Friday, June 1, 2012

சத்யமே என்னவோ அமீர்கான் ஜீ!

உங்களுக்கெல்லாம் அது கேக்காது! வருண்! நீ என்னடா பெரிய புடுங்கி மாதிரி ஆங்கிலத்திலேயே எழுதிக்கிழிக்கிற? தமிழ்மணத்தில் வேற உன் பதிவை திரட்டச் சொல்லுற? னு என்னை நானே திட்டிக்கிறது வழக்கம்! ஆனால் நான் பாசைத்தமிழன்னு எனக்கே தோனுவது ஒரு சில வடமொழி வார்த்தைகளை எரிச்சலுடன், உச்சரிக்க முயற்சியே எடுக்காத சோம்பேறித்தனத்தின் போதும், இந்திப் படம்னா, நல்ல தரமான படத்தையும் புறக்கணிப்பது போன்ற சின்னப்புத்தி என்னிடம் இருப்பதால்தான். இவைகள்தான் என் தமிழ்ப்பற்றுக்கு அடையாளம்னு சொல்லலாம்.

இந்த அமீர்கான் நடத்துற சத்யமே என்ன எழவோ ஒளிபரப்பு நிகழ்ச்சி பத்திச் சொல்லனும்னா, தலைப்புப் பேரை சொல்லக்கூட எனக்குப் பிடிக்கலை. அதென்ன சுத்தமான அர்த்தம் தெரியாத வடமொழி வார்த்தை! அது வடமொழி என்பதால் அதுக்கு  என்ன அர்த்தம்னு தெரிந்துகொள்ளக்கூட  ஆசையில்லை! ஆமா, தமிழ்ல தலைப்பை மொழிபெயர்த்து ஒளிபரப்பினால்  என்ன்? ங்கிற வீம்புதான் வரும் எனக்கு. ஆமா எனக்கு அந்தளவுக்கு வடமொழியை ஏற்றுக்கொள்ள திறந்த மனது கெடையாதுனுகூட சொல்லலாம்.

இதுவரை நாலுமுக்கியப் பிரச்சினையை இந்த நிகழ்ச்சியில் உகலகறியப் பேசித் தீர்த்து இருக்காங்க!

List of Episodes

Episode # Title Topic Song Original Air Date
01 Daughters are precious Female foeticide in India "O Ri Chiraiya" 6 May 2012
02 Break the Silence Child sexual abuse "Haule Haule" 13 May 2012
03 Marriage or Marketplace Dowry system in India "Rupaiya" 20 May 2012
04 Every Life is Precious Medical malpractice "Naav" 27 May 2012


இவைகளில்  எந்த அத்தியாயத்தையும்  சோடை சொல்ல முடியாது!

* இந்த நிகழ்ச்சி  வியாபார நோக்கில் உருவாக்கப்பட்டதா?

ஆமாம்னு வச்சுக்குவோம். அதனால என்ன? சினிமா, டி வி என்றாலே வியாபாரம்தான்! அதனால வியாபார நோக்கில் எதுவும் ஒண்ணும் தப்பில்லை! போர்னோக்ராஃபியை விக்காதவரைக்கும்!

ஆமா இந்த போர்ன் சைட் வச்சு நடத்துற மாமாக்கள் எல்லாம் விலைமாது, கூட்டிக்கொடுக்கிறவனைவிட கேவலமான ஜந்துக்கள்னு உங்களுக்குத் தெரியும் இல்லை?


* இந்த நிகழ்ச்சியால்  என்ன பெரிய பயன்?

வரதட்சணை வாங்குவதை சரி என்று சொல்லாத, சிசுக்கொலையெல்லாம் மிகப்பெரிய தவறு என்று நம்பும், குழந்தைகளை பாலியல் வன்புணர்வு கொள்றவனையெல்லாம் தூக்கில் போடனும்னு நினைக்கிற நம்மளமாதிரி எது தப்பு எது சரினு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்களுக்கு இந்த நிகழ்ச்சியால எந்த நன்மையும் இல்லைனு கூட சொல்லலாம்.

ஆனால்.. இது மிகப்பெரிய உலகம்! இதுபோல் awareness ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும், அடிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களுக்கும் நிச்சயம் தேவைதான்! எனக்கு இந்த நிகழ்ச்சித் தலைப்பை சொல்லப் பிடிக்கலைங்கிறது வேற விசயம். ஒரு பெரிய நோக்கில் நம் விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்து இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது  இதில் எடுத்துப் பேசப்படும் விசயம் நமது நாட்டுக்கும், மக்களுக்கும்  மிகவும் அவசியமான நல்ல விசயம்னு தான் சொல்லனும்.

* அமீர்கான், நிச்சயமாக இந்த நிகழ்ச்சியில் மின்னுகிறார். ஏற்கனவே அவருக்கு ரொம்ப நல்ல பெயர்னு கேள்விப்பட்டு இருக்கேன். அது  இப்போ பலமடங்கு உயர்ந்துள்ளதுனுதான் சொல்லனும்.

* மேலும் விஜய் டிவியை இந்த நிகழ்ச்சி இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வதுபோலத்தான் இருக்கு. ஏற்கனவே * நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, * நீயா நானா, * அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் தரமாகவும் நல்லாவும் போயிக்கிட்டு இருக்கு.  இந்த நிகழ்ச்சியும் ஆரிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களான ஸ்டார் விஜய் டி விக்கு தமிழ் மக்களிடம் பேராதரவை பெற்றுத் தருதுனுதான் சொல்லனும். மக்களின் அறியாமையைப் போக்கி, அவர்களுக்கு நல்லறிவையும், தைரியத்தையும் கொடுக்கும் "பேரைக்கூட சொல்ல விரும்பாத"  இந்த "சத்யமே என்னவோ"  நிகழ்ச்சி நிச்சயம் ஒரு நல்ல நிகழ்ச்சி, நமக்குத் தேவையான ஒண்ணுதான் என்பது என் தாழ்மையான கருத்து!

2 comments:

krish said...

மிக நன்றாக சொன்னீர்கள்.

சுவனப் பிரியன் said...

நானும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று இது.