Tuesday, March 6, 2012

மங்காத்தாவா? நண்பனா? ஒரு விவாதம்!


ஷங்கரோட இணைந்தும் விஜய்யால் அஜீத்தின் மங்காத்தாவை வசூலில் வீழ்த்தமுடியவில்லைனு சொல்றாங்க அஜித் ரசிகர்கள் . ஆனால் விஜய் ரசிகர்கள், நண்பன், மங்காத்தாவைவிட மாபெரும் வெற்றி பெற்றதாக நம்புறாங்க! உண்மை என்ன?னு பார்ப்போமா?

தல ரசிகர்: ஷங்கரோட கூட்டணி சேர்ந்தும் சென்னையில் இன்னைக்குவரை கலக்ஷன் 7.89 கோடிகள்தான். "சத்தியத்" தில் இத்தனை நாள் ஓடுச்சு, அப்படி ஓடுச்சு, இப்படி ஓடுச்சுனு சொன்னாங்க, ஆனால் உண்மை என்னனா நண்பன் 8 கோடிய இன்னும் பிடிக்கலை! ஃப்ளாப்னு சொல்லப்பட்ட ஏழாம் அறிவுகூட 9 கோடிக்கு மேலே வசூல் செய்தது.

தளபதி ரசிகர்: ஆமா, மங்காத்தா, சென்னையில் ஏதோ பத்துக்கோடி வசூல் செய்ததுபோல கதை விடுறீங்க. சென்னையில் மங்காத்தா வசூல் எவ்ளோ? அதைச் சொல்லுங்க.

தல ரசிகர்: 4 வாரத்திலேயே மங்காத்தா 8 கோடியை கடந்துவிட்டது. அதுக்கப்புறம் ஒண்ணும் பெருசா வசூல் வரவில்லைதான். ரிப்பீட் ஆடியண்ஸ் நண்பனுக்கு வந்து குவியிறானுகனு ஏதோ கதை விட்டுக்கிட்டு இருக்கீங்க. அப்புறம் ஏன் இன்னும் எட்டுக்கோடியைக்கூட நண்பன் தொடவில்லை?

தளபதி ரசிகர்: பிஹைண்ட்வுட்ஸ் வேணும்னே தளபதியைக் கவுத்துறானுக. நண்பனை இன்னும் சூப்பர் ஹிட்னு சொல்லிக்கிட்டு அலையிறாங்க. ஆனால் இதே 8 கோடி வசூல் செய்த மங்காத்தாவை ப்ளாக் பஸ்டர்னு சொன்னார்கள். இதெப்படி இருக்கு?

தல ரசிகர்: அப்படிப் பார்த்தால், 9 கோடி வசூல் செய்த ஏழாம் அறிவையும் சூப்பர் ஹிட்னு சொல்லனும். அதை ஹிட்னு கூட சொல்லவில்லை! நண்பனுக்கு ஆன செலவு (பட்ஜெட்) மங்காத்தாக்கு ஆனதை விட 3 மடங்க ஆயிருக்கலாம். அதையெல்லாம் கணக்கில் எடுத்துத்தான் சொல்றாங்கனு நெனைக்கிறேன்

தளபதி ரசிகர்: சரி, யு கே ல மங்காத்தா வசூலை மிஞ்சிவிட்டது நண்பன்! அதாவது தெரியுமா உங்களுக்கு?

தல ரசிகர்: யாரு சொன்னா?

தளபதி ரசிகர்: யு கேல நண்பன் வசூல், $340,000! மங்காத்தா வசூல் $ 268,000!

தல ரசிகர்: பெரிய 62,000 டாலர்கள்! யு கே சரி, மலேசியா நிலவரம் என்ன தெரியுமா?

தளபதி ரசிகர்: அங்கேயும் நண்பந்தான் அதிக வசூல் பண்ணியிருக்கும்!

தல ரசிகர்: அதுதான் கெடையாது! இன்னைக்கு வரை நண்பன் வசூல், $872,498 ஆனால் மங்காத்தா வசூல் என்ன தெரியுமா? $1,104,911 ! சுமாரா 228,000 டாலர்கள் வித்தியாசம்!

தளபதி ரசிகர்: ஆந்திராவில் நண்பன் செம ஹிட் தெரியுமா?

தல ரசிகர்: யாரு சொன்னா? ஆந்திராவில் நண்பன் படம் எடுபடவில்லை! ஏழாம் அறிவு அளவுக்குக்கூட ஓடலை. ஏழாம் அறிவு இதைவிட 3 மடங்கு அதிகமா வசூல் பண்ணுச்சு!

தளபதி ரசிகர்: சரி, உங்க மங்காத்தா ஆந்திராவில் எப்படிப் போச்சு?

தல ரசிகர்: அதை ஆந்திராவில் ரிலீஸ் பண்ணினாங்களா என்னனு தெரியலை. ஆனால் நண்பன் ரிலீஸ் ஆகி ஷங்கர் பேரைக் கெடுத்ததுதான் அது சாதிச்சது.

தளபதி ரசிகர்: என்ன சொல்லுங்க, தளபதி தொடர்ந்து மூனு ஹிட் கொடுத்து இருக்காரு!

தல ரசிகர்: அதென்னவோ ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் ஷங்கர் படத்துக்கு அடுத்து வர்ற படம் ஃப்ளாப் ஆவதுதான் வழக்கம்.. அனேகமா துப்பாக்கி.. வெத்து துப்பாக்கிதான்..

தளபதி ரசிகர்: துப்பாக்கி ஃப்ளாப் ஆகுமா? சாண்ஸே இல்லை!

தல ரசிகர்: அந்நியனுக்கு அப்புறம் வந்த "மஜா" மாதிரித்தான் துப்பாக்கி தலையெழுத்தும் ஆகப்போது!

தளபதி ரசிகர்: இப்படியே எதையாவது சொல்லிக்கிட்டு திரிங்க. அப்புறம் அஜீத்தோட அடுத்த படம் என்ன?

தல ரசிகர்: பில்லா 2!

2 comments:

Jayadev Das said...

நண்பன் படத்தை இவனுங்க எடுத்த லட்சணத்துக்கு பேசாம டப்பிங் பண்ணியே வெளியிட்டு இருக்கலாம். அப்படி ஒரு அப்பட்டமான காப்பி. எதுக்கு ரீமேக் பண்ணினாங்கன்னே தெரியலை. ஹிந்தி படத்தில் இருந்த உயிரோட்டம் தமிழில் இல்லை அது ஏனோ தெரியவில்லை, சத்தியராஜ் உட்பட பல கேரக்டர்கள் சொதப்பியிருந்தாங்க. இவனுங்க படம் நல்லாயிருக்கா இல்லியா என்பதைப் பார்ப்பதற்குப் பதிலாக இன்னொருத்தன் படம் ஊத்திகிச்சா என்று பார்த்து சந்தோஷப் பாடுவதிலேயே இருக்கானுங்க. [அது சரி உண்மை நிலவரம் என்னன்னு நீங்களாச்சும் சொல்லுங்களேன்?]

வருண் said...

உண்மை நிலவரம்? என்னனு கேட்டீங்கனா. நான் அஜீத் விசிறியும் அல்ல, விஜய் விசிறியும் அல்ல!

மங்காத்தா படம் வரும்போது அது இந்தளவுக்கு ஒரு வியாபார வெற்றி தரும் என்று எதிர் பார்க்கவில்லை. அதனுடைய வெற்றிதான் எனக்கு பெரிய வெற்றியாகத் தெரிகிறது.

நண்பன் படம் நம் சமுதாயத்திற்கு தேவையானதுனு சொல்றாங்க. தரம் னு பார்த்தால் நண்பந்தான் பெட்டர் னு தோணுது! மற்றபடி நண்பனின் வியாபார வெற்றி மங்காத்தாவின் வெற்றிக்கு கீழேதான்! :)