Friday, June 15, 2012

சோவின் மரபு ஆதரிப்பை ரசிக்காத ஜெயமோஹன்!

நீங்க எல்லாம் நெனைக்கிறதுபோல ரெண்டு இந்துத்தவாக்கள் ஒரேமாதிரி சிந்திக்கனும் என்பதில்லை! அதுவும் ரெண்டுபேரும் பெரிய மேதைகளாக இருந்தால் சாண்ஸே இல்லை! வாசகர் ஒருவர், மேதாவி "சோ" பற்றி விமர்சிக்கச் சொல்லி திருவாளர் ஜெயமோஹனிடம் கேட்டுயிருக்காரு.

பொதுவாக இதுபோல் தளங்களில் பதில் சொல்ல விரும்பிய, பதில் தெரிந்த கேள்விகளை மட்டும்தான் பதிலுடன் நாம் பார்க்க இயலும். பதில் தெரியலைனா இ-மெயில்ல "ஆனஸ்ட்டா" சொல்லிடுவாங்களானு கேக்காதீங்க! எனக்குத் தெரியலை! கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது தர்மசங்கடமாக இருந்தால், குப்பை கூடைக்குப் போய்விடும்னு நம்புறேன்!

எனிவே, "சோ" பற்றி கருத்துச் சொல்லச்சொல்லிக் கேட்ட இந்தக் கேள்வியை தூக்கி குப்பையில் போடாமல், இதற்கு தைரியமாக பதில் சொல்லியிருக்கிறார், ஜெயமோஹன்!

அவரு சுத்தி வளைச்சு சொன்ன பதிலை வள வளனு நான் ஜவ்வா இழுக்க விரும்பவில்லை! அந்த பதிலில் உள்ள எனக்குத் தேவையான பகுதியை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.

சோ மகாபாரதம் போன்றவற்றை முன்னோர் அளித்த பொக்கிஷம் என்ற நோக்கிலேயே அணுகுகிறார். கிட்டத்தட்ட இஸ்லாமியர் குரானை அணுகும் அதே பார்வை.
நான் மதப்ப்பேரிலக்கியங்களை இன்றைய வாழ்க்கையில் வைத்து அணுகுவதை, இன்றைய சிந்தனைகளில் வைத்து ஆராய்வதையே சரியான வழி என நினைப்பவன். இந்த வேறுபாடு எங்கள் பார்வைகளுக்கு நடுவே உண்டு.

சோவை நான் மதிப்பேன். அவரது நேர்மை மீது எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் அவரை எவ்வகையிலும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. எப்படி நான் நம்முடைய முற்போக்கினரின் மூர்க்கமான மரபு நிராகரிப்பை எதிர்க்கிறேனோ அதேபோலவே சோவின் கண்மூடித்தனமான மரபு ஆதரிப்பையும் எதிர்க்கிறேன். என்னுடையது நடுவே உள்ள பாதை.

பதில் சொன்னதுக்கு பாராட்டுக்கள், திரு ஜெயமோஹன்!

எனக்கென்னவோ சோ வுடைய வயதுக்கு மட்டும்தான் இவரு மரியாதை கொடுப்பதாகத் தெரிகிறது.

ஆமா, இந்தக் காமெடியன் "சோ" வுடைய மரபு ஆதரிப்புனா என்னப்பா? அந்தக்காலத்தில் எழுதிய குப்பைகளையெல்லாம் போற்றிப் புகழ்ந்து "பார்ப்பாந்தான் உயர்ந்தவன்னு" பச்சையாச் சொல்லாமல், சுத்தி வளைச்சுச் சொல்றதா இருக்கும். வேறெதுக்கு மஹாபாரத்தை எல்லாம் பொக்கிஷம்னு சொல்றாரு இந்தாளு?

தமிழ்நாட்டில் என்னவோ கடந்த ஒரு வருடமா பொற்காலம் நடக்கிறமாரி எதைப்பத்தியுமே விமர்சிக்காம மூடிக்கிட்டு இருக்கான். இவந்தான் உலகமஹா ஜேர்னலிஸ்ட்டாம்! இந்தச் சோ மாரிப் பார்ப்பானுக பேசுற நியாயம் இருக்கே.. அதெல்லாம் பகவானுக்கே புரியாதுப்பா!

2 comments:

Robin said...

ஜெயமோகன் சோவைவிட தந்திரசாலி!

Jayadev Das said...

Why so much importance to this வெங்காய மோகன் ?