Wednesday, August 22, 2012

ராமலக்ஷ்மியின் முத்துச்சரம்! தளவிமர்சனம்

இன்றைய காலகட்டத்தில் வலைதளத்தில் எழுதுவது மிகவும் எளிதான காரியம். இன்று யாரு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் வலைதளம் ஆரம்பிச்சு எழுதித்தள்ளி பலருடன் நம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அரைகுறைத் தமிழில் என்னைப்போல பல எழுத்துப்பிழைகளுடன், கருத்துப்பிழைகளுடன்  உப்புப்பெறாத சினிமா பற்றி எழுதலாம், உலக நடப்புகளை எங்காவது படித்து வந்து எழுதலாம், என்றுமே தீராத மதப் பிரச்சினை, அழியாத சாதிப் பிரச்சினை இத்யாதி இத்யாதி என்று யாரு வேணா பதிவுகள் எழுதலாம். அதானால்தான் ஆயிரக்கணக்கான தமிழ் வலைதளங்கள் வந்துகொண்டும், நின்று நிலைக்காமல் வந்த சில ஆண்டுகளில் மறைந்துகொண்டும் இருக்கின்றன. ஆனால்...

என்ன ஆனால்???

ஒரு தரமான வலைபூ ஆரம்பித்து, தொடர்ந்து பல ஆண்டுகளாக எழுதும் ஒவ்வொரு பதிவிலும் வலைதளத்தின் தரம் குறையாமல் மிகுந்த சிரத்தையுடன், பொது நோக்குடன்,  தன் சிந்தனைகளை அழகாக கவிதை, கதைகள் வடிவில் சொல்லி வருவது கடினம். மேலும் அப்படி தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்போது, யாரு மனதையும் புண்படுத்தாமல், வலையுலகில் தன் வாசகர்களின் நட்பை ஒருபோதும் இழக்காமல்,  பல ஆண்டுகள்  வலையுலக ராணிபோல் வலம் வருதுவது ரொம்ப ரொம்ப கடினமான விடயம். நிலையாமை, "தரம் குறையாமை" தான் பலருக்கு பெரும் பிரச்சினை. ராமலக்ஷ்மி அவர்களின் முத்துச்சரம் வலைதளம் அந்த "அரிதான" காலப்போக்கில் தரம் குறையாமல் உயர்தரமாகவே நிலைத்து நிற்கும் வகையைச் சேரும்.

* பொதுவாக ஒரு வலைதளத்துக்கு சென்று ஒரு பதிவை படிக்க வேண்டுமேனு சரியாக்கூடப் படிக்காமல் "நல்ல பதிவு" னு ஒப்புக்கு சொல்லிட்டு, த ம 1 அல்லது த ம  நாலுனு ஓட்டுப்போட்டுட்டு போகவும் செய்யலாம்.  "பதிவை படிச்சானோ இல்லையோ "நல்ல பதிவு"னு சொல்லிட்டு போகிறார்" னு சொல்லும் "குற்றச்சாட்டு"க்கு பயந்து  நான் பதிவைப் படித்துவிட்டு  "நல்ல பதிவு" னு ஒரு வரி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் தயங்குவேன். ஆனால், முத்துச்சரத்தில் வருகிற கதையோ அல்லது கவிதையோ வாசிக்கும்போது, பல தருணங்களில் உண்மையிலேயே   குறை எதுவுமே இல்லாமல், குறை சொல்ல முடியாமல்  இருக்கும் அந்தப் பதிவு. அதில் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டு,  முழுமனதுடன்  "நல்ல பதிவு" னு ஒரே வரிசொல்லனும்னு பலதடவை எனக்கு தோன்றியுள்ளது.

* நீண்டகாலமாகவே நான் முத்துச்சரம் தளம் சென்று பின்னூட்ட மிடுவதில்லை! காரணம் என்னனு கேட்டீங்கனா.. நான் சொன்னால் நம்ப மாட்டீங்க! என் போல "ரெப்யுட்டேஷன்" உள்ளவர்கள் பின்னூட்டங்கள் முத்துச்சரத்தில் வந்தால், மோசமான "ரெப்யுட்டேஷன்" உள்ள என்னால்  முத்துச்சரம் தரம் குறைந்துவிடுமே என்கிற ஐயம்தான் காரணம். இதென்ன, புரியலையேனு சொல்றீங்களா? புரியலைனா விட்டுடுங்க!

ஆமா, இப்போ என்ன திடீர்னு ஒரே ஒரு வலைதளத்தை, அதுவும் ராமலக்ஷ்மியின் முத்துச்சரத்தை மட்டும் எடுத்து விமர்சனம்? நெறையவே  நல்ல தளங்கள் முத்துச்சரத்துக்கு இணையாக இல்லையா?னு கேட்கிறீங்களா?

என்னுடைய முந்தைய பதிவில் நடத்திய புதிர் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு அவங்க எதிர்பார்க்காத பரிசு கொடுக்கப்படும்னு சொல்லியிருந்தேன். வெற்றிபெற்றவர்களில் ஒருவர், திருமதி. ராமலக்ஷ்மி அவர்கள்! நான் சொன்னதுபோல, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உண்மையான பரிசு, முத்துச்சரம் பற்றிய என்னுடைய உண்மையான இந்த விமர்சனம்தான்! :)

நன்றி, வணக்கம்! :)

பி கு: அடுத்து இன்னொரு "வின்னரான" "ஹாரிபாட்டரு"க்கு என்ன பரிசு கொடுக்கலாம்னு யோசிக்கிறேன்...யோசிச்சுக்கிட்டே இருக்கேன்..

21 comments:

துளசி கோபால் said...

அருமை.

பாராட்டுகளுக்குப் பொருத்தமானவரே ராமலக்ஷ்மி.

மேன்மேலும் அவர் புகழ் பெருக வாழ்த்துகின்றேன்.

Yaathoramani.blogspot.com said...

நான் தவறாது விரும்பித் தொடர்கிற
வலைத்தளத்தில் ராம லட்சுமி அவர்களின்
முத்துசரம் முதன்மையானது
.அவர்களது ஒவ்வொரு பதிவிலும் பயனுள்ள
ஒன்றைச் சொல்லவேண்டும் என்கிற முயற்சி
சமூக அக்கறை சொல்லிச் செல்லும் நேர்த்தி
என்னை மிகவும் கவ்ர்ந்தது.அவரது பதிவு
குறித்து விரிவாக பாராட்டி பதிவு கொடுத்தமைக்கு
மனமார்ந்த நன்றி.தொடர வாழ்த்துக்கள்

கவி அழகன் said...

Nalla blogger kku arumaiyana parisu
Vaalthukkal

திண்டுக்கல் தனபாலன் said...

இதை விட சிறந்து பரிசு ஏது...?

புதியவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

ராமலக்ஷ்மி said...

அட, இப்படியொரு பரிசா?! மகிழ்ச்சி. அதிகப்படியாக சொல்லி விட்டிருந்தாலும் ஊக்கமாக எடுத்துக் கொள்கிறேன்:)! தங்களுக்கும் வாழ்த்தியிருப்பவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி:)!

Jayadev Das said...

இந்த பதிவுக்கு பின்னூட்டம் போட்டு அதன் தரத்தை குறைத்து விடுவோமோ என்ற பயம் இப்போது எனக்கு வந்துவிட்டது!!

தொகுதி பங்கீடு செய்த பின்னர் இடம் கிடைக்காத கட்சிகளுக்கு என் இதயத்தில் இடமிருக்கிறது என்று வாயை வைத்தே பிழைத்த தாத்தா ஒருத்தர் சொன்னது ஏனோ இப்போது ஞாபகத்துக்கு வருகிறது!!

மாதேவி said...

முத்துச்சரத்துக்கு வாழ்த்துகள்.

மென்மேலும் வெற்றிகள் கிடைக்கட்டும்.

வருண் said...

***துளசி கோபால் said...

அருமை.

பாராட்டுகளுக்குப் பொருத்தமானவரே ராமலக்ஷ்மி.

மேன்மேலும் அவர் புகழ் பெருக வாழ்த்துகின்றேன்.**

வாங்க டீச்சர்! சேர்ந்து வாழ்த்தியமைக்கு நன்றி. :-)

வருண் said...

*** Ramani said...

நான் தவறாது விரும்பித் தொடர்கிற
வலைத்தளத்தில் ராம லட்சுமி அவர்களின்
முத்துசரம் முதன்மையானது
.அவர்களது ஒவ்வொரு பதிவிலும் பயனுள்ள
ஒன்றைச் சொல்லவேண்டும் என்கிற முயற்சி
சமூக அக்கறை சொல்லிச் செல்லும் நேர்த்தி
என்னை மிகவும் கவ்ர்ந்தது.அவரது பதிவு
குறித்து விரிவாக பாராட்டி பதிவு கொடுத்தமைக்கு
மனமார்ந்த நன்றி.தொடர வாழ்த்துக்கள்

22 August 2012 4:09 PM***

வாங்க, ரமணி சார்! வருகைக்கும், உங்கள் வாழ்த்துப் பகிர்வுக்கும் நன்றி :)

வருண் said...

***கவி அழகன் said...

Nalla blogger kku arumaiyana parisu
Vaalthukkal

22 August 2012 7:08 PM***

ஏதோ இந்த ஏழையால் முடிஞ்சது இவ்ளோதான், சார்! :-)

வருண் said...

***திண்டுக்கல் தனபாலன் said...

இதை விட சிறந்து பரிசு ஏது...?

புதியவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

22 August 2012 7:38 PM***

ரொம்ப அழகா ஆமோதிச்சுயிருக்கீங்க, தனபாலன்! :-) நன்றிங்க!

வருண் said...

*** ராமலக்ஷ்மி said...

அட, இப்படியொரு பரிசா?! மகிழ்ச்சி. அதிகப்படியாக சொல்லி விட்டிருந்தாலும் ஊக்கமாக எடுத்துக் கொள்கிறேன்:)! தங்களுக்கும் வாழ்த்தியிருப்பவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி:)!

22 August 2012 9:52 PM***

வாங்க, ராமலக்ஷ்மி! முத்துச்சரம் மென்மேலும் வளர இன்னும் கோடி வாழ்த்துக்கள்! :)

வருண் said...

***Jayadev Das said...

இந்த பதிவுக்கு பின்னூட்டம் போட்டு அதன் தரத்தை குறைத்து விடுவோமோ என்ற பயம் இப்போது எனக்கு வந்துவிட்டது!!

தொகுதி பங்கீடு செய்த பின்னர் இடம் கிடைக்காத கட்சிகளுக்கு என் இதயத்தில் இடமிருக்கிறது என்று வாயை வைத்தே பிழைத்த தாத்தா ஒருத்தர் சொன்னது ஏனோ இப்போது ஞாபகத்துக்கு வருகிறது!!

22 August 2012 10:31 PM***

தாத்தாவோட என்னை இணைத்துப் பார்த்த உங்களை என்ன செய்யலாம்?? :))))

யோசிக்கிறேன்...

தணல் said...

பரிசு அழகாக இருக்கிறது :-) இந்தப் பின்னூட்டம் அதைச் சொல்லத்தான் எழுத ஆரம்பித்தது.

இது போன்ற 'நல்ல' தளங்களை எல்லாம் பார்க்கவே செல்வதில்லை! பிக்காலி தளங்களைப் பார்வையிடுவதே பிடித்திருக்கிறது! என்ன செய்வது! :-)

நீங்கள் சொல்லியிருக்கும் தளம் கூட என்னை ஈர்க்காது என்று தோன்றுகிறது!

//மேலும் அப்படி தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்போது, யாரு மனதையும் புண்படுத்தாமல், வலையுலகில் தன் வாசகர்களின் நட்பை ஒருபோதும் இழக்காமல்//

இதை ஒரு பெரிய விடயமாகக் கருத இயலவில்லை. பிரச்சனைகளிலிருந்து ஒதுங்கி நிற்பது அல்லது அப்படிப்பட்ட கருத்தொன்றைச் சொல்லாமலே இருப்பது பெரிதில்லை. பிரச்சனை வருமென்று தெரிந்தாலும் சொல்ல நினைந்ததை உரக்கச் சொல்லுவது, தானாக வந்து விழும் பிரச்சனைகளை எதிர்கொண்டு தொடர்வது - இதெல்லாமே எமக்கு பாராட்டுக்குரியதாகத் தெரிகின்றன. இது ராமலக்ஷ்மி மீதான தனிப்பட்ட விமர்சமனமல்ல. நீர் கூறிய பாயிண்டுக்கான விமர்சனமே.

எவ்வகையில் சொன்னாலும் நல்லதைச் சொன்னால் நல்லதே. அவ்வாறே ராமலக்ஷ்மி தம் பாணியில் மேலும் செயல்படட்டும்.

தணல் said...

//நீண்டகாலமாகவே நான் முத்துச்சரம் தளம் சென்று பின்னூட்ட மிடுவதில்லை! காரணம் என்னனு கேட்டீங்கனா.. நான் சொன்னால் நம்ப மாட்டீங்க! என் போல "ரெப்யுட்டேஷன்" உள்ளவர்கள் பின்னூட்டங்கள் முத்துச்சரத்தில் வந்தால், மோசமான "ரெப்யுட்டேஷன்" உள்ள என்னால் முத்துச்சரம் தரம் குறைந்துவிடுமே என்கிற ஐயம்தான் காரணம். இதென்ன, புரியலையேனு சொல்றீங்களா? புரியலைனா விட்டுடுங்க!//

அவர்களே உமது bad reputation தளத்துக்கு தைரியமாக வந்து கருத்திட்டுச் செல்லும் போது உமக்கு என்னய்யா ஐயம்? :-)

வருண் said...

****பிரச்சனை வருமென்று தெரிந்தாலும் சொல்ல நினைந்ததை உரக்கச் சொல்லுவது, தானாக வந்து விழும் பிரச்சனைகளை எதிர்கொண்டு தொடர்வது - இதெல்லாமே எமக்கு பாராட்டுக்குரியதாகத் தெரிகின்றன.***

தணல்: வலையுலகம் ரொம்ப காம்ப்ளெக்ஸ்ங்க. மனநோயாளிகள் பல உலவும் இடம். நான் சீரியஸா சொல்றேன். ஒரே ஆள் பல வடிவங்களில் வரலாம். பலவிதமாக விமர்சனம் செய்து குழப்பலாம். ஒருவரை எளிதாக முட்டாளாக்கலாம். அதனால் எதையும் எதிர்கொள்வதென்பது அர்த்தமற்றது என்று நான் வலையுலக அனுபவத்தில் அறிந்த உண்மை.

வருண் said...

**** தணல் said...

//நீண்டகாலமாகவே நான் முத்துச்சரம் தளம் சென்று பின்னூட்ட மிடுவதில்லை! காரணம் என்னனு கேட்டீங்கனா.. நான் சொன்னால் நம்ப மாட்டீங்க! என் போல "ரெப்யுட்டேஷன்" உள்ளவர்கள் பின்னூட்டங்கள் முத்துச்சரத்தில் வந்தால், மோசமான "ரெப்யுட்டேஷன்" உள்ள என்னால் முத்துச்சரம் தரம் குறைந்துவிடுமே என்கிற ஐயம்தான் காரணம். இதென்ன, புரியலையேனு சொல்றீங்களா? புரியலைனா விட்டுடுங்க!//

அவர்களே உமது bad reputation தளத்துக்கு தைரியமாக வந்து கருத்திட்டுச் செல்லும் போது உமக்கு என்னய்யா ஐயம்? :-)

24 August 2012 6:34 PM***

உங்களுக்கு இதெல்லாம் புரியாதுங்க! :))))))

தணல் said...

//அதனால் எதையும் எதிர்கொள்வதென்பது அர்த்தமற்றது என்று நான் வலையுலக அனுபவத்தில் அறிந்த உண்மை.//

I agree! முதிர்ச்சியடைந்த எதிர்கருத்தாளர்களை எதிர்கொள்ளுவது சுவாரசியமாக இருக்கும். மனநோயாளிகளை தூக்கிக் கடாசிட்டுப் போயிடணும்.

பலவடிவங்களில் வர்றவனை விட பலவிதமாக விமர்சனம் செய்து குழப்புறவன் (இதுவரை அப்படி ஒருவனைக் கண்டதில்லை) கழண்ட கேசாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம்!

தணல் said...

I understood what you meant, but I do not understand what all 'serious' consequences it can cause :-)

கிரி said...

:-) ராமலக்ஷ்மி அவர்களின் தளம் பற்றி நீங்கள் கூறியது உண்மை தான். சினிமா பற்றி எழுதாமல் காலத்தை ஓட்டுவது பெரிய விஷயம்.

வருண் said...

வாங்க, கிரி! :-)