Saturday, February 2, 2013

சாருநிவேதிதாவுக்கு ஒரு சபாஷ்!

எழுத்தாளர் ஜெயமோகன் அவர் தளத்தில் விஸ்வரூபம் பற்றி ஒரு பதிவைப் போட்டுவிட்டு அடுத்த நாளே அதை தூக்கி விட்டார்! யார் என்ன எச்சரிக்கை செய்தார்கள்ணு தெரியலை. இப்போ நம்ம சாருவின் விஸ்வரூபம் சம்மந்தமான விமர்சனத்தை பாருங்கப்பா!!!இதுவும் எத்தனை நாள் இருக்குமோ, தெரியலை!

என்ன கொடுமை இது, வருண்?! நம்ம சாரு, முழுநேர ஜெயா ஜால்ரானு தெரியாதா?னு என்னை நானே கேட்டுக்கிறேன். இருந்தாலும், சாருவின் இந்த விமர்சனம் நான் பார்க்கும் கோணத்தில் இருப்பதால் நானே சாருவை சபாஷ் போட்டுப் பாராட்டவேண்டிய நிர்பந்தம்! :)

விஸ்வரூபம்

விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன்.  அதற்குப் பல காரணங்கள்.  கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம்.  இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன்.  அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது.  என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம்.  ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.
ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும்.  தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.  இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன்.  விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது.  நான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது.  அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே  கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்?  அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?  இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்?  அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள்.  ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்?  கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?  ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும்  சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான். கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை.  பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது.  அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.
இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை.  ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன்.  நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும்.  அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன்.  அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது.  வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது.  சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில்.  ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை.  ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது.  ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள்.  அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள்.  ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.
விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன.   ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம்.  மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது…

இதைப்பத்தி யாராவது (சாருவை தனிநபர் தாக்குதல் செய்யாமல்) இதில் சாருவின் கருத்து  பற்றி எதுவும் சொல்லணும்னா சொல்லுங்கப்பா! நன்றி

17 comments:

சார்வாகன் said...

மச்சான் வருண்,

நான் கருத்து சொல்கிறேன்.

9/11 நடத்தியது அல் கொயதா என்ற வகையில் அமெரிக்கா ஆஃப்கனில் தாக்குதல் நடத்தியது!!. ஆஃப்கனில் சோவியத்துக்கு எதிராக ஆயுதக் குழுக்களை உருவாக்கிய அமரிக்கா அவர்கள் கைமீறியதும் அழிக்க முற்பட்டது!!.

அமெரிக்க இராணுவத்தில் பணிபுரியும் ஒரு முஸ்லிம், அங்கு செல்ல போரிட மறுக்க மாட்டார்!!

http://www.nytimes.com/2009/11/09/us/09muslim.html?pagewanted=all&_r=0

அதனைத் தமிழில் காட்டினார் கமல் அவ்வளவுதான்!!

தமிழில் ஹசன் என்பவர் எழுதிய " சிந்து நதிக் கரையினிலே " என ஒரு புத்த்கம் உண்டு அதில் முகமது பின் காசிம் படையெடுப்புக்கு முன் இங்கு நாகரிகமே அற்ற மனிதர்கள் வாழ்ந்தது போல் சித்தரித்து இருப்பார்!!

அதுக்கு யாருமே த்டை விதிக்க கோரவில்லையே!!

அங்கு அப்போ நடந்தத்தை ஏன் தமிழில் எழுதுகிறாய் என்க் கேட்கலாமே!!

அம்மா புண்ணியத்தில் அல் கொயதா,தலிபான் எல்லாம் மார்க்கப்போராளின்னு மார்க்க பந்துக்கள் சொல்லிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்!!!
எங்கு கொண்டு போய் விடுமோ?


நித்தியானந்தாவின் பகவத் கீதை பிரச்சாரம் கூட நன்றாகவே இருக்கும்.. அதுக்கு...

நான் அந்த ஆளு எழுதிய எதையும் படித்தது இல்லை!!!

சாரு எத்தனை கதைகளில் அமெரிக்காவைத் தாக்கி, இஸ்லாமை போற்றி எழுதி இருக்கிறார்!!!

நன்றி!!!

வருண் said...

மச்சான் சர்வாகன்!

என்னைப் பொறுத்தவரையில் இந்துக்களும், பார்ப்பனர்களும், "நாத்திகவாதி வேடமிட்டு"த் திரியும் பொதுநலவாதிகளும், இஸ்லாமியர்களை விஸ்வரூபத்தில் இழிவுபடுத்தவில்லைனு சொல்ல அருகதையற்றவர்கள்.

இந்த எதிர்ப்புத் தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை விடுங்கள், உலகில் சாதாரண மிதவாதி இஸ்லாமியர்கள் எத்தனையோ கோடி இருக்காங்க. அவங்க எல்லாம் வந்து இந்தப்படத்தில் எங்களை எந்த வகையிலும் இழிவு படுத்தவில்லைனு சொன்னால் அதை வேணா எடுத்துக்கலாம்.

அப்படி அவர்கள் ஏகமனதா சொல்றாங்களா???

இல்லையே!

சார்வாகன் said...

மச்சான் வருண்,

உலகில் நடக்கும் விடயங்கள் யார் விரும்பும் படி எப்போதும் நடக்காது. நடப்பது கலை,ஊடகங்களில் பிரதிபலிக்கும் அவ்வள்வுதான், இதில் என்னையே சொல்ரான் என நினைப்பவர்களை எல்லாம் சமாதானப் படுத்த முடியாது!!.

அமெரிக்காவில் வாழும் இராணுவத்தில் பணியாற்றும் ஒரு முஸ்லிம் ஆஃப்கன்,ஈராக் என எங்கும் பணியாற்றுவார்!!.

அவருக்கு எது சரி தவறு என்பதை விட கடமையே முக்கியம்!!!

இதனை திரைப்படத்தில் காட்ட‌ககூடாது என்றால் எப்புடீ?

ஏன் அல் கொயதா ஆளா நினைக்கனும், அந்த முஸ்லிம் அமெரிக்கரும் 5 வேளை தொழுது,தலிபான் அல் கொய்தாவை தாக்குகிறார் என காட்டினால் சரியாப் போய்விடுமே!! இதுக்கு போய்!!!

காஷ்மீரை இந்திய ஆக்கிரமிப்பு என பாகிஸ்தான் சொல்கிறது, அங்கு இந்திய இராணுவத்திலும் முஸ்லிம்கள் உண்டு. காஷ்மீரைப் பாதுகாக்கும் இந்திய ராணுவத்தில் மூமின்கள் பணியாற்றக் கூடாதா!!!

காஷ்மீர் முஸ்லிம்கள்,பாகிஸ்தான் தீவிரவாதி எனப் பல படம் வந்த போது கொதிக்க வில்லையே!!

நேற்று கூட 33 பாகிஸ்தான் இராணுவத்தினரை தலிபான்கள் கொன்று விட்டார்!!.

நான் பாகிஸ்தான் இராணுவம் பாவம் என்கிறேன்!! இதனை திரைப்படத்தில் காட்டினால் தவறா!!

தாசிடம் வாங்கி கீதை படிக்கோணும்!!

எதிர் நிற்பவன் யாராக இருப்பினும் கடமைக்காக் போர் புரிவதே வீரம்!!


**
இப்ப உண்மையைப் பேசுவோம்!!

லோக நாயகரு பட வியாபாரத்தில் டப்புக்காக பல குளறுபடி செய்ய,அம்மா கடுப்பானார்!!

சுப்ரமண்ய சாமிக்கு நடந்த மகளிர் அணி வசவு!!

காஞ்சி சாமிக்கு கஞ்சி காய்ச்சியது வரிசையில் இதுவும் ஒன்று!!

அம்மா கண்ணசைவுக்கு மார்க்க கட்டைப் பஞ்சாயத்து கோஷ்டிகள் சவுண்டு விட்டார்கள் அம்புட்டுத்தான்!! இதைப் போய் .....

வெறும் 7 இடத்தில் ஒலி மாற்றமாம்,அன்னைக்கே சொல்ல வேண்டியதுதானே!!


சும்மா மச்சான்!!

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே
காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே

நன்றி!!

Adirai Iqbal said...

அவர் ஒரு அமெரிக்க வீரராக நடித்துவிட்டு போகட்டும் எங்களுக்கு ஒன்றும் கவலை இல்லை. கடமையை செய்யட்டும்.

ஏன் இந்தியாவில்கூட ஆங்கில ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடும்பொழுது போராளிகளை தாக்கியவர்கள் ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியில் ராணுவத்திலும், காவல்துறையிலும் பணியாற்றிய இந்தியர்களே அதிகம். உங்கள் வார்த்தையில் சொல்லப்போனால் அது கடமை உணர்ச்சி. எனது பார்வையில் அது அடிமை சேவகம்.

இங்கு அதுவல்ல பிரச்சினை. படத்தில் அமெரிக்காவின் கொடூர முகத்தை மறைத்து அங்கு ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடும் அந்நாட்டு மக்களை தீவிரவாதியாக காட்டும் கயமைத்தனம். உங்கள் வார்த்தையில் கடமை உணர்ச்சி அதுதான் பிரச்சினை. அவர்களை தாலிபான் , பயங்கரவாதி, தீவிரவாதி எப்படி வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளுங்கள். அனால் அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்காக போராடும் சுதந்திர போராட்ட தியாகிகள்.

ஆப்கான் மக்களின் பிம்பங்கள் அமெரிக்க சார்பு ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்டவையே . என்னை பொருத்தவரை மக்கள் அவைகள் எந்த இயக்களின் மூலமாகவேனும் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற போராடுகிறார்கள் அவ்வளவுதான்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.வருண்,
நான் ஏற்கனவே படித்து விட்டேன். அங்கே கமெண்ட்ஸ் குளோஸ் பண்ணி வைத்து இருக்கார். கருத்து சுதந்திரத்துக்கு அட்டாக் வரும் என்று பயப்படுகிறார் போலும். ஜெ.மோ நீக்கி விட்டார் என்றால்... இது அவருடைய கருத்து சுதந்திரம் என்று எவரும் ஈசியாக எடுக்க வில்லையா..?

நடப்பதை - நடந்ததை அப்படியே சினிமாவில் காட்டினால் ஓகே. அதை திரித்து ஒரு பக்க சார்பில் மட்டும் பொதுமைப்படுத்தி உண்மைக்கு புறம்பாக காட்சிப்படுத்தும் போதுதான் எதிர்ப்பு வருகிறது.

Unknown said...

சகோ.வருண்

எல்லோருமே வாய் கிழிய பேசுவாங்க ..!! கேபிள் சங்கர்ட்ட " என்னத்த சொல்ல " அப்பிடின்னு ஒரு பதிவு..ஒரு முஸ்லிமான ஆள் போல இவரிடம் போன் போட்டு விவேகம் இல்லாத தன்னுடைய ஆதங்கத்தை காட்டி இருக்கிறார்..இவர் தான் அறிவாளி என்றால் அவர் கூற வருவதின் சாராம்சம் புரிந்து கொண்டு அதை பற்றி பேசி முடித்து இருக்கலாம்..!! நானும் அவர் பதிவுல போய் கேட்டு பார்த்துட்டேன் ....அமெரிக்க சார்பு கொண்டமாதிரியே படம் எடுப்பதற்கு என்ன அவசியம்..ரெலீசுக்கு முன்பே அவன்ட அவன் இடத்துல போய் போட்டு காட்டுவதற்கு என்ன நோக்கம்..ம்ம் ஹும்ம்..இப்ப வரைக்கும் பதில் இல்லை..இந்த கேள்வி அவருக்கு தெரியாம இருக்க வாய்ப்பு இல்லை..கமேண்ட்ட் மாடரேசன் வச்சிருக்காரு ...!! இதுல ஒரு அப்பாவி கால் பண்ணி தன்னுடைய பலகீனமான ஆதங்கத்தை தெரியப்படுத்துனா அதை நக்கல் வேற பண்றது...!!

கமலின் விஸ்வரூபம் பலரின் முகத்திரையை கிழித்தது என்றால் அது மிகை இல்லை..!! (பாரதி ராஜ.., அஜித் , etc ...)

suvanappiriyan said...

சாருவிடமிருந்து ஒரு மாறுதலான விமரிசனம். ரசித்தேன்.

சார்வாகன் said...

சகோ அதிரை வாங்க ஸலாம்!!

உங்களின் இந்தக் கருத்தையும் ஏற்காத ஆட்கள் இருப்பார்கள்!!

//அவர் ஒரு அமெரிக்க வீரராக நடித்துவிட்டு போகட்டும் எங்களுக்கு ஒன்றும் கவலை இல்லை. கடமையை செய்யட்டும்.//

அமெரிக்க முஸ்லிம் இராணுவ வீரர் போரிடும் ஆணை கேட்டு நடப்பாரா இல்லை!!. தன்க்கு தோன்றும் நீதி நியாயங்களை கேட்டு நடப்பாரா!!

பாமர மக்களின் வாழ்வு வேறு, அரசு,இராணுவம்,உளவுத்துறை, தீவிரவாத இயக்கம் ஆகியவற்றின் வாழ்வு வேறு!!

இத்னைப் பிரித்து பார்க்கத் தெரியாது, அனைத்தையும் மதம்,பிரிவு சார்ந்து பார்ப்பேன்,அதன் படியே அனைவரும் பார்க்க வேண்டும் என்றால் நடக்கும் விடயம் அல்ல!!

அல் கொய்தா, தலிபான் உலகிற்கே பெரும் தொல்லையாக இருப்பதை முஸ்லிம் நாடுகள் உள்ளிட்டு பல நடுகள் உணர்ந்து விட்டன.

சவுதி யேமனில் உள்ள அல் கொய்த தளங்களை அவ்வப்போது குண்டு வீசி அழிக்கும். சவுதியில் உள்ள நம் சகோக்கள் த்வறு என் அங்கு பேசினால்
சங்குதான்!!
http://www.aljazeera.com/news/middleeast/2009/11/20091123133924522522.html

நேற்று கூட பாகிஸ்தான்,ஆஃப்கன் நாடுகளில் அதிபர், இராணுவ‌,உளவு தலைமைகள் அல் கொய்தா,தலிபான் ஒழிப்பினை 2014க்கு முன்,[ மேலை நாட்டுப் படைகள் வாபஸ்] செய்வது பற்றி ஆலோசனை நடத்துகிறார்.

http://dawn.com/2013/02/02/british-pm-to-host-pakistani-afghan-leaders/

கஜினி முகம்மதின் நாட்டில் அப்போது வாழ்ந்த ஒரு வரலாற்று ஆசிரியர் அவனது படையெடுப்புகள் பற்றி எழுதிய புத்தகத்தில் கஜினியின் வீரம்,இங்குள்ளவர்களை வென்றது குறித்தும் போற்றுகிறார்.
http://en.wikipedia.org/wiki/Mahmud_of_Ghazni

எனக்கு அதுவும் சரியே!!கோபம் வராது!!


இதுவரை சாரு அமெரிகாவை விமர்சிதோ,இஸ்லாமைப் போற்றியோ எதுவும் எழுதி இருந்து இப்போதும் அதே பார்வையில் இந்த கருத்து தெரிவித்து இருந்தால் பராட்டலாம்!!

நித்தியைப் பாராட்டும் மக்கள் சாரு,மதுரை ஆதினம் போன்றோர் இஸ்லமை பாராட்டுகிறார் என்பது பெருமையா சிறுமையா??

சிந்திக்க மாட்டீர்களா!!

வருண் said...

****சிந்திக்க மாட்டீர்களா!!***

மச்சான் சார்வாகன்!

தொடர்ந்து இந்த வசனத்தை சொல்லிக்கொண்டு இருக்கும் நீங்களூம், கொஞ்சம் சிந்திக்கலாம்!

****இதுவரை சாரு அமெரிகாவை விமர்சிதோ,இஸ்லாமைப் போற்றியோ எதுவும் எழுதி இருந்து இப்போதும் அதே பார்வையில் இந்த கருத்து தெரிவித்து இருந்தால் பராட்டலாம்!!****

சாரு ஒரு கடவுள் நம்பிக்கையுள்ள ஆன்மீகவாதி!

நிங்க என்னவோ சாரு பதிவுகளை எல்லாம் தொடர்ந்து வாசிப்பதுபோல கதை விட்டுட்டு இருக்கீங்க.. :)))

Nasar said...

@ வருண்
**சாருவின் இந்த விமர்சனம் நான் பார்க்கும் கோணத்தில் இருப்பதால் நானே சாருவை சபாஷ் போட்டுப் பாராட்டவேண்டிய நிர்பந்தம்! :) **
உண்மைதான் .....சரியாக சொல்லியிருக்கார் .
மற்றும் இந்த "சிந்திக்கமாட்டீர்களா" என்பவர்
நாத்திக வேஷம் போடும் பக்கா ஆத்திகர் ..
முஸ்லிம்களிடம் மட்டும் வீராப்பா[வெத்து] பேசுவார், மற்றவர்களை பே[எ]சினால் சு--கு எடுத்துடுவாங்க என்கிற பயம் ..கமலைப்போல...

சார்வாகன் said...

மச்சான் வருண்,
//சாரு ஒரு கடவுள் நம்பிக்கையுள்ள ஆன்மீகவாதி!

நிங்க என்னவோ சாரு பதிவுகளை எல்லாம் தொடர்ந்து வாசிப்பதுபோல கதை விட்டுட்டு இருக்கீங்க.. //
சாரு எழுதிய எதையும் படிக்கவில்லை என்பதால் கேட்கிறேன்.

பொதுவாக அமெரிகாவை விமர்சிப்பர்கள் 1. இடது சாரிகள் 2. இஸ்லாமிஸ்டுகள்

இடதுசாரிகளின் பொருளாதரம்,அரசியல் சார்புநிலை சார்ந்து விமர்சனம் வரும்.

2. இஸ்லாமிஸ்டுகளின் பிரச்சினை ,அமெரிகாவின் எண்ணெய் சுரண்டல் என்றாலும் அதற்கு துணைபோகும் சவுதி இபின் சவுத் வம்சம் உள்ளிட்ட மத்திய கிழக்கு ஆளும் வர்க்கத்தை போற்றுவர்.இஸ்லாமிஸ்டுகளின் அமெரிக்க எதிர்ப்பி சந்தர்ப்ப வசமானது.

இந்த வகையில் சாரு நிவேதிதா எழுதி இருக்கிறாரா என சாரு எழுதியதை படிக்காத நான் கேட்டால், [ஒருவேளை] படித்த நீங்கள் ஆமாம் எழுதி இருக்கிறார், இந்தப் புத்தகம் படி எனலாம் ,இல்லை இனிமேல் எழுதலாம், இல்லை என்னமோ இதில ஜெயமோகன் செய்வதற்கு எதிரா செய்யனும் என உதார் விட்டார் என சொல்லலாம்!!

அதை விட்டு!!
***
சகோ நாசர் நான் ஆத்திகவாதி என எப்படி சொல்கிறீர்கள்??

நன்றி!!!

வருண் said...

சார்வாகன் மச்சான்:

அமெரிக்கா, ஆஸ்கர், ஹாலிவுட்டை உங்க ஒலகநாயகன் என்னென்ன விமர்சிச்சு இருக்கார்னு தெரியுமா?

நீங்க பரிணாம எழவுல முழுநேரத்தையும் செலவழிச்சு வாழ்க்கையை வீணாக்கிவிட்டு என்னவோ இடது சாரி வலது சாரினு காமெடி பண்ணுறீங்க.

கொஞ்ச்ம பரிணாமத்தை விட்டுப்புட்டு, கடந்த 15 வருடம் அமெரிக்கா பற்றி கமல்ஹாசன் நிலைப்பாடை என்னணு ஆராய்ங்க. அப்புறம் சாருவைப் பார்க்கலாம்!

புரிந்துக்கோங்க!

Anonymous said...

வருணிடம் பிடித்த விடயம் இது தான். நியாயமோ, அநியாயமோ, பாராட்டியோ, திட்டியோ விடுவார், நிச்சயம் உங்கள் பதிவை வாசித்த பிச்சைக்காரன் ஆனந்த் உங்களை பற்றி சாருவிடம் கூறி இருப்பார், அவரது பாங்க்காக் ( பழவேற்காடு அருகில் ) சுற்றுப் பயணத்தின் போது உங்களையும் டக்கீலா (டாஸ்மாய் உபயம் ) பார்ப்புக்யு ( பொரிச்ச கறுவாடு ) பார்ட்டிகு உங்களையும் அழைத்துச் செல்வார். இந்த வாய்ப்பு சில வாரத்துக்கு மட்டும் தான். முந்திக் கொள்ளுங்கள் . :)

சார்வாகன் said...


வருண் மச்சான்,
//கொஞ்ச்ம பரிணாமத்தை விட்டுப்புட்டு, கடந்த 15 வருடம் அமெரிக்கா பற்றி கமல்ஹாசன் நிலைப்பாடை என்னணு ஆராய்ங்க. அப்புறம் சாருவைப் பார்க்கலாம்!//

அப்போ சாரு பத்தி நீங்களும் படித்தது இல்லையா!! செம கிளுகிளுப்பா எழுதுவாருன்னு ஜீரோ டிகிரி பத்தி கேள்விப் பட்டேன்!!

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=392

[[வன்முறை, செக்ஸ், கொடூரம் இவற்றையே நாவலில் அதிகம் பதிவு செய்திருக்கிறீர்கள். லத்தீன் அமெரிக்க எழுத்துக்களின் தாக்கமா?' என்ற கேள்விக்கு,


'இல்லை. இந்தளவுக்கு வன்முறை, கொடூரங்கள் பற்றி எழுதுவதற்கு அமெரிக்க எதிர்கலாச்சார எழுத்துகளின் பாதிப்பே காரணம்' என்றார்.]]

சாரு இஸ்லாமைப் பற்றி சீக்கிரம் எழுத வேண்டும் என்பதே நம் ஆசை!!
**

நாம் எப்போதும் கேள்விகளுக்கு விடை தேடுகிறோம். கமல்ஹாசன் ஒரு நடிகர் என்பதால் அவரின் படங்களில் நடிக்கும் பாத்திரங்கள் வைத்து [நான் பார்த்த]மட்டுமே சொல்ல முடியும்!!

1. வறுமையின் நிறம் சிகப்பு,உன்னால் முடியும் தம்பி இடது சாரி படம்தான் !!

2. சோவியத்தின் வீழ்சிக்கு பிறகு தமிழ் திரைப் படங்கள் புரட்சியை ஒதுக்கி விட்டன!!. அதில் கமலும் விதிவிலக்கு இல்லை!!

3. தசாவதாரம்,விசுவரூபம் இரண்டுமே அமெரிக்க ஆதரவுப் படங்களே!!

ஊடகங்கள் மூலம் அறிந்த விடயங்களில் பேச்சில் நாத்திகம், மாமிசம் உண்ணும் நடைமுறை, பூணூல் தவிர்ப்பு, இணைந்து வாழ்தல் என கொஞ்சம் வித்தியாசமான மனிதர்தான்!!!

//அமெரிக்கா, ஆஸ்கர், ஹாலிவுட்டை உங்க ஒலகநாயகன் என்னென்ன விமர்சிச்சு இருக்கார்னு தெரியுமா?//
சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் கதைதான்!!.

நன்றி!!

Nasar said...

@சகோ சார்வாகன்
** சகோ நாசர் நான் ஆத்திகவாதி என எப்படி சொல்கிறீர்கள்?? **
சகோ செந்தில் தளத்தில், ஆத்திகர்களிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் மட்டும் தான் வெடுக்கென்று சொதப்பலான,கதம்பமான ஒரு பதில் என்கிற பெயரிலே கொடுத்தீங்க அத வெச்சித்தான் நீங்க ஒரு பக்கா ஆத்திகர் என்று சொன்னேன் ..
சகோ வருனிடம் எனக்கு புடித்த ஒரு விஷயம் என்னன்னா, எது ஒன்றும் பட்டென்று "கரீட்டா"
சொல்லிவிடுவார்....பாருங்களேன் இப்ப உங்களேயே **கொஞ்ச்ம பரிணாமத்தை விட்டுப்புட்டு, கடந்த 15 வருடம் அமெரிக்கா பற்றி கமல்ஹாசன் நிலைப்பாடை என்னணு ஆராய்ங்க. அப்புறம் சாருவைப் பார்க்கலாம்! **
என்னமா வாரிட்டார் ....ஆஹா ...ஆஹா ...ஆஹா
சூப்பருப்பு வருண்

Nasar said...

@ சகோ வருண் ......

இணையத்தில் ஒரு மாசத்துக்கு முன்பே கமலின் வி/ரூபம்
படத்தை முதன்முதலாக NEGATIVE ஆக விமர்சனம் செய்தவர்
சகோ வே.மதிமாறன் அவர்கள் மட்டும் தான்.....
இப்பகூட இந்த இருவரும் [இ.செ.& ச.கான்] கமலுக்கு ஆதரவாக
கருத்திடுறாங்க ....இவர்கள் நடுநிலைவாதிகளா..???

நன்னயம் said...
This comment has been removed by the author.