Monday, February 18, 2013

குடிகாரர்கள் பற்றி! என் தேசம் என் மக்கள்!

அமீர்கான் நடத்திய "சத்யமே ஜெயதே"  ஷோ போலவேதான் இருக்கு இந்த "என் தேசம் என் மக்கள்" என்கிற ஒளிபரப்பு நிகழ்ச்சி. ஒரிஜினல் ஷோனு சொல்லவே முடியாது! அதனைத் தழுவி எடுத்த ஒரு ஷோதான் இது!
 குடிக்க மாட்டேன், குடிக்ககூடாதுனு சொல்றது பேசுறது, அறிவுரை வழங்குறதெல்லாம் இந்தக் காலத்தில் புளிச்சுப்போன சமாச்சாரம்! ஆமாம் இந்தக்காலத்து பெண்ணியவாதிகளிடம் போயி கற்பு பத்தி பேசுற அளவுக்கு "கேலிக்கூத்தான" மேட்டராக ஆயிப்போச்சு.

டாஸ்மாக் வியாபாரம் பிச்சுக்கிட்டுப் போய்க்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இதுபோல் ஒரு விசயத்தை, அதன் தீமைகளை மக்களுக்கு எடுத்துக்காட்டி விமர்சிப்பது ரொம்ப அவசியம். நான்கூட யோசித்ததுண்டு ஏன் நம்ம ஊர்ல "குடிக்கிறது  என்பதே" ஒரு கேவலமான விசயம்னு ஆக்கிப்புட்டாங்க! வெள்ளைக்காரர்கள் எல்லாம் சாதாரணமாக குடிக்கும்போது ஏன் நம்ம ஊர்ல மட்டும் இப்படி?  ஒரு வேளை நம்ம மக்களுக்கு பொது அறிவு, பகுத்தறிவு எல்லாம் ரொம்ப கம்மியோ? என்றெல்லாம் யோசிச்சதுண்டு.

குடிக்கு அடிமையாகிவிட்டால் ஒருவன் எதைப்பத்தியுமே கவலைப் படமாட்டான். இந்த எத்தில் ஆல்கஹால் என்கிற சின்ன மூலக்கூறு ஒருவனை அடிமைப்படுத்திவிடும் என்பதை கண்கூடாக பார்த்து, அனுபவிச்சுத்தான் நம் முன்னோர்கள் "குடி"யை பயங்கர கெட்ட வார்த்தையாக, உலகிலேயே மிக மோசமான கெட்ட பழக்கமாக நினைத்துள்ளார்கள்னு இந்த ஒளிபரப்பில் காட்டப்பட்ட ஒரு சிலர் மறுபடியும் உறுதிப்படுத்தினார்கள். அப்புறம் வெள்ளைக்காரன்ல நாசமாப் போனவனுகளை பார்க்கனும்னா, நீங்க் " rehab" போய்ப் பார்க்கணும். வெள்ளைக்காரன் எல்லாம் இதுக்கு விதிவிலக்கெல்லாம் கெடையாது!

 


மாதம் ஒரு முறை குடிப்பது வாரம் ஒரு முறையாகி, தினம்தோறும் என்று ஆகும்போது ஒருவன் குடிகாரனாகிவிடுகிறான். "எத்தனை பேரு இப்படி ஆகிவிடுகிறார்கள்?"  என்பதல்ல முக்கியம், ஒருவருமே "குடிகாரன்" ஆகக்கூடாது என்பதற்காகத்தான் "குடி குடியைக் கெடுக்கும்"னு அனுபவித்து சொல்லியுள்ளார்கள்.

எனக்குத் தெரியவே, சாமிநாதன் னு ஒரு சைக்கிள் கடை வைத்திருந்தவர், பயங்கரமான திறமைசாலி. குடிக்க ஆரம்பிச்சு, மாதம் ஒருமுறை, வாரம் ஒரு முறையாகி, தினந்தோறும் குடினு ஆகி  நாசமாப் போகி குடிக்கு அடிமையாக கொஞ்ச வயதிலே பெண்டாட்டி பிள்ளைகுட்டிகளை நடுத்தெருவில் விட்டுவிட்டு செத்தார்.

அதன் பிறகு ஒரு நகைக்கடை வியாபாரி ஒருத்தன், பேரு, கணேஷ்குமார், பள்ளி கல்லூரியில் படிக்கும்போது எந்தவிதமான கெட்டபழக்கமும் இல்லாதவ்னாக இருந்த இவன், கல்யாணமான பிறகு இதே போல் மாதமொருமுறை, வாரம் ஒரு முறையாகி, தினந்தோறும்னு ஆகி அண்ணன் சாமிநாதன் நிலைக்குப் போயிக்கொண்டிருந்தான். டாஸ்மாக் ல வேலை பார்க்கும் நண்பனை (இவனுக்கு சப்ளை செய்றவன்) கன்னா பின்னானு எல்லாரும் திட்டி தீர்த்தோம். அப்புறம் எப்படியோ நிறுத்திவிட்டான்னு சொன்னாங்க. நிறுத்தி மறுபடியும் ஆரம்பிச்சானா என்ன எழவுனு தெரியலை.

குடி குடியைக்கெடுக்கும் என்பது முற்றிலும் உண்மைதான்...ஒரு நாள் குடிக்கும், அதற்கு அடுத்த குடிக்கும் உள்ள இடைவெளி குறைந்து கொண்டே வந்தால், அல்கஹால் முதன்மையானதாகவும் மற்றதெல்லாம் (அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள்) எல்லாருமே ரெண்டாவதுதான்னு ஆகிவிடும்!

இது குடிக்கிற எல்லா மேதாவிகளுக்கும் தெரிந்த விசயம்தான். இருந்தாலும் சமீபத்தில் இணையயுலகம் முதல்க்கொண்டு பல இடங்களில் குடியில் உள்ள அபாயம் மெத்தனப்படுத்தப் படுகிறது என்பதால் இதைப் பத்தி பேச வேண்டிய கட்டாயம்!

குடி எவ்வளவு அபாயகரமானது என்பதை ஞாபகப்படுத்தி, குடியால் நாசமாப் போனவர்களை காட்டி, அதை கண்கூடாக ஒளிபரப்பில் காட்டிய விஜய் டி வி க்கும், அன்பர் கோபிநாத் க்கும் ஒரு சபாஷ்!

6 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நகர்ப் பகுதிகளில் கல்லூரி மாணவர்களிடையே பீரில் தொடங்கும் இந்தப் பழக்கம் மெல்ல மெல்ல ஆல்கஹாலுக்கு அடிமை ஆக்கி விடுகிறது. பிற வகை போதைப் பொருட்களுக்கும் இட்டுச் செல்கிறது.புத்திசாலிகள் தப்பித்து விடுகிறார்கள்.

கிரி said...

//அமீர்கான் நடத்திய "சத்யமே ஜெயதே" ஷோ போலவேதான் இருக்கு இந்த "என் தேசம் என் மக்கள்" என்கிற ஒளிபரப்பு நிகழ்ச்சி. ஒரிஜினல் ஷோனு சொல்லவே முடியாது! அதனைத் தழுவி எடுத்த ஒரு ஷோதான் இது!//

வருண், இரண்டுமே ஸ்டார் குரூப் அதனால் கூட இருக்கலாம்.

உஷா அன்பரசு said...

நல்ல பதிவு. குடிப்பதை பெருமையாக பகிரங்கமாக சொல்லிக்கொள்கிறார்கள். முக்கியமாக இளைஞர்கள். எந்த பெண்களும் குடிப்பவர்களை விரும்புவதில்லை. (விதி விலக்காக குடியை நேசிக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. )

வருண் said...

தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி, @ முரளி, @ கிரி, @ உஷா அன்பரசு!

அகலிக‌ன் said...

மெத்த படித்தவர்களாகவும் மேதாவிகளாகவும் அறியப்படுபவர்களே குடியை ஆதரித்துத்தான் பேசுகிறார்கள். கள்ளச்சாராயத்தை காரணம்காட்டி அரசே டாஸ்மாக் கடைகளுக்கு நீயாயம் கற்பிக்கிறது. இந்த கேவலத்திற்கிடையில் குடிக்காதே என்று சொல்பவன் கேனயனாகப்பார்கப்படுகிறான்.

வருண் said...

***அகலிக‌ன் said...

மெத்த படித்தவர்களாகவும் மேதாவிகளாகவும் அறியப்படுபவர்களே குடியை ஆதரித்துத்தான் பேசுகிறார்கள். கள்ளச்சாராயத்தை காரணம்காட்டி அரசே டாஸ்மாக் கடைகளுக்கு நீயாயம் கற்பிக்கிறது. இந்த கேவலத்திற்கிடையில் குடிக்காதே என்று சொல்பவன் கேனயனாகப்பார்கப்படுகிறான். ***

உங்கள் ஒவ்வொரு வரியும் உண்மை நிறைந்தது! கருத்துக்கு நன்றி! :-)