சுவனப் பிரியனுக்கும் கோவிக்கும் நடக்கிற விவாத யுத்தம் ரெண்டு பேரையும் தவறான கருத்துக்களை பரப்ப செய்கிறது போல் ஆயிப்புடுச்சு.. அதுக்கு உதாரணம்...
I am not getting into gk's title, I am concerned about this particular statement! நான் கோவியின் தலைப்பு பத்தி பேசவில்லை. அவர் சொல்லியிருக்கிற இந்தக் கருத்தில் (கீழே) ஒப்புதல் இல்லை!
####பொருளாதாரத்திற்கு ஆணைச் சார்ந்திருக்கும் அடிமைகளாக பெண்கள் இருக்கும் சமூகத்தில் மணவிலக்கு குறைவாக இருக்கும், ஆனால் கள்ளத் தொடர்புகள் உள்ளிட்ட மற்ற தற்சமூக சீர்கேடுகள் மிகுதியாக இருக்கும். வெளி உலகுக்கு கட்டுப்பட்டவர்களாக காட்டப்படுபவர்கள் கட்டி வைத்து தான் காட்டப்படுகிறார்கள் என்பது நாம் அறியாத ஒன்றா ?####
எனக்கு உண்மையிலேயே புரியலை. மணவிலக்கு குறைவாக இருந்தால் கள்ளத் தொடர்பு அதிகமா இருக்குமா? அப்படி எல்லாம் நாம் சொல்லிவிட முடியாது. I dont think there is any hard and fast rule like that! சுதந்திரம் கெட்ட வழிகளையும் திறந்துவிடத்தான் செய்யுது.
இல்லைனா கள்ளத் தொடர்பு அதிகமா இருக்க இடங்களில்தான் மணவிலக்கும் அதிகம் இருக்கா? Is this not TRUE??? நான் பார்த்த வரைக்கும் மணவிலக்கு அதிகம் உள்ள ஒரு சமூகத்தில் தான் கள்ளத் தொடர்பும் அதிகம் இருக்கு. ஒரு பெண் பணச்சுதந்திரம் அடையும் போது அவங்களுக்கு கெட்ட வழியிலும் தைரியம் வரத்தான் செய்யும் னு கூட விவாதிக்கலாம்.
சுவனப் பிரியன் சொல்றது தப்புனா கோவியின் வாதமும் தப்புதான். கோவியின் வாதம் சரி என்றால் அடக்கி வைக்கப்பட்ட நம்ம பாட்டிகள், அதுக்கு முந்திய ஜெனெரேசன் எல்லாம் ஊர் மேய்ந்தார்கள்னு அவரு சொல்வதாகவும் அர்த்தம் கொள்ளலாம். யாரையோ கேவலப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்வது போல இருக்கு மேலே இவர் வாதம் செய்யும்விதம்.
கோவி ! இன்னைக்கு படிச்ச, லிபெரல் சொசைட்டில மனைவியையே கூட்டிக் கொடுக்கிறான். ஆமா, இங்கே மணவிலக்கு குறைவதற்கு காரணம் "இது கள்ளத் தொடர்பு இல்லை" னு சொல்றீங்க போல !
21 comments:
//யாரையோ கேவலப்படுத்துவதாக எண்ணிக் கொண் டு நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்வது போல இருக்கு மேலே இவர் வாதம் செய்யும் விதம்.//
மிகச்சரியாக சொன்னீர்கள்!!! கோவி கண்ணன் அவர்கள் சுவனப்பிரியன் மீதும் அவர் சாந்துள்ள மதத்தின் மீதும் கொண்டுள்ள வெறுப்பினால் கண்மூடித்தனமாக விமர்சிக்கிறார்.. நீங்கள் கேட்டதையே ஒரு இஸ்லாமிய பதிவர் கேட்டிருந்தால்..அதற்கு இன்னுமொரு விமர்சன பதிவு போட்டிருப்பார்..
//கோவியின் வாதம் சரி என்றால் அடக்கி வைக்கப் பட்ட நம்ம பாட்டிகள், அதுக்கு முந்திய ஜெனெரேசன் எல்லாம் ஊர் மேய்ந்தார்கள்னு அவரு சொல் வதாகவும் அர்த்தம் கொ ள்ளலாம். யாரையோ கேவலப்படுத்துவதாக எண்ணிக் கொண் டு நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்வது போல இருக்கு மேலே இவர் வாதம் செய்யும் விதம்.//
கோவிக் கண்ணனின் பதில் என்ன?
உங்க நில ரொம்ப ரொம்ப பரிதாபம்.
கோவியின் ஆக்கபூர்வமான பதிவை வைத்து அரபு மதவாதிகளை கூட்டம் சேர்த்து பிரபலயமடைய வேண்டிய நிலை. அனுதாபங்கள்.
***thequickfox said...
உங்க நில ரொம்ப ரொம்ப பரிதாபம்.
கோவியின் ஆக்கபூர்வமான பதிவை வைத்து அரபு மதவாதிகளை கூட்டம் சேர்த்து பிரபலயமடைய வேண்டிய நிலை. அனுதாபங்கள்.
28 May 2012 2:30 PM***
You are so pathetic. You think I care about what an anonymous guy like you think about my post? If comment moderation is enabled in my site, you would not see any response from "fox" like you! All you do is anti-islam responses. Nothing else. This id is created by you, just for that!
Why dont you show me adultery is less in countries where divorce rate is more??? You can not show me that.
If you look at India, after opened up call center f**king and casual sex in the name of freedom, the divorce rate has ONLY INCREASED. According to your theory, that should not be the case.
***Rizi said...
கோவி கண்ணன் பதிவில் இட்ட பின்னூட்டம் கீழே அவர் பிரசுரிப்பாரான்னு தெரியல்ல..***
I think you should not get personal on Kovi and mentioning about his family and all. This is just a debate. You can say things without mentioning about his family. I might remove your response as it will be hurtful to him. I am sorry if you find that I am being unfair or anything.
//I think you should not get personal on Kovi and mentioning about his family and all. This is just a debate. You can say things without mentioning about his family. I might remove your response as it will be hurtful to him. I am sorry if you find that I am being unfair or anything.//
அந்த அளவு அறிவு இருந்தால் ஏன் அவர்கள் அபத்தக் களஞ்சியமாக இருக்கப் போகிறார்கள், அவரது பின்னூட்டத்தை நான் குப்பைக் கூடையில் தான் போட்டேன், உங்களுக்கும் இது போன்ற பின்னூட்டம் அங்கு தான் போகும் இல்லையா ?
:)
"மிகச்சரியாக சொன்னீர்கள்!!! கோவி கண்ணன் அவர்கள் சுவனப்பிரியன் மீதும் அவர் சாந்துள்ள மதத்தின் மீதும் கொண்டுள்ள வெறுப்பினால் கண்மூடித்தனமாக விமர்சிக்கிறார்.."
அட! அட!! யோக்கியரு காதலோடு சுவனப்பிரியனையும் அவர் சார்ந்த மதத்தையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கராருப்பா
வருண்,
உங்கள் இடுகை எனது கட்டுரையை தவறாக விளங்கி எழுதப்பட்டுள்ளது, முதலில் நான் என் கட்டுரையின் மையக் கருத்தாக விவாகரத்திற்கு காரணம் கணவனா மனைவியா என்று மையக் கருத்தாக வைக்கவில்லை, ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் மணவிலக்கு பெருகிவர பெண்களில் கனிசமான அளவு படித்து வேலைவாய்ப்புக் கிடைக்கபெறுவதால் நடைபெறுகிறது என்பதை சுவனப்பிரியன் போன்றோர் ஒப்புக் கொண்டாலும் அதை நேரடியாகச் சொல்லாமல் மேல் நாட்டு நாகரீக மோகம் என்கிறார்கள், அவர் குறிப்பிடும் மேல் நாட்டு நாகரீக மோகம் என்பதில் பெண் கல்வியும் உண்டா இல்லையா ?
பாட்டி மார்கள் அடக்கி வைக்கபட்டார்களா இல்லையா என்கிற விவாதத்திற்கு நான் செல்லவில்லை, ஆனால் முன்பு சகஜமாக புளங்கிய சின்னவீட்டுப் பிரச்சனைகள் தற்போது இல்லை, அந்த காலச் சின்ன வீடுகளை முறையற்ற உறவுகள், கள்ளத் தொடர்புகள் என்று ஒப்புக் கொள்கிறீர்களா ? பரத்தையரை நாடுவது பண்டைய தமிழகத்தில் மிகச் சாதாரணமாக நடைபெற்றவை, சிலப்பதிகாரம் என்கிற காவியத்தின் தொடர்ச்சியே பரத்தையர் நாட்டம் என்பதில் துவங்குகிறது, பரத்தையர் என்பவர்கள் பெண்கள் இல்லையா ?
பாட்டிமார்கள் காலத்தில் விதவை மறுமணங்கள் என்று ஒன்று கிடையாது, முழுமையான உடல் சுகம் என்றால் என்னவென்று அறியதவர்களாக பெண்கள் இருந்தனர். அவர்களால் இளம் விதவையான பிறகு தொடர்ந்து அப்படியே சாகும் வரை வாழமுடிந்தது. இன்றைய தேதிக்கு 25 வயது இளம் விதவையை அப்படியே வாழவிட்டால் அன்றைக்கு வாழ்ந்த பாட்டி மார்கள் போல் தான் அவர்கள் வாழவேண்டும் என்று தீர்ப்பு சொல்வீர்களா ? அவர்களுக்கு திருமணம் மறுக்கப்பட்டால் அவர்கள் அன்றைய பாட்டிமார்கள் போல் வாழ்வது தான் பெண்ணிற்கு அழகு என்று இலக்கணம் எழுதுவீர்களா ?
இன்றைக்கு வெளிப்படையாக கணவன் ஆண்மை அற்றவன் என்றால் அதைக் காரணம் காட்டி மணவாழ்கையை முறித்துக் கொண்டு தனித்து வாழ அல்லது புதிய வாழ்க்கை அமைத்துக் கொள்ள பெண்ணால் முடியும், ஆனால் ஆண்மையற்ற, சம்பாத்தியம் அற்ற, சோம்பேறி கணவனை கல்லானாலும் கணவன் என்று தான் பெண்கள் வாழவேண்டும் என்று இன்றைய படித்த சமூகத்து பெண்களையும் பெற்றோர் அல்லது சமூகம் நிர்பந்தம் செய்து அடக்க முயன்றால் கள்ளத் தொடர்புகளுக்கு ஏன் வழிவகுக்காது.
பிரம்மச்சாரியம் பற்றி தூய்மை அது இது என்று சிலாகித்து எழுதப்படும் பதிவுகளில் நான் பல இடங்களில் முந்தைய விதவைத் தாய்களைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன், அவர்களை ஒப்பிட எந்த ஒரு இன்றைய சாமியாரும் முழுமையான பிரம்மச்சாரிகள் இல்லை என்றே குறிப்பிட்டு இருக்கிறேன்.
இன்றைக்கு கல்வியை மறுத்தாலும் பெண்கள் தொலைகாட்சிகள் வழியாக ஓரளவு சமூக அறிவை பெறத்தான் செய்கிறார்கள், அவர்களை ஒரு ஆண் ஆளுமையால் அடக்கி வைத்து அவளது நலனையும் விருப்பத்தையும் மறுத்தால் அவளுக்கு வாய்ப்பு ஏற்படும் போது அவள் விரும்பிய வழிகளில் தான் செல்வாள். நீங்களும் சுவனப்பிரியனும் தான் ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்.
//கோவிக் கண்ணனின் பதில் என்ன?//
ஏற்கனவே பல பதிவுகளில் நான் கொடுத்த பதில்களில் நல்லா தெளிஞ்சிட்டிங்க, இப்ப இது ஒண்ணு தான் பாக்கி. நாங்களும் முடிந்தவரை ஊதுற சங்கை ஊதித்தான் வைக்கிறோம்
கேட்காத காது கேட்காது என்று தெரிந்தும்
:)
சத்தம்போடாமலே சிந்திக்கவும் பேருல http://www.sinthikkavum.net நடத்துற கூட்டம்ங்க இவனுங்க. தமிழ்மணம் முகப்புல பாருங்க
http://www.sinthikkavum.net/search/label/TNTJ
http://www.sinthikkavum.net/search/label/TMMK
சத்தம்போடாம ஹிந்துதுவா பரதேசிங்கள திட்டிருவானுங்க TNTJ, TMMK போல fundamentalist rogues ஐ வுட்ருவானுங்க. இதுல வேறே பொய்பேருல
kovi: I dont have tamil fonts for now. I will get back tomorrow to respond you! :)
இத கூட அழிச்சுடுங்க வருண். உங்களுக்காச்சும் ஒரு மாடரேட்டரோட சங்கடம் புரியுமுன்னு நெனைக்கிறேன். இந்த மெண்டல்சுக்குப் புரியவேபுரியாது. என்னோட இறையை மட்டும் வுடு. மத்ததெல்லாம் இரையாக்குன்னு நிக்குற கூட்டம்
@Varun..
Sorry!!!
கோவி கண்ணன்..
எனது முதல் பின்னூட்டம் அநாகரீகமாக தோன்றியிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.. எனது கருத்துக்கு ஒரு உருவகமாகத்தான் உங்க குடும்பத்தை இழுக்க வேண்டி ஏற்பட்டது..
உங்கள் குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக மட்டும்தான் எனது பின்னூட்டம்.. மற்றபடி சுவனப்பிரியனுக்கு ஆதரவாக கூஜா தூக்குவதாக நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல! சுவனப்பிரியன் கருத்துக்களிலும் பல விமர்சனம் எனக்குண்டு!!
பொதுவில் ஒரு கருத்தை வைக்கும் போது. அதற்கு எதிரான விமர்சனங்களும் வரும் அப்படி வந்தால் அவற்றை ஏற்றுக்கொண்டு பதில் அளிக்கும் தைரியம் வேண்டும்.. உங்களுக்கு சார்பானவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு, பதில் சொல்ல முடியாதவற்றை குப்பையில் போடுவது உங்கள் கோழைத்தனத்தைதான் காட்டுகிறது..
உங்களுக்கு சார்பாக, ஆனால் மற்றவரை கீழ்த்தரமாக விமர்சித்து வரும் பல பின்னூட்டங்களை நீங்கள் பிரசுரித்திருக்கிறீர்கள்.. அப்போதெல்லாம் நீங்கள் எந்த நாகரீக அலகை பயன்படுத்தினீர்களோ தெரியவில்லை..
நான் பின்னூட்டமாக இட்டதையே ஒரு பதிவாக்கி "ஆணைச்சார்ந்திருக்கும் பெண்கள் கள்ளத்தொடர்புடையவர்கள்-கோவி கண்ணன் வாதம்" என்று சூடான தலைப்பிற்று தமிழ்மணத்தில் சூடான பகுதிக்கு வந்திருக்க முடியும்.. அது உங்கள் வேலை!! எனதல்ல!!!
மற்றபடி எனது அறிவெல்லாம் உங்களிடம் நிரூபித்துக்காட்டி தரச்சான்றிதல் பெறும் தேவை எனக்கில்லை..
***இன்றைக்கு வெளிப்படையாக கணவன் ஆண்மை அற்றவன் என்றால் அதைக் காரணம் காட்டி மணவாழ்கையை முறித்துக் கொண்டு தனித்து வாழ அல்லது புதிய வாழ்க்கை அமைத்துக் கொள்ள பெண்ணால் முடியும்,***
அந்தக் காலத்திலேயே தீர்ந்துகெட்டுறதெல்லாம் இருந்துச்சுங்க. பிரசினையை தைரியமாக அனுகினால் அன்றும் தீர்வு இருந்துச்சு.
**ஆனால் ஆண்மையற்ற, சம்பாத்தியம் அற்ற, சோம்பேறி கணவனை கல்லானாலும் கணவன் என்று தான் பெண்கள் வாழவேண்டும் என்று இன்றைய படித்த சமூகத்து பெண்களையும் பெற்றோர் அல்லது சமூகம் நிர்பந்தம் செய்து அடக்க முயன்றால் கள்ளத் தொடர்புகளுக்கு ஏன் வழிவகுக்காது.***
இன்னைக்கும் 10 வருட திருமணவாழ்வுக்குப் பிறகு வாழும் அமெரிக்க இந்திய முற்போக்கு தம்பதிகள் வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும்மில்லாமல் வாழ்றாங்க - விவாகரத்து செய்ய வேண்டியதையும் செய்யாமல். என்ன கல் புல்லு எல்லாம் இல்லை. ஆனாலும் அதே எழவுதான்.
***பாட்டிமார்கள் காலத்தில் விதவை மறுமணங்கள் என்று ஒன்று கிடையாது,***
இந்துக்களில்தான் விதவை மறுமணம் இல்லை .
***அந்த காலச் சின்ன வீடுகளை முறையற்ற உறவுகள், கள்ளத் தொடர்புகள் என்று ஒப்புக் கொள்கிறீர்களா ?***
ஆமா சின்னவீடு கொறஞ்சி இருக்கு. நண்பர் கிரி ஒரு பதிவில் சொல்றார் க்ரூப் செக்ஸ்லாம் நடக்கத்தான் செய்யுதுனு. ஒண்ணு ஒழிஞ்சா இன்னொன்னு வருது! இதுலயும் ஆம்பளைங்கதான் ஆளுமை!!!
வருண், எங்க தாத்தா காலம், எங்கப்பா காலம், அடுத்து இப்போ நான் வாழும் காலம் இதைப் பார்த்தால் எல்லா கால கட்டத்திலும் கள்ளத் தனமான உறவு இருந்தே வந்திருக்கிறது. தாத்தா காலத்தில் ரொம்ப குறைவு, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இப்போ வாயில் சொல்லவே கூச்சப் படும் அளவிற்க்குச் சென்று விட்டது. தியாகராஜ பாகவதரைப் பார்த்து ஒரு பெண் Flying Kiss கொடுத்தது பெரிய கலாச்சார சீரழிவு என்று பரபப்பாகப் பேசப்பட்டது. அந்த சமயத்தில் தன் கணவனுடன் கூட ஒரு பெண் மற்றவர்கள் முன்னிலையில் பேச மாட்டாள். தற்போது ஒருத்தனுக்கு ஒருத்தி என்று [நிஜமாகவே] வாழும் ஒரு ஆணையும் பெண்ணையும் பார்ப்பதே அரிதாகி வருகிறது. இந்த நிலைக்கு போனதற்கு திரைப் படங்களும், வெளிநாட்டு தொலைக் காட்சிகளும் முக்கிய காரணிகள் என்று தான் சொல்ல வேண்டும்.
என்னதான் கள்ளத் தொடர்பு இருந்தாலும் திருமணம் என்று ஒன்று கட்டாயம் நடக்கும், அவள் அப்படி இப்படி என்று இருந்தாலும் கணவனுடன் தான் வாழ்ந்து வந்திருக்கிறாள். தற்போது இந்த ஐ.டி. வேலை வந்தாலும் வந்தது, திருமணம் செய்யாமலேயே வாழ ஆரம்பித்துள்ளார்கள், அதுவும் நாங்கள் சென்ற வாடகை வீட்டில் அதற்க்கு முன் இருந்தவர்கள் அப்படி இருந்திருக்கிறார்கள். வீட்டுக் காரனுக்கு கொஞ்சம் பணத்தை சேர்த்து கொடுத்தால் போதும். பெண் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் மணவிலக்கு அதிகரித்திருக்கிறது அல்லது, மணவிலக்கு கோருவோர்களைப் பார்த்தால் அதில் சம்பாதிக்கும் பெண்கள் அதிகமாக இருப்பார்கள், அதிக பட்சமாக ஐ.டி. யில் இருவரும் பணிபுரிபவர்களாகவே இருப்பார்கள். இன்னொன்று, இன்றைய தம்பதிகள் சகிப்புத் தன்மையை இழந்துவிட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்கிறார்கள், அதிலும் பெண் பொருளாதார ரீதியாக ஆணைச் சாராத கேஸ்களில் இது அதிகம் நடக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
***Jayadev Das said...
வருண், எங்க தாத்தா காலம், எங்கப்பா காலம், அடுத்து இப்போ நான் வாழும் காலம் இதைப் பார்த்தால் எல்லா கால கட்டத்திலும் கள்ளத் தனமான உறவு இருந்தே வந்திருக்கிறது. தாத்தா காலத்தில் ரொம்ப குறைவு, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இப்போ வாயில் சொல்லவே கூச்சப் படும் அளவிற்க்குச் சென்று விட்டது. ***
ஜெயவேல்! இதுதான் நடந்துகொண்டிருக்கும் உண்மை நிலவரம்! நாங்க பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து, கள்ள உறவை குறைந்துவிட்டோம் என்பதுபோல் சொல்வதெல்லாம் சும்மா விவாதத்துல சொல்லிக்கிடலாம். அதில் கடுகளவில்கூட உண்மை கெடையாது!
இன்றைய பெண்கள் சுதந்திரம் மற்றும் அதன் விளைவுகள் இருக்கே.. அது மாதிரி ஒரு காமெடியான சமாச்சாரம் வேற எதுவும் கெடையாது!
என்ன, அந்தக்காலத்தில் ஆண்கள் மட்டும் ஊர் மேய்ந்தார்கள், அதனால பெண்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும் தாய் என்கிற மரியாதையாவது பெண்களுக்கு இருந்தது, கெடச்சது.
இன்னைக்கு இந்த சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு ஆண்கள்போல் சுதந்திரம்னு சொல்லிக்கிட்டு இவங்களும் சேர்ந்து ஊர்மேய ஆரம்பிச்சதுல இருந்து பெண்களுக்கும், இன்றைய தாய்களுக்கும்கூட முன்னால இருந்த மரியாதை இல்லாமப் போச்சு!
அன்னைக்கு ஊர்மேஞ்ச ஆம்பளைங்கள பெண்கள் ஒண்ணும் செய்ய முடியலை, அழுதழுது கெடப்பதைத்தவிர. இன்னைக்கு அதே நிலையில் தள்ளப்பட்ட ஆண்களாலையும் பெண்களை ஒண்ணும் செய்யமுடியலை. ஆனால் என்ன அன்னைக்கு தரங்கெட்ட ஆணையோ, பொதுவாக ஆணையோ மனதளவில் மதிக்கவில்லை பெண். இன்னைக்கு அதேபோல் தர்மிழந்து நிற்கும் பெண்களை இன்றைய ஆண்கள் மதிப்பதில்லை. சும்மா ஒப்புக்கு பெண் சுதந்திரம் அடைந்ததை இவங்க எல்லாம் ரசிக்கிற மாதிரி வேடம் போட்டுக்கிட்டு திரிகிறார்கள்!
கடைசில கூட்டிக் கழிச்சுப் பார்த்தால், சுதந்திரம் என்கிற பெயரில் பெண்களும் ஊர்மேய ஆரம்பிச்சதும், மனநலமருத்துவர்களுக்குதான் பொழைப்பு சமீபத்தில் நல்லா ஓடுது. ஆணால் பெண்ணும், பெண்ணால் ஆணும் நெறையப்பேர் மொத்தத்துல பித்துப் பிடிச்சு அலைவதால்! இதுதான் இன்றைய சுதந்திர இந்தியா. இப்படி இருக்கும்போது "மற்றவர்களைப் பார்த்து" கேலி செய்றதெல்லாம் அர்த்தமற்றது என்பது ஒவ்வொருவருடைய மனசாட்சிக்கும் தெரியும்!
Post a Comment