Thursday, June 28, 2012

இந்துக்கள் ஏன் முக்காடு அணிகிறார்கள்?

 


நான் வளர்ந்த தமிழ் மண்ணில் என்னுடைய இஸ்லாமிய நண்பர்களின் அன்னையர்கள், சகோதரிகள் முக்காடு அணிவதைத்தான் நான் முதன்முதலில்  பார்த்து இருக்கிறேன். எங்க ஆத்துலே உள்ள பெண்கள் எல்லாம் யாரும் முக்காடு அணிவதில்லை! அதனால இந்த முக்காடு அணிவது  இஸ்லாமியர்களுடைய கலாச்சாரம் என்று நம்பி அதைப் பற்றி ரொம்ப ஆராய்ந்ததில்லை. இன்னும் ஒண்ணு,  நான் வளர்ந்த/வசித்த பகுதியில் பெரும்பாலும் இஸ்லாமியப்பெண்கள் "பர்தா" அணிவதில்லை.

அப்புறம் ஒரு சில ஹிந்திப்படங்களில் வட இந்திய இந்துப் பெண்கள் முக்காடு அணிந்து வருவதை பார்த்து இருக்கிறேன். ஒருவேளை வட இந்தியாவில் வயதானவர்கள் அல்லது கணவனை இழந்தவர்கள் மட்டும் அணிவார்களோ? என்ற சந்தேகம் வந்ததுண்டு. அப்போ, இதையெல்லாம் பற்றி  ரொம்ப ஆராய்ச்சி செய்யாமல் விட்டுவிட்டேன்.

இப்போ "உறவுகள் தொடர்கதை" னு விஜய் டி வி ல வருகிற தமிழாக்கம் செய்யப்பட்ட வடமொழி சீரியல் பார்க்கும்போது அதில் வரும் ஆண்கள் எல்லாம் பெரிய பெரிய பொட்டு வச்சுருக்காங்க இல்லைனா நாமம் போட்டு இருக்காங்க. அதனால அவங்க இந்துக்களாத்தான இருக்கனும்? அவர்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவருமே முக்காடு அணிந்து இருக்காங்க. வீட்டைவிட்டு வெளியே வரும்போது அல்ல! கூட்டுக்குடும்பத்தில் வசிக்கும் இவர்கள் வீட்டில் இருக்கும்போதே, முக்காடு அணிந்துதான் இருக்காங்க!

இந்த சீரியலில் வரும் இந்துக்கள் ஏன் முக்காடு அணிகிறார்கள்?

இந்து மதம் இஸ்லாமிய மதத்தைவிட பழமையானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கெடையாது. அதனால இஸ்லாமிய பெண்கள் முக்காடு அணிவது என்கிற வழக்கம், இதுபோல வட இந்திய இந்துப்பெண்களிடம் இருந்து இஸ்லாமியர்களுக்கும் தாவிய ஒரு பழக்கவழக்கமா இருக்குமோ? னு யூகிக்கத் தோனுது. யாராவது விபரம் தெரிந்த பெரியவா இந்துப் பெண்கள் ஏன் முக்காடு அணிகிறார்கள்னு சொன்னால் நல்லாயிருக்கும்.

உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்களேன், ப்ளீஸ்!

34 comments:

Pebble said...
This comment has been removed by the author.
வருண் said...

Pepple: Thanks. But, dont get me wrong, in west showing respect means "removing" your hat and not covering your head, right?

In East, covering your head means, showing respect, huh?

Interesting! :)

வருண் said...

Jeez! You already removed your comment!!! I made a mistake of not quoting what you said! :)))

Please "rephrase" it and post it again! Thanks!

Pebble said...

It is a way of showing respect. Young girls cover their head before elders and in temples to show the respect. If you have noticed the north Indian village girls or ladies cover their head as well try to cover their face partially, this is to show respect to elders and not to expose their face to strangers. This information I gathered from one of my north Indian friend's wife and when I was in Delhi some of ladies worked with me told. So it is a verbal info (there may different reasons from text).
Even some of the north Indian village men wear cap (Gandhi Kullai), that’s also a respectable way of dressing.
Muslims are doing it, because it is a command from God to them.
If you see throughout the history, in the Middle East, Persia(Iran) and north India women cover their head regardless of their religion. Even in Europe if you notice, in some of the old pictures women cover their head.

Anonymous said...

இஸ்லாமியர் மட்டுமல்ல கிறித்தவர்களில் கூட முக்காடு இடும் பழக்கம் உள்ளது. குறிப்பாக மேரி மாதா முக்காடு அணிந்து காட்சித் தருவதை கிறித்தவ ஆலயங்களில் நான் கண்டதுண்டு. இன்னும் தமிழ் கிறித்தவப் பெண்கள் சர்ச்சுகளில் வழிபடும் போதும் முக்காடு இடுவதைக் கண்டதுண்டு.

வடநாட்டில் உள்ள இந்துக்கள் மட்டுமல்ல சீக்கியர், சமணர்களுள் உள்ள பெண்களும் கோவில்களில் முக்காடு இடுவது வழக்கம் ... !

பழைய சமூகங்களில் பெண் தலைமுடியை மறைத்து இருப்பது கண்ணியமாக கருதப்பட்டு இருக்கலாம் என நினைக்கின்றேன். ஆனால் முகத்தை முழுவதுமாக பர்தாப் போட்டு மூடிக் கொண்டு அலைவதை என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. அது உச்சக் கட்ட கொடுமையாக கருதுகின்றேன்.

குறிப்பாக பழங்காலத்தில் திருமணமான பெண்கள் முக்காடு இடும் வழக்கம் இருந்திருக்கின்றது. இது ஒரு குறியீடாகவே கருதலாம் என நினைக்கின்றேன். அதாவது முக்காடு இடுவதால் அப்பெண் திருமணமானவள், கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதை உணர்த்தும் படி இருந்திருக்கலாம். முக்காடு இடாமல் சென்றால் பொது மகளிர் என்ற குறியீடாக இருந்திருக்கலாம்..

முக்காடு இடுவது என்பது இஸ்லாமியர் கண்டுப் பிடித்தது இல்லை என்பதும் வரலாறு. பழைய நாகரிகமான அசீரியாவில் சுமார் கிமு 1500-களிலேயே பெண்கள் முக்காடு இடும் வழக்கம் இருந்துள்ளது.

வருண் said...

தங்கள் கருத்துக்கு நன்றி, Pebble மற்றும் இக்பால் செல்வன்! :)

----------------

இக்பால் செல்வன்: உங்க தளத்தில் தமிழ்மணப் பதிவுப்பட்டை அரைகுறையாத் தெரியுதே? தமிழ்மணம் உங்க தளத்தை அப்ரூவ் செய்யலைனா முழுதும் தெரியாமல் இருக்கனும் இல்லையா? பாதி மட்டும் ஏன் தெரியுது??

Anonymous said...

கொஞ்சம் விளக்கமாகவே சொல்லணும்.

முக்காடா இல்லையா என்பதை விட,தலையை cover செய்தல் என்பது மதங்களில் உண்டு.ஆன்மீகத்தில் ஒரு நிலையில் முன்னேறும்போது சுற்றிலும் உள்ள சூழ்நிலை அழுத்தம் அதிகமாகும்.அதற்காக தலையை cover செய்தல் அவசியம் என்பார்கள். அத்தனை சாமியார்களும் முக்காடு போட்டிருப்பார்கள் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்றாலும். தொடக்க நிலையிலேயே தலையை கவர் செய்ய அறிவுறுத்தப்படுவார்கள்.

வெகு சிலரே-தலையை கவர் செய்யாவிட்டாலும்-தாக்குப்பிடிக்க முடியும் என்று செய்யமாட்டார்கள்.

குறிப்பாய் பெண்கள் ஒரு நிலையில் hyper sensitive ஆகிவிட்டால் பிடிக்காதவர் யாராவது அவர்கள் பார்வையில் பட்டாலே சுரீரென்று எகிறுவார்கள்.ஆழ்மனம் மிக மிக மிக வேகமாக ரீ-ஆக்ட் செய்யும்.இதை தலையை கவர் செய்வதன் மூலம் மட்டுப்படுத்தலாம் என்பது மரபு.

ஆனால் இதுதான் காரணம் என்று சொல்லிவிட்டால் நிறைய்ய பேர் செய்யமாட்டார்கள் என்று காரணத்தை சொல்லாமல் இதை ஒரு பழக்கமாக உட்படுத்திவிடுவார்கள்.

சீக்கியர்கள் டர்பன் அணிவது அதன் குரு சொன்னதனால்தான். பிராமணர்கள் சிலர் தலையில் துண்டை கவர் செய்து போவதும் உண்டு. வள்ளலார் படத்தை பார்த்திருப்பீர்கள் தானே...அவர் தலையை கவர் செய்தே போவார்.

split personality ஆட்கள் (சாமி வந்துடுச்சு என்று கிராமத்தில் சொல்லப்படுவது) அந்த வேகம் வந்த வேளையில் தலையை கவர் செய்வது நல்ல பலன் அளிக்கும். ஆனால் செய்யமாட்டார்கள்.அந்த வேகமே மனதை காலி செய்வதற்காகத்தான். அதனால் அவர்களை பேசவிட்டு குப்பையை வெளியேற்ற உதவுவார்கள்.

துறவிகள் எல்லோருமே தலையை மூடுவது சிபாரிசு செய்யப்படுகிறது.ஏனெனில் இந்த hyper sensitivity சூழ்நிலை எப்போது நடக்கும் என்று தெரியவே தெரியாது.அப்போது அவர்கள் சமூகத்துக்கு பாதகமாக,வன்முறையாக இருக்க வாய்ப்பு ஏற்படுவதுண்டு.அதை தவிர்க்கவும் முதல்லேர்ந்தே 'தலையை மூடச்சொல்வது.

இஸ்லாமில் தொழுகையில் தலையில் வெள்ளை குல்லாய் போட்டிருப்பார்களே! இந்த தலைகவசம் எவ்வளவு தடிமனாக இருக்கணும்.மெல்லிசா இருக்கணுமா என்றெல்லாம் கணக்கில்லை. தலைமீது ஒரு துணி cover செய்திருக்கிறது என்ற உணர்வே அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை கொண்டு வந்து மட்டுப்படுத்தும்(hyper sensitive ஆட்களுக்கு).

அப்ப அவங்களுக்கு மட்டும்தானே மத்தவங்களுக்கு எதுக்கு என்றால் ஒருவர் அல்லது ஒருவள் எப்போது அப்படி மாறலாம் என்றெல்லாம் கண்டுபிடிக்கவே முடியாது.

இந்த நிலைவரும் வாய்ப்பு பெண்களுக்கே அதிகம் ஆண்களைவிட.ஆண்களில் மன நெகிழ்வுத்தன்மை கொண்டவர்களுக்கு இந்தமாதிரி நிகழலாம்.சாமியார்கள் போட்டோவைப் பாருங்கள்.முக்கால்வாசி ஏன் 90% பேர் குருக்களால் இது வலியுறுத்தப்படும்.

Anonymous said...

மதுரை ஆதீனம் முக்காடு போடலியே என்றால் தமிழ் சைவமரபு அதற்குப் பதிலாக தலையில் உத்ராட்சத்தினால் ஆன ஒரு மாலையை தலையில் கவசமாக அணிய பணித்திருக்கிறது முக்காட்டுக்குப் பதிலாக. அது இருக்கிறது என்ற உணர்வு hyper sensitivy உணர்வை மட்டுப்படுத்தும்.

வள்ளலார் சைவமரபுதான்.ஆனாலும் அவர் முக்காட்டை தேர்ந்தெடுத்தார்.தமிழ்ப்பெண்கள் முக்காடு போடுவதில்லை. ஆனாலும் துறவு பூண்டால் முக்காடு கண்டிப்பாக உண்டு சில மரபில்.அது உளவியல் பார்வையில் நல்ல பாதுகாப்பு.

அடுத்த முறை அதீதமாக உணர்ச்சி வசப்படுகிறவர்களுக்கு குல்லாவை,தொப்பியை,முக்காட்டை சிபாரிசு செய்யலாம்.அவர்கள் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்வார்கள்.

Anonymous said...

சுருக்கமாகச் சொன்னால் 'ஆசைகள்-பிடிப்புகள்' நம் ஆழ்மனதில் உள்ள எரிமலையை வெளியே வரவிடாமல் காத்துக்கொண்டிருக்கிறது.

ஆனால் துறவிகள் ஆசைகளை விடுவதால் (அப்டின்னு நம்புகிறோம்) அந்த கவசம் விலகிய நிலையில் hyper sensitive ஆகும்போது வன்முறை நிகழும்.பேச்சில்-செயலிலும்.

இதை மட்டுப்படுத்த வெளிப்புறமான இந்த கவசம் நிச்சயம் உதவுகிறது.

வருண் said...

***Chilled Beers***

ஒருதர உங்க 3 பின்னூட்டத்தையும் வாசிச்ச்சேன். இன்னும் சரியாப் புரியலை. மறுபடியும் இன்னொருமுறை வாசிக்கிறேன். :)

Unknown said...

<<<

Chilled Beers said...

அடுத்த முறை அதீதமாக உணர்ச்சி வசப்படுகிறவர்களுக்கு குல்லாவை,தொப்பியை,முக்காட்டை சிபாரிசு செய்யலாம்.அவர்கள் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்வார்கள்.

>>>

நல்லா கிளப்புறாங்கப்பா பீதியே... அப்ப டென்சனா இருக்கும் போது தொப்பி போட்டுக்குனுமா? :)

@வருண், நானும் 4, 5 தடவை இவர் எழுதுனத படுச்சுட்டேன், புரியவே இல்லை...

Pebble said...

Chilled Beers, what are you trying to convey. Is it your own opinion.

@Iqbal Selvan
//ஆனால் முகத்தை முழுவதுமாக பர்தாப் போட்டு மூடிக் கொண்டு அலைவதை என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. அது உச்சக் கட்ட கொடுமையாக கருதுகின்றேன்.
//
I can reply for this, but I do not want to divert the purpose of the blog. I am not sure why you are mentioning this here.

வருண் said...

Pebble: It is better to concentrate only on hindus (as the title says) and their "this" kind of tradition to avoid any unnecessary arguments. Thanks!

Pebble said...

Varun: I agree with you. It is better to stick to the topic. Your question in the blog is really interesting and it made me to explore, search several things. I love to type in Tamil, due to time constraint I am typing in English.

suvanappiriyan said...

//ஆனால் முகத்தை முழுவதுமாக பர்தாப் போட்டு மூடிக் கொண்டு அலைவதை என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. அது உச்சக் கட்ட கொடுமையாக கருதுகின்றேன்.
//

முகத்தை முழுவதுமாக மூடச் சொல்லி கட்டளை இல்லை. முகமும் கையும் தெரியும் வண்ணம் முக்காடு இருக்க வேண்டும். முழுவதும் முகத்தை மூடிக் கொள்வது அவர்களின் சொந்த விருப்பமே!

Anonymous said...

@ பெப்ப்ளே : நான் பொதுவாக முக்காடுகள் உலகெங்கும் எவ்வாறு பயன்படுத்தபட்டு வருகின்றது என்பதில் பர்தாவையும் குறிப்பிட்டேன். முக்காடு இந்துக்கள் மட்டும் அணிவதில்லை. இந்துக்களில் சிலரும் அணிகின்றார்கள் அவ்வளவே. பர்தாவுக்கு விளக்கம் கொடுக்க விரும்பினால் தாரளமாக கொடுக்கலாம். பர்தா போடா வேண்டும் என்றும் குரானில் சொல்லப்படவில்லை என்பது தான் பல முஸ்லிம்களின் கருத்தும் கூட.

Anonymous said...

@ சுவனப்பிரியன் : ஹிஜாப் அல்லது நிஹாப் போடும்படி தான் இஸ்லாம் சொல்வதாக சிலர் சொல்கின்றார்கள். அனால் தெற்காசிய முஸ்லிம்களில் பலர் குறிப்பாக ஆப்கானியர்கள் முழு பர்தா அணிகின்றார்கள் .. அவர்கள் கூட கனடா வந்த பின் அவற்றை அணிவதில்லை.. தங்கள் கருத்துக்கு நன்றிகள். எனக்கு ஒரு சந்தேகம் . குரானில் எந்த இடத்தில் ஹிஜாப் பற்றி கூறுகின்றது. கொஞ்சம் சொன்னால் பயனாக இருக்கும்.

Unknown said...

எப்போது உலகம் பிறந்ததோ அப்போதே இஸ்லாம் தோன்றிவிட்டது நண்பரே. முதல் மனிதம் ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் பிரதிநிதியாக வந்தவர்கள். பெண்கள் உடலை அந்நிய ஆடவர்களுக்கு உணர்ச்சியைத்தூண்டுமளவுக்கு அணிவதை எந்த மதம் ஏற்றுக்கொள்கிறதோ அம்மதம் மதம் அல்ல. முற்றுமுழுதாக வெறுக்கிறது இஸ்லாம்.

more http://www.irf.net/

Anonymous said...

ஆன்மீக தளத்தில் தியானம் செய்வதாலோ சுருக்கமாக சொன்னால் ஒன்றின் மீது மனதை கவனத்தை சுருக்குவதாலோ மனம் hyper sensitivity ஆக மாறிவிடும்.யோகாவில் ஜாக்ரத்,ஸ்வப்னம் என்றெல்லாம் குறிப்பிடுவார்கள்.

அப்போது ஜாக்ரத் நிலையிலிருந்து விலகும்போது-அது கிட்டத்தட்ட ஒரு கொதிகலனின் மூடி திறந்து கொள்வது போல. ஆணோ பெண்ணோ சூழ்நிலையில் உள்ள பொருட்கள்,மனிதர்களுக்கு ஏற்றவாறு உடனுக்குடன் அதீதமாக ரீ-ஆக்ட் செய்வார்கள்.

இந்த நிலை எப்போது ஏற்பட்டது என்று சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியவே தெரியாது.இது பெண்களுக்கு அடிக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. இது கிட்டதட்ட ஒரு ரப்பர் பந்து நீரிலு முழுதும் மூழ்கி பின்னர் நீருக்கு மேலே மிதந்து மறுபடியும் மூழ்கி மிதந்தால் அந்த காட்சி எப்படி இருக்குமோ அப்படி.

அப்படி உள்ள கொதிகலன் நிலையில் கோபம் எகிறி அடிக்கும்.to be politically correct என்பதெல்லாம் மறந்துபோகும்.உள்ளது உள்ளபடி அதே சமயம் extreme ஆக ரீ-ஆக்ட் செய்வார்கள்.

இது துறவிகளுக்கும் நடக்கும்.குடும்பஸ்தர்களுக்கும் நடக்கும்.துறவிகள்தான் துறவிகள் என்றில்லையே! பெண்கள் உணர்வுவயப்பட்ட நிலையில் இது நடக்கும்போது பெரும்பாலும் அழுவதன் மூலம் மனதை காலி செய்து மறுபடி மீழ்வார்கள்.ஆனாலும் அந்த சட்டென்று ஏற்படும் hyper sensitive நிலை சமாளிக்க முடியாதது-அவர்களாலும் சமூகத்தாலும்.

split personality ஆட்கள் அந்த நிலையில் சாமியாடுவதைப் பார்த்திருப்பீர்கள்.அந்த மனநிலையில் குறிப்பிட்ட சாமி இருந்தால் சாமி.உக்கிரமாக இருக்கும். ஒருவேளை யாரையாவது திட்டவேண்டுமெனில் dictionaryலேயே இல்லாத கெட்டவார்த்தையாக அதுவரை பேசாதவர்களும் பேசுவார்கள். மொத்தத்தில் மனம் 'திறந்து' கொள்ளும். top ஓப்பன் ஆயிடுச்சு என்று சொல்லலாம்.

இந்த நிலை துறவிக்கும் ஏற்படும்.தேமேன்னு ஓரமா எங்கேயாவது உட்கார்ந்து ஜபம் சொல்வது நல்லது.அவருக்கும் சமூகத்துக்கும்.இல்லை வன்முறை அதீதமாயிருக்கும்.

இந்த நிலை வந்தவரிடம் 'ஏய் உனக்கு இப்படி இருக்கு' என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். அப்படி இல்லை என்று சாதிப்பார்கள்.
அவர்களிடம் சொல்லாமலேயே இதை மட்டுப்படுத்த தலையை கவர் செய்வது பலன் அளிக்கும்.

கடவுள் பக்தி என்பது உலகபொருட்களிலிருந்து பற்றை விலக்கி ஆண்டவனிடம் (அப்படி உள்ள எண்ணத்திடம் )பற்று ஃzவைப்பது. இப்படி எல்லாவற்றையும் விலக்கி ஒன்றிடம் பற்று வைத்தால் அத்தனை ஆற்றலும் ஒன்றிடம் குவிகிறது. அப்போது மற்ற எண்ணங்கள் எகிறி அடித்து போராட்டம் செய்யும்.split personalityக்கு வேகம் வந்ததும் மனம் திறந்து கொள்கிறது.அடக்கி வைக்கப்பட்ட எண்ணங்கள் வெளியேறும்.ஒவ்வொரு மனிதனின் இருண்டபக்கம் திறந்து கொள்ளும்.அது காண சகிக்காமல் இருக்கும்.ஆணுக்கும் பெண்ணுக்கும்.

இந்த எண்ணங்கள் செயல்களாக மாறாமல் இருக்கவேண்டும்.சொற்களாக மாறாமல் இருக்கவேண்டும்.அதை வலியுறுத்த 'தலை' கவர் செய்யப்படுகிறது. அப்போது இந்த காலி செய்கிற process மெதுவாக சமூகத்துக்கு பாதிப்பு இல்லாமல் நடக்க வழிசெய்கிறது.

அதனால் தலை கவர் செய்வது அவசியம்.சிலபேர் தலையை தொட்டாலே எகிறுவார்கள்.கொஞ்சம் sensitivy ஜாஸ்தியாக உள்ளவர்கள்.அதன் extreme level தான் split personality ஆட்கள்.

அதனாலேயே பெண்கள் எப்போதும் தலையை கவர் செய்வது அந்த காலத்தில் கட்டாயமாக்கப்பட்டது.மிகுந்த மன அழுத்தத்தில் நம்மையே நாம் கவனிக்க முடியாதபடி ஆகிவிடும்.இது கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும். கொஞ்சம்தான்.அதனால்தான் டர்பன் வைக்கச் சொன்னார் சீக்கியமத குரு.

மாடர்ன் குருக்களில் ஜக்கி,ரவிசங்கரு எல்லாம் தலையை கவர் செய்வார்கள்.

Anonymous said...

பிராமணரில் ஏன் இது இல்லை என்றால் அதற்குப் பதிலாக குடுமியை இறுக்க கட்டிக் கொள்வதை 'கன்ட்ரோல்'ஆக பயன்படுத்துவார்கள்.

முன்னே சொன்னபடி சைவமரபில் உத்திராட்சத்தை வட்டமாக தலையில் கட்டுவது கட்டாயம்.

பிராமணப் பெண்கள் தலைமுடியை எப்போதும் பின்னல் கட்டியிருக்கவேண்டும் என்பார்கள்.ஒருபோதும் அவிழ்ந்த நிலையில் இருக்ககூடாது என்று சொல்லகேட்டிருக்கிறேன்.மற்ற சாதிகளிலும்.

ஆணின் ஆழ்மனதை விட பெண்ணின் மனம் மென்மையானது எப்போதும் திறந்து கொள்ளும்.

வள்ளலார் தலையை கவர் செய் என்பதை கட்டளையாகவே பிறப்பித்திருக்கிறார்.

Anonymous said...

சுருக்கமாக,பெண்கள் முக்காடு போடுவது அவர்களின் மனநலனுக்காகவே ஒழிய மரியாதை நிமித்தமெல்லாம் அல்ல. புரியறமாதிரி சொன்னேனே...இன்னும் குழப்பிட்டேனா...நானு உத்தரவு வாங்கிக்கிறேன்.

Unknown said...

Chilled Beers அவர்களின் கருத்தை ஆழ்ந்து படித்தால் முக்காடு போடுவது மனம் பதட்டத்தில் இருக்கும் போதும்! காம உணர்வுகள் தூண்டப்படும் போதும் நகம் கடிப்பது, பாயை பிராண்டுவது,பெண்கள் காலில் கோலம் போடுவது, கை விரல்களை சொடக்கு எடுப்பது போன்ற செயல்கள் மூலம் உணர்வை குறைக்க முயல்வார்கள் இந்த முக்காடு போடும் பழக்கமும் இப்படி ஒரு பழக்கமாக மாறியிருக்கலாம்...!

இந்த பழக்கத்தை ஆழ்ந்து பார்த்த துறவிகள் இதை தன் சீடர்களுக்கு வலியுறுத்தி இருக்கலாம்!

வேகநரி said...

திரு வீடு சுரேஸ்குமார் எதற்காக தங்களது பெயரை இது வரை அரபு பெயருக்கு மாற்றாமல் இருக்கிறீர்கள்?
தங்களது பெயரையும் பூரணமாக அரபிய பெயராக மாற்றுவதன் மூலம் தாங்கள் சுவனத்தை அடைவீர்கள்.

நாடோடி said...

நண்பருக்கு வணக்கம்...

நம்முடைய பாரதத்தின் புராணங்களையும், சரித்திர நாவல்கலையும் நீங்கள் கொஞ்சம் அலசினால் உங்கள் கேள்விக்கான பதில்கள் சில உங்களுக்கு புரியும்.

பெண்களுக்கும், அவர்களின் கூந்தலுக்கும் நிறைய தொடர்பு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். அது பற்றி நமது நூல்கள் போதுமான அளவு விவரித்திருக்கிறது.. உதாரணமாக பாண்டிய மன்னனின் "பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இருக்கிறதா?.. அல்லது செயற்க்கையா?.." என்ற‌ விவாதமே சாட்சி.

பழைய எந்த நாவல்களை நீங்கள் படித்தாலும் அவற்றில் பெண்களின் அழகை வர்ணிக்கும் போது முதலில் வர்ணிக்கப்படுவது அவர்களின் "கூந்தலே" இவ்வாறு கூந்தகளை வர்ணித்து எழுதுவது ஆண்களாக தான் இருப்பார்கள். அதை படிக்கும் போது நமக்கும் ஒரு விதமான மயக்கம் ஏற்படுவது இயல்பு.

இவ்வாறு சரித்திரங்களில் ஆண்கள், பெண்களின் கூந்தல்களின் மீது அளவற்ற காதல் வைத்திருப்பதை பார்க்கமுடிகிறது...

இப்போதும் திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு, பெண்களின் கூந்தல் மீது ஒரு வித ஈர்ப்பு இருப்பதை பார்க்க முடிகிறது...

மேலே நான் கூந்தலை பற்றி இவ்வளவு விவரிப்பதற்கு காரணம், பெண்களின் கூந்தல் என்பது ஆண்களை கவர்ந்திழுக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது என்பதற்கு தான்.

ஆண் மயிலை கவர்ந்திழுக்கும், பெண் மயிலுக்கான தோகை போல், பெண்களுக்கு கூந்தல் இருக்க வேண்டும். (ரெம்ப ஓவரா பில்டப் குடுக்கிறேனானு தெரியாது.. :)..)

நாடோடி said...

நமது நாட்டில் கூட்டுக் குடும்ப வாழ்க்கைமுறை தான் பண்டைய காலங்களில் பின்பற்றி வரப்பட்டது. ஒரே வீட்டில் கூட்டாக அண்ணன் அவர் மனைவி, தம்பி மற்றும் அவர் மனைவி, மாமனார் மற்றும் மாமியார் என்று பலர் இருப்பதால் பெண்கள், முக்கியமாக மணமான பெண்கள் தங்களுடைய அழகு எந்தவிதத்திலும் அடுத்தவரை சலன படுத்திவிடக் கூடாது என்ற தன்(ஆண்) அடக்கத்தின் "மூலமாக" இந்த முக்காடு போடுவதை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த "மூலத்தை" கொண்டு நீங்கள் பல இடங்களில் இதை பொருத்தி பார்க்கலாம்.

கோவிலுக்கு செல்லும் போது பெண்கள் முக்காடு அணிவதையும், பொது நிகழ்ச்சிகளில் முக்காடு போடுவதையும் பார்க்க முடியும். இப்போதும் ஒரு சில இடங்களில் இந்த பழைய பழக்கம் இருந்து வருவதை அறிய முடியும்.

அருண் அவர்கள் சொல்வது போல் வட நாட்டில் உள்ள வீட்டில் உள்ள இந்து பெண்கள் முக்காடு போட்டு இருப்பது இதன் நீட்சியே..

வட நாடுகளில் இப்போதும் "கூட்டுக்குடும்ப வாழ்க்கை" அதிகமாக இருக்கிறது..

கூந்தலை மறைத்தால் பெண்களின் அழகு முழுவதும் மறைக்கப்பட்டு விடுமா?.. என்ற கேள்விக்கு கீழே நான் சொல்லும் சில சான்றுகள் உதவலாம்..

துறவறம் மேற்க்கொள்ளும் பெண்கள் தங்கள் கூந்தலை மழித்துவிடுகிறார்கள். இது இந்த மதம் என்று இல்லாமல் எல்லா மதங்களிலும்(இந்து, புத்தம், சமணம், கிறிஸ்தவம்) இருந்திருக்கிறது என்பதை வரலாற்றில் நாம் பார்க்க முடியும்.

அதேப்போல் கணவனை இழந்த பெண்களும் இந்த ஆதிக்க சமூதாயத்தில் இருந்து தன்னை காத்துக்கொள்ள முடியை வழிக்கும் வழக்கமும் வரலாற்றில் அறிய முடியும். சமீபத்தில் வெளிவந்த "முப்பொழுதும் கற்பனைகள்" படத்தில் வரும் ஹீரோவின் தாய் பாத்திரம் இதை தான் வலியுறுத்தும்.

நான் படித்த, கேட்ட சிலவற்றை வைத்து நான் இங்கு எழுதியிருக்கிறேன். இதுதான் காரணம் என்று நான் சொல்ல வரவில்லை இதுவாகவும் இருக்காலாம் என்பது என் ஊகம்..

நாடோடி said...

கூந்தலை பற்றி கீழே உள்ள லிங்க் ல பல விசயங்கள் சொல்ல பட்டிருக்கு..

http://tamil.indiansutras.com/2012/06/hair-is-one-the-sexuality-is-located-000447.html

நாடோடி said...

@Chilled Beers said...

//அடுத்த முறை அதீதமாக உணர்ச்சி வசப்படுகிறவர்களுக்கு குல்லாவை,தொப்பியை,முக்காட்டை சிபாரிசு செய்யலாம்.அவர்கள் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்வார்கள்.///

சில்டு பீர், என்ன சொல்ல வர்றீங்க...

நீங்க சொல்லுறதை பார்த்தா.. இந்த நாட்டுல உள்ள போலீசும், இராணுவமும் தான் ரெம்ப உணர்ச்சி வச படத‌வுங்க.. எல்லோரும் மிக புனிதமாக நடமாடுகிறார்கள்... :)))

நாடோடி said...

அறிவியல் பேசினால் ஆன்மீகம் இல்லை..

ஆன்மீகம் பேசினால் அறிவியல் இல்லை...

ஆனால் இவை இரண்டையும் சேர்த்து வைத்து பேசினால், அது பிழைப்புவாதம்..

அதைத்தான் இப்போது உள்ள கார்ப்பரேட் சாமியார்கள் செய்கிறார்கள்.. இந்த அவசரமான உலகத்தில் எதையும் அவசரமாக(தவறாக) புரிந்த கொள்ள கூட்டம் ஒன்று உள்ளது இதை குறிவைத்தே இவர்களும் காய் நகர்த்துகிறார்கள்.. நல்லா கல்லா கட்டுகிறார்கள்...

எந்த மதத்தில் உள்ளவர்களுக்கும் அவர்களின் மத நூல்களை படிக்க பெறுமையில்லை. அவற்றின் உள் அர்த்தங்களை புரிந்து கொள்ள விருப்பம் இல்லை... ஆனால் பெருமை சொல்ல அது வேண்டும்... :))))

சில்டு பீர் அவர்கள் சொல்லுவதும் ஏதோ ஒரு கார்ப்பரேட் சாமியாரின் கருத்து போல் தான் இருக்கிறது....

அறிவியலையும், ஆன்மீகத்தையும் கோர்க்க பார்க்கிறார்... ரெம்ப கஷ்டம்..

நாடோடி said...

சுரேஷ் அவர்களே!!

உங்களின் கருத்து அப்படியே புல்லரிக்க்க வைக்குது!!!..

சில்டு பீர் அவர்கள் ஏதோ குழப்புறாருனா... உங்க விளக்கம் அதைவிட கொடுமை...

பெண்களின் செயலாக நீங்கள் சித்தரிக்கும் அனைத்து உணர்ச்சிகளும், ஒரு ஆண் செய்தால் அது எதனால்?... அப்படியே அதற்கும் ஒரு விளக்கம் சொல்லுங்க....

ஏதோ ஒரு ஆண் என்று கூட வேண்டாம், நானும் இவையெல்லாம் செய்கிறேன்.. எதனால்?.... விளக்கம் பிளீஸ்..

வருண் said...

***நாடோடி said...

நமது நாட்டில் கூட்டுக் குடும்ப வாழ்க்கைமுறை தான் பண்டைய காலங்களில் பின்பற்றி வரப்பட்டது. ஒரே வீட்டில் கூட்டாக அண்ணன் அவர் மனைவி, தம்பி மற்றும் அவர் மனைவி, மாமனார் மற்றும் மாமியார் என்று பலர் இருப்பதால் பெண்கள், முக்கியமாக மணமான பெண்கள் தங்களுடைய அழகு எந்தவிதத்திலும் அடுத்தவரை சலன படுத்திவிடக் கூடாது என்ற தன்(ஆண்) அடக்கத்தின் "மூலமாக" இந்த முக்காடு போடுவதை எடுத்துக் கொள்ளலாம். ***

உங்க தியரி நல்லாயிருக்கு. :) ஆமா, இந்த ஆண்களிடம் கவனமாக இருக்கது நல்லதுதான். பொதுவாக ஆம்பளைங்க ஈஸியா சலனப்பட்டுருவாக. அந்தக் குறைபாடை, அவங்க இயலாமையை சரிசெய்ய அவங்க பெண்களை கவனமாக இருக்க செய்வார்கள்னுகூட உங்க தியரியை விரிவாக்கலாம். நான் ஒரு பெண்ணியவாதியாக இந்தக் கருத்தை முழுமையாக ஏற்றுக்கிறேன். :))))

வருண் said...

***அதனால் தலை கவர் செய்வது அவசியம்.சிலபேர் தலையை தொட்டாலே எகிறுவார்கள்.கொஞ்சம் sensitivy ஜாஸ்தியாக உள்ளவர்கள்.அதன் extreme level தான் split personality ஆட்கள்.***

நான் விழுந்து விழுந்து சிரிக்கிறேன். என்னை சுத்தி உள்ளவங்க எல்லாம் என்னை ஒரு மாதிரியா பார்க்கிறா! :)))

வருண் said...

***Chilled Beers said...

சுருக்கமாக,பெண்கள் முக்காடு போடுவது அவர்களின் மனநலனுக்காகவே ஒழிய மரியாதை நிமித்தமெல்லாம் அல்ல. புரியறமாதிரி சொன்னேனே...இன்னும் குழப்பிட்டேனா...நானு உத்தரவு வாங்கிக்கிறேன்.
30 June 2012 2:00 AM ***

மரியாதைக்கெல்லாம் இல்லைனு சொல்றீங்க. நாடோடியும் அதைத்தான் சொல்றார். ஆனால் அவரு தற்காப்புக்குனு சொல்றார். நீங்க மனநலனுக்குனு சொறீங்க!

மனநலனும் ஒரு மாதிரியான தற்காப்புத்தான்னு சொல்லி சமாளிக்கலாம். ஆனால்..

நீங்க பெண்களை குறை சொல்றாப்பிலே சொல்றீங்க. அவரு எல்லாம் இந்த ஆண்களிடம் இருந்து "தற்காத்து"க்கொள்ளனு சொல்றாரு. நான் நாடோடி கருத்துதான் சரினு நெனைக்கிறேன். :)))

அதாவது ஆண்கள் மனம் கெடாமல் இருந்தால் பெண்கள் மனநலத்துடன் இருக்கலாம் பாருங்க! :)))

வருண் said...

***thequickfox said...

திரு வீடு சுரேஸ்குமார் எதற்காக தங்களது பெயரை இது வரை அரபு பெயருக்கு மாற்றாமல் இருக்கிறீர்கள்?
தங்களது பெயரையும் பூரணமாக அரபிய பெயராக மாற்றுவதன் மூலம் தாங்கள் சுவனத்தை அடைவீர்கள்.
30 June 2012 5:50 AM ***

நரி அவர்களே!

வீடு சுரேஸ் பற்றி உங்க கருத்து சரியோ தவறோ தெரியலை. ஆனால் நீங்க இந்த "நரி" அவதாரம் எடுத்ததே ஏதாவது இஸ்லாமியர்கள் கருத்துச் சொல்லும்போது அதற்கு எதிர்கருத்து சொல்ல மட்டும்தான் என்னால அடித்து சொல்ல முடியும்.

பெரியவா நெறையப்பேரு உங்க ரசிகரா இருக்கா. அது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் இந்துமதத்தில் உள்ள பெண்கள் ஏன் முக்காடு அணிகிறார்கள்ங்கிற கேள்வியையெல்லாம் விட்டுப்புட்டு ஏன் இப்படி சுரேஸுவைப் பிடிச்சு தொங்குறேள்னு தெரியலை.

நரி: உங்களுக்கு வந்திருக்க இதுவும் ஒரு வியாதிதாங்க! முற்றாமல் பார்த்துக்கோங்க! :(

எங்கே, இந்துக்கள் ஏன் முக்காடு அணிகிறார்கள்னு ஒரு சின்ன விளக்கம் அளிங்க பார்க்கலாம்! நன்றி!

Anonymous said...

பெண்களின் தலைமயிர் செக்ஸைத் தூண்டும், அதனால் மறைக்கிறேன் என்பதெல்லாம் இக்காலத்துக்கு பொருந்துமா எனத் தெரியவில்லை ... !!!

மேலை நாடுகளில் பெண்கள் தலைமயிரை மறைப்பதில்லை.. எல்லாரும் என்ன ஆண்களால் கற்பழிக்கவாப் படுகின்றார்கள்.. இல்லை பெண்கள் தலைமயிர் மறைக்கப்படும் நாடுகளில் பெண்கள் மீது பாலியல் வன்முறையே நடப்பதில்லையா என்ன ???

கலாச்சாரக் காரணமே முக்காடு .. இக்காலத்துக்கு இது தேவையற்றது ... பெண்கள் மீது திணிப்பது மனித உரிமை மீறின செயலாகும் ... !