முட்டாள் மானே!
சிங்கம் உன்னை கடித்துத் திண்பது
உன்னை தண்டிக்க அல்ல
இந்தப் பாவிக் கடவுள் அதற்கு கொடுத்த
பசித் துன்பத்தால்
முட்டாள் மீனே!
நீ தூங்கும்போதும் நீந்துவது
உனக்கு கெடச்ச பெரிய கிஃப்ட் அல்ல
உன்னால மல்லாக்கப் படுத்துத்
தூங்க இயலாது என்பதால்
முட்டாள் பதிவரே!
நீர் பதிவெழுதுவது
உலகைத் திருத்த அல்ல
உன் அரைகுறைத் தமிழை
எழுதி எழுதி ஓரளவுக்கு செப்பனிட
முட்டாள் வருணே!
நீ இஷ்டத்துக்கு உளறும்
இதெல்லாம கவிதையும் அல்ல
கவிஞர்கள் உன்னை கொலைசெய்யத் தூண்டும்
உன் தற்கொலை முயற்சி!
10 comments:
கலக்கல் கவிதை! ரசித்தேன்.
மொக்கையாக இருந்தாலும் இதுவும் கவிதைதான்.
***சுவனப் பிரியன் said...
கலக்கல் கவிதை! ரசித்தேன்.
24 May 2012 7:39 AM***
உங்களுக்கு பெரிய மனசுங்க, சுவனப் பிரியன் :) நன்றி
***விச்சு said...
மொக்கையாக இருந்தாலும் இதுவும் கவிதைதான்.
24 May 2012 8:38 AM***
வாங்க விச்சு. கவிதை எழுத இலக்கணம் எல்லாம் எனக்குத் தெரியாதுங்க. சும்மா மடக்கி மடக்கி பத்தி பத்தியாய்.. :)
//..............
இந்தக் கடவுள் அதற்குக் கொடுத்த
பசித் துன்பத்தால்//
இதுவா மொக்கைக் கவிதை?
’உயிர்கள் புரியும் தீமைகளுக்கு அவை காரணமல்ல; அவற்றைப் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுளே காரணம்’என்ற‘உண்மையை’அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் அற்புதக் கவிதைங்க!
பாராட்டுகள் வருண்.
சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தது உங்கள் மொக்கை .., ச்சே கவிதை .. :)
முட்டாள் பதிவரே!
நீர் பதிவெழுதுவது
உலகைத் திருத்த அல்ல
உன் அரைகுறைத் தமிழை
எழுதி எழுதி ஓரளவுக்கு செப்பனிட
அஹா ஆஹா கவித கவித .
**முனைவர் பரமசிவம் said...
//..............
இந்தக் கடவுள் அதற்குக் கொடுத்த
பசித் துன்பத்தால்//
இதுவா மொக்கைக் கவிதை?
’உயிர்கள் புரியும் தீமைகளுக்கு அவை காரணமல்ல; அவற்றைப் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுளே காரணம்’என்ற‘உண்மையை’அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் அற்புதக் கவிதைங்க!
பாராட்டுகள் வருண்.
24 May 2012 10:06 AM**
இதை இப்படி பாராட்டவும் செய்யலாம்னு செய்து நீங்க மிக உயர்ந்த இடத்துக்குப் போயிட்டிங்க! நன்றி :)
***வரலாற்று சுவடுகள் said...
சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தது உங்கள் மொக்கை .., ச்சே கவிதை .. :)**
நானே இதை மொக்கை, கவிதைனு வகைப்படுத்திவிட்டேன். அதான் உங்களுக்கு இந்தத் தடுமாற்றம். நன்றிங்க, வரலாற்று சுவடுகள் :)
**சசிகலா said...
முட்டாள் பதிவரே!
நீர் பதிவெழுதுவது
உலகைத் திருத்த அல்ல
உன் அரைகுறைத் தமிழை
எழுதி எழுதி ஓரளவுக்கு செப்பனிட
அஹா ஆஹா கவித கவித .***
வாங்க வாங்க சசிகலா! இதை "கவித"னு அழகா வகைப்படுத்தி, இதை கவிதையில்லைனு சொல்லாமல் சொல்லீட்டிங்க!எளிதாக இந்த வரிகளை எடுத்துக் கொண்டது உங்கள் உயர்தரத்தை காட்டுது. நன்றி :)
Post a Comment