வாழ்க்கையில் நல்லதையே நெனைக்கனும், எதுக்கு தேவையில்லாத சினிமா, பத்திரிக்கை செய்தி எல்லாம் படிச்சு கொலை கொள்ளை, கற்பழிப்பு, தகாத உறவு அது இதுனு செய்திகளைப் தெரிஞ்சு மனதைக் கெடுத்துக்கிட்டு? நம் வாழ்வில் நாம் எளிமையாக வாழ்ந்து வம்பு தும்புக்குப் போகாமல் நிம்மதியாக இருப்போமே? என்று பலர் நினைப்பதுடன் அதுபோல் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துகொண்டும் இருக்காங்க.
ஆனால் ஒருவர் வாழ்க்கையில் திடீர்னு சூறாவளிக் காற்று அடிக்கலாம். அப்போதுதான் உலகறிவு எவ்வளவு அவசியம் நமக்கு என்று விளங்கும்.
இது பழைய செய்திதான், இருந்தாலும் முக்கியமான ஒண்ணு என்பதால் பகிர்கிறேன்.
ஒரு 25 வருடத்துக்கு முன்னால மைக்கேல் மார்ட்டன் என்கிற ஒருவரை, அவருடைய மனைவி, க்ரிஷ்டின் மார்ட்டனை , கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டி, அதை சட்டப்படி "நிரூபித்து" அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கிவிட்டார்கள்.
மேலே படத்தில் உள்ளது மைக்கேல் மார்ட்டன் (இன்று)!
மனைவியை ஏன் கொலை செய்தார்? என்ற கேள்விக்கு அரசாங்க தரப்பு (கென் ஆண்டர்சன்) கொடுத்த வாதம், மார்ட்டன் மனைவி க்ரிஸ்டின் அவருடன் உடலுறவு கொள்ள மறுத்துவிட்டதால், கோபமடைந்து, அடித்து அவர் மனைவியை கொன்னுபுட்டாரு னு குற்றம் சாட்டினார்கள்! அதை ஒரு மாதிரி "ஜோடிச்சு", "நிரூபித்து", கென் ஆண்டர்சன் என்கிற ஒரு "திறமை வாய்ந்த" அரசாங்க தரப்பு வக்கீல் மைக்கேல் மார்ட்டனுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக்கொடுத்துவிட்டு, இன்னைக்கு அதே ஆஸ்டின், டெக்சாஸ்ல ஒரு ஜட்ஜ் ஆகவும் இருக்கிறார்.
மைக்கேல் மார்ட்டன், தான் "கொலை செய்யவில்லை" என்கிற வாதம் எடுபடவில்லை!
* கொலை செய்யப் பட்ட இவரோட மனைவியின் தலையில் ஏதோ ஆயுதம் வைத்துத் தாக்கி அவரை கொன்று இருக்கிறான் கொலையாளி.
* கொலை நடந்த இடத்தில் இருந்த, அல்லது கொலையைக் கண்ணால் பார்த்த சாட்சி பெரியவர்கள் யாருமில்லை.
* கொலை நடந்த இடத்தில் அவருடைய 3 வயது மகன் மட்டும் இருந்து இருக்கிறான். கொலையை பார்த்து இருக்கலாம்..எதோ ஒரு "மான்ஸ்டர்" வந்து தன் அம்மாவை கொன்றுவிட்டதாக அவன் சொன்னதாக சொல்லப்படுகிறது.
* அரசு தரப்பு வக்கீல்கள், வாதத்திறமையால் மைக்கேல் மார்ட்டன் தான் கொலையாளி என்று ஒரு மாதிரியாக ஜோடிச்சு, ஜூரியை நம்ப வைத்து இவருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து சாதித்துவிட்டார்கள்.
மைக்கேல் மார்ட்டன் ஒண்ணும் "பர்ஃபெக்ட் ஜெண்டில்மேன்" என்றோ அல்லது ஒரு சில சிறு சிறு தவறுகள் செய்யாதவரோ என்பது பற்றி எல்லாம் தெரியல. அவருக்கும், அவர் மனைவிக்கும் 100% நல்ல உறவு இருக்காமலும் இருந்து இருக்கலாம்தான். ஆனால் இவர் கொலை செய்தாரா? என்பது அவருக்கும் "கடவுளுக்கும்"தான் தெரியும்!
மேலே, மைகேல் மார்ட்டன் (அன்று), மனைவி க்ரிஸ்டின் மார்ட்டன், அவர்கள் மகன்!
25 வருடத்துக்கு அப்புறம்...
மைகேல் மார்ட்டன், கொலையாளி பட்டத்துடன், மனைவியை இழந்து, தன் மகனை விட்டு, தண்டனை அனுபவித்த பிறகு, டி என் எ அனாலிசிஸ் (க்ரைம் சீன் கெடச்ச, "முடி" மற்றும், "ரத்தம்" ) செய்து பார்த்த பிறகு, "மார்க் ஆலன் நார்வுட்" என்கிற இன்னொரு ஆள் கொலை செய்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது! இந்த நார்வுட் இதே போல் இன்னொரு பெண்ணையும் கொலை செய்ததாகவும், இந்த ரெண்டாவது கொலை, கிரிஷ்டின் கொல்லப்பட்டு நடந்து சுமார் 2 வருடத்துக்குப் பிறகு நடந்ததாகவும், டி என் எ எவிடென்ஸஸ் இருக்கிறதாம்!
மேலே படத்தில் டி என் எ எவிடென்ஸ் படி இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ள
மார்க் ஆலன் நார்வுட்!
* 25 வருடம் தண்டனை அனுபவித்த பிறகு மைக்கேல் மார்ட்டனை விடுதலை செய்துவிட்டார்கள்!!
* மைக்கேல் மார்ட்டன் நிரபராதியாகக் காட்ட உதவும் ஒரு சில எவிடெண்ஸ்களை போலிஸ் மற்றும் அரசுதரப்பு சட்டக் காவலர்கள், வக்கீல்கள் மறைத்துவிட்டதாகவும் தெரிகிறது.
சினிமாக்களில் நடப்பது போலவே ( "Fugitive" and "Shawshanks Redemption"), மனைவி கொல்லப்பட்டார் என்கிற நிலை வந்தால் பொதுவாக அமெரிக்காவில் கணவனைத்தான் பிடிச்சு ஜோடிச்சு உள்ள போடப் பார்க்கிறார்கள் சட்டக்காவலர்கள்!!
கணவர்கள் ஜாக்கிரதை!!! எப்படி ஜாக்கிரதையா இருக்கனும்னு எனக்குத் தெரியவில்லை! ஆனால் கவனமாக இருப்பது நல்லது! மனைவி கொல்லப்பட்டால் நீங்கதான் முதல் சஸ்பெக்ட்!! :(
5 comments:
இதுக்கு தான் மரண தண்டனை கூடாது என்று நாங்கள் கூறுகிறோம். ஆனால், இந்தியாவில், அழுக்கா இருப்பவனுக்கு உடனடி மரண தண்டனை. மற்றபடி பணம் இருக்கும் பன்னாடைகளுக்கு (எல்லா சாமியாரும் இதில் அடக்கம்), கோர்ட் அடைக்கலம் கொடுக்கும்.
இங்கு சிகாகோவில், 2000 வருடத்தில் எல்லா மரண தண்டனையை நிறுத்தப் பார்த்தல்---எல்லாம் பொய்-It was proved that all eye-wtnesss' are nothing but bull shit--தமிழில் மாட்டுப் பீ!
வருண் , தன்னுடைய போட்டோவையும் போட்டுவிட்டு இந்த மாதிரி கேட்பதற்கு கொஞ்சம் தில் ஜாஸ்தியாவே இருக்கணும்!! ஆனால் எசகு பிசகா எதாச்சும் ஆச்சுன்னா உன்னையும் சாட்சிக்கு கூப்பிடுவாங்க. முதலில் இந்த கமெண்டை தூக்குய்யா....
***நம்பள்கிsaid...
இதுக்கு தான் மரண தண்டனை கூடாது என்று நாங்கள் கூறுகிறோம். ஆனால், இந்தியாவில், அழுக்கா இருப்பவனுக்கு உடனடி மரண தண்டனை. மற்றபடி பணம் இருக்கும் பன்னாடைகளுக்கு (எல்லா சாமியாரும் இதில் அடக்கம்), கோர்ட் அடைக்கலம் கொடுக்கும்.
இங்கு சிகாகோவில், 2000 வருடத்தில் எல்லா மரண தண்டனையை நிறுத்தப் பார்த்தல்---எல்லாம் பொய்-It was proved that all eye-wtnesss' are nothing but bull shit--தமிழில் மாட்டுப் பீ!
27 March 2012 8:28 PM**
கருத்துக்கு நன்றிங்க, நம்பள்கி!
***Jayadev Das said...
வருண் , தன்னுடைய போட்டோவையும் போட்டுவிட்டு இந்த மாதிரி கேட்பதற்கு கொஞ்சம் தில் ஜாஸ்தியாவே இருக்கணும்!! ஆனால் எசகு பிசகா எதாச்சும் ஆச்சுன்னா உன்னையும் சாட்சிக்கு கூப்பிடுவாங்க. முதலில் இந்த கமெண்டை தூக்குய்யா....
27 March 2012 9:45 PM***
உண்மைதாங்க, ஜெயவேல்! ஐயா, ஏதோ "ஜோக்" கா சொல்றேன்னு தவறுதலாக சொல்லியிருக்காரு. :(
அந்தப் பின்னூட்டத்தை சுவடு தெரியாமல் அகற்றுவதுதான் எல்லோருக்கும் நல்லது-முக்கியமாக அவருக்கு நல்லது!
நன்றி, ஜெயவேல்! :)
வருண்!அவர் தான் ஜெயதேவ் என்கிறார்.நீங்க ஜெயவேல் சொல்றீங்க!உங்களுக்குள் கொடுக்கல் வாங்கல் ஒன்றுமில்லையே?இருந்தால் சிரிப்பான் சரிதான்.இல்லைன்னா நீயா?நானா பதிவு பின்னூட்டத்துக்கு கேஸ் போடுவேன்:)
உங்க பதிவு மாதிரி அமெரிக்காவுல உண்மையாகவே நடக்கிறதா என்ன?முன்பு கூட ஒரு பெஸ்ட் செல்லர் படித்தேன்.ஒரு டாக்டர் தன் மனைவியையும்,3 வயது குழந்தையையும் ஊசி போட்டுக் கொன்று விட்டு போலிசுக்கு தகவலும் சொல்லி விட்டு அப்பாவி மாதிரி இருக்க சந்தேகத்தின் பேரில் அவரை உள்ளே தூக்கிப் போட சில வருட தண்டனைக்குப் பின் டாக்டர்தான் கொலை செய்தார் என்பதை நிருபீக்க முடியாமல் வெளியே வந்து விட்டார்.
இது போன்ற இன்னுமொரு சூடான செய்தியாக தற்போது இந்தியாவில் நிகழும் அரூசி கொலைக் குற்றம் எனபது உங்களுக்காக கூடுதல் தகவல்.
Post a Comment