Thursday, December 8, 2011

ப்ரைவசி வைரஸ்!! கடலைக்கார்னர்-73

"என்ன கண்ணன்! அந்த வெள்ளைக்கார ராட்சசியை காணோம்?"

"ஸ்டெய்ஸியா?"

"ஆமா, எங்கே அவளைக் காணோம்?"

"அவ இன்னைக்கு உடம்புக்கு சரியில்லைனு பொய் சொல்லிட்டு வீட்டிலே இருக்காளாம்!"

"ஏனாம்?"

"யாருக்குத் தெரியும்?"

"யாருக்குத் தெரியுமா? உங்களுக்குத்தான் அவ பீரியேட்ஸ் என்னைக்கு வரும்னுகூட தெரியுமே!"

"இது வேறயா? உடம்புக்கு சரியில்லைனு சிக் லீவ் எடுக்கிறேன்னு சொன்னா. அவ்ளோதான் தெரியும் எனக்கு! ஒருவேளை டூ மச் செக்ஸோ என்னவோ?"

"நீங்க நேத்து நைட் அவளை விசிட் பண்ணினீங்களா என்ன?"

"என்ன கொழுப்பா? வர வர ஏன் இப்படிப் போயிட்டு இருக்க?"

"என்ன பண்ணுறது? இப்படிப் பேசினால்தான உங்களுக்கு என்னை ரொம்பப் பிடிக்குது"

"என்னால உனக்கே ஈடு கொடுக்க முடியலை. யு ஆர் ஹார்னி ஆல் த டைம்! இது போதாதுனு அவ வேறயா?"

"அதெல்லாம் நல்லாத்தான் ஈடு கொடுக்குறீங்க! சொல்ல மறந்துட்டேனே என் கம்ப்யூட்டரில் ஏதோ ப்ரைவசி வைரஸ் வந்துடுத்து! ஒண்ணும் பண்ண முடியலை!"

"ப்ரைவசி வைரஸா? என்ன கேலி பண்ணுறியா?"

"இல்ல, கண்ணன். நெஜம்தான்.. ஏதோ அப்படித்தான் ஒரு "பாப் அப் விண்டோ" வந்து நிக்கிது! எதையும் பண்ண விடமாட்டேன்கிது! வைரஸ் ஸ்கேன், ஸ்பை வேர் ஸ்கேன் எதுவுமே பண்ண விடமாட்டேங்கிது. வந்து அதைக்கொஞ்சம் கவனிக்கீறீங்களா?"

"நெஜம்மாத்தான் சொல்றியா? இல்லை ரொம்ப மூடா இருக்கியா?"

"நான் எப்போவுமே மூடாத்தான் இருக்கேன். பேசாமல் நம்ம கல்யாணம் பண்ணிக்குவோமா?"

"ஆமா, கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் மூடெல்லாம் போயிடுமா?!"

"அப்படித்தான் எங்கேயோ படிச்சேன்."

"கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புறம் கொழந்தை பெத்துக்குவ. அப்புறம் அம்மா வானதும், குழந்தைதான் உன் உலகம் ஆயிடும். இதெதுக்கு வம்பு?"

"அதனால?"

"இப்போ எதுக்கு கல்யாணம் குழந்தை எல்லாம்?"

"இப்போப் பண்ணாமல் எப்போ பண்ணுவாங்களாம்?"

"ஏன் உங்கம்மா நீயே ஒரு மாப்பிள்ளை பார்த்துக்கோடிம்மா னு உனக்கு பச்சைக்கொடி காட்டீட்டாங்களா?"

"அப்படித்தான்னு வச்சுக்கோங்களேன். எனக்கு ஒரு முடிவைச் சொல்லுங்க"

"என்னடா சொல்ற?"

"இல்லை, அந்த ப்ரைவசி வைரஸை ரிமுவ் பண்ண வர்ரீங்களா? இல்லையா? ங்கிற முடிவைச் சொல்லுங்கனு சொன்னேன்."

"நல்ல வேளை கல்யாணம் பத்தியானு பயந்துட்டேன்."

"என்னை கட்டிக்கிட்டா என்ன, கண்ணன்? நான் உங்களை எவ்ளோ அன்பா பார்த்த்க்குவேன் தெரியுமா?"

"நல்லாத் தெரியும் பிருந்த்."

"அப்புறம் ஏன் கல்யாணம்னா பயம்?"

"பயம்லாம் இல்லை. உன்னைக் கொஞ்சம் தள்ளி இருந்து பார்த்து ரசிக்க, மிஸ் பண்ண ரொம்பப் பிடிக்குது. ஐ டோண்ட் வாண்ட் டு மிஸ் தட் நவ்"

"ஹா ஹா ஹா! இதையெல்லாம் நான் நம்ம்பனுமா?"

"சரி, முன்னப்பின்னே கல்யாணம் பண்ணினது இல்லையா? அதான்.."

"அறுக்காதீங்க, கண்ணன். சரி நைட் வர்ரீங்களா?"

"எதுக்கு?"

"அதுக்குத்தான்."

"ப்ரைவசி வைரஸ்?"

"ஆமா. அதைத்தான் சொன்னேன்."

"அப்போ நாந்தான் உன் "ப்ரைவசி வைரஸ்" ஆயிடுவேன்."

"வந்து என்னனு பாருங்க கண்ணன், ப்ளீஸ்!"

"சரி வர்றேன்!"

"நான் ப்ரிப்பேர்டா இருக்கேன்!"

"டின்னர் ப்ரிப்பேர் பண்ணப்போறியா?"

"ஆமா, நாந்தான் உங்க டின்னர்!"

"அது சரி! என் லாப் டாப்பையும் கொண்டு வர்றேன். அப்போத்தான் ஏதாவது வெப்ல தேடி இந்த ப்ரைவசி வைரசை ஒரு வழி பண்ணலாம்!"

"தேங்க்ஸ் கண்ணன்! நைட் பார்க்கலாம்!"

"பை பிருந்த். லெட் மி கெட் பேக் டு வொர்க் டூ!"

-தொடரும்

தொடர்புடைய இதற்கு முந்தைய பதிவு!

லவ்வும் செக்ஸும் வேற வேறதானே?கடலைக் கார்னர் 72 (18...

2 comments:

பழமைபேசி said...

இந்த தளபதி ஊரைவுட்டுப் போனாலும் போனாரு... ஒன்னும் சொல்லிகிறா மாதிரி இல்ல... யோவ் குடுகுடு... நீர் எங்கய்யா போனீரு??

வருண் said...

தளபதி ஊரைவிட்டுப் போயிட்டாரா?!

***யோவ் குடுகுடு... நீர் எங்கய்யா போனீரு??***

அவரு ஏதாவது சாதிச்சண்டை நடௌக்கும்போது மட்டும் வந்து பஞ்சாயத்து வச்சுட்டுப் போயிடுவாரு! :=)