புத்தன், காந்தி எல்லாம் பிறந்த நாடு நம்ம நாடுனு பிதற்றுவது! உலகிலேயே தாயை மதிக்கிறவன், பெண்களை மதிக்கிறவன் எல்லாம் நாங்கமட்டும்தான் என்பதுபோல் அப்பப்போ பிதற்றுவதும் நம் நாட்டவர்தான்.
*வினோதினியை, தன் காதலை ஏற்காததற்காக நெனைத்துப்பார்க்கவே முடியாத அளவுக்கு நைட்ரிக் அமிலத்தை அவள் உடலில் வீசி எறிந்து அவளைச் சின்னாபின்னப் படுத்தி இருக்கான் ஒரு அடி முட்டாள்.
* டெல்லியில், ஒரு இளம் பெண்ணை ஓடும் பேருந்தில் அவள் உடனிருந்த நண்பனை அடித்து தூக்கி எறிந்துவிட்டு அவன் முன்னாலேயே வன்புணர்வு செய்து, அவளை கொன்னுயிருக்கானுக ஐந்து காட்டுமிராண்டிகள்.
இதுதான் இன்றைய இந்தியா! இது போல அவலங்களைப் பார்த்துக்கொண்டு இந்த வருடம் காதலர் தினத்தை எல்லாம் இவர்களும் வெட்கமே இல்லாமல் கொண்டாடுவதைப் பார்த்தால் எரிச்சலும் கோவமும்தான் மிஞ்சுகிறது. காதல்னா என்னனே தெரியாத காட்டுமிராண்டி ஆண்கள் வாழும் தேசத்தில், "காதலர் தினம்" கொண்டாடுபவன் எல்லாம் வெட்கங்கெட்ட ஆண்கள்!
"நான் யாரையும் துன்புறுத்தவில்லை, காதல்னா என்னணு உணர்ந்தவன் பெண்ணை மதிக்கிறவன், வேண்டாம்னு சொன்னா விலைமாதா இருந்தாலும் தொடமாட்டேன் அது இதுனு " நம்ம ஆண் யோக்கியர்கள் புலம்புவது கேக்குது.
அண்ணா! உங்கவீட்டிலே எழவு விழுந்தா அந்த வருடம் தீவாளி, பொங்கல்லாம் கொண்டாடாமல் இருப்பீங்க இல்ல? அதே மாரி உங்க "வீட்டில்" உங்க ஆண் இனத்தால் இரண்டு பெண்கள் வாழ்க்கை சின்னா பின்னப் பட்டிருக்கும் இந்த ஆண்டில் அந்தப் பெண்கள் சிந்திய ரத்தக் கறையை எல்லாம் கழுவுமுன்பே காதலர் தினமெல்லாம் வெட்கமே இல்லாமல் கொண்டாடுவது உங்க அறிவீனம்! உங்களுக்கெதுக்கு இந்த வருடம் இதெல்லாம்??
5 comments:
சூப்பர் பதிவு மச்சான்,
இந்தியாவில் சில பாலியல் வன்முறைகள் நடந்ததால் காதலர் தினம் கொண்டாடக் கூடாது!! அருமை!!
அதாவது வீட்டில் எழவு விழுந்தால் ஒரு வருடம் பண்டிகை கொண்டாடாமல் இருப்பது போல் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இதே நடைமுறையை எல்லாவற்றுக்கும் பயன்படுத்தினால் என்ன ஆகும்??
சிந்திக்க மாட்டீர்களா!!
**
சிந்திக்கும் நான் இந்த நடைமுறையை ஏற்க மாட்டேன்!!
நான் எந்த எழவு நடந்தாலும், என் வாழ்க்கைத் துணைக்கு வாழ்த்து தெரிவித்து, பரிசு கொடுப்பது வழக்கம்!!!
சாவு அறியா வீட்டில் கடுகு வாங்கி வர சொன்ன புத்தர் பெருமானின் கதை ஞாபகம் வருகிறது!!
ஆகவே சாரி!!
இந்த சூழலுக்கு எ.கா மதபுத்தகங்களில் இருந்து அருவி போல் பெருக்கெடுத்தாலும் சகோக்கள் யாரும் கேள்வி கேட்டால் மட்டுமே விளக்குவோம்!!!
சகோக்கள் நாடினால் விவாதிப்போம்!!
வருண் மச்சானும் மிக மிகப் பெரியவர்!!!
நன்றி!!
மச்சான்:
நீங்க காதலர் தினம், காம தினம், கருமாதி தினம் எல்லாமே கொண்டாடுங்க. நான் யாரு கூடாதுனு சொல்ல?
நீங்க நிம்மதியா கொண்டாடனும்னுதான் நான் நீங்கல்லாம் கொண்டாடி முடிச்சதும் இந்தப் பதிவை வெளியிடுறேன்.
சூப்பர் பதிவு
உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் தினம் தினம் யாராவது பாதிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால் யாருமே பாதிக்கப்படாத நாள் வரும் வரை யாருமே எந்த பண்டிகையும் கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சுவனப் பிரியன் மற்றும் அன்பர் விஜய்! :)
Post a Comment