உண்மையில் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் ஒசாமா வால் பரிதாபமாகக் கொல்லப்பட்ட தன் உறவினர்கள் இனிமேல் நிம்மதியாக "உறங்குவார்க" என்றுதான் சந்தோஷப்பட்டார்கள். "ஜஸ்டிஸ் இஸ் டன்" என்கிற ஒரு திருப்திதான் பொதுவாக அமெரிக்கர்களிடம் உலவியது. "இது ஒரு கொண்டாட்டம் அல்ல!" "பரிதாபமாக 10 ஆண்டுகள் முன்னால் இறந்தவர்களுக்கு ஒரு மரியாதை செலுத்துவது" என்றுதான் செப்டம்பெர் 11 ல தன் அம்மா, அப்பா, கணவன், மனைவி, சகோதர, சகோதரியை இழந்தவர்கள்கூட நாகரிகமாக சொன்னார்கள்!
செத்ததுக்கப்புறம் சொர்க்கம், நரகம், கடவுளைப்போய் பார்க்கிறது இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கெடையாது. அப்படி எதுவும் இருந்தால் அங்கே போயி பார்த்துக்கலாம்! ஆனால் பொதுவாக மக்களை பயங்கரவாதத்துக்குள்ளாக்கி மிரட்டும் பலர், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தாம். இண்ணொசண்ட் மக்களை பரிதாபமாக கொல்லுபவர்கள் கடவுள் துணையுடந்தான் செய்கிறார்கள், செய்வதாக கற்பனை பண்ணிக்கிறாங்க. ஒசாமா மற்றும் செப் 11 ல பயங்கரவாதம் செய்த அனைவருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்னுதான் சொல்றாங்க. இதுபோல் பயங்கரவாதம் செய்யுமுன் இவர்கள் கடவுளிடம் அனுமதி பெற்று, தான் சொர்க்கத்துக்குப் போவோம் என்ற நம்பிக்கையில்தான் பயங்கரவாதம் செய்கிறார்களாம். எல்லாம் "இறைவன் செயல்" "பகவாந்தான் எல்லாத்துக்கும் காரணம்" னு சொல்வதில் பிரச்சினை வருவதை இங்கே நீக கவனிச்சால், புரியும்!
சரி, பல அப்பாவிகள் உயிர்களை குடித்த ஒசாமாவை கடவுள் எப்படி வரவேற்பார்? இவர் சொர்க்கத்துக்குப் போவாரா? இல்லைனா அப்பாவிகளை கொல்ல தூண்டிவிட்டதால் கடவுள் இவரை தண்டிக்க நரகத்துக்கு அனுப்புவாரா? என்கிற கேள்விகள் பலருக்கும் எழத்தான் செய்யும்! அதுவும் அவரவர் நம்பிக்கையை பொறுத்ததுதான்!
மனுஷனுக்கு இந்த ஆறாவது அறிவு மட்டும் இல்லைனா, இன்று இவ்வளவு குழப்பங்களும், ஏன் கடவுளே (உருவாக்கப்பட்டு) இருக்க மாட்டார். நாயி, ஆடு மாடெல்லாம், ஹிந்து முஸ்லிம், கடவுள் அது இதுனா சொல்லி சண்டை போடுது? இல்லை பய்ங்கரவாதம் பண்ணுதா? ஆறாவது அறிவு மட்டும் இல்லை என்றால் சிந்திக்கத்தெரியாத மனிதன் பயமில்லாமல், குழப்பமில்லாமல் விலங்குகள் போல் நிம்மதியாக வாழ்ந்திருப்பான்!
No comments:
Post a Comment