Friday, May 27, 2011

விஷப்பாம்புகள்! (1)


பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி மட்டுமல்ல! உண்மை! பாம்புக்கு பயப்படாதவங்க யாரும் இருக்காங்களா? ஆனால் எல்லாப் பாம்புகளும் விஷப் பாம்புகள் கெடையாது! உலகத்திலே உள்ள பாம்புகளில் கொடிய விஷப்பாம்பான "நாகம்" இந்தியாவிலேயும் இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நாகமோ, ராஜநாகமோ கெடையாது!

சரி உலகத்திலேயே படுமோசமான சில விஷப்பாம்புகள் சிலவற்றைப் பத்தி படத்துடன் பார்ப்போம்!

மேலே உள்ள பாம்பு பேரு Black Mamba! இது ஆப்ரிக்காவில் இருக்க பாம்பாம்! கடிச்சுச்சுனா பொழைக்க வாய்ப்பே இல்லைனு சொல்றாங்க! ஒரு கடி கடிச்சா 10-15 ஆட்களை கொல்லத் தேவையான விஷத்தை (100-400 மில்லி கிராம் ) இன்ஜெக்ட் பண்ணிடுமாம்! அதுக்கப்புறம் எங்கே பொழைக்க?

இன்னொண்ணு, பாம்பு விஷம் என்பது சயனைட் மாதிரி ஒரு கெமிக்கல் இல்லை! விஷப்ரோட்டீன்கள் நிறைய கலந்த கலவைனு சொல்றாங்க . பொதுவாக பாம்பு விஷம் எல்லாமே "நியுரோ டாக்ஸின்" னு சொல்றாங்க! நெறையா ஆராச்சி பண்ணி "மாற்று மருந்து" (விஷத்தை முறிக்க) எல்லாம் கண்டுபிடிச்சு இருக்காங்க! கடிச்ச உடனே "ஆண்ட்டிவெனின்" சாப்பிட்டால் பிழைக்க வாயப்பு இருக்காம்! இல்லைனா ஒரு 3 மணி நேரத்தில் அம்புட்டுத்தான்! எல்லாம் முடிஞ்சிடுமாம்!

அடுத்த விஷப்பாம்பு பத்தி விஷப்பாம்புகள்-2 ல பார்க்கலாம்!



4 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பொதுவாக பாம்பு விஷம் எல்லாமே "நியுரோ டாக்ஸின்" னு சொல்றாங்க//

இல்லை நண்பரே, நியூரோ டாக்ஸின் நரம்புக்களை பாதிக்கும் விஷம், ஹீமோ டாக்ஸின் ரத்தம் உறைதலை தாக்கும் விஷம், மயொடாக்ஸின், தசை நார்களைத் தாக்கும் விஷம். ஆகிய மூன்றுவகை விஷங்களும் கலந்து இருக்கும்.

நாக பாம்பு வகையறாக்களில் நியூரோடாக்ஸின்கள் மேலோங்கியும், விரியன் பாம்பு வகையறாக்களில் ஹீமோடாக்ஸின்கள் மேலோங்கியும், கடும் விஷம்தரக்கூடிய நீர்பாம்புகளில் மையோடாக்ஸின் மேலோங்கியும் இருக்கும்.

நீங்கள் படத்தில் குறீப்பிட்டுள்ள பாம்புவ்கையறாக்களில் நியூரோடக்ஸின் மேலோங்கி இருக்கும். பொதுவாக என்ற வார்த்தையும் இங்கு பொருள் பொதிந்தது. தொடர்ந்து எழுதுங்கள். எனக்குத் தெரிந்ததையும் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

//பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி மட்டுமல்ல! உண்மை! பாம்புக்கு பயப்படாதவங்க யாரும் இருக்காங்களா? //

இருப்பார்கள் போலிருக்கே. பயப்படாமல் படம் எடுத்திருக்கிறாரே? [பயந்தபடியே எடுத்திருப்பார் என்பீர்களோ:)!]

சுவாரஸ்யமான தகவல்கள். தொடருங்கள்.

வருண் said...

வாங்க தல சுரேஷ்!

நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. அடுத்த அத்தியாயத்தில் கொஞ்சம் தெளிவாக் பலவித விஷங்களைப் பத்தி சொல்ல்ப் பார்க்கிறேன். :)

வருண் said...

***ராமலக்ஷ்மி said...

//பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி மட்டுமல்ல! உண்மை! பாம்புக்கு பயப்படாதவங்க யாரும் இருக்காங்களா? //

இருப்பார்கள் போலிருக்கே. பயப்படாமல் படம் எடுத்திருக்கிறாரே? [பயந்தபடியே எடுத்திருப்பார் என்பீர்களோ:)!]

சுவாரஸ்யமான தகவல்கள். தொடருங்கள்.

27 May 2011 9:25 PM***
வாங்க ராமலக்ஷ்மி!

உண்மைதாங்க! பயந்தால் இப்படி ஒரு அழகான படம் எடுத்திருக்க முடியாதுதான். ஒருவேளை "ஆண்ட்டி வெனம்" கையோட எடுத்துட்டு போயிருப்பாரா இருக்கும் :)