Friday, March 2, 2012

அது இது எது, சிவ கார்த்திகேயனும் பழமொழிகளும்!

அது இது எது? னு விஜய் டி வி ல வருகிற அந்த ஷோவை அனேகமா எல்லாரும் பார்த்துக்கிட்டுத்தான் இருப்பீங்க. எனிவே, அதுல வர்ற நம்ம மெரீனா ஹீரோ, சிவ கார்த்தி, அப்பப்போ வந்து இந்த பழமொழிக்கு சரியான அர்த்தம் என்னனு சொல்லுங்கனு கேக்கிறதும், அதுக்கப்புறம் அதற்கு சரியான அர்த்தம்னு எதையாவது விளக்கம் ஒண்ணை சொல்லிப்புட்டு இதுதான் சரியான அர்த்தம் ஏதோ இவருதான் பழமொழிக்கு அத்தாரிட்டி போல சொல்றதும்..

"இது தவறானது", "இதுதான் சரி"னு விளக்கம் சொல்றதெல்லாம், ஏதாவது அகராதி மேற்கோள் காட்டிச் செய்றதுதான் சரியான முறை. சும்மா இவரைப்போல் அரை டவுசர்கள் எல்லாம் வந்து இதற்கு அர்த்தம் இதுதான்னு அடிச்சு சொல்றதெல்லாம் கேணத்தனமா இல்லையா?

நிற்க, நான் அவரு சரியானதுனு சொல்ற அர்த்தத்தை தப்புனு சொல்லவில்லை! அதை ஏன் சரியானதுனு நாங்க ஏற்றுக்கனும்? னு கேக்கிறேன்.

நீங்க என்ன சொல்லுங்க, பழமொழினு வரும்போது, சில அடல்ட்ஸ் ஒன்லி பழமொழிகள்தான் மிகவும் அர்த்தமுள்ளதாகவும், தெளிவாகவும் இருக்கு..

என் நண்பன் ஒருவன் இதை அடிக்கடி சொல்லுவான். இன்னைக்கும் இந்தப் பழமொழி கேட்டால் சிரிப்பாத்தான் வருது.

* கழுதைக்கு வாக்கப்பட்டுட்டு "செக்ஸ்"க்கு பயந்தா எப்படிடா? LOL!

அப்புறம் மரப்பசுல நம்ம ஜானகிராமன் எழுதிய ஒண்ணு. இதை ஜானகி ராமன் "இன்வெண்ட்" பண்ணியதாக நான் சொல்லவில்லை. மரப்பசு மூலமாக கேள்விப்பட்ட பழமொழி, அம்புட்டுத்தான்.

* அரிசிப் புழு சாப்பிடாதவனும் அவி(வு)சாரி கையால் சாப்பிடதாவனும் இந்த உலகத்திலேயே இருக்கமுடியாது!

நம்ம "பழமொழி அத்தாரிட்டி" சிவ கார்த்திகேயன் தான் இந்தமாரி பழமொழிகளுக்கும் சரியான அர்த்தம் சொல்லனும்!

----------------

பழமொழி பத்தி கூகிள் பண்ணும்போது இது ரெண்டும் மாட்டுச்சு..


* ஆபத்துக்கு உதவுவானா அவிசாரி ஆம்படையான் ?

இதுக்கு அர்த்தம் புரிகிற மாதிரி இருக்கு..ஆனால் சரியாப் புரியலை.

* ஆச்சானுக்குப் பீச்சான் மதனிக்கு உடப்பிறந்தான் நெல்லுக் குத்தறவளுக்கு நேர் உடப்பிறந்தான்.

இதுக்கு சுத்தமா அர்த்தம் புரியலை! :( இப்போ நெஜம்மாவே நம்ம சிவ கார்த்திகேயன் உதவி ரொம்பத் தேவைதான் போங்க!

தாழ்மையான வேண்டுகோள்:

நானும் பழமொழி சொல்றேன்னு "வரம்பு மீறும்' பழமொழிகளை, மற்றும் விளக்கங்களை பின்னூட்டத்தில் அள்ளிக் கொட்டிடாதீங்கப்பா! நன்றி!

6 comments:

Nelli Grocery said...

http://panainilam.blogspot.com/2008/10/blog-post_12.html

Unknown said...

தகவலுக்கு நன்றி

Jayadev Das said...

\\நானும் பழமொழி சொல்றேன்னு "வரம்பு மீறும்' பழமொழிகளை, மற்றும் விளக்கங்களை பின்னூட்டத்தில் அள்ளிக் கொட்டிடாதீங்கப்பா! \\ இந்த டிஸ்கிக்கு மதிப்பு குடுத்தாவது ஒரு பத்து பேரு பின்னூட்டம் போடுவாய்ங்கன்னு ஓடி வந்து பாத்தா ஒரு பயலையும் காணுமே. [I mean guys telling proverbs Hi..hi...]

வருண் said...

நீங்க வேற, இந்த டிஸ்கி போடலைனா, நெறையா பின்னூட்டம் வந்திருக்கும். எல்லாரும் நான் சொன்னதை மதிச்சு, மட்டமான பின்னூட்டம் எதுவும் போடாமல் இருக்காங்கனு பாராட்டாமல்...! :))). அவங்களுக்கும், நெல்லி மளிகை, அரீஃப் மற்ரும் ஜெயவேல் உங்களுக்கும் நன்றி :)

மதுரை சரவணன் said...

பழமொழியில் பல மொழிகள் உள்ளனவா…?

ராஜ நடராஜன் said...

மொழியே தெரியாம அல்லாடற காலத்துல பழமொழி வேறயா:)