விஜய், திவ்யா இருவருக்கும் நடக்கப்போறது ஒரு சும்மா கல்யாணம்! அப்படினா? அது ஒரு காதல் கல்யாணமும் இல்லை! பெற்றோர்களால் நிச்சயக்கப் பட்ட கல்யாணமும் இல்லை! ரெண்டு பேரும் அழகு, படிப்பு, வேலை எல்லாவற்றிலுமே ஒருவருக்கு ஒருவர் தகுதியானவராக இருந்தாங்க. அதனால ஒரு வழியா, ஒரு வாழ்க்கைத் துணை வேணுமேனு ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணுறதா முடிவு பண்ணிக்கிட்டாங்க.
கல்யாணத்துக்கு முன்னாலே ஒரு சில விசயங்களை தெளிவாகப் பேசிக்குவோம் னு திவ்யா ஒரு முடிவுக்கு வந்து, இதைப்பற்றிப் பேசுவதெற்கென்றே இன்று தனிமையில் விஜயை சந்தித்தாள்.
"திவ்யா! உனக்கு என்னென்ன சந்தேகமோ, அதையெல்லாம் தெளிவா கேட்டுக்கோ. உன் எதிர்பார்ப்பை தெளிவா சொல்லிடு! நமக்குள்ள பின்னால எந்தவிதமான பிரச்சினையும் வரக்கூடாது!" என்றான் விஜய்.
"சரி, கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி செய்யப்போறோம்?
"என்ன சொல்ற?"
"அது இல்லை.. நீங்களும் கை நெறையா சம்பாரிக்கிறீங்க? நானும் உங்களுக்கு சமமா சம்பாரிக்கிறேன். ரெண்டு பேரும் சேர்ந்து பாங்க் அக்கவுண்ட் வச்சுக்குவோமா? இல்லைனா, தனித் தனியா?"
"உன் அக்கவுண்ட் தனியா வச்சுக்கோ! நான் தனியா வச்சுக்கிறேன். அப்போத்தான் பிரச்சினை வராது."
"அப்போ பில்ஸ், ஹவுஸ் பேமெண்ட், இதெல்லாம்?"
"எல்லாத்தையும் பாதி பாதியா பிரிச்சு ஷேர் பண்ணிக்குவோம்! "
"அப்புறம்.."
"மற்றதெல்லாம் உன் இஷ்டப்படி உன் பணத்தை நீயும், என் பணத்தை, என் இஷ்டப்படி நானும் செலவழிச்சுக்குவோம். சரியா? நம்ம ரெண்டு பேரும் ரூம் மேட் மாதிரி? பொதுவான குடும்ப விசயத்தில் கவனமாக எல்லா செலவுகளையும் சரி சமமா பிரிச்சுக்குவோம்?"
"ரூம் மேட் மாரியா!"
"இல்லை கணவன் - மனைவினு ஒருத்தர் பணத்தை இன்னொருவர் உரிமையோட எடுத்துக்கக் கூடாது. இல்லையா?"
"ஆமா, அப்படிப் பிரித்துவிட்டால்தான் தொல்லை இல்லாமல் இருக்கும்."
"சரி, பிள்ளை எதுவும் பெத்துக்கப் போறோமா? இல்லையா?"
"இதென்ன கேள்வி? ஆமா."
"பொறக்கிற பிள்ளைக்கு ஆகிற செலவில் பாதிப் பாதியா?"
"ஆமா, குழந்தைக்கு ஆகிற மாதச் செலவில் சரியாப் பிரிச்சுக்குவோம்."
"நல்லது. அப்புறம்.. சப்போஸ் உனக்கு ஏதாவது குழந்தை பெற்றுக்க முடியலை. இல்லைனா எனக்கு குழந்தை பெற்றுத்தர முடியலை..செக்ஸுவல் பிரச்சினையை சொல்லல. இன்ஃப்ரெட்டிலிட்டி.."
"இதையெல்லாம் நான் யோசிக்கலையே? நமக்கு ஏன் அப்படி பிரச்சினை எல்லாம் வருது?"
"ஏன் வராது? யாருக்கு வேணா வரலாம். அப்படி ஒரு நிலையில் விவாகரத்து பண்ணிக்குவோமா?"
"என்ன விஜய், கல்யாணம் பத்தி பேசும்போது?"
"இல்லை, ரெண்டு பேரும் நஷ்டப் பட்டுறக்கூடாது இல்லையா? அதான் சொல்றேன். நாளைக்கு ஒருத்தரை ஒருத்தர் குறைசொல்லிக்கிட்டு அசிங்கமா.."
"இதைப் பத்தி அப்புறம் யோசிக்கலாமே?"
"சரி, அப்புறம் இந்த செக்ஸ்?"
"அதுக்கென்ன?"
"இல்ல, ஒரு நாள் உனக்கு மூடே இல்லைனு வச்சுக்கோ. எனக்கு ரொம்ப மூடாயிருக்கு. அன்னைக்கு நீ செய்ற "உதவி"க்கு உனக்கு நான் "பே" பண்ணனுமா?"
" 'பே' பண்ணனுமா? இதெல்லாம் அதிகமா இல்லையா?"
"காசா இல்லை..இல்ல உனக்கு மூடில்லாதபோது எதுக்கு வீணா உன்னை கஷ்டப் படுத்த? நீ எதுக்கு தியாகம் பண்ணனும்? எனக்கு உன்னை அப்யூஸ் பண்றமாதிரி தோனும்..எதுக்கு தியாகம்? இல்லை ஏதாவது கிஃப்ட் வாங்கி வந்து தரவா? "
"தியாகம்லாம் இல்லை.."
"சரி, அன்னைக்கு உன்னை கஷ்டப்படுத்தாமல். நான் ஏதாவது "கால் கேர்ல்" ட்ட போயிக்கவா?"
"எதுக்கு உங்க காசை விரயம் பண்ணுறீங்க?"
"அப்போ யாராவது ஹார்ணியா இருக்க சிங்கிளை கூப்பிட்டுக்கவா? நீயும் அது மாதிரி பண்ணிக்கோ, எனக்கு மூட் இல்லாத போது! சும்மா செக்ஸுக்காக! செக்ஸ்லாம் என்ன பெரிய டீலா?"
"நீங்க சீரிஸாத்தான் சொல்றீங்களா? இல்லைனா?"
"உனக்கு எப்படித் தெரியுது?"
"எனக்குப் புரியலை!"
"நான் கொஞ்சம் உன்ன மாதிரியே கவனமா இருக்கேன். பணவிசயம் மட்டும் இல்லை செக்ஸ்லயும் ஒருவரை ஒருவர் "அப்யூஸ்" பண்ணக்கூடாதுனு நம்புறேன், திவ்யா."
"விஜய்! வேற ஏதாவது பேசுவோமா?"
திவ்யாவைப் பார்த்து புன்னகைத்தான் விஜய்.
"எதுக்கு இந்தப் புன்னகை?"
"நீ வந்தபோது "ஐயோ திவ்யா எவ்ளோ அழகாயிருக்காள்"னு நெனச்சேன்."
"ஏன் இப்போ?"
"உன்னை வருங்கால "கவனமான மனைவியா"ப் பார்க்கும்போது. சத்தியமா அழகெல்லாம் தெரியலை!"
"என்னதான் தெரியுது?"
"உண்மையைச் சொல்லட்டுமா? உன்னைப் பார்த்தால் பயம்மா இருக்கு."
"எனக்கும்தான். உங்க கேள்விகளைக் கேட்டதும் எனக்கும் அப்படித்தான் இருக்கு."
"அருவருப்பா இருந்ததா?"
"அப்படித்தான் இருக்கு "
"இப்படி ஒருவரை ஒருவர் பாத்து பயப்படுறவங்க நல்ல தம்பதிகளா இருக்க முடியாது! பேசாமல் ஃப்ரெண்டா இருந்துருவோமா?"
"அப்படினா?"
"எனக்கென்னவோ இந்தக் கல்யாணத்தில் நம்ம இருவரில் யாராவது ஒருவர் நிச்சயம் நஷ்டப்படப்போறோம்னுதான் தோனுது!"
"அதனால?"
"நீ நஷ்டமடையக்கூடாதுனு பார்க்கிறேன்."
"ரொம்பப் பெரிய மனசுதான்!"
"இல்லை, வடிகட்டின சுயநலம். I don"t want to be blamed for your loss!"
"சரி, இப்போ பேசியதை எல்லாம் மறந்துடுவோம். என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க!"
"என்ன திடீர்னு ஞானோதயம்?"
"இல்லை, இவ்ளோதூரம் பல கோணத்தில் யோசிக்கிறீங்களே. உங்களை கட்டிக்கிட்டா பரவாயில்லைனுதான் தோனுது!"
"தியாகமா?"
"அதெல்லாம் இல்லை!"
"OK, let us get married and fuck each other in every possible way!"
"YES!" என்றாள் திவ்யா!
No comments:
Post a Comment