Monday, March 26, 2012

ஆண்கள் என்னும் மிருகங்கள்!

பொதுவாக செக்ஸ் என்பதே ஒரு மாதிரி மிருக உணர்ச்சி என்றுதான் நம்மளால பல விவாதங்களுக்கு அப்புறம் (ஏற்றுக்)கொள்ளப்படுகிறது. செக்ஸ், மிருக உணர்ச்சியாயிருந்தாலும் ஹார்மோன்களை பெற்ற ஆண் பெண் இருவருக்குமே இள வயதில் செக்ஸ் அவசியம் என்பதால், அதை சமாளிக்க காதல், கல்யாணம், செக்ஸ் லைஃப் னு அந்த காம வாழ்க்கை ஆரம்பிச்சு வாழ்க்கை போயிக்கிட்டு இருக்கு. ஆனால் ஆணும் பெண்ணும் வேற வேற என்பதை நாம் என்றுமே மறுக்க முடியாது. இருவரும் ஒருபோதும் சரி சமம் அல்ல!

நான் பார்த்தவரைக்கும் ஆணைப் பொருத்தவரையில் செக்ஸ் என்பது உயிர் இருக்கும் வரை அவனுக்குத் தேவைப் படுகிறது (அவனால முடியுதோ இல்லையோ, அவனுக்குத் தேவைப் படுது)! பொதுவாக பெண்களுக்கு அப்படியல்ல என்றுதான் தோனுது. இது சம்மந்தமாக இரண்டு உதாரணங்கள் பார்ப்போம்!

* கேஸ் 1

எனக்குத் தெரிய ஒரு 55 வயதுப் பெண், கணவனுக்குத் தேவையான "செக்ஸ் ட்ரைவ்" தன்னிடம் இல்லை என்பதால், அதற்காக ஒரு "தெரப்பிஸ்டை" (டாக்டரை) அனுகி அதை சரி செய்ய தான் ஏதோ ஹார்மோன்கள் எடுத்துக்கொண்டு கணவனுடன் உடலுறவு கொண்டு சமாளிக்கிறாராம். அவர்களுக்குள் கணவன் - மனைவி உறவு தொடருகிறது. மேலும் அவர்கள் குடும்பம் இன்னும் உடையாமல் இருக்கிறது. அவர் எடுக்கும் ஹார்மோன்களால் எதுவும் தீமை ஏற்பட்டதாக இதுவரை தெரியவில்லை.

* கேஸ் 2

சமீபத்தில் ஒரு 60 வயதான ஒரு கோ-வொர்க்கரிடம் பேசும்போது நான் அறிந்தது. அவரும், அவர் மனைவியும் "லீகல்லி செப்பரேட்டெட்" என்றார். "என்ன ஆச்சு?" னு கேட்டால் "ஐ காண்ட் டேக் இட் எனிமோர் மேன்" என்றார். அப்புறம் மெதுவாக, அவர் என்னிடம், "நீ செக்ஸ் பத்தி என்ன நெனைக்கிறனு எனக்குத் தெரியலை, ஆனால் 3 வருடம் முன்னால என் மனைவி, இனிமேல் உடலுறவு என்பது நமக்குள் கிடையாது என்று ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள். அதுக்கப்புறம் எங்களுக்குள் இருந்த ஒரு "பைண்டிங்" எல்லா வகையிலும் போயிடுச்சு." என்றார். "வேற வழியில்லாமல் இப்போ நாங்க "லீகல்லி செப்பரேட்டட்" சுமூகமான முறையில் ஆயிட்டோம்" என்றார். "இப்போ சந்தோஷமா இருக்கீங்களா? " னு கேட்டால், "நிச்சயமாக" என்கிறார். இன்றைய அவர் செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி கேட்பதோ, தெரிந்துகொள்வதோ அநாகரிகம் என்பதால் அதோட நான் நிறுத்திக்கொண்டேன்.

இங்கே நான் சொல்ல வர்றது.. நீங்க கவனித்துப் பார்த்தால் கேஸ் 1, கேஸ்2, ரெண்டும் ஒரே மாதிரி சூழல்தான். ஆனால் ரெண்டுக்கும் அதில் பங்குபெற்றவர்கள் வேறு வேறு மாதிரி ஒரு தீர்வை தேடிக்கிட்டாங்க.

நம்ம ஊரிலே பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்துவிட்டால், "அப்பாட பெண்ணை கரையேற்றியாச்சு" னு சொல்லி மூச்சு விடுவாங்க, பெற்றவர்கள். ஆனால் பொதுவாக கல்யாணம் என்பது கரை அல்ல, ஆழ்கடல்ல தள்ளி விடுவது. வாழ்க்கை முழுவதும் அவள் நீந்தி கரை சேரனும் என்பதே உண்மை மற்றும் எதார்த்தம்.

"தன் மகளை கரை சேர்ந்த்துவிட்டோம்" என்று நினைப்பதெல்லாம் எந்த மாதிரியான அடி முட்டாள்த்தனம் னு புரிந்துகொள்ளாமல் நம்ம ஊர்ல இன்னும் வாழ்ந்துகொண்டிருக்காங்க.

அட் லீஸ்ட் மேலை நாடுகளில், காலப்போக்கில் மாறும் தங்கள் செக்ஸ் தேவைகளைச் சொல்லி, பேசி ஒரு மாதிரியான தீர்வு கண்டுகொள்கிறார்கள்!

6 comments:

Avargal Unmaigal said...

//அட் லீஸ்ட் மேலை நாடுகளில், காலப்போக்கில் மாறும் தங்கள் செக்ஸ் தேவைகளைச் சொல்லி, பேசி ஒரு மாதிரியான தீர்வு கண்டுகொள்கிறார்கள்! //


இந்தியாவில் இப்போது 'கள்ளக்காதல்' என்பதன் மூலம் தீர்வு கண்டுகொள்கிறார்கள்

வருண் said...

நீங்க சொல்றது முற்றிலும் உண்மைதான்.

இந்தியர்கள் பொதுவாக , இதுபோல் "தேவைகளை" பூர்த்தி செய்துகொள்ள "கள்ளத்தனமாகத்தான்" ஏதாவது செய்து சமாளிக்கிறார்கள்.

அதுவும் இந்தக் காலத்தில் "கள்ளக்காதல்" "மெலியவர்களை" "வலியவர்கள்" தன் சுய நலத்திற்காக பயன் படுத்திக்கொள்வது, மற்றும் விபச்சாரம் எல்லாம் மலிந்து கிடப்பது இந்தியாவில்தான். அதை கண்கூடாகப் பார்க்கவும் முடிகிறது!


பல பெரிய மனுஷன்கள் செக்ஸுக்காக பல இடங்களில், பலரிடம், தவறாக, தரம் குறைந்து, மற்றும் கேவலமாக நடந்து கொள்வதை எல்லோரும் "அனுபவி"க்கிறார்கள். அதற்கு காரணமறிந்து ஒரு நல்ல தீர்வு காணும் அளவுக்கு பக்குவம் நம்மிடம் இல்லை! :(

shanmuga vel said...

ஆணும் பெண்ணும் வேற வேற என்பதை நாம் என்றுமே மறுக்க முடியாது. இருவரும் ஒருபோதும் சரி சமம் அல்ல!

சிரிப்புசிங்காரம் said...

ஆம்பளைங்களுக்கு பொம்பளைங்க சளைச்சவங்க இல்லப்பா...ஆம்பளைங்க வெளீப்படையா பேசிடறான்...ஆனா பொம்பளைங்க புருஷன் வெளிய போனவுடனே சின்ன பசங்களா பாத்து... சில ஆண்டுகளுக்கு முன்னால கோயம்பத்தூர்ல பணக்காரஇடத்து பொபளைங்க (எல்லாம் 35, 40 வயசு )காலெஜு படிக்கிற 20 வயசு பசங்களா கொண்டாந்து......வேறேன்ன பசங்களூக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தாளுங்களாம். இந்த கேசு சிரிப்பா சிரிச்சிது..அட நேத்துகூட 37 வயசு பொம்பள டீச்சர் குமுது தன்கிட்ட படிக்கிற 17 வயசு பையன தள்ளிகிட்டு டில்லி போயி பாடம் சொல்லி கொடுத்தாளாம்

வருண் said...

***shanmuga vel said...

ஆணும் பெண்ணும் வேற வேற என்பதை நாம் என்றுமே மறுக்க முடியாது. இருவரும் ஒருபோதும் சரி சமம் அல்ல!***

வாங்க, ஷண்முகவேல்(ள்?) ! :)

வருண் said...

***Blogger சிரிப்புசிங்காரம் said...

ஆம்பளைங்களுக்கு பொம்பளைங்க சளைச்சவங்க இல்லப்பா...ஆம்பளைங்க வெளீப்படையா பேசிடறான்...ஆனா பொம்பளைங்க புருஷன் வெளிய போனவுடனே சின்ன பசங்களா பாத்து... சில ஆண்டுகளுக்கு முன்னால கோயம்பத்தூர்ல பணக்காரஇடத்து பொபளைங்க (எல்லாம் 35, 40 வயசு )காலெஜு படிக்கிற 20 வயசு பசங்களா கொண்டாந்து......வேறேன்ன பசங்களூக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தாளுங்களாம். இந்த கேசு சிரிப்பா சிரிச்சிது..அட நேத்துகூட 37 வயசு பொம்பள டீச்சர் குமுது தன்கிட்ட படிக்கிற 17 வயசு பையன தள்ளிகிட்டு டில்லி போயி பாடம் சொல்லி கொடுத்தாளாம்

27 March 2012 9:05 AM***

அண்ணே சிங்காரம்!!!

காமம், ஆணை மட்டுமல்ல, பெண்ணையும் விடுவதில்லைனு நானும் ஒத்துக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல மிடில் ஏஜ் ல உள்ள பெண்கள் இதுபோல் "காமத் தேவைகளுக்காக" தவறு செய்வதும் நடக்கத்தான் செய்யுது.

நான் பேசியது கேஸ் 1, மற்றும் 2 பற்றி. நீங்க இங்கே கேஸ் 3, கேஸ் 4, கேஸ் 5 னு புதுசா ஆரம்பிச்சு சொல்றீங்க.

இதுக்கெல்லாம் நல்ல தீர்வு கண்டுபிடிக்கனும் என்பதே என் வாதம்.

நல்லவேளை நீங்க சொன்ன அம்மாக்கள் 55-60 வயதை சேர்ந்தவங்களா இல்லை. அதனால உங்க வாதம் இங்கே எதிர்வாதமாக இல்லை. :)))