உண்மையாவது பொய்யாவது.


* ஆமா இந்த சொர்க்கம் நரகம்னு சொல்றாங்களே, சொர்க்கம் ஒரே இன்பமயமா இருக்குமா?

துன்பம்னு இருப்பதால், நமக்கு நடப்பதால்தான் சந்தோஷம் என்பதே "சொர்க்கமா இருக்கு". பசினு ஒண்ணு வருவதாலேதான் உணவு உண்ணும்போது "சொர்க்கமாக" இருக்கு. வெயில் கொளுத்தும்போதுதான், "நிழல்" சொர்க்கமா இருக்கு. எந்தக்குறையுமே இருக்காது சந்தோஷம் மட்டும்தான் எப்போதுமே இருக்கும்னா? செம போர் அடிக்காதா? நான் சொர்க்த்துக்கு போகமாட்டேன் என்று "சீ சீ இந்தப் பழம் புளிக்கும்" னு இப்படி சொல்லல! நம்புங்க!

* பொய்களிலேயே பல வகை இருக்கு இல்லையா? ஹார்ம்லெஸ் லை, ஹார்ம்ஃபுல் லை? அப்போ உண்மையிலும் அப்படி ரெண்டு வகை இருக்கா?

அப்படித்தான்போல, ஹானஸ்ட் ட்ரூத் னு சொல்றாங்க, வெர்ரி ட்ருலி னு சொல்றாங்க இல்லையா? இல்லைனா "உண்மை" க்கெல்லாம் எதுக்குங்க அடைமொழி?

* ஒரு சில கேள்விகளைவிட, அதற்கு சொல்லப் படுகிற பதில்கள் ரொம்ப நம்மைக் குழப்புமா?

சர்க்கரை என்பது என்ன?னா ஒரு இனிப்புப் பொருள். சாப்பிட்டால் இனிக்கும்னு சொல்லலாம்.

அதை விட்டுப்புட்டு அது ஒரு மூலக்கூறு! அதுல ஒரு குளுக்கோஸும், ஒரு ஃப்ரக்டோஸும் சேர்ந்து இருக்கு அப்படி னு சொன்னா, கேள்வியே பரவாயில்லைனு தானே தோனுது?

* கடவுள் ஏன் கல்லானார்?

அல்லாவுக்கு உருவமில்லை! அவரும் கடவுள்தான்னு சொல்றாங்க. நம்ம கடவுளை கல்லாக்கியது மனுஷந்தான். கல்லுக்கு உணர்ச்சியில்லை! கடவுளுக்கும் உணர்ச்சி இல்லை! அதான் மனிதன் கடவுளை கல்லாக்கிவிட்டான் போல இருக்கு!

* கொஞ்ச வயதில் திமிருடன் வீராப்பும் வீம்பும் பேசும் மனிதன் ஏன் வயதான காலத்தில் தத்துவம் பேசுறான்?

அழகு, இளமை, திமிர், அறியாமை, ஹார்மோண்ஸ் எல்லாமே இளவயதில் அதிகம் இருக்குமாம். வயதாக ஆக, எல்லாமே குறைய ஆரம்பிக்கும்போது தன் இயலாமை, நிலையாமை தெரிய ஆரம்பிக்குமாம். அப்போத்தான் மனிதன் தத்துவம் பேச ஆரம்பிக்கிறான்னு சொல்றாங்க. ஒண்ணுமட்டும் கவனிச்சுப் பாருங்க, தோல்விகள்தான் ஒருவரை பண்படுத்துவது, ஆனால் நம்ம வெற்றிக்காக்த்தான் அலைகிறோம்!

* குழந்தைக்கும், ரொம்ப வயதானவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

வயசானவங்க வாழ்க்கையில் நெறைய பொய் சொல்லியிருப்பாங்க! குழந்தைக்கு பொய்னா என்னனே தெரியாது. அதனால்தானோ என்னவோ குழந்தை அழகா இருக்குதுங்க! அறியாமைதான் ஒருவரை நேர்மையா இருக்க வைக்குதா?னு தெரியலை.

* ஆமா, கேட்ட கேள்வியையே ரிப்பீட் பண்ணிக்கொண்டு இருக்கீங்களா?

எனக்கு நெஜம்மாவே தெரியலை! இருக்கலாம்! ஆனாலும் பதில் வேறயாவும் இருக்கலாம். ஒரு கடிதம் எழுதுறேன்னு வச்சுக்கோங்க, சரியா "சேவ்" பண்ணாமல் ஆட்டுமேட்டிக்கா டெலீட் ஆயிருச்சுனா, அதே கடிதத்தை என்னால் திரும்ப எழுத முடியவே முடியாது. எனக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினையா? :)

5 comments:

Chitra said...

* ஒரு சில கேள்விகளைவிட, அதற்கு சொல்லப் படுகிற பதில்கள் ரொம்ப நம்மைக் குழப்புமா?

சர்க்கரை என்பது என்ன?னா ஒரு இனிப்புப் பொருள். சாப்பிட்டால் இனிக்கும்னு சொல்லலாம்.

அதை விட்டுப்புட்டு அது ஒரு மூலக்கூறு! அதுல ஒரு குளுக்கோஸும், ஒரு ஃப்ரக்டோஸும் சேர்ந்து இருக்கு அப்படி னு சொன்னா, கேள்வியே பரவாயில்லைனு தானே தோனுது?


....... The best!!! Super!

philosophy prabhakaran said...

// ஒரு சில கேள்விகளைவிட, அதற்கு சொல்லப் படுகிற பதில்கள் ரொம்ப நம்மைக் குழப்புமா? //

எனக்கும் அதே சந்தேகம் தான்... ஒண்ணுமே புரியல... ஒரே குழப்பமா இருக்கு...

Kousalya said...

ரொம்ப தெளிவா புரிஞ்ச மாதிரி இருக்கு...ஆனா மறுபடி படிச்சி பார்த்தா ரொம்ப அழகா குழப்புற மாதிரி இருக்கே... :))

முதல்ல படிச்சதோட நிறுத்தி இருக்கணுமோ...? டவுட்டு##

யதார்த்தம். ரசித்தேன்.

இரவு வானம் said...

நல்ல கேள்வி பதில்கள் நன்றாக உள்ளது

வருண் said...

வாங்க, சித்ரா, பிரபாகர், கெளசல்யா மற்றும் இரவு வானம் :)