Friday, March 22, 2013

பின்னூட்டம் என்பது ஒரு கற்புள்ள பெண் மாதிரி..

சில கசப்பான உண்மைகளைப் பேசிப்புடுவோம்! பதிவெழுத அசாத்திய திறமை உள்ளவங்க பலருக்கு ஒரு அர்த்தமாகப் பின்னூட்டம் போடத் தெரியாது! பல பிரபல பதிவர்களுக்கே இந்த "பிராபளம்" உண்டு!  ஆமா, அவர் பிரபலப்பதிவர் மட்டும்தான். பிரபலப் பின்னூட்டப் பதிவரல்ல! பதிவுக்கு வரும் மாற்றுக்கோண பின்னூட்டங்களை எப்படி விவாதிக்கிறது என்பதுகூட தெரியாது இந்த அப்பாவிகளுக்கு. இதையெல்லாம் பதிவுலக "வெட்டி ஞானி" கள் மட்டுமே உணருவார்கள்.

பின்னூட்டத்தில் மாற்றுக் கருத்து அல்லது அது சம்மந்தமாக தன் அனுபவம் போன்றவற்றை சொல்லணும் என்று தோன்றினாலொழிய என்னைப்போல் ஒரு சிலருக்கு பின்னூட்டமிட்ட திருப்தி இருக்காது.

நம்ம நடராஜன் பதிவில் போயி நான் "ரொம்ப நல்ல கருத்து" அல்லது "நல்ல பதிவு" னு நான் சொன்னேன்னு வச்சுக்கோங்க, அவரையும் அவர் பதிவையும் அதைவிட யாரும் அவமானப்படுத்தியதாக ஆகாது! என்னிடம் இருந்து இந்த வகைப் பின்னூட்டம் அவர் பதிவுக்கு ஏழாம் பொறுத்தம்! ஏதாவது புரியுதா?

அதேபோல் உலக சினிமா ரசிகன் பதிவில் போயி, அவர் கமலைப் பத்தி பீத்துற பீத்தை, "ஆமாங்க சரியா சொன்னீங்க"னு சொன்னால் அது அவருக்கு நான் செய்ற மிகப்பெரிய அவமானம் மட்டுமல்ல, என் மனசாட்சியை கொன்று எனக்கே நான் செய்யும் துரோகம்! இப்போ புரியுதா?

ஒவ்வொருவர் பதிவு மட்டுமல்ல பின்னூட்டங்களும் ஒரு "யுனீக்" தன்மை உள்ளதுதான். அதாவது ஒரு சிலர் பாசிட்டிவா பின்னுட்டமிட்டால்தான் "தரமானதாகும்". ஒரு சிலர் "க்ரிட்டிசைஸ்" செய்து பின்னூட்டமிட்டால்தான் அது அழகானதாகவும், ஆழமான கருத்துள்ளதாகவும் ஆகும். இப்போ என்ன? இன்னும் குழம்புதா?

பின்னூட்டங்கள் ஒரு கற்புள்ள பெண் போல. அவளுக்கு ஒரு உயர் தரம் இருக்கு! சும்மா பொய் பின்னூட்டங்கள் இட்டு அவள் "கற்பை" வித்துப் புடாதீங்கப்பா! பின்னூட்டங்களில் பதிவரைத் திட்டினால்கூட பரவாயில்லை, மனதில் உள்ளதை அப்படியே சொல்லுங்கள்! தயவு செய்து அதை வச்சு "பாலிட்டிகஸ்" செய்து பின்னூட்டங்களை "தரங்கெட்ட பெண்" போல் ஆக்கிவிடாதீர்கள்!

ஆமா, அதென்ன "பெண்களை" மட்டும் உதாரணமா எடுத்து இருக்கீங்க? இதையெல்லாம் விளக்கணுமா? ஆண்கள்மேலே "அம்பூட்டு" "மரியாதை"! உதாரணம் சொல்லக்கூட ஒருத்தன் ரெண்டுபேராவது அப்படி இருக்கணும்! :)

35 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பின்னூட்டமிட பதிவு சார்ந்த பிற விஷயங்களை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.பதிவாளரின் திறமை காரணமாக அவர் எழுதியது சரி என்று தோன்றும். அதற்கு மாறாக இன்னொரு பதிவு அல்லது பின்னூட்டம் எழுதப் படும்போது அதுவும் சரியாகவே என் போன்றவர்களுக்கு தோன்றுகிறது
.
//ஒரு சிலர் "க்ரிட்டிசைஸ்" செய்து பின்னூட்டமிட்டால்தான் அது அழகானதாகவும், ஆழமான கருத்துள்ளதாகவும் ஆகும்//

உண்மைதான்.பல பதிவுகளில் பின்னூட்டங்களை எல்லாம் படித்து விட்டு பின்னர் பதிவைப் படித்ததும் உண்டு. ஒரு சிலர் பதிவின் மாற்றுக் கருத்து ஏற்படும்போது மட்டும் பின்னோட்டமிடுகிறார்கள்.அதனால் அவர்கள் எது எழுதினாலும் அதற்கு எதிராக எழுதுபவர் என்ற இமேஜ் ஏற்பட்டு விடுகிறது.அவர்களோடு ஒத்துப் போகும் கருத்துக்கள் அல்லது பிடித்த கருத்த்க்கள் உள்ள பதிவுகளை படித்தாலும் பின்னோட்டம் இடாததே அதற்கு காரணம் என்பது என் கருத்து.

'பசி'பரமசிவம் said...

//கிரிட்டிசைஸ் செய்து பின்னூட்டம் இட்டால்தான், அது அழகானதாகவும் ஆழமான கருத்துள்ளதாகவும் இருக்கும்//

அது மட்டுமல்ல, குறை நிறைகள் பற்றிய விவாதம் நீளும்போது,பதிவின் மூலம் பெறும் பயன்களைக் காட்டிலும் அதிகப் பயன்களைப் [சில நேரங்களில்] பெற முடிகிறது.

SathyaPriyan said...

ரொம்ப நல்ல கருத்து; நல்ல பதிவு; ஆமாங்க சரியா சொன்னீங்க :-)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

மத்ததெல்லாம் சரிதான்.
இருக்கட்டும்.
ஆனால்... இது என்ன..?
பெண்களுக்கு மட்டும்தான் கற்பா..?
ஆண்களுக்கு கற்பு இல்லையா..?

நம்பள்கி said...

இது மாதிரி ஒரு இடுகையை நான் வாழ்நாளில் படித்ததே இல்லை:-[)
த.ம: 2013

துளசி கோபால் said...

அய்ய..... இது என்ன?

சிலபல பின்னூட்டங்கள் பதிவருக்குத் தெரியாத நல்ல சமாச்சாரங்களையும் குறிப்பிட விட்டுப்போனதையும் தெரிவிக்கும்போது 'எல்லோருக்கும்' அதைப் பற்றிய அறிவு கூடுதலாவதை மறுக்க முடியுமா?

விளம்பர யுகத்தில் எல்லாத்தையும் விற்கும் பொறுப்பு பெண்களுக்குன்னு ஒரு நாலைஞ்சு தொலைக்காட்சி விளம்பரங்கள் பார்த்தால் புரிஞ்சுரும். தேவையோ தேவை இல்லையோ ஒரு பெண் 'மாடல்' அங்கே நின்னாகணும் என்ற உலக நியதி இந்தப்பதிவுக்கும் பொருந்துகிறது.

நல்லா இருங்க.

வருண் said...

***ஒரு சிலர் பதிவின் மாற்றுக் கருத்து ஏற்படும்போது மட்டும் பின்னோட்டமிடுகிறார்கள்.அதனால் அவர்கள் எது எழுதினாலும் அதற்கு எதிராக எழுதுபவர் என்ற இமேஜ் ஏற்பட்டு விடுகிறது.அவர்களோடு ஒத்துப் போகும் கருத்துக்கள் அல்லது பிடித்த கருத்த்க்கள் உள்ள பதிவுகளை படித்தாலும் பின்னோட்டம் இடாததே அதற்கு காரணம் என்பது என் கருத்து.***

உங்க கருத்து சரியானதே, முரளி!

வருண் said...

***’பசி’பரமசிவம் said...

//கிரிட்டிசைஸ் செய்து பின்னூட்டம் இட்டால்தான், அது அழகானதாகவும் ஆழமான கருத்துள்ளதாகவும் இருக்கும்//

அது மட்டுமல்ல, குறை நிறைகள் பற்றிய விவாதம் நீளும்போது,பதிவின் மூலம் பெறும் பயன்களைக் காட்டிலும் அதிகப் பயன்களைப் [சில நேரங்களில்] பெற முடிகிறது.***

பல நேரங்களில் சில பதிவர்கள் தனக்குத்தான் எல்லாம் நல்லாத் தெரியும் என்பதுபோல் பின்னூட்டமிடுவதும் உண்டுதான். நான் இல்லைனு சொல்லவில்லை!

வருண் said...

***SathyaPriyan said...

ரொம்ப நல்ல கருத்து; நல்ல பதிவு; ஆமாங்க சரியா சொன்னீங்க :-)***

உங்க பின்னூட்டத்தில் தெளிவா சொல்லீட்டிங்க, சத்யப்பிரியன்! :)

வருண் said...

***~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

மத்ததெல்லாம் சரிதான்.
இருக்கட்டும்.
ஆனால்... இது என்ன..?
பெண்களுக்கு மட்டும்தான் கற்பா..?
ஆண்களுக்கு கற்பு இல்லையா..?***

இந்த நவீன உலகில் பெண்கள் கற்பைப் பத்தி பேசினாலே எல்லாரும் சிரிக்கிறாங்க. நான் ஆண்கள் கற்பு பத்தி சீரியஸா சொன்னேன்னு வச்சுக்கோங்க, என்னை "லூசுனே" முடிவு செஞ்சிருவானுக.

ஆண்களுக்கு கற்பு இல்லைனு நான் சொல்லியிருக்கேனா? கற்புள்ள ஆண்களை தேடிக் கண்டுபிடிப்பது கஷ்டம்னு சொல்லியிருக்கேன்னு எடுத்துக்கோங்க. ஆஸிக்! :)

வருண் said...

***நம்பள்கி said...

இது மாதிரி ஒரு இடுகையை நான் வாழ்நாளில் படித்ததே இல்லை:-[)
த.ம: 2013****

அப்படிப் போடுங்க! :))

வருண் said...

****துளசி கோபால் said...

அய்ய..... இது என்ன?

சிலபல பின்னூட்டங்கள் பதிவருக்குத் தெரியாத நல்ல சமாச்சாரங்களையும் குறிப்பிட விட்டுப்போனதையும் தெரிவிக்கும்போது 'எல்லோருக்கும்' அதைப் பற்றிய அறிவு கூடுதலாவதை மறுக்க முடியுமா?

விளம்பர யுகத்தில் எல்லாத்தையும் விற்கும் பொறுப்பு பெண்களுக்குன்னு ஒரு நாலைஞ்சு தொலைக்காட்சி விளம்பரங்கள் பார்த்தால் புரிஞ்சுரும். தேவையோ தேவை இல்லையோ ஒரு பெண் 'மாடல்' அங்கே நின்னாகணும் என்ற உலக நியதி இந்தப்பதிவுக்கும் பொருந்துகிறது.

நல்லா இருங்க.****

என்ன பண்ணுறது டீச்சர்? ஆண்டவனே பெண்களையும் ஆண்களையும் சமமாகப் படைக்கவில்லை!

ஆணாதிக்க உலகத்தில் பிறந்து, வளர்ந்து வாழும் ஒரு சாதாரண ஆண், நான் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?

Anonymous said...

என்னவோ சொல்ல வறீங்க ஆனால் என்ன சொல்ல வறீங்க பரதேசி பாலாவின் படங்களை கண்ட பாதிப்பா இருக்குமோ, அது சரி அதென்ன கற்பு, கற்புக்கே இது வரை எவரும் விளக்கம் தர'லை இந்த லட்சணத்தில் கற்பு போல, அதுவும் பெண் கற்பு போல பின்னூட்டமா, விளங்கிடும் , சாருவின் எக்சைல் வாசித்தது போல ஒரு பதிவு, ஆகா, இங்கன வந்தா எனக்கே என்னவோ ஆவுது . விடுறேன் ஜூட் ..

நம்பள்கி said...
This comment has been removed by the author.
திண்டுக்கல் தனபாலன் said...

/// என்னைப்போல் ஒரு சிலருக்கு பின்னூட்டமிட்ட திருப்தி இருக்காது. ///

திருப்தி அடைந்தால் சரி...!

ஓஹோ.... வாழ்க்கையில் இப்படிப்பட்ட அவமானம்... துரோகம்... இப்படியெல்லாம் இருக்கா...? அறிந்தேன்...

நன்றிகள் பல...

இன்று தாங்க உங்க Profile பார்த்தேன்...

Interests : Analyzing human minds!(?)

அப்படியா....??? வாழ்த்துக்கள் ஐயா...!!!

எல்லாம் மாயை...

Jayadev Das said...

பெரும்பாலும் பதிவுகளுக்கு ஆமாம் சாமி டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்தான் விழுகின்றன. விமர்சித்தோ மாற்று கருத்துக்களைத் தெரிவித்தோ பின்னூட்டம் எழுதுபவர்கள் மிகவும் குறைவு, பதிவர்களில் பலர் அவற்றை விரும்புவதுமில்லை.

சேக்காளி said...

இப்படித்தான் ஒரு வலைபதிவிற்கு 16 பின்னூட்டம் வந்திருந்ததை பார்த்து என்ன இருக்குன்னு படிக்க போனா அதுல 6 பின்னூட்டம் பதிவரே அவரு பதிவுக்கு வந்த பின்னூட்டத்துக்கு பின்னூட்டமா எழுதுனது.சரி அதெல்லாம் போட்டும் விடுங்க.அதுல 10 வதா ஒரு பின்னூட்டம்.எங்கப்பன் குதிருக்குள்ள இல்லனு. நாஞ்சொல்ல வாரது இந்த பதிவையும்,அதுக்கு வந்த பின்னூட்டங்களையும் படிக்க ஒங்களுக்கு புரிஞ்சுருக்கும்னு நெனைக்கேன்.

Saha, Chennai said...

அருமையான பதிவு (!). வாழ்த்துக்கள் (!!)..

வருண் said...

***இக்பால் செல்வன் said...

என்னவோ சொல்ல வறீங்க ஆனால் என்ன சொல்ல வறீங்க பரதேசி பாலாவின் படங்களை கண்ட பாதிப்பா இருக்குமோ, அது சரி அதென்ன கற்பு, கற்புக்கே இது வரை எவரும் விளக்கம் தர'லை இந்த லட்சணத்தில் கற்பு போல, அதுவும் பெண் கற்பு போல பின்னூட்டமா, விளங்கிடும் , சாருவின் எக்சைல் வாசித்தது போல ஒரு பதிவு, ஆகா, இங்கன வந்தா எனக்கே என்னவோ ஆவுது . விடுறேன் ஜூட் ..***

உங்க தரத்துக்கு இங்கே வந்தது முதல் தப்பு. வந்துட்டு, "இதெல்லாம் ஒரு பதிவா?"னு ஜூட் விடாமல் இப்படி ஒரு பின்னூட்டமிட்டது ரெண்டாவது தப்பு.

இந்த ரெண்டோட நிறுத்திக்கோங்க! :)

வருண் said...

***திண்டுக்கல் தனபாலன் said...

/// என்னைப்போல் ஒரு சிலருக்கு பின்னூட்டமிட்ட திருப்தி இருக்காது. ///

திருப்தி அடைந்தால் சரி...!

ஓஹோ.... வாழ்க்கையில் இப்படிப்பட்ட அவமானம்... துரோகம்... இப்படியெல்லாம் இருக்கா...? அறிந்தேன்...

நன்றிகள் பல...

இன்று தாங்க உங்க Profile பார்த்தேன்...

Interests : Analyzing human minds!(?)

அப்படியா....??? வாழ்த்துக்கள் ஐயா...!!!

எல்லாம் மாயை...***

என்ன நண்பரே எல்லாம் மாயைனு சொல்லீட்டீங்க. நீங்களுமா? நீங்கள் நிஜம்தானே? :)

வருண் said...

****Jayadev Das said...

பெரும்பாலும் பதிவுகளுக்கு ஆமாம் சாமி டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்தான் விழுகின்றன. விமர்சித்தோ மாற்று கருத்துக்களைத் தெரிவித்தோ பின்னூட்டம் எழுதுபவர்கள் மிகவும் குறைவு, பதிவர்களில் பலர் அவற்றை விரும்புவதுமில்லை.***

ஒரு சில பதிவர்களுக்கு க்ரிட்டிசிஸம் பெரிய பிரச்சினைதான்.

"அருமையான பதிவு" "உங்களால மட்டும்தான் இப்படியெல்லாம் எழுத முடியும்" போன்றவைகள்தான் அவர்களுக்கு தேவைப்படுகிறது.

வருண் said...

****சேக்காளி said...

இப்படித்தான் ஒரு வலைபதிவிற்கு 16 பின்னூட்டம் வந்திருந்ததை பார்த்து என்ன இருக்குன்னு படிக்க போனா அதுல 6 பின்னூட்டம் பதிவரே அவரு பதிவுக்கு வந்த பின்னூட்டத்துக்கு பின்னூட்டமா எழுதுனது.சரி அதெல்லாம் போட்டும் விடுங்க.அதுல 10 வதா ஒரு பின்னூட்டம்.எங்கப்பன் குதிருக்குள்ள இல்லனு. நாஞ்சொல்ல வாரது இந்த பதிவையும்,அதுக்கு வந்த பின்னூட்டங்களையும் படிக்க ஒங்களுக்கு புரிஞ்சுருக்கும்னு நெனைக்கேன்.****

உங்களுக்கு புரிஞ்சா சரிதான். :))))

"அருமையான பின்னூட்டம்" சேக்காளி!

வருண் said...

****Saha, Chennai said...

அருமையான பதிவு (!). வாழ்த்துக்கள் (!!)..****

:))))

Good citizen said...

What I wish to say is said by Mr. T.N. Muralidaran.ஒரு தெரியாத விஷயத்தை ஒரு பதிவர் தெரிவிக்கிறார் என்றால் அதை தெரிந்து கொண்ட திருப்தியோடு சென்று விடுவேன்,,சூப்பர் , நன்றாக உள்ளது என்று ஜிங்ஜக் அடிப்பதை விட இது சிறந்தது என்பது என் கறுத்து,, எனக்கு நன்றாக தெரிந்த விசயத்தை பதிவர் சில்மிஷம் செய்கிறார் என்றால் கவலையே படாமல் கிழித்து தொங்கவிடுவேன் (நான் அவனைக் கேவலமா பேசுவேன் பதிலுக்கு அவன் என்னை ரொம்ப கேவலமா பேசுவான்)பிளாக்கர்களை ஓசி பதிவர் என்று எற்கனவே நடிகை சுகாசினி கேவலப்படுத்திவிட்டார்,,இதுக்கெல்லாம் அசர ஆளா நம்ம பதிவர்கள்,, வருனும் அதுல ஒருத்தர்,Keep Going Varun

பூ விழி said...

ஹா ஹா... பழைய திருவிளையாடல் படத்தில் நாகேஷ் பேசும் வசனம் ஒன்று வரும் பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்கள் குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் என்று அதில் நீங்கள் எந்த ரகம் என்று வரும் ...................இவ்வளவு நாள் எப்படி என்னால் உங்கள் பதிவுகள் கண்டுபிடிக்க படாமல் போனது என்பது இப்ப புரியுது உங்களுக்கு புரியுதா ?நீங்கஉங்க பதிவுல புரியதா புரியுதா என்று கேட்டதெல்லாம் ஓரளவுக்கு புரியுது நான் கொஞ்சம் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டுடன்ட்ங்க வரேன் க்ரிட்டிசைஸ் பல தர பட்ட பதிவை படிப்பதும் சுவரஸ்யம் தானே

வருண் said...

***எனக்கு நன்றாக தெரிந்த விசயத்தை பதிவர் சில்மிஷம் செய்கிறார் என்றால் கவலையே படாமல் கிழித்து தொங்கவிடுவேன் (நான் அவனைக் கேவலமா பேசுவேன் பதிலுக்கு அவன் என்னை ரொம்ப கேவலமா பேசுவான்)பிளாக்கர்களை ***

;-)))))

***இதுக்கெல்லாம் அசர ஆளா நம்ம பதிவர்கள்,, வருனும் அதுல ஒருத்தர்,Keep Going Varun**

நான் எல்லாரையும் திருப்திப் படுத்தணும்னு நெனச்சா என்ன பண்ணணும்னா இந்த தளத்தை இழுத்து மூடணும்! :)))

வருண் said...

***poovizi said...

ஹா ஹா... பழைய திருவிளையாடல் படத்தில் நாகேஷ் பேசும் வசனம் ஒன்று வரும் பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்கள் குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் என்று அதில் நீங்கள் எந்த ரகம் என்று வரும் ...................இவ்வளவு நாள் எப்படி என்னால் உங்கள் பதிவுகள் கண்டுபிடிக்க படாமல் போனது என்பது இப்ப புரியுது உங்களுக்கு புரியுதா ?***

வாங்க பூவிழி! உங்களுக்குப் புரிஞ்சா எனக்கு புரிஞ்ச மாதிரித்தான்! :)))

***நீங்கஉங்க பதிவுல புரியதா புரியுதா என்று கேட்டதெல்லாம் ஓரளவுக்கு புரியுது நான் கொஞ்சம் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டுடன்ட்ங்க வரேன் க்ரிட்டிசைஸ் பல தர பட்ட பதிவை படிப்பதும் சுவரஸ்யம் தானே***

நான் உங்களை விட மோசம். க்ளாஸ்க்கு கட் அடிச்சுட்டு மரத்தடியில் உக்காந்து திருட்டு தம் அடிக்கிற ஸ்டூடண்ட்! :))

நெசமாத்தாங்க! :)))

சேக்காளி said...

//நான் எல்லாரையும் திருப்திப் படுத்தணும்னு நெனச்சா என்ன பண்ணணும்னா இந்த தளத்தை இழுத்து மூடணும்//
"நான்(கடவுள்)இருப்பது உண்மைதான்" என்பதை கடவுள் எப்படியெல்லாம் நிரூபிக்கிறார் பாருங்கள்.

வருண் said...

**சேக்காளி said...

//நான் எல்லாரையும் திருப்திப் படுத்தணும்னு நெனச்சா என்ன பண்ணணும்னா இந்த தளத்தை இழுத்து மூடணும்//
"நான்(கடவுள்)இருப்பது உண்மைதான்" என்பதை கடவுள் எப்படியெல்லாம் நிரூபிக்கிறார் பாருங்கள்.***

உங்களைப்போல கற்பனைவளம் மிக்கவர்கள், தான் செய்யும் அயோக்கியத்தனத்தை தன்னாலேயே ஜீரணிக்க முடியாமல் உருவாக்கிய ஒண்ணுதான் கடவுள். அதை வச்சு அவன் அவன் என்னமா பொழைப்பு ஓட்டுறானுக பாருங்க- உங்களைப் போல!:)))

கவியாழி said...

நிறையப்பேர் இதுபத்தி சிந்திப்பதில்லை .சரியாச் சொன்னீங்க

சேக்காளி said...

//உங்களைப்போல கற்பனைவளம் மிக்கவர்கள், தான் செய்யும் அயோக்கியத்தனத்தை தன்னாலேயே ஜீரணிக்க முடியாமல் உருவாக்கிய ஒண்ணுதான் கடவுள். அதை வச்சு அவன் அவன் என்னமா பொழைப்பு ஓட்டுறானுக பாருங்க- உங்களைப் போல!//
க்ளாஸ்க்கு கட் அடிச்சுட்டு மரத்தடியில் உக்காந்து திருட்டு தம் அடிக்கிற யோக்கியர் சார் ஒருத்தர்,
தங்கம்,வெள்ளி,பாத்திரம் மற்றும் பத்திரங்களை(அடமானம்) வச்சு பொழைப்பை ஓட்டிட்டு இருந்த எனக்கு இத வச்சும் (யோக்கியர் சொன்ன அதேதான்) பொழைப்பை ஓட்டலாம்னு சொல்லி கொடுத்திருக்காரு.எனவே நான் உறுப்பினராய் இருக்கும் "மண்ணு மோகன் சிங் கம்" ரசிகர் மன்றத்திலிருந்து விலகி "பொழைப்பு சொல்லிக் கொடுக்கும் யோக்கியர்" ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப் போகிறேன். பொழைப்பு வேண்டுபர்கள் மன்றத்துல உறுப்பினராகிக் கொள்ளவும்.
குறிப்பு:
பின்னூட்டத்தில் அடிக்கோடிடும் வசதி இல்லாததால் யோக்கியர் என்ற வார்த்தை அந்த(அடிக்கோடு) வாய்ப்பை இழக்கிறது.

வருண் said...

***கவியாழி கண்ணதாசன் said...

நிறையப்பேர் இதுபத்தி சிந்திப்பதில்லை .சரியாச் சொன்னீங்க***

வாங்க கவியாழி கண்ணதாசான் சார்! வருகைக்கு நன்றி! :)

வருண் said...

****சேக்காளி said...

//உங்களைப்போல கற்பனைவளம் மிக்கவர்கள், தான் செய்யும் அயோக்கியத்தனத்தை தன்னாலேயே ஜீரணிக்க முடியாமல் உருவாக்கிய ஒண்ணுதான் கடவுள். அதை வச்சு அவன் அவன் என்னமா பொழைப்பு ஓட்டுறானுக பாருங்க- உங்களைப் போல!//
க்ளாஸ்க்கு கட் அடிச்சுட்டு மரத்தடியில் உக்காந்து திருட்டு தம் அடிக்கிற யோக்கியர் சார் ஒருத்தர்,
தங்கம்,வெள்ளி,பாத்திரம் மற்றும் பத்திரங்களை(அடமானம்) வச்சு பொழைப்பை ஓட்டிட்டு இருந்த எனக்கு இத வச்சும் (யோக்கியர் சொன்ன அதேதான்) பொழைப்பை ஓட்டலாம்னு சொல்லி கொடுத்திருக்காரு.எனவே நான் உறுப்பினராய் இருக்கும் "மண்ணு மோகன் சிங் கம்" ரசிகர் மன்றத்திலிருந்து விலகி "பொழைப்பு சொல்லிக் கொடுக்கும் யோக்கியர்" ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப் போகிறேன். பொழைப்பு வேண்டுபர்கள் மன்றத்துல உறுப்பினராகிக் கொள்ளவும்.
குறிப்பு:
பின்னூட்டத்தில் அடிக்கோடிடும் வசதி இல்லாததால் யோக்கியர் என்ற வார்த்தை அந்த(அடிக்கோடு) வாய்ப்பை இழக்கிறது.****

ஏன் இத்தனை கஷ்டப்படுறீங்க, சேக்காளி! எனக்கு அயோக்கியன் சான்றிதழே சந்தோஷம்தான். முழுமனதோட ஏற்றுக்கிறேன். அதை நீங்க "யோக்கியன்"னு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை!

என் கேரக்கடரையே புரிஞ்சுக்க மாட்டுறேளே சார்! :(

வருண் said...

***சேக்காளி said...

//நான் எல்லாரையும் திருப்திப் படுத்தணும்னு நெனச்சா என்ன பண்ணணும்னா இந்த தளத்தை இழுத்து மூடணும்//
"நான்(கடவுள்)இருப்பது உண்மைதான்" என்பதை கடவுள் எப்படியெல்லாம் நிரூபிக்கிறார் பாருங்கள்.***

பச்சையா சொல்றேன்..

கடவுள் இருப்பது உண்மைனு எந்த ஒரு ஆதாரமுமில்லாமல் பொய் சொல்றீங்க!

அது போதாதுனு அதை நிரூபித்துவிட்டதாக இன்னொரு பொய்!

இப்படி பொய் மேல் பொய் சொல்லும் யோக்கியர் தானே நீங்க? :)))

சேக்காளி said...

//என் கேரக்கடரையே புரிஞ்சுக்க மாட்டுறேளே சார்//
ஒங்க கேரக்டர் என்ன. நீங்க "அவாள்" தான்னே புரிஞ்சுக்கிட்டேன்.
//பச்சையா சொல்றேன்//
அடர்பச்சையா? வெளிர்பச்சையா? கிளிப்பச்சையா? னு வெளக்கமா சொன்னா புரிஞ்சுக்க வசதியா இருக்கும்.
பதிலுக்கு பதில் நாளைக்கு.