Wednesday, February 20, 2013

சாதீயத்தை வளர்க்கும் தளங்களை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்!

ஒரு சில பதிவர்கள் உலகம் அறியாதவர்களாக இருக்காங்களா இல்லை அப்படி நடிக்கிறாங்களா னு தெரியவில்லை. பதிவெழுத ஆரம்பித்த சில மாதங்களில் தன் ஊரைச் சொல்லுறது, அப்புறம் தன் பதிவின் மூலமாக  ஏதாவது ஒரு உண்மைக்கதை சொல்லுவது போல தன் சாதியை பறைசாற்றி விடுகிறார்கள்.  இவர்கள் என்ன செய்கிறார்கள்னு சாதியிலேயே றி அறியாமையில் வாழும் இவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இவர்களை நமக்குப் புரியாதா என்ன?

பதிவுலகில் வந்து தன் சாதியைச் சொல்வதை தவிர்ப்பதை விட்டுவிட்டு எதார்த்தமாக சொல்வதுபோல் தன் சாதியை வேணுமென்றே பறைசாற்றுகிறார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள்?  இவர்கள் வலைதளத்தில் இவர்கள் சாதிக்கூட்டத்தை மறைமுகமாக ஒன்று சேர்ப்பதற்காகனுகூட சொல்லாம்! சாதாரண வாசகனாக, ஒரு தமிழனாக இவர்கள் எழுத்தின் மீது நாட்டம் கொண்டு வாசிக்க வருகிற பதிவர்களை விட "இவன் நம்ம ஆளு" னு வாசிக்க ஒரு கூட்டமே இவர்களுக்குத் தேவைப் படுகிறது என்பது பரிதாபம்.

ஏற்கனவே  இருகிக்கிற  மறுக்க முடியாத மறைக்க முடியாத ஒரு பிரச்சினை..பதிவுலகில் ஒருவர் பெயரை வைத்து அவர் மதத்தை எளிதாக அறிந்துவிடலாம். நாத்திகரான  நீங்க இக்பால் செல்வன்னு வீம்புக்கு பெயர் வைக்காமல் இருக்கும் வரையில் அது எளிது. ஒரு பதிவரின் மதமறிவது பதிவுலகில் எளிது என்பது எல்லாருக்கும் தெரியும். இதை எப்படி தவிர்ப்பது?  முடியாது போலவே? என்று யோசித்துக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் சாதீயம், சாதி அடையாளங்களை சொல்லிக்கொண்டு அலையும்  சாதித்தளங்கள் வளர ஆரம்பித்து உள்ளது.

வலைபதிவர் ஒருவர், மிகக்கவனமாக தன் சாதி அடையாளங்களை வெளியில் சொல்லாமல் இருப்பதில் என்ன பிரச்சினை னு எனக்கு விளங்கவில்லை!

ஏற்கனவே பதிவர்களில் பலரை வெஜிடேரியன் என்கிற ஒரு விடயத்தை வைத்தே ஓரளவுக்கு இவர்கள் பார்ப்பனர்கள்னு யூகித்துவிடலாம். இதில் பலர் நாகரிகம் கருதி,  எவ்வளவுதான் கவனமாக தன் சாதியை வெளிக்காட்டக்கூடாதுனு இருந்தாலும் இவர்களை அடையாளம் கண்டு  கொள்வது எளிது. இவர்களை அடையாளம் கண்டுகொண்டாலும், கண்டு கொள்ளாத மாதிரி விட்டுவிட்டுப் போய்விடுகிறோம்.  முடிந்தவரை இவர்களை ஒரு தமிழ்ப் பதிவராக பார்க்க முயல்கிறோம். சாதியை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களை ஒரு பதிவராகப் பார்ப்பதுதான் அழகு என்று திறந்த மனதுடன் பார்க்கிறோம்.

இது பத்தாதுனு பிராமனர் அல்லாத பிறசாதியைச் சேர்ந்த தமிழ்ப்பதிவர்கள் தன் சாதி அடையாளத்தை வேண்டுமென்றே வெளிக்கொண்டு வந்து, சாதியை, சாதி அடையாளத்தை  ஒழிக்க முடியாதுனு வியாக்யாணம் வேற பேசுகிறார்கள். இப்படி செய்துகொண்டு தான் எதுவும் தவறு செய்யவில்லை, நான் எல்லா சாதியையும் மதிக்கிறேன், சாதியை என் வீட்டில்தான் வைத்திருக்கிறேன் என்று வேறு சொல்கிறார்கள். 

உன் சாதியை நீ உன் வீட்டில் அடைத்து வைத்திருந்தால் எனக்கும் இந்த  உலகுக்கும் உன் சாதி எப்படித் தெரிந்தது? நீ சொல்லாமல்? உன் சாதியை இணையதளத்தில் நீ பறை சாற்றி இருக்கிறாய். அதனால்தான் உலகுக்குத் தெரிகிறது! "உன் சாதி அடையாளத்தை உன் வீட்டில் அடைத்து வைக்காமல் பதிவுலகில் பறைசாற்றியிருக்கிறாய்" என்றுகூட உணராமல் அறியாமையில் வாழ்கிறாய்! மேலும் அதில் ஒரு தவறும் இல்லை, அது என் கருத்துரிமை என்று வேறு சொல்லுகிறாய்!

சாதாரண வாசகனாக இவர்கள் எழுத்தின் மீது நாட்டம் கொண்டு வாசிக்க வருகிற பதிவர்களை விட "இவன் நம்ம ஆளு" னு வாசிக்க ஒரு கூட்டமே வர வேண்டும் என்பதே இவர்கள் முயற்சி. இவர்கள் வலையுலகிற்கு பதிவெழுத வர்ரார்களா? இல்லைனா தன் மஹாஜனக் கூட்டத்தை ஒன்று சேர்க்க வர்ராங்களானு தெரியவில்லை!

உங்க சாதி அடையாளத்தை முன் வைப்பதில் தவறில்லை என்றுதான் ஐயா டோண்டு ராகவன் முதல்க்கொண்டு இன்று சாதி அடையாளத்தை "மறைமுகமாக" வெளியிடும் புதிய பதிவர்கள் வாதம் செய்றாங்க.  

அதை ஒருபோதும் ஏற்கலாகாது! நீங்க உங்க  சாதி அடையாளத்தை உங்க வீட்டிலேயே வைத்து விட்டு அந்த அடையாளத்தை வெளிக்காட்டாமல் இருக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

தமிழ்மணத்தின் முக்கிய பொறுப்பு!

* இதுபோல், எதோ எதார்த்தமாகப் பேசுவதுபோல் தன் சாதியை வெளிக்காட்டி சாதீயத்தை வளர்க்கும் வலைபதிவுகளை வளரவிடாமல் முளையிலேயே இந்தப் பிரச்சினையை கிள்ளி எறிய வேண்டிய  முக்கியப் பொறுப்பு தமிழ்மணம் போன்ற வலைதளங்களுக்கு உண்டு என நான் உறுதியாக நம்புகிறேன்.

தமிழ்மணம், அப்படி எதுவும் செய்யவில்லை என்றால், பதிவுலகில் மதச்சண்டை இன்று நடப்பதுபோல் நாளை, சாதி அடிப்படையில் ஒன்று சேரும் கூட்டங்களும், சாதிச்சண்டைகளும் நடக்கும் அபாயம் இருக்கிறது என்பதை மனதில் கொள்ளுவோமாக! இதை முளையிலேயே கிள்ளி எறிவதுதான் புத்திசாலித்தனம்!

"சாதி வேணும்.." என்று பேசுவது என் கருத்துச் சுதந்திரம், உன் வேலையைப் பாரு! என்று எதிர் வாதம் செய்து சப்பை கட்டுவதை யாரும் எதுவும் சொல்வதற்கில்லை!

ஆனால்..

"தமிழ்மணம் போல திரட்டிகளை உமது சாதீயத்தை வளர்க்க பயன்படுத்த வேண்டாம்!"  என்று சொல்லும் கருத்துரிமை எங்களுக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்க!

36 comments:

சார்வாகன் said...

வருண் மச்சான்,
வணக்கம் அருமையான பதிவு 100% உடன் படுகிறேன்.

சகோ இக்பால் பெயர் பஞ்சாபி பெயர்,மதம் சார் பெயர் மட்டும் அல்ல.அவருடைய உண்மையான பெயருக்கு அவர் என்ன செய்ய முடியும்?.பாருங்க நம்ம பாண்டிச்சேரி ஆளுனர் பேரு இக்பால் சிங்[சீக்கியர்].

http://en.wikipedia.org/wiki/Iqbal_Singh

Iqbal Singh (Tamil: இக்பால் சிங்; born in Sialkot, Pakistan) is the current Lt. Governor of Pondicherry and is an academician in the fields of International Relations, Human Rights and Law. Iqbal has conducted research and held teaching positions at various universities across North America and India

மற்றபடி சாதிப் பெருமை பேசுபவர்களை ஒதுக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை!!!

நான் இந்த சாதி என சொல்லி என்ன சாதிக்க முடியும் என நினைக்கிறார்கள் எனப் புரியவில்லை!!

சாதியை நெத்தியில் பச்சை குத்தி கொள்ளட்டௌம்,ஆனால் பொது தளத்தில் பெருமை பேசுவது அநாகரிகம்!!

நன்றி!!!

இனியா said...

Nalla pathivu... Thevaiyaana pathivu...Nandri!

வருண் said...

***சகோ இக்பால் பெயர் பஞ்சாபி பெயர்,மதம் சார் பெயர் மட்டும் அல்ல.அவருடைய உண்மையான பெயருக்கு அவர் என்ன செய்ய முடியும்?.***

அவர் அப்படி எதுவும் சொல்லவில்லை, மச்சான்! :)

***நான் இந்த சாதி என சொல்லி என்ன சாதிக்க முடியும் என நினைக்கிறார்கள் எனப் புரியவில்லை!!***

அறியாமைதான் இதுவும்.

வருண் said...

***இனியா said...

Nalla pathivu... Thevaiyaana pathivu...Nandri!***

வாங்க இனியா! :-)

நன்னயம் said...

"அவர் அப்படி எதுவும் சொல்லவில்லை, மச்சான்! :)"
இல்லை சொல்லியிருக்கின்றார். ஒரு தடவை மார்க்க பந்து சுவனபிரியன் இந்த விடயத்தை கேட்ட போது தான் முஸ்லிம் அல்ல என்றும் தனது தந்தையின் முஸ்லிம் நண்பரான ஒருவரின் பெயர் (இக்பால்) தனக்கு முதல் பெயராக இடப்பட்டது என்று தெளிவாக கூறியுள்ளார்.

நன்னயம் said...

அது சரி மதவெறி வாந்திகளை பரப்பி வருபவர்களின் தளங்களுக்கு கண்டனங்கள் தெரிவிக்க மாட்டீர்களா ????

Unknown said...

நிறைய சினிமாக்களில் படம் முழுவதும் வன்முறை ஆபாசம் காட்டுவார்கள் கடைசியில் அதை செய்தவன் தண்டனை அடைவது போல் முடிப்பார்கள் ஆனால் பார்வையாளர்கள் . எதற்க்காக அதனை பார்க்கிறார்கள் அதிலிருந்து எதனை எடுத்துகொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதை போல்தான் அந்த பதிவும் இருந்தது. அதன் தலைப்பை மட்டுமே கெட்டியாக பிடித்துக்கொள்ளும் ஆட்கள்தான் நிறைய உண்டு. இதை போன்ற பதிவுகளை உண்மையை சொல்கிறேன் பேர்வழி என்று வெளி இடாமல் இருப்பது நல்லது. மற்றபடி அதனை எழுதுவது எனது உரிமை என்றால். அதனை மறுப்பது நமது உரிமைதான்.

நன்னயம் said...

வருண் நான் இப்போதுதான் அந்த சாதி வெறி தளத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்து. கேவலமான ஒரு மனிதன் தான் அவ்வாறு எழுத முடியும்.
நீங்களும், பூவண்ணணும் தனித்து போராடியிருக்கிண்றீர்கள்.
அதில் தோழர் சே என்பவர் அந்த வக்கிர பதிவுக்கு வக்காலத்து பாடியிருக்கின்றார். அவருக்கு சே என்று பெயர் வைக்க என்ன தகுதி இருக்கின்றது.

இவர்கள் எல்லாம் கற்றவர்கள் என்று எப்படி சொல்கின்றார்கள் என்று தெரியவில்லை. கற்ற முட்டாள்கள்.

வருண் said...

@ Ethicalist E

உங்க கருத்துகளுக்கு நன்றி. :)

வருண் said...

****kannaimambathey y said...

நிறைய சினிமாக்களில் படம் முழுவதும் வன்முறை ஆபாசம் காட்டுவார்கள் கடைசியில் அதை செய்தவன் தண்டனை அடைவது போல் முடிப்பார்கள் ஆனால் பார்வையாளர்கள் . எதற்க்காக அதனை பார்க்கிறார்கள் அதிலிருந்து எதனை எடுத்துகொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.***

அப்புறம் எதுக்கு சென்சார் வச்சிருக்காங்க?

பதிவர்களுக்கு தான் வித்திடும் அபாயம் புரிவதில்லை! அது வளர்ந்து மரமாக நிற்கும்போதுதான் எல்லாருக்கும் வளர விட்டு இருக்கக்கூடாதுனு தோனும்.


*** அதை போல்தான் அந்த பதிவும் இருந்தது. அதன் தலைப்பை மட்டுமே கெட்டியாக பிடித்துக்கொள்ளும் ஆட்கள்தான் நிறைய உண்டு. ***

நான் தலைப்பு படித்து கருத்து சொல்லவில்லை.

அப்படியெனறால் சிவகாசிக்காரன் சாதி எனக்கு எப்படி தெரிந்தது?

பதில் சொல்லும்?|!!!

***இதை போன்ற பதிவுகளை உண்மையை சொல்கிறேன் பேர்வழி என்று வெளி இடாமல் இருப்பது நல்லது. மற்றபடி அதனை எழுதுவது எனது உரிமை என்றால். அதனை மறுப்பது நமது உரிமைதான்.**

இதுவும் மறுப்புத்தான். அது ஏன் புரியமாட்டேங்கிது, உமக்கு???

Unknown said...

நன்றி சார் . ஒருவேளை எனக்கு எல்லோருக்கும் புரியிற மாதிரி எழுத தெரியலையோ?
நான் முற்றிலும் அந்த பதிவை விமர்சித்து எழுதி உள்ளேன். அதில்கூட என்னுடைய பின்னூட்டம் உள்ளது.

குலசேகரன் said...

I disagree with this view. But I shall defend your right to say it.
Blogging is not necessarily to express views ‘politically correct’. It is rather to express how one reacts to the issues and happenings around him. The reaction may be quite intensely personal if the blogger is involved personally in the happenings. Such expressions or views may be politically incorrect, or rub people on the wrong side, sometimes or often.

Tamilmanam is for a variety of blogs. Of which, personal blog is one where personal views are expressed. They are allowing all kinds of blogs, except mine which is still pending for many months :-) Maybe because my views are soooo politically incorrect for them!

If a blogger like the late Dondu Raagavan staunchly believed that one could have a caste and openly exhibit it as well, it was his personal opinion about which why others should feel aggrieved?

Similarly, Sivakasikkaaran wrote about his caste and insisted that castes should continue for many many better reasons (according to him) like cohesion and co-operation within a group, who are we to question that? And who are we to ask Tamilmanam to disallow such bloggers?

I have also put in my opposing comments in his blogs, both in my original name and anonymously which were not countered by him. Still, I never wish he need to be blocked. Because, I believe, and wish you to believe, what Voltaire has believed -

“I disapprove of what you say, but I will defend your right to say it”

குலசேகரன் said...

Iqbal Selvan is a glorious blogger writing now. A free intellectual. He views things or matters or issues from his own uncoloured perspective. He does not wear any glasses - figuratively speaking. Physically he does.

He was originally born within that community which is the bête noire of Varun. But he is free from all encumbrances which are man made, like the castes. Castes are political and social fiction and foisted on us with malicious intentions - a view all of us, including you, and Iqbal accept.

Pl check your facts b4 writing in order to avoid calumnies.

வருண் said...

****kannaimambathey y said...

நன்றி சார் . ஒருவேளை எனக்கு எல்லோருக்கும் புரியிற மாதிரி எழுத தெரியலையோ?
நான் முற்றிலும் அந்த பதிவை விமர்சித்து எழுதி உள்ளேன். அதில்கூட என்னுடைய பின்னூட்டம் உள்ளது.***

உங்க பின்னூட்டத்தை ஓரளவுக்கு நான் தவறாக புரிந்துகொண்டது உண்மை. மன்னிக்கவும். நீங்க "சாதி வேணும்" பதிவைப் படித்துவிட்டு அதைப்பற்றி முழுமையாக இங்கே விமர்சிக்கிறீங்கனு புரிந்துகொள்வது கடினம்..

வருண் said...

kannaimambathey y : உங்க பின்னூட்டத்துக்கு "ஜாதிவேணும்" பதிவில், "ஜாதி வேணும்"ங்கிற பதிவர் பதில் சொல்லியிருக்கதை பார்த்தீங்களா? என்னவோ உலகமஹா யோக்கியன் அவருங்கிற மாரி. நீங்க சொல்றமாரி கனிவாச் சொன்னால் எல்லாம் புரியாது இவர்களுக்கு!

வருண் said...

***“I disapprove of what you say, but I will defend your right to say it”***

Let me approve your disapproval of what I expressed as my view! :-)

வருண் said...

***குலசேகரன் said...

Iqbal Selvan is a glorious blogger writing now. A free intellectual. He views things or matters or issues from his own uncoloured perspective. He does not wear any glasses - figuratively speaking. Physically he does.

He was originally born within that community which is the bête noire of Varun. But he is free from all encumbrances which are man made, like the castes. Castes are political and social fiction and foisted on us with malicious intentions - a view all of us, including you, and Iqbal accept.

Pl check your facts b4 writing in order to avoid calumnies.***

I said, his name sounds like he worships Islam. It is TRUE!

What would you predict if you just look at his name?

A christian?

A Hindu?

I guess NOT!

Did I talk about him? My point is the "name" Iqbal Selvan. Dont confuse yourself and everybody!

Easy (EZ) Editorial Calendar said...

மிக நல்ல அவசியமான பதிவு....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

குலசேகரன் said...

//Let me approve your disapproval of what I expressed as my view! :-)
//

Is this interpretation of Voltaire's? Confusing to me. Clear to anyone? They may make it clear to me pl.

Correct culture demands we must give freedom to ppl to hold and express an opinion. To rail at them even to express their opinions in their personal blogs is talibanism. Blogosphere is free and nowadays it is getting fettered gradually. U r adding one more fetter. When u have that freedom to fetter others, let them have freedom to write and defy your diktat.

//What would you predict if you just look at his name?

A Christian? A Hindu? I guess NOT!
//

E.V.Ramasamy @ EVRa Periyaar.

What should v predict if v just read the name?

A Christian? A Hindu? A Muslim?

None. He was an atheist.

So also Iqbal Selvan. An atheist.

Names may indicate religions if they are given so as to indicate that. Otherwise, it is just an individual identity. Lets not flog it like street urchins pelting at a dead spink.

வருண் said...

Kavya:

Periyaar was born as a HINDU to hindu parents! Is there any problem in UNDERSTANDING this???

So, his name sounds as a HINDU!

He became an ATHEIST on his own!

Iqbaal selvan was BORN as a HINDU as well. Is there any problem understanding THIS???

His parents should have named him like "raramasamy or krishna samy" That would have been normal.

But his name sounds like a MUSLIM.

THat is ODD!!!

He claims that he is an ATHEIST now!!!

why HINDU parents named his name in a MUSLIM NAME?????

Scratch your brain and TRY UNDERSTAND the LOGIC here.

சீனு said...

அது சரி! உங்களுக்கு உங்க கருத்து நல்லது போல தோணும் போது, அவங்க அவங்களுக்கு அவங்க கருத்து நல்லதா தோணக்கூடாதா?

Anonymous said...

உங்கள் பதிவோடு உடன்படுகின்றேன், சாதி, மதம் வளர்க்கும் பதிவுகளை முற்றாக தடை செய்யுங்கள் என தமிழ் மணத்திடம் பல முறை சொல்லியாச்சு, ஆனால் ஒரு பதில் கூட இல்லை.. பொது திரட்டியில் சாதி, மதப் பிரச்சாரங்கள், மூட நம்பிக்கைகள், இன வெறி பரப்புவோரை தடை செய்யலாம். மற்றப்படி ஏன் இந்த பதிவோடு எனது பெயரை இழுத்துள்ளீர்கள், வாசிப்பவர் எல்லாம் எதோ நான் தான் அந்த சாதி பதிவன் என்ற பிம்பத்தை ஏற்படுத்தவா? எனது பெயர் குறித்து விவாதிக்க விரும்பினால் தனிப் பதிவு போடுங்க உண்மையை சொல்றேன். இக்பால் என்ற எனது பெயரில் மதச்சாயம் காண்பது முறையல்ல, எவ்வாறு பிரியன் என்ற பெயரில் சிக்கல் இல்லையோ, அதே போல் இதிலும் சிக்கல் கொள்ள வேண்டாம்.

வருண் said...

சீனு: பிரச்சினை என்னவென்றால் ஒருவர் கருத்து இன்னொருவருக்கு தவறாக தோன்றுவது.

அந்த சூழலில் நமக்கு தவறாக தோன்றுவதை அழுத்தமாக சொல்வது என்பது தேவையான ஒன்று. பிடிக்காத ஒன்றை ஒண்ரும் சொல்லாமல் கண்டுக்காமப் போவது தேவையற்றது.

வருண் said...

***வாசிப்பவர் எல்லாம் எதோ நான் தான் அந்த சாதி பதிவன் என்ற பிம்பத்தை ஏற்படுத்தவா?***

வாசகர்களை ரொம்பத்தான் குறைத்து மதிப்பிடுறீங்க! :)

குலசேகரன் said...

//அந்த சூழலில் நமக்கு தவறாக தோன்றுவதை அழுத்தமாக சொல்வது என்பது தேவையான ஒன்று. பிடிக்காத ஒன்றை ஒண்ரும் சொல்லாமல் கண்டுக்காமப் போவது தேவையற்றது.//

கரெக்ட். இதை முதலிலேயே சொல்லியிருக்கலாம். அதாவது எழுதுபவர்கள் எழுதட்டும். படிப்பவர்கள் படிக்கட்டும். பிடிக்காதவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது நலம்.

இல்லையா?

மாறாக தமிழ்மணம் திரட்டி அப்பதிவர்களைத்தடை செய்ய வேண்டுமென்பது சரியில்லை.

இக்பால் செல்வன்!

நீங்களும் தவறான நோக்கில் எழுதியிருக்கிறீர்கள். //பொது திரட்டியில் சாதி, மதப் பிரச்சாரங்கள், மூட நம்பிக்கைகள், இன வெறி பரப்புவோரை தடை செய்யலாம்//

என் சாதியைப்பற்றியும் அதன் தனிப்பட்ட வாழ்க்கை முறையைப்பற்றியும் சொல்லிவிட்டால் அது பிரச்சாரமாகாது. அதே வேளையில் என் சாதியும் அதன் தனிப்பட்ட வாழ்க்கை முறையே உயர்ந்தது, என்பதை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்வது மட்டுமே தவறு. மதமும் அப்படியே. தன்மதமே உண்மை. மற்றவை ஏமாற்று என்று பொதுவெளியில் சொல்லி பிற மத மக்களை தம்பக்கம் இழுப்பது தவறு. ஆனால் நம்புவதும். தமக்குள் பேசிக்கொள்வதும் தவறில்லை தன் மதம் என்ன சொல்கிறது; அதன் வழிகள் எவை? என்று விவரிப்பது ஒரு அறிஞர் ஒரு மதத்தைப்பற்றி எழுதுவதற்குச் சமமே.

மூட நம்பிக்கைகள் என்று கிடையாது. ஆபத்தை விளைவிக்கும் அறியா மக்களைச் சுரண்டும் நோக்கத்திலுள்ள கெட்ட நம்பிக்கைகள் மட்டுமே உண்டு. மற்றவையெல்லாம் வெறும் நம்பிக்கைகள்தான். எ.கா: குழந்தையை மண்ணில் புதைத்துவிட்டு எடுப்பது; மண்சோறு சாப்பிடுவது; பிராமணன் சாப்பிட்ட எச்சிலையில் உருண்டு புரண்டால் தோல் நோய்களை சுப்பிரமணியன் தீர்ப்பான (கருநாடாகாவில் நடக்கும் ஒரு விழா); பெண்களில் தலைகளில் தேங்காயகளை உடைப்பது, பெண்ணைச்சங்கிலியில் கட்டிப்போட்டு அடிப்பது (பேய் விரட்டுகிறார்க்ளாம்) இவை போன்றவை.

நாத்திகருக்கு எதுவே இணங்காது. ஆனால் ஆத்திகர் நாத்திகருக்கு இணங்கவில்லையென்றால் விட்டுவிட வேண்டுமென்பது தாலிபானித்தனமாகும்.

நினைவிருக்கட்டும்: கடவுள் இல்லையென்பதும் ஒரு நம்பிக்கை. ஆக, உங்களைத் தடை செய்யலாமா? நீங்கள் எழுதுவதையும் நான் ஒரு நாத்திகப்பிரச்சாரம் எனத் திரிக்க்லாமே? உங்கள் பிளாக்கையும் இத்திரட்டி தடை செய்யவேண்டுமென குரலெழுப்பலாமே?

நாத்திகருக்கும் சாதி மறுப்பாளருக்கும் என்ன உரிமை வழங்கப்படுகின்றதோ பொது மன்றத்தில் அதே உரிமை ஆத்திகருக்கும் சாதியை ஏற்பவருக்கும் உண்டென்பதில் மாற்றுக்கருத்திருந்தால் வியப்பே. Everyone should be given equal opportunity of hearing.

வருண் said...

***Similarly, Sivakasikkaaran wrote about his caste and insisted that castes should continue for many many better reasons (according to him) like cohesion and co-operation within a group, who are we to question that? And who are we to ask Tamilmanam to disallow such bloggers?***

I am VaruN. Just another blogger! I can question and I can suggest Tamilmanam, NOT TO encourage casteist blogs!

What is your problem, Kavya?

Beats me!

வருண் said...

***மாறாக தமிழ்மணம் திரட்டி அப்பதிவர்களைத்தடை செய்ய வேண்டுமென்பது சரியில்லை.***

That's your opinion! Do I care more about your opinion or mine? I guess I care more of about my opinion and express that in my blog!

Let us disagree on this and move on!

Anonymous said...

//என் சாதியைப்பற்றியும் அதன் தனிப்பட்ட வாழ்க்கை முறையைப்பற்றியும் சொல்லிவிட்டால் அது பிரச்சாரமாகாது. அதே வேளையில் என் சாதியும் அதன் தனிப்பட்ட வாழ்க்கை முறையே உயர்ந்தது, என்பதை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்வது மட்டுமே தவறு. மதமும் அப்படியே. தன்மதமே உண்மை. மற்றவை ஏமாற்று என்று பொதுவெளியில் சொல்லி பிற மத மக்களை தம்பக்கம் இழுப்பது தவறு. ஆனால் நம்புவதும். தமக்குள் பேசிக்கொள்வதும் தவறில்லை தன் மதம் என்ன சொல்கிறது; அதன் வழிகள் எவை? என்று விவரிப்பது ஒரு அறிஞர் ஒரு மதத்தைப்பற்றி எழுதுவதற்குச் சமமே. //

@ குலசேகரன். உடன்படுகின்றேன். நான் சொல்ல நினைத்தது விசமம் பரப்பும் சாதி, மத பதிவுகளைத் தான் . தனது சாதி, மதம் பற்றி எழுதிவிட்டு போகட்டும், ஆனால் அதை வைத்து விசமம் செய்தால் அது சரியாகாது. தமிழ்மணம் இவ்வாறான பழமைவாத பதிவுகளுக்கு தனியே ஒரு பக்கத்தை உருவாக்கிக் கொடுத்தால் பொது பக்கத்தில் வருவோருக்கு சளிப்பு வராது. சொல்லிப் பார்த்தாச்சு கேட்கல.

கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு, விசக் கருத்து சொன்னால் அதை தடுக்கும் பொறுப்பும் உண்டு.

பார்த்தீங்களா. ஜாதிக்காக குரல் எழுப்பும் வருண் கூட மதத்தை வைத்து துவேசம் பரப்பும் வாஞ்சூர் என்ற மூஞ்சூர் குறித்து மூச்சுக் கூட விட்டதில்லை. இது எவ்வகை நியாயமுங்க...

இதில என்னோட பெயர் குறித்த சர்ச்சையை கோர்த்து விட்டுள்ளார். அல்லாம் அல்லா செயலோ என்னவோ.. !

வருண் said...

இக்பால் செவன் & காவ்யா (குலசேகரன்)!

நீங்க எவ்ளோ நாளா பதிவுலகில் குப்பை கொட்டுறீங்கனு தெரியவில்லை!

உங்க ராஜியம் எல்லாம் ஆரம்பிக்குமுன்பே "தமிழ்மணமும் மதமும்" னு பதிவு வருண் னு ஒரு பதிவர் எழுதி இருக்காரு. கூகில் செய்து பார்க்கவும்!

IS: உங்களை மாரி, இஸ்லாமியரையே பிடித்து தொங்குவதுதான் பகுத்தறிவுவாதம்னு பெரியாரும் நினைக்கவில்லை! நானும் நினக்கவில்லை! நன்றி ! :)

குலசேகரன் said...

//I am VaruN. Just another blogger! I can question and I can suggest Tamilmanam, NOT TO encourage casteist blogs!

//

What r casteist blogs? This s the qn. U shd clearly define such blogs.

If a blogger like Sivkaasikaran believes that by living w/in a caste group, ppl get certain feeling of togetherness and emotional security, therefrom and thereby a well defined culture can develop out of it, which addes to such emotion, and he feels it is good to have caste for that purpose, he can write so in a blog, which cannot be called casteist blog. We differ from him only in that he needs caste to build up a culture to create togetherness whereas v say there are other ways to create that, and these other ways r better and socially valid. Only here, we differ. Otherwise, v and he meet at the same focal point.

So, b clear about ur concepts first.

If u suggest to Tamilmanam to ban it, suggestions can fly thick and fast: to ban urs, to ban Iqbal's and so on and so forth. It is nothing but surrogate Taliabanism. At least the Afgans r open. Tamilmanam is a public blog aggregators. They may hve a code but that code of banning should be so rare that it should make it a strong democratic forum of Tamil bloggers.

வருண் said...

கீழே உள்ள இந்தத் தொடுப்பைப் போய் பாருங்க மேதைகள் இக்பால் செவன் மற்றும் காவ்யா! :)

http://timeforsomelove.blogspot.com/2011/10/blog-post_18.html

நன்றி! :)

குலசேகரன் said...

//Do I care more about your opinion or mine? I guess I care more of about my opinion and express that in my blog!

Let us disagree on this and move on!

//

We ought to care, not for the opinion of others, but for their right to express those opinions.

If u agree, v can happily move on - not alone, but together.

Lets hang together or hang separately.

வருண் said...

***If u suggest to Tamilmanam to ban it, suggestions can fly thick and fast: to ban urs, to ban Iqbal's and so on and so forth. It is nothing but surrogate Taliabanism. At least the Afgans r open. Tamilmanam is a public blog aggregators. They may hve a code but that code of banning should be so rare that it should make it a strong democratic forum of Tamil bloggers.***

All you are TALKING is UTTER NONSENSE! I dont have time for your BULLSHIT, Kavya!

You have all the rights to pour your nonsense here! GO ON!

வருண் said...

***குலசேகரன் said...

//Do I care more about your opinion or mine? I guess I care more of about my opinion and express that in my blog!

Let us disagree on this and move on!

//

We ought to care, not for the opinion of others, but for their right to express those opinions.

If u agree, v can happily move on - not alone, but together.

Lets hang together or hang separately.***

I meant, we are NOT going to agree with each other!

So, you live with your opinion and let me live with mine!

Let us disagree to agree on this! Is that hard for you to understand??? I wonder why??

குலசேகரன் said...

//விசமம் பரப்பும் சாதி, மத பதிவுகளைத் தான் . தனது சாதி, மதம் பற்றி எழுதிவிட்டு போகட்டும்//

இதுவே சரி. அதாவது, விசமம் என்ற சொல் இருப்பதால்.

Still it begs the question: what is vishamam? Like banning a opinion like that of Ashish Nandi as offensive? What is offensive? Opinions will differ vastly from group to group.

இருப்பினும் இப்படியே போய்க் கொண்டிருந்தால் முடிவேயில்லாமல் சர்ச்சைகள் போய்க்கொண்டேயிருக்கும். (உலகத்தில் முடிவில்லா சர்ச்சைகள் ஆய்ரக்கணக்கான ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றனல்லவா?)

எனவே, ஒரு consensus opinion வைத்துக் கொண்டு எது விசமம் என முடிவெடுக்கலாம்.

குலசேகரன் said...

Bye