சரி, உதய நிதிட்ட பணம் இருக்கு, ஏதாவது "இன்கம் டேக்ஸ்" கணக்குக் காட்ட இந்தத் தோல்விப்படம் உதவும்னு நான் நெனைக்கலைனு சொன்னால் அது பச்சைப் பொய்!
போதாக்குறைக்கு, அம்மா சிறுபிள்ளைத்தனமாக, ஓரளவுக்கு தகுதியுள்ள இந்தப் படத்துக்கு கவனமாக வரிவிலக்கும் கொடுக்காமல் விட்டுருச்சுனு வேற சொன்னாங்க. அம்மா ஆட்சியில் "அய்யா பேரன்" படம் வந்து, அது ஓடி, அட போங்கப்பா!
நான் இன்னும் இந்தப் படம் பார்க்கவில்லை! ஆனால் காமெடி நல்லாயிருக்கு, படம் ஹிட்டுனு சொன்னாங்க! இனிமேல்தான் பார்க்கணும். சரி ஓரளவுக்கு நல்லாப்போகும்னு சொன்னதும், ஏதோ பொழச்சுட்டாங்க, போட்ட காசை எடுத்துப்புடுவாங்கனு நெனச்சா..
இன்னைக்கு சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் கலக்சன் பார்த்தால் 15.09 கோடியில் வந்து நிக்கிது!
நண்பன் ஒரு 7.5-8 கோடி கலக்ட் பண்ணுச்சு!
சிவாஜி 12 கோடி போல!
எந்திரனே 16 கோடியோ என்னவோதான் வசூல் செய்தது.
உதய நிதி நடிச்ச ஒரு கல் ஒரு கண்ணாடி, இப்போவே 15 கோடியிலே வந்து நிக்கிது, இன்னும் ஒரு மூனு வாரத்துல 20 கோடிக்குப் போயி, சென்னையில் ஆல்-டைம் #1 பாக்ஸ் ஆஃபிஸ் கலக்சன் இடத்தை பிடிச்சுடும் போல!
இந்தப் படம், வசூல் மாமழையால், கரகாட்டக்காரன், சின்னத்தம்பி போன்ற பட வரிசையில் இடம் பெறுகிறது!
Ranking
based on Chennai Box Office Collections from
May 11th 2012 to May 13th 2012 |
||||||||||||||||
|
||||||||||||||||
|
||||||||||||||||
|
||||||||||||||||
சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்ல எந்திரன் கலக்சனை, கமலால உடைக்க முடியலை, விசையால உடைக்க முடியலை! ஆனால், உதய நிதி ஸ்டாலினுடைய ஒரு கல் ஒரு கண்ணாடி உடைத்துவிட்டது. இதெப்படி இருக்கு?
I am really shocked!!!
எல்லாம் நேரம்தான்!
5 comments:
இது ஒரு மிகப்பெரும் சீட்டிங்!!! Behindwoods தளத்தில் சென்றவார இறுதியில் 7.52 கோடி ஆக இருந்த சென்னை பாக்ஸ் ஆபீஸ் இந்தவாரம் எப்படி 15.09 கோடி ஆக அதிகரித்தது? மூன்று வார இறுதிவரை 7.52 கோடி ஆக இருந்த வசூல் எப்படி வெறும் 7 நாட்களுக்குள் டபிள் மடங்காகும்? கூடவே இந்தவாரம் கலகலப்பும் வெளிவந்துள்ளது!! சரி ஏதாவது டைப்பிங் மிஸ்டேக் இருக்கும்னு விட்டிட்டேன்!! அப்புறம் ஒரு டவுட் வர கடந்தவரா வசூலை போய் பார்த்தால் அங்கே மிகப்பெரும் அதிர்ச்சி!!
போன வாரம் வரையான 7.52 கோடி 12.82 கோடி ஆக மாற்றப்பட்டிருந்தது!! அதற்க்கு முந்தயவாரம் 5.4 இலிருந்து 9.78 வரையும், அதற்க்கு முந்தயவாரம் 4.3 இல் இருந்து 5.9 வரைக்கும் மாற்றப்பட்டிருந்தது!!! இந்த மாற்றங்கள் அனைத்தும் நேற்று மாலை உண்டாக்கப்பட்டவை!!! மங்காத்தாவை தாண்டிவிட்டோம், ஏழாம் அறிவை நெருங்குகிறோம் என உதயநிதி அறிவித்த மறுநாள் நடந்த கூத்துக்கள் இவை!!!
மிகவும் நம்பகரமான தளம், ஒரேயொரு உருப்படியான பாக்ஸ் ஆபீஸ் தளம் என்கின்ற பெருமையை, நம்பிக்கையை Behindwoods நேற்றோடு இழந்துவிட்டது!!! ஒருவேளை இது ஒரு தனி நபர் செய்த வேலையா? இல்லை அந்த தளமே தெரிந்து செய்த தில்லாலங்கடியா? என்பது தெரியல!!! இதுசம்பந்தமாக அவர்களுக்கு mail அனுப்பியோ, அல்லது வேறு வழியிலோ அறியமுடிந்தால் அறிந்து சொல்லுங்க!!! அடுத்தவனை முட்டாளாக்க முனையும் இவர்களை ஏதாவது செய்யணும்!!!
வாங்க எப்பூடி!
நான் இந்த வாரம் 15.09 பார்த்ததும், என்னடா போன வாரம் எம்பூட்டுனு உடனே போன வாரம் என்னனு பார்த்தேன். அது ஏதோ 12.82 கோடினு இருந்துச்சு..(அது மாற்றப்பட்டது எனக்குத் தெரியாது- நீங்க சொன்னதும்தான் தெரியுது)
நீங்க சொல்றது சரிதான்னு நெனைக்கிறேன். Behindwoods is certainly manipulating the data! That is really a CRIME! They cant change the #s whenever they want! Cheap bastards!
என்னய்யா படம் இது ஜீவாட சிவா மனசுல சக்தி.. படம் மாதிரி இருக்கு..உண்மையிலே வசூலாகனும்னா அந்த படம்தான் வசூல்லாகியிருக்கனும்..
இத விட கொஞ்சம் நல்லாத்தானே காதலில் சொதப்புவது எப்பிடி படம் இருக்கு..//
எல்லாம் சுத்தப் பொய்யா...:(
வாங்க சிட்டுக்குருவி!
இதுல இன்னொரு காமெடி என்னனா, இன்னும் இதை ப்ளாக் பஸ்டர்னு சொல்லவில்லை, பிஹைண்ட்வுட்ஸ்! 15 கோடி வசூல் செய்த பிறகும்!
Post a Comment