Thursday, May 5, 2011

அட்சய திருதியைக்கு ப்ளாட்டினம் (Pt) நகை வாங்குங்க!

ஹிந்துக்கள் காலங்காலமா சாதிச்சது ஒண்ணே ஒண்ணுதான்! வருசத்தில் ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு எழவைச்சொல்லி இன்னைக்கு உன் பொண்டாட்டி யாரோடையாவது ஓடிப்போனால் நல்லது, இன்னைக்கு செக்ஸ் வச்சுக்கிட்டா நல்லது, இன்னைக்கு பிள்ளை பெத்துக்கிட்டா நல்லது, இன்னைக்கு "ஆள்" ஆனா நல்லது, இன்னைக்கு செத்தா நல்லது, இன்னைக்கு கை உடைந்தால் நல்லது, இன்னைக்கு விவாகரத்து செய்தால் நல்லதுனு 365 நாளும் எதாவது ஒரு எழவு பண்டிகைதான் இவங்களுக்கு. வருசத்தில் ஒரு நாள்கூட சாதாரண நாள் கெடையாது! இவங்க காலண்டரில் ஏதாவது விசேஷம் இருந்தே ஆகும்!

இப்படி தினமும் கண்டதையும் கொண்டாடித்தான் நம்முடன் போருக்கு வந்த வெளிநாட்டவரை எப்படி சமாளிக்கிறது தெரியாமல், கடல் வழியா அவனுக ஒரு 100 பேரு வந்து இறங்கியதும் , நல்ல நாளா கெட்ட நாளானு பார்த்துக்கிட்டு குஞ்சப்பிடிச்சுக்கிட்டு நின்ணு இருக்கானுக! படையெடுத்து வந்த முஸ்லிம்களும், வெள்ளைக்காரனுகளும் இந்தப் பண்டாரங்களை அடி அடினு அடிச்சு ஆளாளுக்கு 100- 200 ஆண்டுகள் ஆண்டு , நாட்டை சுரண்டி எடுத்துட்டுப் போனப்புறம் இப்போ பிச்சைக்காரன் ஆகி நிக்கிறானுக! அதுக்கப்புறமாவது திருந்திடுவானுகளா? அதான் மாட்டான்! இன்னொரு பக்கம் ஜனத்தொகையை எப்படிக் கட்டுப்படுத்துறதுனு தெரியாமல் இன்னைக்கு இதிலே மட்டும் சைனாவை பீட் பண்ணுற அளவுக்கு வந்து நிக்கிது.

இப்போ வந்துள்ள டி வி என்கிற உபத்திரவத்தால் ஏதாவது முற்போக்கா செய்யாமல் பலமடங்கு சடங்குகள் பண்டிகைகள் சம்பிரதாயங்களையும் இன்னும் அதிகமாகி ஒரே பின்னோக்கிப் போயிக்கிட்டு இருக்கானுக!

ஆமா இந்த தமிழ் ஹீரோவுக்கெல்லாம் சினிமால கோடி கோடியா சம்பாரிக்கிறது பத்தாதா? ஏன் இந்த பிச்சைக்காரனுக சின்னத்திரையிலே வந்து ஏதாவது கமர்சியல் கொடுத்துக்கிட்டு அலையிறானுக! சூர்யா, விஜய், மாதவன்னு டி வி ல வந்து நிக்கும்போது அறையாலாம் போல இருக்கு இவனுகள! பிச்சைக்காரனுக!

இன்னைக்கு அக்சய திருதியை, இன்னைக்கு பவுர்ண்மி, இன்னைக்கு இந்த நகை வாங்கு, ஜாய் அலுக்காஸ், மாய் அலுக்காஸ்னு எங்கேயாவது போயி இந்த நகை வாங்கு, இந்த மோதிரம் வாங்கு, நெக்லெஸ் வாங்குனு ஒவ்வொரு 5 நிமிடமும் வந்து எழவைக்கூட்டி எரிச்சலை கிளப்புறானுக. சின்னத்திரையையாவது இந்த நாய்கள் விட்டுத் தொலைந்தால் என்ன? ஏன் இப்படி காசுக்காக அலையிறானுக?

ஆமா, தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு போன்ற பண்டிகை கொண்டாடுவது போதாதா? ஏன் இப்படி டெய்லி ஏதாவது ஒண்ணை கொண்டு வந்து எழவைக்கூட்டுறானுக!

ஜெயா டி வி பக்கம் போனா இந்த ரபி பெர்ணார்ட்னு ஒரு வீணாப்போனவன் முழு நேரமும் ஏதாவது உப்பு பெறாத கேள்வியைக்கேட்டு (என்ன ஷோ னாலும் ஒரே எழவுதான்) ஆத்தா ஜால்ரா அடிக்கிறான். கொஞ்சமாவது பொதுப் பிரச்சினைகளை அரசியல் நோக்கில்லாமல் இவனால ஒரு இஸ்ஸுவை எடுத்து நியாயமாக "அட்ரெஸ்" பண்ண முடியாதா? என்ன ஜேர்னலிஸ்ட் இவன்?! சுஹாஷினி, அணுஹாஷன், கோபி போன்றவர்கள்கூட இந்த வீணாப்போனவனுக்கு எவ்வளவோ பரவாயில்லை! ஏன் இந்தாளு இப்படி நாளுக்கு நாள் கேவலமாயிக்கிட்டே போறான்?

ஆமா அக்ஷ்ய திருதியைனா என்ன எழவு?

விக்கில போட்டு இருக்காங்க! படிச்சுட்டு போயி ப்ளாட்டினம் இல்லைனா வெள்ளி நகை வாங்குங்கோ!

-----------------------------

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது ஒரு இந்து மற்றும் சமணர்களின் புனித நாள், அது தமிழ் மாதமான வைகாசியில் மூன்றாம் திதி (பௌர்ணமி நாள்) சுக்கில பட்சத்தில் வருகின்றதாகும். இந்த நாள் இந்து மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான இறைவன் விஷ்ணுவால் ஆளப்படுவதாகும். இது வழமையாக இந்து முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் இறைவன் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாவார். ஹிந்து இதிகாசங்களின்படி, இந்த நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்தது. சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர் ரிஷபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கபடுகிறது.


"அக்ஷயா" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது, மேலும் இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மரபியல் வழிவந்தவர் அக்ஷய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து சுபிட்சத்தைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூஜை போடுவது போன்ற புதிய முயற்சிகளை அக்ஷய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.

இந்து மதத்தின் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று பௌர்ணமி நாட்கள் (திதிகள் ) மிக மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன. இவை மூன்றரை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை: சைத்ரா மாத வளர்பிறையின் முதல் திதி (புது வருட துவக்கம்), அஷ்வினா மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி (விஜய தசமி ), வைஷாஹா மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி (அக்ஷய திரிதிய-பர்ஷு ஜெயந்தி ) மற்றும் கார்த்திகா மாதத்தின் வளர்பிறையின் முதல் திதி ஆகியவை "மூன்றரை (31/2) முஹுர்த்தம்" என்று அழைக்கப்படுகின்றன. முதல் மூன்று திதிகள் முழுமையான திதிகளாகவும் கடைசி திதி அரை திதியாகவும் கணக்கிடப்படுகின்றன. இவை மொத்தம் சேர்ந்து மூன்றரை முஹுர்த்தத்தை வழங்குகின்றன. சோதிட சாஸ்திரத்தின்படி இந்நாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உச்ச பிரகாசத்துடன் விளங்கும் என நம்பப்படுகிறது.


அக்ஷய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அக்ஷய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் தினம் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.


[தொகு] மத முக்கியத்துவம்

ஹிந்து இதிகாசப்படி, அக்ஷய திருதியை தினத்தன்றே வேத வியாசர் மகாபாரத இதிகாசத்தை அறிவுக்கும் தடைத் தகர்புக்குமான யானைத் தலைக் கடவுளர் கணேஷ்ஷிடம் (விநாயகர்) எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.


அது வழமையாக பகவான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. புராண வேதப்புத்தகங்கள் அவர் எவ்வாறு கடலிலிருந்து நிலத்தை மீட்டார் என்பது பற்றிக் கூறுகின்றன.


இன்றும் கோவாவும் கொங்கண் பகுதியும் பரசுராம ஷேத்ரங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. வைசாக மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் நாளான அக்ஷய திருதியை வருடத்தின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.


பொதுவாக இந்த நாளில் கடவுள் வாசுதேவரை நெல் அரிசியுடன் வணங்கியும் உண்ணா நோன்பிருந்தும் அனுசரிப்பர். கங்கை நதியில் ஒரு முழுக்குப் போடுவது மிக மங்களகரமானது எனக் கருதப்படுகிறது.


வேதப்புத்தகங்கள் இந்த நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகின்றன. இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்க வெகு அதிர்ஷ்டமுள்ள நாளாகக் கருதப்படுகிறது. பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.


மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூஜைகளும் அனுசரிக்கின்றனர். விசிறி, அரிசி, உப்பு, நெய். சர்க்கரை, காய்கறிகள், புளி, பழம், துணிகள் ஆகியவற்றை தர்மம் செய்கின்றனர். இந்த நாளில் விஷ்ணுவை வணங்குகின்றனர். தீபாராதனை செய்யும்போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்படுகின்றது.


பெங்காலில், அக்ஷய திருதியை நாளில், "ஹல்கதா" எனும் விழா கொண்டாடப்படுகிறது. அது கணேஷ் மற்றும் லக்ஷ்மியை வணங்கி புதிய கணக்குப் புத்தகத்தை எழுதத் தொடங்கும் நாளாகும். பெங்காலிகள் இந்த நாளில் பல சமயச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் செய்கின்றனர்.


இந்த நாள் ஜாட் விவசாய சமூகத்திற்கும் மிக மங்களகரமான நாளாகும். விடியற்காலையில் ஜாட் குடும்பத்தின் ஓர் ஆண் நிலத்திற்கு மண்வெட்டியுடன் செல்கிறார். நிலத்திற்குச் செல்லும் வழியில் எதிர்ப்படும் அனைத்து விலங்குகளும் பறவைகளும் மழை மற்றும் பயிர்களுக்கு சகுனங்களாகவும் அறிகுறிகளாகவும் கருதப்படுகின்றன. அக்ஷய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன. அது அன்பூஜா முஹூரத்தாக கருதப்படுகிறது.


செல்வத்திற்கு அதிபதியான கடவுளர் குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லக்ஷ்மியை வணங்குவார் என லக்ஷ்மி தந்தரம் கூறுகிறது. இந்த நாளில், குபேர லக்ஷ்மி பூஜை நடத்தப்படுகிறது. அதில் லக்ஷ்மி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்ஷன குபேர யந்தரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.

[தொகு] சமணம்

சமண நாட்காட்டியிலும் அக்ஷய திருதியை ஒரு புனித நாளாகும். வருடம் முழுவதுமான ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணா நோன்பு இருப்பவர்கள் அவர்களின் தப்சயா வை இந்த நாளில் முடித்துக் கொள்கின்றனர்.


[தொகு] அக்ஷய திருதியையின் போது செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்

யுகாதி திதியாக இருந்தால், மதிக்கத்தக்க செயல்"களை பாராயணம் (ஜபம்), தவம் (தபா), கொடைகள் (தானா) சடங்கு ரீதியான முழுக்கு (ஸ்நானா), தியாகங்கள் (ஹவன்), நெருப்பில் திருப்படையல்கள் அர்ப்பணித்தல் (ஹோமா ) செய்வது மிகவும் நன்மையளிப்பதாகும். ஆனால் புனித நூல் அணிதல் (உபநயனம்), திருமணம், விரத முடிப்பு, வீடு கட்டுதல் & புதுமனை புகுதல், கடும் உழைப்பு மற்றும் நடவு நடுதல் போன்ற செயல்களைத் தொடங்குவது/செய்வது சில சமூகங்களில் தடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பெரும்பாலானோர் உறவுகள், வாங்குதல் மற்றும் முடிவு செய்தவற்றை நிறைவேற்றுதல் போன்றவற்றைத் தொடங்குதல்/மீண்டும் தொடங்குதலுக்கு இதை மங்களகரமான தினமாகக் கருதுகின்றனர். சிலரைப் பொறுத்தவரை இது ஆன்மீக நடவடிக்கைகளுக்கே உகந்ததேயன்றி உலகாயச் செயல்களுக்கல்ல.


இருப்பினும், இந்த திதியில் உலகாய நடவடிக்கைகள் தொடங்குவதும் கூட சிறப்பே. ஆனால் இந்து மதத்தின் நல்ல நேரம் பார்க்கும் சோதிட சாஸ்திரத்தின் நேரத்துடன் பொருந்தியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கோள்களின் நகர்வும் அது போன்ற அம்சங்களும் செயலைச் செய்பவருக்கு சாதகமாக இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதைப் பின்பற்றுபவர்கள் இந்தத் திதியை குருட்டுத்தனமாக அனைத்து விதமான வாழ்வு-செயற்பாடுகளை துவக்கவும் நடத்தவும் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட நடவடிக்கைக்கான திதிகளின் மங்களாம்சமானது அதே நேரத்தில் நிகழும் பஞ்சாங்க ஷுத்தி, முஹுர்த்த யோகங்கள் மற்றும் இதர இந்து நல்ல நேரம் பார்க்கும் சோதிடக் கூறுகளின் இருத்தலையும் சார்ந்துள்ளது.


இந்த நாளில் புதிய செயலைத் துவங்குவது அல்லது விலை மதிப்பற்றவைகளை வாங்குவது அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் சேர்க்கும் எனக் கருதப்படுகிறது. இந்த நாளில் பரிசுப் பொருட்கள் அளிப்பதன் மூலம் மத ரீதியான புண்ணியமானது எல்லையில்லாதது எனக் கருதப்படுகிறது. பலர் இந்த நாளில் புதிய தங்க நகைகளை வாங்குகின்றனர். இந்த நாளில் விற்பதற்காகபெரும்பாலான நகைக்கடைகள் "லக்ஷ்மி உருவம் பொறிக்கப்பட்ட" தங்க நாணயங்கள், வைர நகைகள் மற்றும் தங்க டாலர்கள் உள்ளிட்ட பல கடவுளர்கள் மற்றும் பெண் கடவுளர்களின் படங்களைக் கொண்டுள்ள புதிய நகை மாதிரிகளை இருப்பில் வைக்கின்றனர்.

--------------


No comments: