Wednesday, February 6, 2013

பதிவர் திரு டோண்டு ராகவன்!

பதிவுலகில் கடந்த 5 ஆண்டுகளாகத்தான் நான் எதையாவது எழுதிக்கொண்டு இருக்கிறேன். பல ஆண்டுகளாக திரு. ராகவன் அவர்களின் வயதோ, அவர் வளர்ந்த காலகட்டங்களோ எனக்குத் தெரியாது. அவர் வளர்ந்த சூழலில் தமிழ்நாட்டு அரசியல் நிலைப்பாட்டால், அவர் பலவாறு பாதிக்கப்பட்டதோ, அதனால் அவர்  அனுபவித்த வலிகளோ, அவர் மனதில் ஏற்பட்ட வடுக்களோ, அல்லது அதனால் அவரிடம் இருந்து வரும் கருத்துக்களோ  எனக்கு சரிவர புரியவில்லை. மேலும் அவரை நேரில் சந்தித்ததில்லை, அவரிடம் பேசியதில்லை - மென் மடலில்கூட- தனிப்பட்ட முறையில் அவரை சுத்தமாக எனக்குத் தெரியாது.

பொதுவாக திரு. ராகவன் அவர்கள், பார்க்கும் கோணத்திற்கும், அவர் கருத்துக்கும், நான் பார்க்கும் கோணத்திற்கும், என் கருத்துக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான்! ஏன் என்றால் சமுதாயத்தில் அவர் சூழலில் நான் வளரவில்லை. அவர் பெற்ற கசப்பான அனுபவங்களோ, அவர் ரசித்த இனிமையான அனுபவங்களோ நான் அனுபவித்ததில்லை!  அதனால் அவர் உணர்வுகளை சரிவர புரிந்துகொள்ள முடியாமல் அவரையும் அவர் பதிவுகளையும் பலவிதமாக விமர்சித்து இருப்பவன் நான். இருப்பினும் ஒரு சில தருணங்களில் "நமக்குள் இருப்பது வெறும் கருத்து வேறுபாடுதான், திரு. ராகவன்" என்பதை அவர் தளத்தில் அவரிடம் பின்னூட்டத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறேன். பெரிய மனிதன் என்பதால் திரு ராகவன், கருத்து சம்மந்தமான என் நிலைப்பாட்டை சரி வர புரிந்து கொண்டார் என்றே சொல்ல வேணும்.

திரு ராகவன் அவர்கள், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கும்போதும் "தொடர்ந்து, பதிவுலகில் தன் அனுபவத்தை (கஷ்டங்களைக்கூட) பலருக்கும் உதவும் வகையில் ஆக்கப்பூர்வமாக எழுதி, அதை பகிர்ந்து கொண்டிருக்கிறாரே?" என்று அதிசயமாக இருக்கும் எனக்கு. மேலும் சமீபத்தில் அவர் தளத்தில் வந்த மிகவும் உற்சாகமாகப் பதிவுகளையும், பிறதளங்களில் எழுதும் அவர் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது, "திரு ராகவன் அவருக்கு வந்த நோயை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வென்றுவிட்டார், இனிமேல் தொடர்ந்து நிறையப் பதிவுகள் எழுதுவார்" என்றுதான் நேற்றுக்கூட நினைத்தேன் ! திடீர் என்று அவருக்கு ஏற்பட்ட Cardiac arrest ஆல் அவர் நம்மை எல்லாம் விட்டு சென்றுவிட்டார் என்கிற இன்றைய செய்தி என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கண்ணீர் அஞ்சலி!
We miss you, Mr. Raghavan
I must say this, Mr Raghavan was a unique blogger! He has a special place and nobody can ever replace his place in the Tamil blog world! His sudden demise from us and the blog world is kind of looks so "incomplete" and "unacceptable" to me. I am sure, he must have had so many unfinished jobs (posts and responses to others' views to share with us) when he suddenly left from us and the blog world forever. :(  His demise is a great loss to Tamil blog world. I will miss him. I will miss his posts and responses.

My heartfelt condolences to his family and his relatives and friends who know him personally well. I want them to know Tamil bloggers (who likes and dislikes his posts and responses) are going to miss him as much as they do. I want them to know, Mr. Raghavan will be there in our thoughts as long as we live! And of course his posts will live for ever in Tamil blog world.

13 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அவரது பதிவுகளைப் படித்ததில்லை.செய்தி அறிந்து வருந்தினேன். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

துளசி கோபால் said...

மனம் குழம்பிப்போய் இருக்கிறேன் வருண்.

மிகவும் வருத்தமான செய்தி அவர் மறைவு:(

வருண் said...

**T.N.MURALIDHARAN said...

அவரது பதிவுகளைப் படித்ததில்லை.செய்தி அறிந்து வருந்தினேன். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.***

கடந்த ஒரு வருடமாக அவர் வலையுலகில் அதிகமாக பதிவுகளோ பின்னூட்டமோ எழுதுவதில்லைங்க முரளி. கடந்த ரெண்டு வாரமாக மறுபடியும் நெறையா எழுதுவதுபோல தோணுச்சு. இன்று காலையில் பார்த்தால் துயரச் செய்தி! :(

SathyaPriyan said...

வருத்தமான நிகழ்வு.

Love him, hate him, but you cannot ignore him :-(


ராமலக்ஷ்மி said...

ஆழ்ந்த இரங்கல்கள்! பிரிவில் வருந்தும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கப் பிரார்த்திப்போம்.

வருண் said...

@ துளசி டீச்சர்
@ சத்யபிரியன்
@ ராமலக்ஷ்மி

தங்கள் இரங்கல்களையும், வருத்தங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

tech news in tamil said...

மிகவும் வருத்தமான செய்தி அவர் மறைவு.....அவரது ஆன்மா அமைதியடையட்டும்

ஜோதிஜி said...

பெரிய ஆலமரம் வேறொரு சாயும் போது உண்டான அதிர்வை வலையுலகம் முழுக்க பார்த்தேன் படித்தேன்.

எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கல் அஞ்சலிகள்.

Unknown said...

ஆழ்ந்த இரங்கல்கள்...

Peppin said...

Very sad and shocking news!

வருண் said...

@ ஆட்டோ மொபைல்
@ ஜோதிஜி
@ஆயிஸா
@ பெப்பின்

தங்கள் இரங்கல்களையும், வருத்தங்களையும் இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

Arun Ambie said...

நல்ல மனிதர். என் வரையில் சிறந்த வழிகாட்டி. நேர்மையானவர். இழப்பை ஏற்க முடியவில்லை. ஆனாலும் இந்தச் சோகமும் கடந்து போகும் என்று நடைபோட விழைகிறேன்.

வருண் said...

Hi Arun!

I am really sorry that you lost one of your very good friends and a "mentor" of you! :( I know how hard it is for you to lose a good freind!