Thursday, March 8, 2012

காதல் தோல்விகள் பலவிதம்!

காதல் தோல்வி பலவகைனு உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆமா, காதல் தோல்வி மட்டுமல்ல, காதலும் பலவகைகள்தான். உடல் காதல், உள்ளக் காதல், இரக்கக் காதல், காமக் காதல், ஆண்லைன் காதல், இண்டர்னெட் காதல், கத்திரிக்கா காதல்னு சொல்லிக்கிட்டே போகலாம்தான். இதுல எந்த மாதிரி காதல் தோல்வி பரவாயில்லைனு பார்ப்போமா?

* முதல் ரகம்..ஒரு பொண்னைப் பார்த்து உங்களுக்கு ரொம்ப பிடிச்சிப் போயிடுது. அதனால அவளை நீங்க ஒரு தலையாக விரும்புறீங்க. ஆனால், அவளுக்கு உங்களை காதலிக்கத் தோணவில்லை! நீங்க செய்த எல்லா முயற்சியும் தோல்வி. உங்களுக்காக காதல் அவளிடம் அரும்பாமலே முடிஞ்சு போயிடுது. நீங்க தாடி வளர்த்துக்கிட்டு திரிஞ்சு, அப்புறம் செட்டில் ஆகி அந்தப்பொண்ணை முழுவதுமாக மறக்கலைனாலும் ஓரளவுக்கு மறந்து வாழ்றீங்க. இதுபோல கோடிக்கணக்கில் காதல் தோல்விகள் நடந்துகொண்டு இருக்கு.



* அடுத்த ரெண்டாவது ரகம், ஒரு பெண்ணை விரும்புறீங்க. அவளும் உங்களை விரும்புறாள். காதல் ரெண்டு பக்கமும் மலர்ந்துவிடுது. காதலில் வெற்றி! ஆனால் உங்க குடும்ப சூழல், சாதி, மதம், பெற்றோர்கள் இதெல்லாம் எதிரா அமைந்து இருவரும் கல்யாணம் செய்ய முடியாமல்ப் போயிடுது. குஷ்பூ அக்கா சொல்ற மாதிரி ப்ரிமாரிட்டல் செக்ஸெல்லாம் தப்பு இல்லை என்பதால் உங்க காதல் வரம்பு மீறியும் போயிருக்கலாம்தான். கடைசியில் அவ வேறு ஒருத்தனை, பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிறா, நீங்களும் கொஞ்ச நாள் ஒப்பாரி வச்சுட்டு இன்னொருவரை கட்டிக்கிறீங்க. இது போல காதல் தோல்வி, நம்ம அரேஞ்சிட் மேரேஜ் கலாச்சாரத்தில் ரொம்ப சாதாரணம்னு உங்களுக்கே தெரியும்.

* அடுத்த ரகம், அதாவது மூனாவது ரகம் பார்ப்போம்! ஒரு பெண்ணை விரும்புறீங்க. அவளும் விரும்புறா. குடும்பம், மதம், சாதி எல்லாம் ரெண்டு பேருக்குமே பிரச்சினை இல்லை. ஆனால் நாள் ஆக ஆக உங்க காதல் உடையஆரம்பிக்கிது. ஒருவரிடம் உள்ள குறைகள் இன்னொருவருக்கு பெரிய குறையாகி.. காதலர்களுக்குள்ளே காதலே இல்லாமல்ப் போயிடுது. உங்களை கொஞச நாள்ல சுத்தமாக அவளுக்குப் பிடிக்காமல்ப் போயிது. அவ இன்னொருவரை காதலிக்க ஆரம்பிச்சுடுறா இல்லைனா உங்களைப் பிடிக்கலைனு சொல்லி உங்களை ஒதுங்கிக்க சொல்லிடுறா. அதாவது வேற வழியில்லாம்ல ரெண்டு பேரும் "ப்ரேக் அப்" பண்ணிக்கிறீங்க. இதிலே யாரு "ப்ரேக் அப்" பண்ணூறா அல்லது "டம்ப்" பண்ணுறா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். இதுபோல காதல் தோல்வி அயல்நாடுகளில் ரொம்பச் சாதாரணம். நம்ம ஊர்லயும் ஹை சொசையிட்டிலயும் இப்போ அதிகமாகிக்கொண்டு வருகிறது.




*நாலாவது ரகம்..காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறீங்க. 10-20 வருடத்துக்கு அப்புறம், காதலையும் காணோம், ஒரு மண்ணாங்கட்டியையும் காணோம். செக்ஸ் செம போராயிடுது. உங்க காதலரோட செக்ஸ் வச்சுக்கிறதுக்கு சுய இன்பமே பரவாயில்லைனு தோனுது. காதல் உடைந்து, கல்யாணமும் உடைந்து போகுது. ஆனால் இதில் பாதிக்கப் படுறவங்க நீங்க ரெண்டுபேரு மட்டுமல்ல! உங்க குடும்பம், குழந்தைகள். இதை சாதாரண "விவாகரத்து"னு சொல்ல முடியாது. ஏன்னா நீங்க ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணியிருக்கீங்க. இதுபோல் காதல் தோல்வி மேலை நாடுகளில் மற்றும் நம்ம ஹை சொசைய்ட்டிலயும் பார்க்கலாம்.

இதுக்கு மேலே இன்னும் பல வகைகள் இருக்கத்தான் செய்து, "கள்ளக் காதல்" "புனிதமான கள்ளக் காதல்" "ஆண்லைன் காதல்" இப்படி பலவகை. இதெல்லாம் கேவலமான விசயம் என்றாலும், இதில் இன்வால்வ் ஆகியுள்ள இருவருக்கு அப்படி தோணுவது இல்லை. இதெல்லாம் பெரிய தப்புதான்னு ஒத்துக்குவாங்க, ஆனால் இதில் ஒரு கில்ட்டி ப்ளெஷர் இருக்கும் அவர்களுக்கு. இவைகளும் பொதுவாக கொஞ்ச காலத்துக்குப் பிறகு முறிவதுதான் வழக்கம்.

காதல் தோல்வி என்பது ஒரு வாழ்க்கைப் பாடம்தான். அதை நீங்க எப்படி எடுத்துக்கிறீங்ககிறது ரொம்ப முக்கியம். யாரு மேலே தவறு இருந்தாலும், நீங்க உங்க மனதை அதிகம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ரொம்ப முக்கியம். உணர்ச்சி வசப்பட்டு ஒரு சிலர் தற்கொலை அது இதுனு செய்துவிடுவார்கள். ஒரு சிலர், தோல்வியால், ஏமாற்றப் பட்டதால் தன் மாஜி காதலரை வார்த்தையால் தாக்குவதும், பல வயலண்ஸ் நடப்பதும்கூட பார்க்கிறோம்.

ஆனால் எந்தத் தோல்வியுமே, அன்று தோனுவதுபோல் இன்று தோனுவது இல்லை. காலத்தால் மாறக்கூடியது.

So, when it comes to losing in your love life, YOU ARE NOT ALONE! There are millions of LOSERS out there! You must REMEMBER THAT!

அதனால காதல் தோல்வியை ஒரு வாழ்க்கைப் பாடமாக கற்றுக்கொண்டு, வாழ்க்கையை அனுகுவது புத்திசாலித்தனம். நீங்க புத்திசாலினு எனக்கு நல்லாத்தெரியும்! :-)

7 comments:

ILA (a) இளா said...

என்ன திடீர்னு ஆராய்ச்சியெல்லாம்?

வருண் said...

அட, உங்களுக்குத் தெரியாதா? இன்னைக்கு "காதல் தோல்வி" தினமாம்! :)))

Jayadev Das said...

\\ப்ரிமாரிட்டல் செக்ஸெல்லாம் தப்பு இல்லை என்பதால் உங்க காதல் வரம்பு மீறியும் போயிருக்கலாம்தான். கடைசியில் அவ வேறு ஒருத்தனை, பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிறா, நீங்களும் கொஞ்ச நாள் ஒப்பாரி வச்சுட்டு இன்னொருவரை கட்டிக்கிறீங்க.\\இந்த பீசா நூடுல்ஸ் போன்ற வெளிநாட்டு அயிட்டமெல்லாம் எல்லாம் உடம்புக்கும் நல்லதல்ல, இல்லாத வியாதியெல்லாம் வரும் விலையும் ஜாஸ்தி இருந்தாலும் இந்த விளம்பரங்களால் உசுப்ப்பேத்தி உசுப்பேத்தியே இன்னைக்கு அது தெருவுக்குத் தெரு கடைகளைத் திறந்து விட்டு கல்லா கட்டுறாங்க. அதே மாதிரி இந்த ***ப்ரிமாரிட்டல் செக்ஸெல்லாம் தப்பு இல்லை*** கலாசாரத்தை இப்போ பரவலாக்கி உசுப்ப்பேத்தி உசுப்பேத்தியே இல்லை மறை காய் மறைவாய் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தவற்றை எல்லோரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் படி செய்து, விவாகரத்தையும் கொண்டாந்து உள்ளே விட்டு..... .....ஸ் அப்பா வருங்காலம் பிள்ளைகள் எந்த கதியா ஆவாங்கன்னு நினைச்சா கண்ணைக் கட்டுதே....

Jayadev Das said...

***ப்ரிமாரிட்டல் செக்ஸெல்லாம் தப்பு இல்லை*** இதனால ரொம்ப டேமேஜ் ஆவறது பெண்களும், அவளுடைய பெற்றோரும்தான். பெண்களை ஆண்களுடன் பழகவிடாமலேயே வைத்திருந்தார்கள். அது மோசம்தான், ஆனால் இந்த மாதிரி நட்பு, காதல் [ஆப்புறம் வேறெங்க போவும்... ....], ப்ரிமாரிட்டல்செக்ஸ், கருக்கலைப்பு, அப்புறம் ஒண்ணுமே தெரியாத மாதிரி இன்னொரு கல்யாணம் என்பதற்கு நம் முன்னோர்கள் பண்ணிய பெண்ணடிமையே பெட்டர்.

வருண் said...

என்ன சொல்லுவாங்கனா லோ-க்ளாஸ் மற்றும் ஹை சொசைட்டி இது ரெண்டுலயுமே இதெல்லாம் நடக்கலாம். ஆனால் மிடில் க்ளாஸ்ல அரிதாகத்தான் நடக்குமென்று.

ஆனால், இன்னைக்கு குஷ்பு, சுஹாஷினி, ராதிகா போன்ற பெண்ணுரிமை பேசும் ஹை க்ளாஸ் ஆண்ட்டிகள் இளம் பெண்களை ப்ரிமாரிட்டல் செக்ஸ் வச்சுக்கிறது தப்பு இல்லைனு சொல்லி இன்றைய இளைய சமுதாயத்தை (இளம் பெண்களை) தூண்டி விடுறாங்க. இளைய சமுதாயமும் இன்றைக்கு மிடில் க்ளாஸையும் இதுபோல நடப்பதை தவிர்க்க முடியாதுனு செக்ஸ்லாம் ஒரு பெரிய மேட்டர் இல்லைனு தங்களால முடிஞ்சவரை மிடில் க்ளாஸை மாற்றிக்கொண்டு வர்றாங்க. உங்களைப்போல எண்ணமுள்ள ஒரு சிலர் இதைப் பத்தி ரொம்ப கவலைப்படுறாங்க. இதுதான் இன்றைய நிலைமை.

ben said...

1st ragam

Unknown said...
This comment has been removed by the author.