பொன்னியின் செல்வன் கதை போல் இன்னொரு கதைஎழுதச்சொன்னால் அது யாராலையும் முடியாது! ஒருவேளை கல்கி உயிரோட இருந்தாலும் அவராலேயே அதுக்கு இணையா ஒரு கதை எழுதமுடியாது!
வந்தியத்தேவன்- குந்தவை, அருண்மொழிவர்மன் -வானதி, சேந்தன் அமுதன் -பூங்குழலி, பழுவேட்டரையர், one and only நந்தினி, மணிமேகலை, ஆதித்த கரிகாலன், ஆழ்வார்க்கடியான் நம்பி, கந்தமாறன் என்று பத்துக்கும் மேற்பட்ட கதாநாயகர்கள் (முக்கிய கதாபாத்திரங்கள்) நிறைந்ததுதான் இந்தப் பொன்னியின் செல்வன். ஏராளமான பொருட்செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்ல, அரசியல் நிறைந்த, பல ஹீரோக்கள் ஹீரோயின்கள் கொண்ட இந்த கதையை படமாக்குவது மணிரத்னம் போன்ற இயக்குனருக்கு எளிதல்ல! அதைவிட பிரச்சினை, நடிகர்களுக்குள் நெறையா "ஈகோ" பிரச்சினைகளும் வரலாம்!
என்னதான் சாண்டிலயன் சரித்திரகதைகள் பல எழுதியிருந்தாலும், சிருங்கார ரசத்திற்காக - அதிலுள்ள காதல்-காம காட்சிகளுக்காகத்தான்- அவர் கதையை பலர் விரும்பி படித்தார்கள் என்பது கசப்பான உண்மை. ஆனால் கல்கியின் பொன்னியின் செல்வனில் காமம் என்பதே கெடையாது என்று சொல்வதைவிட, தேவையான அளவைவிட கம்மியாகவே காமம் அதில் கலக்கப்பட்டிருக்கும். இருந்தும் பொன்னியின் செல்வன் அளவுக்கு ஒரு தர்மான சரித்திர நாவலுக்கு இருக்கும் "கவர்ச்சி" எந்த சரித்திர நாவலுக்கும் இல்லை என்று அடித்துச் சொல்லாம்!
மணிரத்னம் மேலே எனக்கு மரியாதை எல்லாம் உண்டு. தமிழ் சினிமாவில் இவருக்கு நிச்சயம் ஒரு முக்கிய இடமுண்டுதான். ஆனால் இவர் பொன்னியின் செல்வனை படமா எடுக்கப்போறாருனதும் எனக்கு ஒரு மாதிரியான பயம்தான் வந்தது. அதுவும் நம்ம விஜய் அண்ணாதான் வந்தியத்தேவனாம்! யப்பா!
என்னைப்பொறுத்தவரையில் குத்துப்பாட்டு விஜய் நிச்சயம் வந்தியத்தேவனாக முடியாது! மேலும் மணிரத்னம் ஒண்ணும் பி ஆர் பந்துளு அல்லது எ பி நாகராஜன் இல்லை! ஆக பொன்னியின் செல்வன் மணிரத்னத்தால் படமாக்கப்பட்டு வெளியே வந்திருந்தால் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு இருந்த மரியாதை மற்றும் மதிப்பு பலமடங்கு குறைந்துவிடும் என்பதே என் ஐயம்.
அதுவும் இந்தக்காலத்து இளைஞர்கள் எல்லாம் பொன்னியின் செல்வன் கதையைப்படிக்காமலே குத்துப்பாட்டு விஜயை ஆஹோ ஓஹோனு புகழ்ந்து தள்ளுங்கள்! "அண்ணா விசய்" வந்தியத்தேவனாக என்ன எழவைப் பண்ணியிருந்தாலும் ஒரே புகழ்மழைதான் பொழியும்!
நல்லவேளை மணிரத்னம் இந்த முயற்சியை கைவிட்டு நம்ம எல்லாத்தையும் காப்பாத்திவிட்டாரு! பொன்னியின் செல்வன் நாவல் தப்பித்தது! முக்கியமா நம் மனதில் இருக்கும் வந்தியத்தேவன் தப்பிச்சான்!
3 comments:
This IS a great news. Vijay was not a good choice for the wonderful role.
சித்ரா: உங்க பின்னூட்டத்தை ப்ளாகர் சாப்பிட்டுவிட்டது! :(
போனால் போகட்டும் விடுங்க! :)
மணிரத்னம், கமல், போன்ற "அறிவு ஜீவிகள்" பொன்னியின் செல்வனை தொடாமல் இருபதே அந்த கதைக்கு அவர்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.
Post a Comment