Wednesday, March 14, 2012

பிரிவோம் சந்திப்போமும் கேரக்டர் கற்பழிப்புகளும்!

தமிழ் சினிமாதான் எப்போவுமே தரமில்லாமல் இருக்குனு சொல்றவங்க முகத்தில் அறைவதுபோல இருக்கு இன்றைய தமிழ் சின்னத்திரையில் வரும் கேவலமான சீரியல்கள்!

There is absolutely no consistency in any characters! இன்னைக்க்கு நல்லவளா இருக்க ஒரு கேரக்டர், இன்னும் ஒரு மூனு மாதத்தில் படுகேவலமான ஒண்ணா மாறிடும்! இல்லை மாற்றப்படும்! இதெல்லாம் டார்வின், ஃப்ராயிடு எல்லாரும் சேர்ந்து உக்காந்து கலந்துரையாடினாலும் எப்படினு விளக்க முடியாமல் குழம்பிவிடுவார்கள். இதுபோல் வில்லனை ஹிரோவாக்குவதும் ஹீரோயினை வில்லனாக்குவதும், அம்மாவை அத்தையாக்குவதும், அத்தானை அண்ணனாக்குவதும் அளவுக்குமீறி நடக்கிறது. இது மாதிரியெல்லாம் நிச்சயமாக மஹாமட்டமான இயக்குனரின் தமிழ் சினிமாவில்கூட இதுவரை வந்ததில்லை!

இந்தமாதிரி சீரியல் ஒளிபரப்புரவனை எல்லாம் உண்மையில் "மனிதர்கள் இவ்வளவு ஈனத்தனமாக இருப்பதில்லை" என்று மனித உரிமைக்கழகம் ஏதாவது செய்யனும் போல இருக்கு! இல்லனா இந்த சீரியல் எடுக்கிற பொறம்போக்குகள் ஏதாவது விறுவிறுப்பான காட்சி வாராவாரம் கொண்டு வரவேண்டுமென்று இதுமாதிரி என்னவேணா செய்வானுக.

உதாரணமாக, பிரிவோம் சந்திப்போம்னு ஒரு சீரியல் விஜய் டிவில வந்துண்டு இருக்கு. ஒரு 4 வாரம் முன்னால வரை, ரேவதி என்னும் ஒரு கேரக்டரில் ஒரு குவாலிட்டி இருந்தது. திடீர்னு அந்த கேரக்டரை, எதுக்காகவோ, யாருக்காகவோ தியாகம் செய்வதாக சொல்லி, எந்தவித நற்குணமும் இல்லாத ஒரு கேவலமான கேரக்டராக மாற்றியமைத்துள்ளார்கள். இதுபோல நெனச்சா வில்லனை ஹீரோவாகவும் பத்தினியை தேவடியாளாகவும் மாத்தவில்லைனா இந்த மரமண்டைகளுக்கு சீரியலை பல வருடங்கள் எப்படி நடத்திச் செல்வதென்று தெரியாமல் போய்விடுகிறது .

என்ன சொல்றீங்க? தமிழ் சீரியல்னா அப்படித்தான்! இதுக்குப் போயி ஏன் அலட்டிக்கிற? னு சொல்றீங்களா? எல்லாருக்கும் தெரிந்த உண்மைதான் இது, நான் இல்லைனு சொல்லவில்லை! ஏன் தமிழ் சீரியல்னா மட்டமாத்தான் இருக்கனுமா? தமிழன்னா பெரிய இவன்னு நம்ம அப்பப்போ சொல்லிக்கிறது இல்லையா? இதெல்லாம் தமிழன் தரத்தை அளக்கும் அளவுகோல்தானே?

இலக்கியத்திலும், எழுத்திலும்தான் நம்மலால எதுவும் சாதிக்க முடியவில்லை. இதுபோல சாதாரண டி வி சீரியலைக்கூட எடுக்க முடியாதா? இதை பயன்படுத்தியாவது ஏதாவது நல்லவைகளை (மனிதர்களை பண்படுத்துவதுபோல) கற்றுக்கொடுப்பார்கள் என்று பார்த்தால், இதிலும் வேஷித்தனம்தான் செய்கிறார்கள்!

How would you say this?

Not maintaining any consistency in characters?

Character molestation??

3 comments:

புலவர் சா இராமாநுசம் said...

இதுமட்டுமல்ல ஒட்டுமொத்த மெகா
தொடர்களும் இதே நிலைதான்!
மக்களைப் பண்படுத்துவ அல்ல
புண்படுத்துவன ஆகும்
சா இராமாநுசம்

அருள் said...

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

வருண் said...

தங்கள் கருத்துக்கு நன்றிங்க, திரு. ராமாநுசம்!

--------

வாங்க அருள். வந்து என்னனு பார்க்கிறேங்க! :)