Wednesday, May 25, 2011

நியு யார்க்கில் பள்ளி மாணவி கிருத்திகா!


கொஞ்சநாள் முன்னால் சென்னையில் ஒரு ஏழை கல்லூரி மாணவி திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு அவரை கல்லூரி ஆசிரியைகள் அசிங்கப்படுத்தி, கடைசியில் அவர் இந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார் என்று படித்தோம். எங்கே இதெல்லாம் நடக்குது? நம்ம க்ரேட் இந்தியாவிலேதான்! இதேபோல அமெரிக்காவில் நடந்தால் என்ன ஆகும்??

பொதுவாக் இதேபோல் இண்ணொசண்ட்டான ஒருவரை அமெரிக்காவில் அவமானப்படுத்துவதுபோல ஒரு சின்ன தவறு செய்தால் அதற்கு அபதாரம் (விலை) குறைந்தது மில்லியன் டாலர்னு சொல்லுவாங்க!

இது உண்மையா??

ஆம் என்கிறது இந்த சமீபத்திய செய்தி!

கிருத்திகா பிஸ்வாஸ் என்கிற இந்திய மாணவியை ஏதோ abusive e-mail அவள் படித்த பள்ளிக்கு அனுப்பியதாக நியு யார்க் போலிஸ் அவரை கைது செய்துள்ளது. ஒரு நாள் சிறையில் அடைத்து அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக சொல்கிறார், அழுகிறார் கிருத்திகா பிஸ்வாஸ்! ஆனால் இந்த மாணவி குற்றம் சாட்டப்பட்ட குற்றத்தை செய்யவில்லை, இவர் இண்ணொசண்ட் என்றும் பின்னால் தெரிய வருகிறது! நியூ யார்க் போலிஸ் தவறு செய்துவிட்டது! இந்த பிரச்சினை இதோட முடியுமா?

அதுதான் இல்லை! இது அமெரிக்கா! இங்கே இதுபோல் அவமானப்படுத்திவிட்டு "அய்யோ தவறுதாக உன்னை கஷ்டப்படுத்தி விட்டோம்! மன்னிச்சுக்கோங்க!"னு நியுயார்க் சிட்டி மன்னிப்பு கேட்டால் அந்த பிரச்சினை முடிந்துவிடாது!! There is a price for that!

தவறுதாக அவரை அரஸ்ட் செய்து சித்ரவதை செய்தற்கு விலை என்ன? 1.5 மில்லியன் டாலர்! ஆமா, தவறு செய்யாத தன்னை அரெஸ்ட் செய்ததற்கு 1.5 மில்லியன் டாலர் நியூ யார்க் சிட்டி கொடுக்க வேண்டுமென்று கிருத்திகா பிஸ்வாஸ் தரப்பில் law suit file பண்ணுறாங்க!

இதில் சந்தேகமே இல்லாமல் கிருத்திகா பிஸ்வாஸ் வெற்றியடைவார்! ஆனால் ஒரு மில்லியன் கொடுக்கப்படுமா இல்லை அரை மில்லியன் கொடுக்கப்படுமா என்பதுதான் சந்தேகம்!

Krittika Biswas Sues NewYork City for $1.5 million - Indian Diplomats Daughter wrongly arrested and ill treated in Prison - USA India Diplomat Daughter Kritika Biswas sue New York NY City

Krithika Biswas has sued the New York City for $1.5 million. Krittika Biswas daughter of vice counsel at the Indian Consulate in Manhattan, Debashish Biswas, was wrongfully arrested and allegedly ill treated in the prison.

Krittika Biswas was arrested for more than 24 hours on February 8 2011, under suspicion of sending obscene email to her teacher at Queens' John Browne High School. Later she alleged she was ill treated at the prison.

Kritika Biswas had denied diplomatic immunity that prevents police from arresting Diplomats Kin. Later it was found it was not Krttika Biswas who had sent the mail.


Tags: Krittika Biswas Sues NewYork City for $1.5 million - Indian Diplomats Daughter wrongly arrested and ill treated in Prison - USA India Diplomat Daughter Kritika Biswas sue New York NY City


source: இங்கே க்ளிக் செய்யவும்!

11 comments:

Chitra said...

மான நஷ்ட வழக்கு போட்டு இருக்கிறார்கள். ம்ம்ம்ம்.....
மான பங்கம் என்றால் , நம் நாட்டில் அது வேறு அர்த்தம் என்று நினைக்கிறேன்.

வருண் said...

வாங்க சித்ரா! நீங்க சொல்றது சரியாத்தான் இருக்கும். நான் பதிவை எடிட் பண்ணிட்டேனுங்க! நன்றி :)

Anonymous said...

நீங்க வேற சார் ! அமெரிக்கா - கனடாவில் போலீஸ் லாம் பாவம் ???

சும்ம சின்னப் பிரச்சனையா ISSUE ஆக்கி பணம் எடுக்கலாம் எனவே பலர் அலைக்கின்றார்கள்.. இந்த பெண்ணின் மீதுக் குற்றம் இல்லை என்பது உண்மை தான் ஆனால் அவளிடம் தகாத முறையில் காவல்துறை நடப்பதற்கு 99.99 சதவீத சான்ஸே இல்லை என்பது தான் உண்மை .... !!!

பாவம் காவல்துறை ஆகி விட்டது கூவம் ..

நம்ம இந்தியாவில் காவல்துறையே கூவம் நதியாக நாறுகின்றது .... !!!

vettiblogger said...

Based on my knowledge in American judicial system, I really doubt if she will be able to win the case. Local Governments are immune to these kind of lawsuits. Let us see...

வருண் said...

***Iqbal Selvan " இக்பால் செல்வன் '' said...

நீங்க வேற சார் ! அமெரிக்கா - கனடாவில் போலீஸ் லாம் பாவம் ???

சும்ம சின்னப் பிரச்சனையா ISSUE ஆக்கி பணம் எடுக்கலாம் எனவே பலர் அலைக்கின்றார்கள்.. இந்த பெண்ணின் மீதுக் குற்றம் இல்லை என்பது உண்மை தான் ஆனால் அவளிடம் தகாத முறையில் காவல்துறை நடப்பதற்கு 99.99 சதவீத சான்ஸே இல்லை என்பது தான் உண்மை .... !!!

பாவம் காவல்துறை ஆகி விட்டது கூவம் ..

நம்ம இந்தியாவில் காவல்துறையே கூவம் நதியாக நாறுகின்றது .... !!!

25 May 2011 6:06 PM***

அமெரிக்கன் டீனாஜெர் அந்தப்பொன்னு. இதுபோல பிரச்சினைக்கு தற்கொலை பண்ணிக்கொண்டால், அதற்கு நிச்சயம் நியு யார்க் போலிஸின் தவறுதான் பொறுப்பு!

Arresting her without proper evidence is certainly wrong. They could have handled gently. I am sure the "american lawyer" could have volunteered to take this case and approached Biswas' family as he knows he can do something about it!

வருண் said...

***vettiblogger said...

Based on my knowledge in American judicial system, I really doubt if she will be able to win the case. Local Governments are immune to these kind of lawsuits. Let us see...

26 May 2011 7:54 AM***

I think the Biswas family can win the case. Let us see! :)

vettiblogger said...

உங்கள் கருத்தை மதிக்கிறேன். அதே சமயம், அமெரிக்காவில் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு விட்டாலே கைது செய்யப் படுவார்கள். ‘பெயில்’ செலுத்தி விட்டு தான் விடுதலையாக முடியும். பலர் நினைப்பது போல் இந்தியர் என்பதற்காக, கிருத்திகாவிடம் எந்த கூடுதல் கடுமையும் காட்டப்படவில்லை. ஒரு வெள்ளை அமெரிக்கன் இது போன்ற வழக்கில் இதே போல் தான் நடத்தப் படுவான்.
இந்தியாவிலும் அமெரிக்கா மாதிரி சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும் என்று சொல்பவர்களுக்கு நான் கூறுவது இது தான். நம் நாட்டில் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் அமெரிக்காவில் இது கடினம். அதே சமயம் அங்கு நிரபராதிகள் தண்டிக்கப்படுவது சுலபம்.

வருண் said...

***1) பலர் நினைப்பது போல் இந்தியர் என்பதற்காக, கிருத்திகாவிடம் எந்த கூடுதல் கடுமையும் காட்டப்படவில்லை.***

1) அதெப்படி நீங்க சொல்றீங்கனு தெரியலை?

என்னைக்கேட்டால் இதுபோல் ஒரு இ-மெயில் மேட்டருக்கு உண்மையிலேயே கிருத்திகாவை போலிஸ் வந்து கைது செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஸ்கூல் கவுன்சிலர் அவரை கூப்பிட்டு விசாரிச்சு இருக்கலாம். அதிலிருந்தே அவர் "இண்ணொசண்ட்" என்று தெரிந்திருக்கும்

*** ஒரு வெள்ளை அமெரிக்கன் இது போன்ற வழக்கில் இதே போல் தான் நடத்தப் படுவான்.***

வெள்ளை அமெரிக்கன் பெற்றோர்கள் தன் மகள் இண்ணொசண்ட்னு தெரிந்தவுடன், இது போல் 1.5 மில்லியன் மானநஷ்டவழக்குப் போடமாட்டான் னு எப்படி சொல்றீங்கனு தெரியலை?

If it had happened to "my daughter" I would not let it go. I will certainly make this as a "racial issue" if necessary and take them to court. :)

வருண் said...

More information about the lawyer!

He seems to have an "Indian name" and he is certainly popular!

///Kritika Biswas’s lawyer Ravi Batra says that it’s a case of reckless and criminally malicious inquiry. Ravi Batra, the lawyer, also mentioned that the investigating officers failed to read Biswas her rights.///

vettiblogger said...

//If it had happened to "my daughter" I would not let it go. I will certainly make this as a "racial issue" if necessary and take them to court//
USA is a free country and anyone can sue anyone. But winning the case is a different story altogether.
//also mentioned that the investigating officers failed to read Biswas her rights//
This argument is no more helping to win the case :)
My opinion is that, she should have sued the School authorities who complained to Police without properly verifying and not NYC.

வருண் said...

In US, School comes under "state govt" and police protection also comes under "state govt". I am not sure Biswas family is just blaming the "police". It is possible that they blame the "school" as well.

Anyway, let us wait and see what happens!