Monday, May 23, 2011

வைரமுத்து என்கிற பெண் எதையோ ஒளற.. ஆண்களுக்கு அறை விழுது!

நான்கூட கவிப்பேரரசு வைரமுத்துதான் எதையோ பட்டணத்து புதுமைப்பெண்கள் இழந்துவிட்டதாக சொல்லிப்புட்டாரானு நெனச்சேன். அப்புறம் சந்தன முல்லை பதிவைக் கொஞ்சம் கவனமாகப்படிச்சு பார்த்தாதான் தெரியுது வைரமுத்து என்கிற ஒரு பெண்மணி என்று!!! அவரு என்ன சொல்லியிருக்காருனா கிராமத்துப் பெண்களிடம் "வெகுளித்தனம்" இருந்தது. அது இப்போதுள்ள நவீன நகரத்துக்குப் பெண்களிடம் இல்லை என்று! இது வைரமுத்துவுடைய கருத்து! அதாவது ஒரு பெண்ணின் கருத்து! அது விவாதத்திற்கு/ சர்ச்சைக்கு உரியது என்பதென்னவோ உண்மைதான்!

சரி, வைரமுத்து சொன்னது தப்புனா அவரை கண்டிக்கனும், தண்டிக்கனும்! அதைவிட்டுப்புட்டு எதுக்குங்க ஆண்களுக்கு கன்னா பின்னானு அறை விழுது? வைரமுத்துவை ஆண்கள்தான் விலைக்கு வாங்கி இப்படி பேச வச்சாங்களா? அபப்டியே அவர் விலை போயிருந்தாலும் வைரமுத்துவைத்தானே வாங்கு வாங்குனு வாங்கனும்? ஏன் பாவம் ஏற்கனவே பெண்கள் முன்னேற்றத்தில் கதி கலங்கிப்போய் நிற்கும் அபலை ஆண்களை எல்லாம் போட்டு கொல்றீங்க?

முல்லையுடைய பதிவு, இந்த உப்புப்பெறாத விசயத்தை வைத்து ஆண்களை இழிவுபடுத்த "பயன்படுத்தப்பட்டிருக்கிறது". பல இடங்களில் தேவையே இல்லாத விதண்டாவாதம்தான் மிஞ்சி நிக்கிது! கீழே இவருக்கு சில பதில்களும், விளக்கங்களும்! இதையெல்லாம் அவர் பதிவில் பின்னூட்டமா போட்டு காத்திருந்தால் அது வெளியே வராதுனு அபார நம்பிக்கை எனக்கு! அதான் பதிவா வந்து நிக்குது!

* சரி, அதை விடுங்கள்....கிராமத்து பெண்ணின் வெகுளித்தனம், இன்னொசன்ஸ் என்று இவ்வளவு ரசிப்பவர்கள் சராசரி கிராமத்து பெண்ணை அவளது இன்னொசன்சுக்காகவே (அல்லது வெட்கம்/வெகுளி etc) திருமணம் செய்துக்கொள்வார்களா?

ஏன் மாட்டார்கள்? அப்படி ஒரு பெண்ணை ரசிப்பவர்கள் கிராமத்துப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளத்தான் செய்வாங்க! ஒரு சிலர் அப்படி ஒரு பெண்ணை மணந்து சந்தோஷமாக இருக்கத்தான் செய்றாங்க!

* ”பெண் கலராக இருக்கணும்” என்பதுதானே சராசரி மணமகன் வைக்கும் முதல் கண்டிஷன்?!

ஏன் கிராமத்துப் பெண் கலராவும் இண்ணொசண்ஸுடனும் இருக்க மாட்டாங்களா? கலரான இண்ணொசண்ட் பெண்ணை மணந்துக்குவாங்க! கொஞ்சம் நல்லா பாஸிட்டிவா யோசிச்சுப்பாருங்க!

* கருப்பு நிறம் கண்ணை மறைக்கும் அளவுக்கு சீர் செனத்தியோடு நில புலன்களோடு வந்தால்தான் சாதாரணமாகத் தோற்றம் கொண்ட ஒருவன் கிடைப்பான் என்பது இன்றும் யதார்த்தம். ”சாதாரண தோற்றம் கொண்ட ஒருவன்” என்று சொல்லிவிட்டதற்காக சண்டைக்கு வராதீர்கள். தாத்தாவானாலும் உலக அழகியோடு ஒரு படமாவது நடித்துவிட வேண்டுமென்று வைராக்கியம் கொண்டவர்கள் தான் நமது ஹீரோக்கள். ஹீரோ கருப்பாக குண்டாக இருந்தாலும் பெண் ஒல்லியாக சிவப்பாக இருக்கவேண்டும் என்பதுதானே நமது தமிழ்சினிமா மரபு...கலாச்சாரம்...இலக்கணம்!!

நீங்க ஏன் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தத்தையும் சினிமாவையும் போட்டு கிண்டி குழப்பி குழம்புறீங்க??

* ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் முக்கியமான ingredients - இன்னொசன்ஸ், வெட்கம்! அதைத்தான் இந்த நகரத்துப் பெண்கள் தொலைத்துவிட்டார்கள் என்று ஒரே கூச்சல்!

ஆண்களில் பலவகை! பலவிதமான ரசனை! இங்கே கூச்சல் போடுவது ஆண்கள் மட்டுமல்ல! ஒரு சில "பழமையை விரும்பும்" பெண்களும்கூட!

* இன்னொசன்ஸ் என்பதை பொதுவாக குழந்தைகளுக்குத்தான் சொல்வோம். பெண்கள் குழந்தைகள் போல இருப்பதைத்தான் விரும்புகிறார்களா? இல்லை, பெண்கள் ”குழந்தையின் குணங்கள் - குமரியின் வளங்களோடு” இருக்கவேண்டுமென்று அல்லவா வலியுறுத்துகிறார்கள்!

இதெல்லாம் சும்மா பிதற்றல்ங்க! குழந்தையை ஏன் இங்கே கொண்டு வந்து இந்த இஸ்ஸுவை தாறுமாறாக்குறீங்க??? You are completely twisting this issue by bringing up children. The innocence what they say is DIFFERENT! It means like "not being an opportunist" or "not being business-minded" or of that sort! There are several women are like that in this modern world or NOT?

* நம் சினிமா கதாநாயகிகளையே பாருங்களேன் - அவர்கள் லூசுப்பெண்களாக இருக்கவேண்டுமென்பது எழுதப்படாத சட்டம். (மறுப்பீர்களானால் தமிழ்சினிமாவை பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன். )


ஏன் லூசு கதாநாயகன் பார்த்ததில்லையா? அதெல்லாம் உங்க கண்களுக்குத் தெரியாது! படிக்காதமேதை சிவாஜி, சின்னத்தம்பி பிரபு இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் இன்னைக்கு வரை!

* வளர்ந்தபிறகும் அப்படி இருந்தால் மூளை வளர்ச்சியில் பிரச்சினை என்கிறது அறிவியல். ஒரு வளர்ந்த பெண்ணைப்பார்த்து ‘இன்னொசன்டா இரு’ என்று சொன்னால்.என்ன அர்த்தம்?

அது உங்களுக்குப் புரியாததுதான் இங்கே பிரச்சினையே!

* கவிதை எழுது போ, உனக்கெதுக்கு அரசியல்” என்றும் சொல்லும் இணையத்தில்தான் நாம் இருக்கிறோம்.

அம்மாக்கு ஓட்டுப்போட்ட ஆண்கள்தான் பெண்களைவிட அதிகம்! எந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கீங்க???

* ஒருமுறை பப்பு எனது துப்பட்டாவை புடைவைபோல சுற்றிக்கொண்டதை படமெடுத்து பேஸ்புக்கில் பதிந்திருந்தேன். அதற்கு ஒருவர், அவளது முகத்தில் வெட்கம் தெரிகிறதென்றார்.ஐந்து வயதுக்குழந்தை புடைவையை சுற்றிக்கொண்டு சிரித்தால் கண்களில் வெட்கம் தெரிகிறது என்பது ஆபாசமாக இல்லையா?

எதுக்கு இப்படி ஒரு சாதாரண காமெண்ட்டை இப்படி கொச்சைப் படுத்துறீங்கனு புரியலை. என்னாச்சு உங்களுக்கு?

* இந்த கிராமத்து இன்னொசனஸ், பெண்மை, மலரினும் மென்மை எல்லாம் கவிதைக்கு அல்லது நீயாநானாவுக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாமே தவிர சுயமரியாதையுடைய பெண்களுக்கு அல்ல!

அப்போ கிராமத்த்தில் வசிக்கும் வெகுளி பெண்களுக்கு சுயமரியாதை இல்லையா? பட்டணத்தில் வசிக்கும் புதுமைப்பெண்களுக்குத்தான் சுயமரியாதை எல்லாம் உண்டா? சுயமரியாதைனா என்னங்க அது?

* சரி, வைரமுத்து சொன்னது என்ன? மாடு மேய்க்கப்பிடிக்கும், அப்புறம் கணவன் ஆபிசுக்கு செல்ல வேண்டும், கணவனைச்சார்ந்து இருப்பது என்பதெல்லாம் இதெல்லாம் ஒரு சராசரி நடுத்தர வர்க்க பெண்ணுக்கு விதிக்கப்பட்டது.

எனக்குத்தெரிய மாடர்னான வெட்கப்படத்தெரியாத படிச்ச பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும்னு திரிகிற ஆண்கள் கோடி இருக்காங்க! பாவம் நீங்க இன்னும் ஒரு ஆளைக்கூட பார்க்கல போல இருக்கு!

* ஆண்களுக்கோ, நடைஉடை பாவனைகளில் நகரத்தவர்களாக இருக்கவேண்டும், ஆனால், மனத்தளவில் அத்தானின் காலை அமுக்கி விட்டு அல்லது ”பத்திரமா ஆபீசுக்கு போயிட்டு வாங்க அத்தான்” என்று டிபன்பாக்சை கையில் கொடுத்துவிடும் சராசரி பெண்கள்தான் வாழ்க்கைத்துணையாக வேண்டும். இதுதான் இவர்களது உள்ளார்ந்த மனோபாவம்.

நிச்சயம் எல்லா ஆண்களுக்கும் இந்த மனோபாவம் கிடையாது. ரெண்டு பேரும் வேலைக்குப் போனால்தான் "வசதி"யாக வாழமுடியும் நெனைக்கிற ஆம்பளைங்க இருக்கானுக கோடிக்கணக்கில்! "வெட்கம்", "வெகுளித்தனம்" எல்லாத்தையும் விட பணம்தான் முக்கியம் நெனைக்கிற ஆண்கள்தான் இன்னைக்கு அதிகம்!

* வைரமுத்து ஒரு சராசரி கிராமத்து பெண். ஒரு பெண் எப்படி நமது சமூகத்தின் விழுமியங்களோடு வளர்த்தெடுக்கப்படுகிறாள் என்பதற்கு சாட்சி.

"சராசரி பெண்" என்றால் என்ன? உங்களைவிட மட்டமான பெண்ணா? உங்களுக்கு இருக்க மாதிரி சுயமரியாதை இல்லாத பெண்ணா? சரி இருந்துட்டுப் போகட்டும்! உங்க பாடு, வைரமுத்து பாடு!

8 comments:

அமுதா கிருஷ்ணா said...

வைரமுத்து என்ற அந்த பெண் யதார்த்தமாய் மனதில் பட்டதை அப்படியே பேசியது எனக்கு பிடித்து இருந்தது. அதன் பிறகு அதில் குற்றம் கண்டுபிடிப்பது என்னை பொறுத்த வரை தேவை இல்லாத ஒன்று.

சீனு said...

அட நீங்க வேற. படிச்சுட்டு சிரிச்சுட்டு போவீங்களா...அத விட்டுட்டு...

தராசு said...

எதிர்பதிவு அவசியமா????

வருண் said...

***Blogger அமுதா கிருஷ்ணா said...

வைரமுத்து என்ற அந்த பெண் யதார்த்தமாய் மனதில் பட்டதை அப்படியே பேசியது எனக்கு பிடித்து இருந்தது. அதன் பிறகு அதில் குற்றம் கண்டுபிடிப்பது என்னை பொறுத்த வரை தேவை இல்லாத ஒன்று.

23 May 2011 10:31 PM***

பதவியாக இருக்கட்டும், கலாச்சாரமா இருக்கட்டும், முன்னேறி ஒன்றைப் பெறும்போது மற்றொன்றை நிச்சயம் இழக்கத்தான் செய்றோம்! That is how life works!

உங்க கருத்தை பகிர்ந்ததற்கு நன்றிங்க!

வருண் said...

***சீனு said...

அட நீங்க வேற. படிச்சுட்டு சிரிச்சுட்டு போவீங்களா...அத விட்டுட்டு...

23 May 2011 11:04 PM***

உங்கள மாதிரி சிரிச்சுட்டு போக முடியலையே!

வருண் said...

***தராசு said...

எதிர்பதிவு அவசியமா????

24 May 2011 4:34 AM***

அவசியம்தான்! :)

Anonymous said...

நெத்தி அடி. ரிலாக்ஸாக இருக்க - கிராம பெண்கள் வேர்சஸ் நகரப் பெண்கள் - நீயா நானா பாருன்னு லிங்க அனுப்பி இருந்தாங்க என்னோட பிரன்ட்டு ஒருத்தர். அதப் பார்த்த போது வைரமுத்து என்கிற பெண்ணோட பெயர் பதிவுகளில் அடிபட்ட ஞாபகம் வந்தது. என்னடான்னு கூகிள் பண்ணிப் பார்த்த போது தான் இந்த லிங்க் கிடைச்சுது. முன்ன உங்கள தொடர்ந்தேன், பிறகு எழுத்துக்கள் பிடிக்காமல் பின் தொடர்வதை நிறுத்திட்டேன். அதனால இந்தப் பதிவை இப்பத் தான் படிக்க முடிஞ்சுது. எக்சாம் இன்னும் 10 நாள்ல. ஆனாலும் மினக்கெட்டு பதில் போடணும்னு போட்டுட்டு போறேன். ஏன் சொல்றேன் என்றால் உங்கள் எழுத்துக்களில் நியாயம் தெரிகிறது.

சின்னப் பெண்ணின் முகத்தில் வெட்கம் தெரிகிறது என்று சொல்வதில் விகர்ப்பம் இருக்கிறதாகத் தெரியவில்லை. விகர்ப்பம் என்று சொல்லுவது ரொம்பவே ஓவர்.இப்படி எல்லாம் கூட யோசிப்பாங்களான்னு ஆச்சரியமாக இருக்கு. க்யூட்டாக சின்னப் பசங்கள பாடச்சொன்னாக் கூடத் தான் வெட்கப் படுவாங்க. இதில என்ன இருக்கு.

இப்படி மொட்டை தலையில மயிர் பிடுங்குவதால் அவரோட சில நல்ல பதிவுகளும் தேவையான அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் இருக்கு. புரிந்து கொள்வாரா அவர்?

வருண் said...

வாங்க அனாமிகா துவாரகன்!

***எக்சாம் இன்னும் 10 நாள்ல. ***

சரியாப் போச்சு. இப்போ எக்ஸாம் எழுதிட்டு இருப்பீங்க!

***ஆனாலும் மினக்கெட்டு பதில் போடணும்னு போட்டுட்டு போறேன். ஏன் சொல்றேன் என்றால் உங்கள் எழுத்துக்களில் நியாயம் தெரிகிறது. ***

உங்க கருத்துக்கு நன்றி! பரீட்சையை கவனியுங்கள்! அதுதான் ரொம்ப முக்கியம்! :)