Thursday, December 29, 2011

விஜய் மக்கள் இயக்கமும் முல்லை பெரியாறு அணையும்!


இந்தக்காலத்தில் அரசியலில் ஒரு காலு நடிப்பில் இன்னொருகாலுனு நடிகர்கள் பொழைப்பை ஓட்டுவது ரொம்ப கஷ்டமாகிக்கிட்டே போகுது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் நம்ம தமிழ் நடிகர்களெல்லாம், நாங்கள் முதலில் வியாபாரிகள், ரெண்டாவது நடிகர்கள், அப்புறம் மூனாவது சும்மா எங்க படம் ஓடனும்னு தமிழர்களுக்காக போராடுவதாக நடிப்போம் என்று தெளிவாகக் காட்டியிருக்காங்க!

இந்தமாதிரி காவேரி விசயத்தில் ரஜினியைப் பத்தி பேசி திட்டி, திட்டி இப்போ அவர் நிலைமை கொஞ்சம் சரியில்லைனு நெறையப்பேரு ஒண்ணும் சொல்லாமல் விட்டுட்டாங்க! அன்னா ஹ்சாரேக்க்கு சப்போர்ட் கொடுக்கும் ரஜினி ஏன் இந்த விசயத்தில் மெளனம்? னு அங்கே இங்கே தாக்கப்படாமல் இல்லை. நான் என்னத்தை பதில் சொல்ல? ரஜினிதான் சொல்லனும்!

நம்ம தமிழன் கமல்? கமலா? கமல் எப்படி கேரளாவுக்கு எதிரா எல்லாம் பேசுவாரு? கேரள மக்கள் அவரை ரொம்ப நேசிக்கிறவங்களாச்சே? இப்போக்கூட கொஞ்சநாள் முன்னால ஏதோ பாராட்டு நடத்தினாங்களே? அதென்னவோ இந்த விசயத்தில் வாயைத் திறக்கச் சாண்ஸே இல்லை! னு பலரும் நம்புறாங்க.

சத்யராஜ்? அவரு என்னனு போராடுறாரு, எப்படி போராடுறாருனு எனக்குத் தெரியலை? தமிழனுக்காக குரல் கொடுத்தாரா இந்தப் புரட்சித்தமிழன்? இல்லையா? ஏன்? நான் தேடிப்பார்த்தேன் ஒண்ணையும் தோண்டி எடுக்க முடியலை.

சீமான், விஜய்காந்த் ரெண்டுபேரும் முழுநேர தமிழ்நாட்டு அரசியல்வாதிகள். அதனால் தமிழனுக்குக் குரல் கொடுக்கிறாங்க! இதைவிட வேறென்ன வேலை அவங்களுக்கு? அரசியல் ஆதாயத்திற்காக னு சொல்றீங்களா? இருக்கலாம்.

பாரதிராஜா, தேனிக்காரரு, இதில் எப்படி தமிழர்களுக்காகப் போராடாமல் இருப்பாரு? இதில் விஜயை மட்டும் ஏன் இந்த பாரதிராஜா சாடுகிறாரு?
ஆமா அவர் மட்டுமில்லை, ஏன் ஆளாளுக்கு விஜயை மட்டும் எல்லாரும் தாக்குறாங்கனு கேட்டால், இன்னைக்கு தமிழ் மக்களுக்காக ஒரு இயக்கம், விஜய் மக்கள் இயக்கம்னு ஆரம்பிச்சு தமிழனுக்காக போராடுறாரு விஜய் னு சொல்றாங்க. அதன்னவோ தெரியலை இப்படி தமிழனுக்காக போராடுவதாக சொல்லிக்கிட்டுத் திரியும் விஜய்க்கும் விஜய் அப்பாவுக்கும் இப்போ ரொம்ப கெட்ட நேரம்தான்.

ஆமா, இப்போ விஜய்க்கு தமிழனுக்காகப் போராட ஒரு அரிய வாயப்பு வந்திருக்கே! ஏன் ஒண்ணும் சொல்லாமல் இருக்காரு??

விஜயைப் பிடிக்காதவங்க என்ன சொல்றாங்கனா..கேரளாவில் இவருக்கு ரசிகர்கள் அதிகமாம். இவர் படங்கள் எல்லாம் நல்லாப்போகுதாம். அதனால எதுக்கு எதையாவது தமிழனுக்கு ஆதரவா சொல்லிட்டு வம்புல மாட்டிக்கனு இந்த விசயத்தில் வாயை திறப்பேனானு அமைதியா இருக்காராம். ஆமா, அவரும், அவங்க அப்பாவும் சேர்ந்த்துத்தான்.

ஆமா, விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழனுக்கு ஆதரவாக எதையாவது சொல்லி கேரளாவில் உள்ள ரசிகர்களை இழக்க இவர் நிச்சயம் தயாரா இல்லைதான் என்கிறார்கள், அவர் ரசிகர்கள். விஜய் என்னங்க? சாரு நிவேதிதாவே இந்த விசயத்தில் தமிழனுக்கு சப்போர்ட் பண்ணுவாரா னு கேக்குறீங்களா? சந்தேகம்தான்.

என்னைக்கேட்டால் விஜய் மக்கள் இயக்கம் எல்லாம் நடத்துற விஜய் நியாயத்துக்காகப் போராடலாம்தான். நியாயம் தமிழன் பக்கம் இருந்தால் தமிழனுக்கு ஆதரவாக. இல்லை, நியாயம் கேரளாப் பக்கம் இருந்தால் கேரளாவிற்கு ஆதரவாக, தமிழர்களுக்கு புரியும்படி விஜய் நியாத்தை எடுத்துச் சொல்லலாம். என்னது? நியாயம் எந்தப்பக்கம் இருக்குனு தெரியலையா பாவம்? அவரு மூளைக்கு நியாயம் எதுனு எட்டவில்லைனா? அப்போ கஷ்டம்தான். விஜய் மக்கள் இயக்கம்னு ஆரம்பிச்சுப் புட்டு தமிழனுக்கு ஒரு பெரும்பிரச்சினைனு வரும்போது எனக்கு நியாயம் எந்தப்பக்கம் இருக்குனு தெரியலைனு சொன்னா அதுவும் பிரச்சினைதான்.

பொதுமக்கள் பத்திப் பார்ப்போம்..

நான் கவனித்த வகையில் எல்லாயிடங்களிலும், ஆங்கிலப் பத்திரிக்கை, டிஸ்க்சன் ஃபாரம் எல்லாயிடத்திலும் கேரளாக் காரங்க ஒட்டுமொத்தமாக தங்கள் பக்கம் நியாயம் இருக்குனு எந்தவித சந்தேகம் இல்லாமல் சொல்லிக்கிட்டு திரிகிறாங்க. இந்த அணை ரொம்ப வயதானதுனு ஒரே ஒரு காரணத்தை வைத்து ஏதோ நியாயாபதி போல பொய்ப் பிரச்சாரம் பண்ணிக்கிட்டு, விவாதிச்சுக்கிட்டு திரிகிறாங்க. ஒட்டுமொத்தமாக எல்லா கேரளாக்காரர்களும்!

சுப்ரீம் கோர்ட்னு ஒண்ணு இருக்குல? அவங்க அதிக அளவு தண்ணீர் தேக்கலாம், ஒண்ணும் பயப்படுமளவுக்கு ஆபத்து ஏற்படாதுனு சொன்னதுக்கப்புறமும், கேரளாக்காரன்தான் அணை உடைந்தால் வரும் வெள்ளத்தில் பாதிக்கப் போகும் தமிழன் உயிருக்காக ரொம்ப கவலைப் படுறாங்க. தமிழனுக்காக என்ன ஒரு கவலை!!! சுப்ரீம் கோர்ட்க்கு ஒரு மண்ணும் தெரியாதாம்! இவனுகளுக்குத்தான் தெரியுமாம்!
ஒரு உதாரணம் கீழே!

Antony (kerala)
15 Dec, 2011 11:52 AM
when the dam collapse and all those people die will the supreme court take responsibility for their lives? they talk technicality, are human lives just a technicality? peoples lives are at risk, and tamil nadu can talk only water. they say they are peaceful and send fighters to infiltrate kerala borders. i guess that is referred to as peaceful.


C S Sivakumar (currently in US)
14 Dec, 2011 09:27 PM
The verdict of Supreme court is justified. Both Kerala and TN should understand that we are neighbours in our own country and it is the duty of every right thinking citizen to follow it. Also both Kerala and TN should form a very high level civil engineers selected from other state, if need arises even from a foreign country and entrust the job of finding out the Dam's strength and its possible life period. Based on this report the states concerned must agree to follow the report. Now both CMs meet in person and make a joint appeal to the people that all vandalism and unnecessary war like attitude stoped forthwith. and any further aggravation is prevented with stern action from both sides. Agreeing to go with the report the CMs concerned must sign an agreement in the presence of Supreme court full bench. Till then Kerala should be restrained from going ahead with the new dam and Tn store only 112 ft water. In the event that the select forum of top civil Engineers recommend a new dam then the Keral Govt. should give in writing to the supreme court that TN will be given the same amount of water as of now. The Engineers favour the existance of the present Dam, then Kerala is bound to go by the report and should not indulge in construction of new dam. For all this the concerned Govts. make a public appeal in all news papers both in vernacular and English.

-------------


ஒரு பக்கம் இந்தியா, மயிறு மட்டைனு வச்சுக்கிட்டு, கேரளாக்காரன் எல்லாம் தமிழ்நாட்டில் வந்து "இந்தியன்"னு பொழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்கானுக. இன்னொரு பக்கம் ஆளாளுக்கு இவனுகளுக்குத்தான் அந்த அணையின் தரம் தெரியும், எவ்ளோ தண்ணி தாங்கும்னு தெரியும்னு சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒண்ணும் தெரியாது எனக்குத்தான் தெரியும்னு பெரிய மேதாவிமாதிரி பேசிக்கிட்டு இருக்கானுக?

என்னத்துக்கு இந்தியா?

எதுக்கு சுப்ரீம் கோர்ட்?

ஆமா, என்னத்துக்கு விஜய் மக்கள் இயக்கம்???

8 comments:

கலைநிலா said...

நடிகர்களிடம் நாம் ஏமாறுவது என்றும் தொடரும்
அவர்கள் படங்கள் எங்கு ஓடுகிறது வைத்தும் அடுத்த படம் ரீலிஸ் வைத்தும் தான் பேசுவார்கள்...
இது ரஜினி கமல் முதல் கடைக்குட்டி நடிகன் வரை தொடரும் இவர்களிடம் தமிழ் உணர்வை எதிர் பார்ப்பது நமது முட்டாள் தனம்...

Thekkikattan|தெகா said...

தமிழ் உணர்வு அளவிற்கெல்லாம் போக வேண்டாம். இந்தியா ஒரு தேசம் அதில் வசிக்கும் மக்கள் அணைவரும் சமம். இயற்கை வளங்களை பகிர்ந்து கொள்வதும் அதனில் ஒரு பகுதி. அதனை வைத்து அரசியல், இன வெறுப்பு நடத்துவது அபத்தம்.

போன்ற நியாங்களை பேச மனிதர்களாகவோ, நியாஸ்தர்களாகவோ இருந்து விட்டாலே போதும். பேசாத அனைத்து கம்னாட்டிகளும் சந்தர்ப்பவாதிகள். யானை விட்டையை தினமும் இரண்டு முறை தண்ணீரில் கரைத்து குடித்தால் ஞானம் கிட்டும்... நல்லா வாயில வருது - அவிங்க ஒரு மானங்கெட்டவிங்க.

Gobi said...

It's a Good awareness Publish...

துஷ்யந்தன் said...

வருண் உங்க ஆதங்கம்தான் என் ஆதங்கமும்... அதை அழகா பதிவிட்டு இருக்கீங்க...

வருண்... விஜய் நல்ல நடிகர் திரையில் அல்ல வெளியில்....... :(

ஹெரளாவில் இவருக்கு சிலை வச்சாங்களாம்... இவர் படம் அங்கே சூப்பர் ஆ போகுமாம்..... இவர் வாய் திறக்காதர்க்கு காரணம் சொல்கிறார்கள்.
என்ன ஒரு சுயநலம்..... தின்னுறது தமிழன் வியர்வையில் உழைத்த காசில் என்பதை மறந்த ஜென்மங்கள்.

தமிழில் நிஜ ஹீரோ எம்.ஆர்.ராதா - எம்.ஜி .ஆர் மட்டுமே.... மற்ற கூத்தாடிகள் எல்லாம் சீரோக்கள்

anbu said...

anne ajith enge? unkalukku theriyalaiya?

anbu said...

thamizh nattil pizhaithukkondu, kodi,kodiya sampathithukkondu, mullaipperiyarukkuk kural kodukkatha malaiyala ajithai kelvi katkatha sathiyaraj entra nadikanai enga kanom.

லெனின் said...

தன் சுய நலத்தோடு கூலிக்கு நடிக்கிற மனிதருக்கு எப்படி தமிழின உணர்வு இருக்கும்

Robin said...

நடிகர்கள் என்பவர்கள் கூத்தாடிகள். பொழுதுபோக்குக்காக சினிமாவைப் பார்த்துவிட்டு கடந்து செல்வதே நல்லது. அதை விடுத்து அவர்களை ஏதோ வானத்திலிருந்து இறங்கி வந்தவர்கள்போல தலையில் தூக்கி வைத்து ஆடுவதும் அவர்கள் நம்மை ஆள அனுமதிப்பதும் முட்டாள்தனம். முல்லைப் பெரியாறு அணையில் ஒரு கூத்தாடி என்ன சொல்கிறார் என்று அவர் வாயை நோக்குவது நம்முடைய அறியாமையே காட்டுகிறது.