Thursday, February 23, 2012

இந்தியர்களை காட்டுமிராண்டிகளாகக் காட்டும் என்கவுண்டர்!

எந்த ஒரு குற்றசாட்டப்பட்டவனையும், சட்டத்தின் முன்னால் நிறுத்தி, நீதி மன்றத்தில் அவரை குற்றவாளி என்று முடிவு செய்த பிறகு, அன்னாருக்கு மரண தண்டனை வழங்குவதுதான் இந்த நவநாகரிக உலகத்தில் சரியான செயல். அதை விட்டுப்புட்டு, இவன் குற்றவாளினு உலகத்துக்கே தெரியும், அவனை கண்ட இடத்தில் போட்டுத்தள்ளலாம்னு இருக்கிற இந்த "என்கவுண்டர்" என்னும் "இழிவான ஒரு செயல்" இந்தியாவை ஒரு காட்டுப்பய நாடாக உலகிற்கு காட்டும் ஒரு விசயம் என்பதை எல்லோரும் அறிவீர்களா?

யாரு இதை கண்டுபிடித்தது? எதுக்காக இதை இன்னும் இந்தியாவில் செயல் படுத்திக்கிட்டு இருக்காங்கனு எனக்கு விளங்கவே இல்லை. ஒரு அமெரிக்க நண்பரிடம் இதைப் பத்தி சொல்லும்போது, "இந்தியா இவ்வளவு மோசமான காட்டுமிராண்டி நாடா?" னு நேரிடையாகவே என்னிடம் கேட்டார்.

"குற்றவாளி" (குற்றம் சாட்டப்பட்டவர்) க்கும் "ரைட்ஸ்" இருக்கு. சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு குற்றவாளி"னு ஊர்ஜிதம் செய்தவுடந்தான் யாரையுமே தண்டிக்கனும் என்று நமக்குத் தெரிந்ததை இன்னொருமுறை எடுத்துச் சொன்னார்.

என்கவுண்டர் என்பது தவறான ஒண்ணு. அதை இந்தியா அகற்றுவதுதான் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் உலகளவில் கொஞ்சமாவது மரியாதை பெறச்செய்யும் முயற்சி!

19 comments:

Jayadev Das said...

என்கவுண்டர் என்றால் வேண்டாதவனை போட்டுத் தள்ளுவது என்ற தவறான அர்த்தம் நம் நாட்டில் கற்ப்பிக்கப் பட்டுள்ளது. இங்கே நடந்தது என்னவென்றால், காவல் துறையினர் குற்றவாளிகள் பதுங்கி இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து அவர்களை சரணடையும்படி கேட்டுக் கொண்டனர், அவர்கள் அவ்வாறு செய்யாமல் துப்பாக்கி போன்ற உயிரைப் பறிக்கும் ஆயுதங்களால் போலீசாரை தாக்க ஆரம்பித்தார்கள், போலீசார் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பதில் தாக்குதலில் ஈடுபட்டார்கள், அதில் சமூக விரோதிகள் உயிர் போனது, இந்தப் பக்கம் இரண்டு பொலிசாருக்கு காயம் ஏற்ப்பட்டது. அவ்வளவுதான்.

Jayadev Das said...

சமூக விரோதிகள் பெண்கள், முதியவர்களை தாக்கிவிட்டு/கொன்றுவிட்டு களவாடிச் செல்லும்போதும், இன்னும் பிற சமூக விரோத செயல்களில் ஆண்டுக் கணக்கில் ஈடுபட்ட போதும் வாயில் கொழுக்கட்டையை வைத்துக் கொண்டிருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள், தீய சக்திகளுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் வாயில் உள்ளதை துப்பிவிட்டு பேச ஆரம்பிக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மக்கள் துன்புறுத்தப் பட்டால் அது இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை, ஆனால் பார்லிமெண்டில் குண்டு வைத்த சமூக விரோதியானாலும், அவன் ஜெயிலில் சுகமாக இருக்க வேண்டுமென்று இவர்கள் காட்டும் அதீத அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது. அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறவன் இந்த மாதிரி கொலை கொள்ளை கற்பழிப்பு நாட்டிலா வாழ்கிறான் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

கிரி said...

// "இந்தியா இவ்வளவு மோசமான காட்டுமிராண்டி நாடா?" னு நேரிடையாகவே என்னிடம் கேட்டார்//

அருண் நீங்க அவங்க கிட்ட திருப்பி கேட்டு இருக்க வேண்டும்.. அணுகுண்டு இருப்பதாகக் கூறி ஈராக்கை கொள்ளை அடித்து பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்ற நீங்க எந்த மிராண்டி நாடு என்று!! இவர்கள் எல்லாம் நம்மைப் பற்றிக் கூற இந்த விசயத்தில் எந்த அருகதையும் கிடையாது.

//"குற்றவாளி" (குற்றம் சாட்டப்பட்டவர்) க்கும் "ரைட்ஸ்" இருக்கு. சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு குற்றவாளி"னு ஊர்ஜிதம் செய்தவுடந்தான் யாரையுமே தண்டிக்கனும் என்று நமக்குத் தெரிந்ததை இன்னொருமுறை எடுத்துச் சொன்னார்.//

எந்த ரைட்ஸ் ல அமெரிக்கா மற்ற நாடுகளை அழிக்கிறதோ அதை விட "நல்ல" ரைட்ஸ்ல தான் இங்கே இப்ப நடந்து இருக்கிறது :-)

Govind said...

ஆயுதம் இல்லாதவனை சுட்டால் தான் தவறே தவிர, தற்காப்புக்காக சுடுவது தவறில்லை. தற்காப்புக்காக காவலர்கள் குற்றவாளிகளை சுடுவது எல்லா நாடுகளிலும் நடக்கும் ஒன்றே. ஏன் அமெரிக்காவில் இத்தகைய நிகழ்வுகள் நடக்கவில்லையா? இதை வைத்து இந்தியாவை மதிப்பிடுவது அறிவீனம்.

Govind said...

ஆயுதம் இல்லாதவனை சுட்டால் தான் தவறே தவிர, தற்காப்புக்காக சுடுவது தவறில்லை. தற்காப்புக்காக காவலர்கள் குற்றவாளிகளை சுடுவது எல்லா நாடுகளிலும் நடக்கும் ஒன்றே. ஏன் அமெரிக்காவில் இத்தகைய நிகழ்வுகள் நடக்கவில்லையா? இதை வைத்து இந்தியாவை மதிப்பிடுவது அறிவீனம்.

ராஜ நடராஜன் said...

இந்தியர்கள் மட்டுமல்ல அனைத்து மனிதர்களுமே காட்டுமிராண்டி பரிணாமத்திலிருந்து இன்னும் வளர்ந்துகிட்டே இருக்கிறோம்.

பதிவின் சாரம் குறித்து உண்மைத் தமிழன் பதிவில் ஏற்கனவே கருத்து கூறியாகி விட்டது.கூடவே முன்பு தி.மு.க எதிர்ப்பு நிலையும் அ.தி.மு.க அல்லக்கை தோற்றத்தை உ.த பதிவும் எனது பின்னூட்டமும் மாற்றியிருக்கும் என்பதை சொல்வதற்காக இங்கே வந்தேன்:)

2009kr said...

திருப்பி கேளுங்கள்... கொள்ளையர்களை சுட்டதிற்கு சப்போர்ட் பண்ணுகிறவர், ஈழத்தில் அப்பாவி தமிழன் கொல்லப்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்று?

வருண் said...

***Jayadev Das said...

என்கவுண்டர் என்றால் வேண்டாதவனை போட்டுத் தள்ளுவது என்ற தவறான அர்த்தம் நம் நாட்டில் கற்ப்பிக்கப் பட்டுள்ளது.***

அப்படியெல்லாம் இங்கே யாரும் சொல்லவில்லை.

14 லட்சம் கொள்ளையடிச்சவனுக்கு மரண தண்டனைனு எந்தச் சட்டப் புத்தகத்திலும் போடவில்லை. இவனுகளே நீதிமன்றம்போல "குற்றவாளிகளை" சுட்டுக்கொலவதெல்லாம் காட்டுமிராண்டித்தனம்


** இங்கே நடந்தது என்னவென்றால், காவல் துறையினர் குற்றவாளிகள் பதுங்கி இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து அவர்களை சரணடையும்படி கேட்டுக் கொண்டனர், அவர்கள் அவ்வாறு செய்யாமல் துப்பாக்கி போன்ற உயிரைப் பறிக்கும் ஆயுதங்களால் போலீசாரை தாக்க ஆரம்பித்தார்கள், போலீசார் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பதில் தாக்குதலில் ஈடுபட்டார்கள், அதில் சமூக விரோதிகள் உயிர் போனது, இந்தப் பக்கம் இரண்டு பொலிசாருக்கு காயம் ஏற்ப்பட்டது. அவ்வளவுதான்.***

என்னவோ நம்ம போலிஸ்க்காரன் எல்லாம் உணமியத்தவிர எதுவுமே சொல்வதில்லைனு நீங்க நம்பலாம், எல்லாரும் நம்புவாங்களா என்ன??

வருண் said...

***அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறவன் இந்த மாதிரி கொலை கொள்ளை கற்பழிப்பு நாட்டிலா வாழ்கிறான் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.***

ஏன் அமெரிக்காவில் கொள்ளை, கற்பழிப்பு கொலை எல்லாம் இதைவிட அதிகமாகவே நடந்துகொண்டுதான் இருக்கு. அமெரிக்கா சொர்க்கபூமினு யார் சொன்னது உங்களுக்கு???

வருண் said...

***கிரி said...

// "இந்தியா இவ்வளவு மோசமான காட்டுமிராண்டி நாடா?" னு நேரிடையாகவே என்னிடம் கேட்டார்//

அருண் நீங்க அவங்க கிட்ட திருப்பி கேட்டு இருக்க வேண்டும்.. அணுகுண்டு இருப்பதாகக் கூறி ஈராக்கை கொள்ளை அடித்து பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்ற நீங்க எந்த மிராண்டி நாடு என்று!! இவர்கள் எல்லாம் நம்மைப் பற்றிக் கூற இந்த விசயத்தில் எந்த அருகதையும் கிடையாது.

//"குற்றவாளி" (குற்றம் சாட்டப்பட்டவர்) க்கும் "ரைட்ஸ்" இருக்கு. சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு குற்றவாளி"னு ஊர்ஜிதம் செய்தவுடந்தான் யாரையுமே தண்டிக்கனும் என்று நமக்குத் தெரிந்ததை இன்னொருமுறை எடுத்துச் சொன்னார்.//

எந்த ரைட்ஸ் ல அமெரிக்கா மற்ற நாடுகளை அழிக்கிறதோ அதை விட "நல்ல" ரைட்ஸ்ல தான் இங்கே இப்ப நடந்து இருக்கிறது :-)

24 February 2012 1:21 AM***

கிரி, அமெரிக்கா செய்வதெல்லாம் எல்லா அமெரிக்கர்களும் சரி என்று சொல்வதில்லை, நம்பவுமில்லை.

நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? சட்டத்தின் முன்னால் நிறுத்தாமல் குற்றவாளிகள் உயிரைப் பறிக்கிறோம்? என்று கேட்டால், " அமெரிக்கா என்ன யோக்கியமா?" என்பதுபோல் வாதிடுவது "என்கவுண்டரை" சரி என்று ஒரு போதிலும் ஆக்காது!

வருண் said...

***Govind said...

ஆயுதம் இல்லாதவனை சுட்டால் தான் தவறே தவிர, தற்காப்புக்காக சுடுவது தவறில்லை. தற்காப்புக்காக காவலர்கள் குற்றவாளிகளை சுடுவது எல்லா நாடுகளிலும் நடக்கும் ஒன்றே. ஏன் அமெரிக்காவில் இத்தகைய நிகழ்வுகள் நடக்கவில்லையா? இதை வைத்து இந்தியாவை மதிப்பிடுவது அறிவீனம்.

24 February 2012 2:23 AM***

நண்பர் கோவிந்,

தற்காப்புக்காக சுடுறது தப்பு இல்லை. அதை என்கவுண்டர்னு நான் சொல்லவும் இல்லை. ஆனால் தற்காப்புக்காக சுட்டால் 5 பேரு உயிரையும் குடிக்குமளவுக்கு இருப்பது விந்தையிலும் விந்தை. They killed everybody (all five of them) on purpose. It was not accidental. You better know that!

அமர பாரதி said...

வருன்,

பின்னூட்டங்களுக்கு விளக்கம் சொல்வது வியர்த்தமே. சினிமாவில் போலீஸ் சட்டத்தைக் கையில் எடுத்து வில்லனைக் கொன்றால் கை தட்டுவதில் ஆரம்பிக்க்கிறது இந்த மனப்பான்மை. ஒருவர் கூட உயிருடன் இல்லை. யாரை விசாரிப்பது? அவர்கள் நிரபராதிகளா இருந்தால்?

கிரி said...

// கிரி, அமெரிக்கா செய்வதெல்லாம் எல்லா அமெரிக்கர்களும் சரி என்று சொல்வதில்லை, நம்பவுமில்லை.//

வருண் நீங்கள் கூறுவதை ஏற்றுகொள்கிறேன். நீங்கள் கூறுவது இந்தியாக்கும் பொருந்துமில்லையா!

அவரும் அந்த குறிப்பிட்ட நபர்களை மட்டுமே தானே கூறி இருக்க வேண்டும்.. ஒட்டு மொத்த இந்தியாவையும் காட்டுமிராண்டி நாடு என்று கூறக்கூடாதில்லையா!

வாழும் சூழ்நிலை ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபட்டு இருக்கும்.. எனவே நாம் நல்ல பாதுகாப்பான நிலையில் இருக்கும் போது இது போல எப்படி வேண்டும் என்றாலும் கூறலாம். அவரவர் நிலையில் இருந்து பார்த்தால் மட்டுமே அது காட்டுமிராண்டித்தனமா அல்லது அது வேறையா என்று உணர முடியும்.

இது எப்படி என்றால் நான் சிங்கப்பூரில் இருந்து கொண்டு ஏன் சென்னையில் பேருந்து ஏற அடித்துகொள்கிறார்கள் என்று கேட்பதை போல இருக்கிறது? அவனவன் கஷ்டம் சூழ்நிலை அவனவனுக்கு தான் தெரியும்.

//நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? சட்டத்தின் முன்னால் நிறுத்தாமல் குற்றவாளிகள் உயிரைப் பறிக்கிறோம்? என்று கேட்டால், " அமெரிக்கா என்ன யோக்கியமா?" என்பதுபோல் வாதிடுவது "என்கவுண்டரை" சரி என்று ஒரு போதிலும் ஆக்காது!//

வருண் எனக்கும் தற்போது நடந்த என்கவுண்டரில் உடன்பாடில்லை, அதில் இருந்தவர்கள் அனைவருமே குற்றவாளிகளா என்பதே முதலில் தெரியவில்லை ஆனால் கோவையில் ஒரு குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனை என்கவுண்டரில் போட்டது எனக்கு முழு உடன்பாடே.

சரி விசயம் அதுவல்ல நான் என்கவுண்டர் சரியா தவறா என்று வாதிட வரவில்லை. இவர் ஒட்டு மொத்த இந்தியாவையும் காட்டுமிராண்டி நாடா என்று கேட்டதால் மட்டுமே கேட்டேன் மற்றபடி எனக்கு அவர் கேட்ட உள்கருத்தில் எந்த வருத்தமில்லை.

---------------

//அமர பாரதி said...
வருன்,

பின்னூட்டங்களுக்கு விளக்கம் சொல்வது வியர்த்தமே//

அமரபாரதி பதிவு எழுதினால் அதற்கு நான்கு பேர் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். அது நாகரீகமாக இருக்கும் வரை பதில் கூறுவது எந்த தவறுமில்லை. வாதத்திற்கு பதில் கூறலாம் விதண்டாவதத்திற்கு தான் பதில் கூற முடியாது.

அமர பாரதி said...
This comment has been removed by the author.
அமர பாரதி said...

ஐந்து பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள் எந்த முதல் கத்த விசாரனையுமில்லாமல்.  அந்த உணர்வில் வருன் எழுதியிருக்கிறார்.  அதை உணர்வு பிரதிபலிக்காத பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வது வியர்த்தமே.  கோவை என்கவுண்டரும் ஆந்திராவில் பெண்ணின் மீது ஆசிட் ஊற்றியவனை என்கவுண்டர் செய்ததும் சரிதான்.  வார்த்தைகளை பிடித்துக் கொண்டு தொங்குவது சரியா? இந்த ஒரு பிரச்சினையைக் காரணம் காட்டி காட்டுமிராண்டி நாடா என்று கேட்டால் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்? பேட்ரியாட்டிசம் எனக்கும் இருக்கிறது. இந்த மாதிரி சில லட்சங்களை கையில் எடுத்துக் கொண்டு போய் போலீஸ் யாரை வேண்டுமானாலும் சுடலாமே.

அமர பாரதி said...

வார்த்தைகளை பிடித்துக் கொண்டு தொங்குவது தான் நம்முடைய முக்கால் வாசி பிரச்சினைகளுக்கு மூல காரணம். அவன் எப்படி அந்த வார்த்தையை சொல்லலாம், என்பதுதான் இப்போது பெரும் பிரச்சினை.

Jayadev Das said...

\\ஏன் அமெரிக்காவில் கொள்ளை, கற்பழிப்பு கொலை எல்லாம் இதைவிட அதிகமாகவே நடந்துகொண்டுதான் இருக்கு. அமெரிக்கா சொர்க்கபூமினு யார் சொன்னது உங்களுக்கு??? \\ அந்த மாதிரி நாட்டில் வாழ்ந்து கொண்டு ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற கதையாக இந்தியாவைப் பார்த்து காட்டு மிராண்டி நாடுன்னு உங்க நண்பர் சொல்றாரு, அதுக்கு நீங்க வருத்தப் பட்டு பதிவு போட்டுட்டீங்களா....!! ஹா..ஹா...ஹா....

வருண் said...

ஜெயவேல், நீங்க ஒண்ணு பண்ணுங்க, ஏதாவது ஒரு பழைய சொத்தை, ஒரு தொகைக்கு வித்து, அதற்கு வித்த தொகைக்கு சரியா டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணி காட்டுங்க. இதுதான் இன்றைய இந்தியா. நீங்க பழமொழி சொல்லிக்கிட்டு இப்படியே ஈயம்னு நெனச்சுக்கிட்டு வாழவேண்டியதுதான்!

வருண் said...

உங்க கருத்துக்கு நன்றி நடராஜன், 2009கே ஆர், அமர பாரதி மற்றும் கிரி. :)