இவர் பல "உண்மைகளை" பகிர்ந்து கொள்வதால் இவர் தளத்தை தவிர்ப்பது கொஞ்சம் கடினம். என்னதான் நம்ம சண்டியர் சொல்றாருனு நான் போய் பார்ப்பது வழக்கம்! ஆனால் ஒண்ணுப்பா, ரஜினிமேலேயும், ரஜினி ரசிகர்கள் மேலேயும் இவருக்கு இருக்கும் காண்டு என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கமலஹாசன் என்னும் மிகப்பெரும் கலைஞனை அவனளவுக்கு திறமை இல்லாத ஒரு கன்னடத்தை சேர்ந்த மராத்திக்காரன் பாக்ஸ் ஆஃபிஸில் வெல்வதா? என்கிற ஆதங்கம் அவரிடம் இருக்கு. ஆனால்.. அதுக்காக பொய்யையும் புரட்டையும் எழுதுவது தவறுனு இவருக்கு விளங்க மாட்டேன் என்கிறது. விஸ்வரூபம் வசூல் சாதனை பற்றிச் சொல்லும்போது எதையாவது இஷ்டத்துக்கு சேர்த்து விடுவாரு இவரு. தேவையே இல்லாமல் இவர் ரஜினி ரசிகர்களை அவனாமப்படுத்துவதால் இவரை இவர் தளத்திலேயே போய் திட்ட வேண்டிய அவசியம் ஆகிறது.
சமீபத்தில், internet movie data base என்னும் தளத்தில் சுமார் 24 000 க்கும் மேற்பட்ட மக்கள் கணிப்பில் விஸ்வரூபம் 9.5/10 மதிப்பெண்கள் பெற்ற சாதனையை ஒரு பதிவில் பகிர்ந்து கொண்டார், நம்ம சண்டியர். அது உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், நம்ம சண்டியர் அதோட நின்று இருக்கலாம். அவர் நிக்காமல், எந்திரன் வசூலை விஸ்வரூபம் வீழ்த்தியதாக் ஒரு பொய் செய்தியையும் எந்தவிதமான மனசாட்சியில்லாமல், அதே பதிவில் கோர்த்துவிட்டு எழுதுகிறார். இவர் மூளை வித்தியாசமாக வேலை செய்கிறது. உலக நடப்பு, உண்மை என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க ஒரு பெரிய பொய்யை சாதாரணமாக உண்மை போல் எழுதுகிறார். இது என்னை மாரி உண்மை விரும்பி ஆளுக்கெல்லாம் படு எரிச்சலை கிளப்புது. சரினு இவர் தளத்தில் போய் "உண்மை ஒருபுறம் இருக்க ஏன்யா கதை விடுற?" னு இவரைப் போலவே எதிர்வாதம் செய்தால், நம்ம காமெண்ட்ஸை எல்லாம் தூக்கிவிட்டு, நம்மை விமர்சிச்சு ஒரு பதில் வேற தருவார்.
ஆமா அது அவர் தளம்! அவர் என்ன வேணா செய்யலாம்! வாழ்க சண்டியர்!
இவர் இப்படி ஒருபுறம் இருக்க, இவரை மிஞ்சும் அளவில் தட்ஸ் டமில் தளத்தை சேர்ந்த சங்கர் என்னும் இன்னொரு காமெடியன் கமலஹாசனையும் பலவிதமாக இறக்குகிறான்.
சண்டியர் கரனுக்கு சரியான போட்டி இந்த தட்ஸ்தமிழ் சங்கர்தான்! :)))
விஸ்வரூபத்தை தூக்கிய அமீரின் ஆதிபகவன்... 500 அரங்குகளில் வெளியீடு!
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/02/ameerin-aadhi-bhagavan-kicked-viswaroopam-2-weeks-170280.html
வெளியான இரண்டே வாரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளிலிருந்து தூக்கப்பட்டுள்ளது கமல்ஹாஸனின் விஸ்வரூபம். இந்தப் படம் ஓடிய பெரும்பாலான அரங்குகளில் இன்று அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் 40 திரையரங்குகளில் அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. புறநகர்களில் 22 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ரஜினி, கமல் நடிக்காத ஒரு படம் சென்னை நகரில் இவ்வளவு அரங்குகளில் வெளியாகியிருப்பது இதுவே முதல் முறை. ரசிகர்களின் பல்ஸ் என்று கூறப்படும் காசி திரையரங்கில் இரண்டே வாரங்களில் விஸ்வரூபம் எடுக்கப்பட்டு, ஆதிபகவன் போடப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் மொத்தம் 47 அரங்குகளில் விஸ்வரூபம் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 40 அரங்குகளில் படம் எடுக்கப்பட்டுவிட்டது. அவற்றில் பெருமளவு ஆதிபகவன் படமே வெளியாகியுள்ளது. மதுரையில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 8 அரங்குகளில் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. வெற்றி, அமிர்தம், பிக் சினிமாஸ், மதி, அபிராமி, தமிழ்ஜெயா, மணி இம்பாலா உள்ளிட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. திண்டுக்கல், சிவகங்கை, காரைக்குடி, தேனி, பழனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 26 அரங்குகளில் ஆதிபகவன் திரையிடப்பட்டுள்ளது. கோவை நகரில் மட்டும் 11 அரங்குகளில் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட கோவைக்கு இணையாக திருப்பூரில் 9 அரங்குகளில் இந்தப் படத்தை திரையிட்டுள்ளனர். சேலம் ஏரியாவில்தான் அதிகபட்ச அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. சேலம் நகரில் மட்டும் 8 அரங்குகளிலும், மற்ற பகுதிகளில் 42 அரங்குகளிலும் ஆதிபகவன் வெளியாகிறது.நம்ம சண்டியர் மாரியே பொய்களைக் கலந்து எழுதும் சங்கர் போல் ஆசாமிகளைப் பார்க்கும்போது, நம்ம சண்டியர் கரனுக்கு ஏற்ற சரியான வில்லன் ஒருத்தன் உருவாகிவிட்டான் னு சந்தோஷப்பட வச்சிட்டாரு நம்ம கரண்! :)))
என்னைப் பொறுத்தவரையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்றெல்லாம் இந்த விடயத்தில் நான் சொல்ல மாட்டேன். ரெண்டு பேருமே (சண்டியர் கரன் & தட்ஸ் டமில் சங்கர்) பொய்யர்கள்தான்! :)))
11 comments:
அகில உலக சினிமா ரசிகரை பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டதற்காக உங்களை கன்னா பின்னா வென்று கண்டிக்கிறேன்...........
அவரது பதிவில் சமீபத்தில் ஒருவர் கேட்டார் "பின்னால் ஒருவன் தொடர்ந்து வரும் போது எதற்காக கமல் அந்த வேர் ஹவுஸ் பக்கம் செல்ல வேண்டும்?" என்று. அதற்கு அவர் "உங்கள் ஆரிவு என்னை வியக்க வைக்கிறது. மீண்டும் இங்கே பின்னூட்டம் இடாதீர்கள்" என்று நக்கல் செய்கிறார்.
மற்றொருவர், "முதல் பாகத்தின் முடிச்சுகள் எல்லாம் இரண்டாம் பாகத்தில் தான் அவிழும் என்றால் கமல் ஏன் இரு முறை என்னை டிக்கெட் வாங்க வைக்கிறார்?" என்று கேட்டால் அதற்கு அவர், "95 கோடி செலவில் படம் எடுத்து பார், அதன் பிறகு வந்து கேள்வி கேள்" என்று உளறுகிறார்.
மற்றொருவர், "குறைகளையும் கூறுங்கள்." என்று சொன்னால் "பல முறை பார்த்தும் குறை ஒன்றுமே தெரியவில்லை" என்று பேத்துகிறார்.
மேலும் கமல் ஏன் படத்தில் குறட்டை விட்டார்? ஏன் கு* விட்டார்? என்பது போன்ற அதி முக்கியமான கேள்விகளை கேட்டு ஆராய்ச்சி செய்கிறார்.
எட்டாவது பாஸ், பத்தாவது ஃபெயில் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. முடியல......
பின்னூட்டத்தில் சேர்க்க மறந்து விட்டேன்: பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம் இது என்று கருதினால், நீக்கி விடுங்கள்.
வாங்க சத்யப் பிரியன்!
உலக சினிமா ரசிகன் ரொம்ப "touchy character"! ஏதாவது அவரைப் பற்றியோ கமல் பத்தியோ விமர்சிச்சா எளிதில் "ஹர்ட்" ஆகிவிடுவார். அவரை கருந்தேள் கண்ணாயிரம்னு ஒரு பதிவர் ஒரு முறை விமர்சிச்சு ரொம்ப கோவிச்சுக்கிட்டார். :)
அதுக்கப்புறம் எல்லாருமா சேர்ந்து அவரை சமாதானப் படுத்தி மறுபடியும் அவரை பதிவெழுத வச்சாங்க. :)))
ரொம்ப நல்லவர் மாதிரி இருக்கு! :) ஏன் பதிவுலகம்போல கரடு முரடான இடத்துக்குலாம் அவர் வர்ராருனு தெரியலை. :(
வணக்கம்!
வெளியில் வாழ்வைத் தொலைத்துவிட்டு
இருட்டில் தோடுகிறார் வாழ்வை
என்ற புதுக்கவிதை உண்டு!
என்மக்கள்
திரைப்படம் ஒருகலை
அதுவே வாழ்வன்று என்ற தெளிவைப் பெறுவரை இதுபோன்ற பதிவுகள் தொடரவே செய்யும்
இருட்டை வாழ்வின் பேரொளியாய்
எண்ணும் தமிழா் தெளிவுறுக!
சுருட்டைப் பரட்டை காட்சிகளைச்
சொந்தம் என்றே எண்ணாதே!
உருண்டை உலகம்! கண்டுணர்ந்து
உரைத்த பொழுது கேட்டார்யார்?
கருத்தை ஆய்ந்து செயற்பட்டால்
காலம் போற்றும் என்தோழா!
வணக்கம்!
வெளியில் வாழ்வைத் தொலைத்துவிட்டு
இருட்டில் தோடுகிறார் வாழ்வை
என்ற புதுக்கவிதை உண்டு!
என்மக்கள்
திரைப்படம் ஒருகலை
அதுவே வாழ்வன்று என்ற தெளிவைப் பெறுவரை இதுபோன்ற பதிவுகள் தொடரவே செய்யும்
இருட்டை வாழ்வின் பேரொளியாய்
எண்ணும் தமிழா் தெளிவுறுக!
சுருட்டைப் பரட்டை காட்சிகளைச்
சொந்தம் என்றே எண்ணாதே!
உருண்டை உலகம்! கண்டுணர்ந்து
உரைத்த பொழுது கேட்டார்யார்?
கருத்தை ஆய்ந்து செயற்பட்டால்
காலம் போற்றும் என்தோழா!
@ கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன்
தங்கள் கவிதையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, தோழர்! :)
விஸ்வரூபத்தின் உண்மையான வசூல் உங்களுக்குத் தெரியுமா?
அமெரிக்காவில் மட்டும் 60,000 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல்.
60 உலகங்களில் மட்டும் இதுவரை கிடைத்த வசூல் சுமார் 60 லட்சம் கோடி டிரில்லியன் அமெரிக்க டாலர்.
600 உலகங்களில் வசூல் நிலைமை தெரியுமா? சூப்பர் கம்யூட்டராலும் அதைக் கணிக்க முடியாது.
அடுத்து அவர் நடிக்கவிருக்கும் ஆங்கிலப் படத்திற்கு அவருக்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் 6 லட்சம் பில்லியன் அமெரிக்க டாலர்.
நீங்கள் விஸ்வரூபம் படத்தைத் தியேட்டரில் பார்த்தீர்களா?
அந்தத் டிக்கெட்டை நீங்கள் சண்டியர் கரன், மற்றும் உலக சினிமா ரசிகனிடம் காட்டினால் ஒரு மாதம் உங்கள் டாய்லெட் தண்ணீர் செலவு மிச்சம். அவர்களே வந்து கழுவிவிட்டு சுத்தம் செய்வார்கள்.
எவனோ ஒரு கூத்தாடி காசு கொடுத்தால் கோவணத்துடன் நடிப்பான், அதிகமாகக் காசு கொடுத்தால் அதையும் அவுத்து போட்டுவிட்டு நடிப்பான். இவர்களுக்கு என்ன கிடைத்தது?
ராவணன்:
உங்களுக்கும் ஹார்ட் கோர் கமல் ரசிகர்களுக்கும் சுத்தமா ஆகாதுபோல! :)
Post a Comment