Monday, June 25, 2012

சத்யமே வெல்லும்? பூச்சிக்கொல்லி மருந்து!

பூச்சிக்கொல்லி மருந்து பற்றிய விவாதம் வேடிக்கையாக இருந்தது.  

* 1) ஒரு பக்கம் பூச்சுக்கொல்லி தயாரிச்சு, அந்த  மருந்து விக்கிறவன், அதை வச்சு பல நூறுகோடிகள் சம்பாரிக்கிறவன், அகங்காரத்துடன் சொல்றான் பூச்சுக்கொல்லி மருந்து இல்லாமல் இன்னைக்கு யாரும் பொழைப்பை ஓட்டமுடியாது!.   மேலும் பூச்சுக்கொல்லி மருந்தால் கேன்சர் வருது, அது வருது, இது வருதுனு சொல்வதெல்லாம் சுத்தமான பொய், அதெல்லாம் ஏற்புடையதல்ல, னு அடித்து சொல்லுகிறான்.

* 2) இன்னொருபக்கம் அறிவியல் நிபுணர்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தால் பாதிக்கப் பட்டவங்களை பார்த்த, ட்ரீட் பண்ணிய  மருத்துவர் கூட்டம் பூச்சுக்கொல்லி மருந்துதான் எல்லாத்துக்கும் காரணம் என்கிறார்கள். 

* 3) இன்னும் சில உயர்ந்த சிந்தனை உள்ளவங்க,  உரம், பூச்சிக்கொல்லி மருந்து எல்லாம் பயன்படுத்தாமல் சுத்தமான "ஆர்கானிக் விவசாயம்"தான் சிறந்த வழி, அதை செய்ல்படுத்தனும், அதை செயல் படுத்துவது சாத்தியமேனு சொன்னாங்க.

 * பெஸ்டிசைட் கம்பெணியிலிருந்து வந்த ஆள், இதுபோல் பல பிரச்சினைகளை குற்றச்சாட்டுக்களைப் பார்த்தவன், படித்தவன் என்பதால், மனசாட்சியை எல்லாம் அடகு வைத்துவிட்டு, இதுபோல் கேள்விகள் வந்தால் எப்படி பதில் சொல்றதுனு ஏற்கனவே பதில் தயாரிச்சுட்டு வந்ததுபோல் இருந்தது. இப்படி பதில்கள் சொன்னால்தான் தன் பிழைப்பு ஓடும், தன் வேலை தாக்குப் பிடிக்குமென்று அதற்கேற்றார்போல பதில் சொல்லி, சில உண்மைகளையும் மறைத்து தப்பிச்சுட்டான்.

எண்டோசல்ஃபான்  மற்றும் DDT பற்றி விவாதிச்சாங்க. 

பொதுவாக எதையும் கொல்லனும்னா க்ளோரின் (Cl, Cl2) தனிமம் கலந்த வேதிப்பொருள்தான் பயன்படுத்தப் படுது.  நம்ம தண்ணீர்லகூட க்ளோரின் Cl2 கலந்துதான் பாக்ரீரியாவை எல்லாம் கொல்லுறாங்க. அதேபோல் நீச்சல் குளங்களிலும் ப்ளீச்சிங் பவுடர் (க்ளோரின் கலந்த கலவை) போன்றவை பயன்படுத்துறாங்க. 

அதேபோல் இந்த க்ளோரின் தனிமத்தை கலந்த ஒரு காம்பவுண்ட்தான் எண்டோ சல்ஃபான் மற்றும் டிடி ட்டியும். அவைகளுடைய "உருவத்தை" இங்கே தர்ரேன்!


DDT
Skeletal formula
Endosulfan
உண்மை என்னனா, இதுபோல க்ளோரினேட்டெட் பெஸ்டிசைட்ஸ் அது நம்முடைய சுற்றப்புறத்துக்கு நல்லது இல்லை என்பதுதான் மேலை நாடுகளில் பெரிய பிரச்சினை. எண்டோசல்ஃபான் பயன்படுத்துவதை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி சுத்தமாக அமெரிக்காவில் நிறுத்தப்போறாங்க. ஆனால் அதன் காரணம் வந்து அது என்விராண்மெண்ட்க்கு நல்லதில்லை என்பதே. Poster in the front foyer of the Geneva meeting hall after the vote to ban endosulfan (Photo courtesy ENB)

Deadly Pesticide Endosulfan Finally Banned in United States

Endocrine-disrupting Chemical Is Highly Toxic to Wildlife, Threatens Endangered Species and Is Dangerous to Human Health

  The EPA is cancelling the registration of endosulfan, reversing a 2002 Bush administration decision that allowed continued use with some restrictions. Most currently approved endosulfan crop uses will end in two years, and all uses will be phased out by 2016. Endosulfan was first registered for use in the 1950s, and there are currently about 80 endosulfan products. The EPA estimates that 1.3 million pounds of endosulfan were used annually from 1987 to 1997. In California, annual use of endosulfan declined from 230,000 pounds in 1995 to 60,000 pounds in 2008.

* உரம், பூச்சுக்கொல்லி மருந்தை வச்சு விவசாயம் செய்து பழக்கப் பட்டவர்கள், திடீர்னு பசுமைப் புரட்சிக்கு மாறப்போறதில்லை!ஆனால் சிறியளவில் நம்ம வீட்டில் தோட்டம் போடும் பழக்கம் உள்ளவங்க, நிச்சயமாக ஆர்கானிக் விவசாயத்தை செயல்படுத்தலாம். யு எஸ்ல ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிக்க, காம்போஸ்ட் எல்லாம் தயாரிச்சு இனாமாகத் தர்ராங்க! எனக்கென்னவோ ஆர்கானிக் விவசாயம் பெரியளவில் செய்ய முடியுமானு தெரியவில்லை. முடியாதுனு நெனைக்கிறேன்.


* மற்றபடி, பலவிதமான குறைபாடுகளை இந்த பெஸ்டிசைட்ஸ் உண்டாக்குது, ஒரு ஊரே எண்டோ சல்ஃபானால பாதிக்கப்பட்டு இருக்கு என்கிற வாதத்தில்  உண்மை இருந்தாலும், என்னுடைய பார்வையில் அதை பயன்படுத்தியவர்கள் எப்படி, எவ்வளவு பயன்படுத்தனும்னு தெரியாமல் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி இருக்கலாம்னு தோனுது. 

http://www.ens-newswire.com/ens/may2011/2011-05-05-01.html

அதனால் பெஸ்டிசைட் விக்கிறவனைப் போயி இந்த விளைவுகளுக்கு நீங்க பிடிக்க முடியாது. 

http://www.ens-newswire.com/ens/may2011/2011-05-05-01.htmlஅதை பயன்படுத்திய விவசாயிகளின் அறியாமையால்தான் மக்கள் பலியானார்கள்னுதான் சொல்ல முடியும்!  மேலே உள்ள படங்களில் உள்ளதுபோல் மேலை நாடுகளில் endosulfan னால் பாதிக்கப் பட்டதாக எதுவும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. கேரள விவசாயிகளின் கவனக்குறைவுதான் இவர்கள் பலியானதுக்குக் காரணம்னு எனக்குத் தோனுது.

மூன்று குழுக்களின் வாதங்களிலும் ஓரளவுக்கு உண்மையும் பொய்யும் கலந்து இருக்கிறது. சரி, இதிலிருந்து நம் மக்கள் மற்றும் விவசாயிகள் கற்றுக்கொள்ள வேண்டியதை கற்றுக்குவாங்களா?

* பூச்சிக்கொல்லி மருந்துனா விஷம். பூச்சிக்கு அது கொல்லும் விஷம்னா நமக்கும் விஷம்தான்னு எல்லாருக்கும் தெரியும்.  
 இருந்தாலும், அது பூச்சியைத்தான் கொல்லும் நம்மைக் கொல்லமுடியாது என்கிற ஒரு மனோபாவம் உருவாகாமல் இருக்கனும்.

* அதை மிகவும் கவனமாக அளவாக பயன்படுத்தனும். அவன் கொடுத்து இருக்க "இண்ஸ்ட்ரக்சன்ஸ்" படி பயன்படுத்தினால் பூச்சி சாக மாட்டேங்கிது, அவனுடைய இண்ஸ்ட்ரக்சன்ஸ்லாம் அமெரிக்கா இல்லை ஐரோப்பாவில் உள்ள பூச்சி க்குத்தான் ஒத்துவரும், நம்ம பூச்சிக்கு இன்னும் அதிகமா தெளிச்சாதான் சாகும்னுகிற விபரீதமான சுயஅராய்ச்சி செய்து, அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவை சீரியஸாக விவசாயிகள் தவிர்க்கனும்.

* மற்றபடி இந்த வேதிப்பொருள்களால் நம்முடைய சுற்றுப்புறம் பாதிக்கப்படுது என்பது உண்மைதான். அதனால் பூச்சுக்கொல்லி மருந்தே பயன்படுத்தாமல் விவசாயம் செய்யமுடியுமா? னு கேட்டால் இப்போதைக்கு முடியாதுனுதான் நான் சொல்லுவேன்.

7 comments:

Jayadev Das said...

\\* அதை மிகவும் கவனமாக அளவாக பயன்படுத்தனும். அவன் கொடுத்து இருக்க "இண்ஸ்ட்ரக்சன்ஸ்" படி பயன்படுத்தினால் பூச்சி சாக மாட்டேங்கிது, அவனுடைய இண்ஸ்ட்ரக்சன்ஸ்லாம் அமெரிக்கா இல்லை ஐரோப்பாவில் உள்ள பூச்சி க்குத்தான் ஒத்துவரும், நம்ம பூச்சிக்கு இன்னும் அதிகமா தெளிச்சாதான் சாகும்னுகிற விபரீதமான சுயஅராய்ச்சி செய்து, அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவை சீரியஸாக விவசாயிகள் தவிர்க்கனும்.\\ பூச்சி மருந்து முதல் தடவை தெளிக்கும்போது பெரும்பாலான பூச்சிகள் செத்துப் போகும். அதில் சில பூச்சிகள் அந்த வீரியமான மருந்தையும் தாக்குப் பிடித்து உயிர் பிழைக்கும். அவை இனப் பெருக்கம் செய்து வரும் அடுத்த சந்ததிக்கு இந்த மருந்தை எதிர்கொள்ளும் சக்தி வந்து விடும். இப்போ பழைய வீரியத்தோட உள்ள மருந்துக்கு இந்த பூச்சிங்க சாகாது. அதப் பாத்தா விவசாயி, என்னாட இதுன்னு மருந்தை கொஞ்சம் சேர்த்து கலப்பான். அப்புறம் ஒரு கட்டத்துல, அந்த பூச்சி எதுக்கும் அசையாது, ஆனா அதுல விளையுரத தின்ற நமக்கு எல்லா வியாதியும் வரும். அது சரி, அந்த பூச்சி மாதிரியே நமக்கும் அந்த மருந்துகளை தாங்கிக்கிற திறன் ஏன் வரமாட்டேங்குது?

Jayadev Das said...

\\* மற்றபடி இந்த வேதிப்பொருள்களால் நம்முடைய சுற்றுப்புறம் பாதிக்கப்படுது என்பது உண்மைதான். அதனால் பூச்சுக்கொல்லி மருந்தே பயன்படுத்தாமல் விவசாயம் செய்யமுடியுமா? னு கேட்டால் இப்போதைக்கு முடியாதுனுதான் நான் சொல்லுவேன்.\\ நிச்சயம் முடியும் பாஸ். இயற்க்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கிட்ட கண்ட்ரோலை குடுங்க அவர் சாதிச்சுக் காட்டுவார்.

வருண் said...

ஜெயவேல்! இங்கே என்னுடைய சைனீஸ் தோழர் ஆர்கானிக் தோட்டம்தான் போடுறார்ங்க. ஆனால் அவரு ரொம்ப படிச்சவர், நெறை ய ரிசேர்ச் செய்து வெற்றிடைகிறார். படிக்காதவங்களுக்கு இதெல்லாம் தெரியாதுங்க!

The Kerala govt and indian companies are responsible for kerala tragedy.

India manufactured 8000 tonnes of endosulfan and exported 4000 tonnes and used 4000 tonnes. They did not wnat to ban because it is big money (income) for them! :(

அம்பேத் சித்தார்த் said...

நல்ல பதிவு வருண்.

பூச்சிக்கொல்லி மருந்துகளே இல்லாமல் இந்த உலகம் முழுவதும் அனைத்து வகை பயிர்களையும், கனிகளையும் சாகுபடி செய்ய முடியும்.

@ஜெயதேவ் தாஸ்

முடியாது என்று நீங்கள் சொல்வது இந்த முதலாளித்துவ சமூகத்தில் தானே ? ஆம் எனில் என் கருத்தும் அது தான். ஆம் இந்த முதலாளித்துவ சமூகத்தில் உரங்களை தவிர்த்து வேளாண்மை செய்ய முடியாது தான். பின்ன முதலாளிகள் கொள்ளையடிக்க வேண்டாமா என்ன ?

ArjunaSamy said...

\\மற்றபடி இந்த வேதிப்பொருள்களால் நம்முடைய சுற்றுப்புறம் பாதிக்கப்படுது என்பது உண்மைதான். அதனால் பூச்சுக்கொல்லி மருந்தே பயன்படுத்தாமல் விவசாயம் செய்யமுடியுமா? னு கேட்டால் இப்போதைக்கு முடியாதுனுதான் நான் சொல்லுவேன்.\\

நிகழ்ச்சி முழுவதும் பார்த்திட்டு பதிவு

எழுதியிருந்தா இப்படி சொல்லியிருக்க

மாட்டீர்கள்..

சிக்கிம் மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயம் செய்வதாக நிகழ்ச்சியில் காட்சிபடுத்தி இருந்தனர்...

வருண் said...

***அம்பேத் சித்தார்த் said...
நல்ல பதிவு வருண்.

பூச்சிக்கொல்லி மருந்துகளே இல்லாமல் இந்த உலகம் முழுவதும் அனைத்து வகை பயிர்களையும், கனிகளையும் சாகுபடி செய்ய முடியும்.***

நீங்க விவசாயியா ஆக இருந்தால், உங்க பயிர் நாசமாகும்போது, நீங்க சும்மா இருக்க முடியாது நம்புறேன்

வருண் said...

***ArjunaSamy said...
\\மற்றபடி இந்த வேதிப்பொருள்களால் நம்முடைய சுற்றுப்புறம் பாதிக்கப்படுது என்பது உண்மைதான். அதனால் பூச்சுக்கொல்லி மருந்தே பயன்படுத்தாமல் விவசாயம் செய்யமுடியுமா? னு கேட்டால் இப்போதைக்கு முடியாதுனுதான் நான் சொல்லுவேன்.\\

நிகழ்ச்சி முழுவதும் பார்த்திட்டு பதிவு

எழுதியிருந்தா இப்படி சொல்லியிருக்க

மாட்டீர்கள்..

சிக்கிம் மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயம் செய்வதாக நிகழ்ச்சியில் காட்சிபடுத்தி இருந்தனர்...

27 June 2012 4:18 AM***

I am not sure how practical it is to follow that in every state. Organic farming is expensive as the yield is less.

When I go for shopping, I see organic fruits and vegetables cost 3 times more than that of the one they came from "inorganic farming". Not many buy expensive organic fruits and vegetables even in US. In countries like India, it is much more difficult in practice. But, let us wait and see, in five years what happens. It is possible that sikkim might give up. It is also possible that other states start following sikkim's organic farming. Only time will tell how successful we are practically.