Monday, April 8, 2013

எனக்கு ரோஸ் எல்லாம் வேணாம்டா!

இது காதலர் தின கதை! கொஞ்சம் ரொமாண்டிக்கா இருக்கும்! நீங்க வயதுவந்தவர் தானே?
-------------------------------------------------------

“ஏன்டா பொறுக்கி! ஏன் இப்படி என் உயிரை வாங்கிற?”

“ஐ லவ் யு வெர்ரி மச்டா ப்ரியா”

“இதையே ஆயிரம் தர சொன்னாலும் உனக்கு இப்போ நீ நெனைக்கிறது கிடைக்காது."

"அப்படியா?"

" ச்சீ!  அங்கேலாம் கையை வைக்காதேடா பொறுக்கி!”

“ஏன் அங்கே வச்சா என்ன, ப்ரியா?”

“ஏன்னா, எனக்கு இப்போ மூடு இல்லை”

“அவ்ளோதானா?”

“என்ன அவ்ளோதானா!? உனக்கு ஏன் அறிவே இருக்க மாட்டேன்கிதுனு சொல்லு?”

“ப்ரியா!  எனக்கு நெறையா அறிவு இருந்துச்சு. அதான் படிச்சு இவ்ளோ நல்ல வேலையில் இருக்கேன். ஆனா உன்னை காதலிச்சதும் என் அறிவெல்லாம் உன்னிடம் போயிருச்சு! உன் அறிவு எனக்கு வந்துருச்சு. அப்புறம் உன் மனசும் என்னிடம் வந்ததால இப்போலாம் எனக்கு கெட்ட கெட்ட நெனைப்புத்தான் வருது”

“ஸ்ஸ், சும்மா இருடா! கையை வச்சுக்கிட்டு”

“ஏன் மூடு வந்துரும்னு பயமா, செல்லம்? நான் கேட்கும்போதெல்லாம் இல்லைனு சொல்லாமல் தருவ இல்லை?”

“இன்னைக்கு கிடையாது”

“அதான் ஏன்?'

“நான் உன் மேலே ரொம்ப கோபமா இருக்கேன்”

“ஏன் கோபம், செல்லம்?”

“இன்னைக்கு காதலர் தினம், ஒரு 4 ரோஸ் வாங்கி வந்தியா? ஏன்டா உனக்கு அப்படி எதுவும் தோனமாட்டேங்கிது?'

“ஏன்னு தெரியலை. ஆனா நான் உன்னைத்தானே எல்லா நேரமும் நெனச்சுண்டு இருக்கேன்?”

“பொய்”

“எதுடா பொய்?”

“நீ சொல்வதுதான்”

“சரி, இப்ப சொல்லு பொய்யா மெய்யானு?”

அவன் அவளை கட்டி அணைத்து அவள் இதழ்களில் தன் உதடுகளைப்பதித்தான், பிறகு கன்னம். கழுத்து, என்று முத்தம் மழையுடன் கீழே போனான்.. பாதம் வரை. பிறகு அவள் பின்புறம்போய் அவள் காலில் இருந்து மேலே ஒவ்வொரு இஞ்சாக போயி பின் கழுத்துவரை முத்தமிட்டான்.

அவளிடம் இருந்து பேச்சு எதுவுமே வரவில்லை அப்படியே சிலையாக நின்றாள், ப்ரியா.

அவன் முத்தம் கொடுத்து நிறுத்தியதும்...

“ஏன்டா அதுக்குள்ள நிறுத்திட்ட?” என்றாள் பெருமூச்சுடன்

“அளந்தாச்சு!”

“எதைடா அளந்த, பொறுக்கி?'

“என் இதழால் உன் உடலை அளந்தாச்சு!”

“ச்சீ! நீ ரொம்ப ரொம்ப மோசம்டா”

“அதென்ன முன்னால விட பின்னால 10 முத்தம் அதிகமா கொடுத்தேன். அது ஏன்டா உனக்கு முன்னாலயும் பின்னாலயும் சமமா இல்லை, செல்லம்?'

“கேள்வியைப்பாரு! உனக்கு வெட்கமே இல்லையாடா?”

“அதெல்லாம் இருந்தால் ஒரு நல்ல காதலனா இருக்க முடியாது செல்லம்”

"அப்படியா?"

“ஆமா, அது ஏன் கவுண்டிங்ல இந்த “டிஃபெரென்ஸ்”?

“தெரிந்த கேள்விக்கெல்லாம் பதில்சொல்ல மாட்டாள் இந்த ப்ரியா”

“சரி நான் போய் நீ கேட்ட ரோஸ் வாங்கிட்டு வரேன்”'

“ச்சீ போடா லூசு, ரோஸ்லாம் யாருக்கு வேணும்?”

“வேறென்ன வேணும்?”

“ஏண்டா இப்படி பாதில நிறுத்துற பாவி”

“ஐ லவ் யு சொல்லு”

“சொல்லலைனா?”

“நான் ரோஸ் வாங்க போயிடுவேன், அப்புறம் பசங்க வந்துடுவானுக”

“ரோஸ்லாம் வேணாம்டா, எனக்கு”

“இப்போ வேறென்ன வேணும்?”

“ஆரம்பிச்சத முதலில் ஒழுங்க முடிடா பொறுக்கி, ப்ளீஸ்!”

“நான் உன்னை லவ் பண்ணுறேனா?”

“முதல்ல ஆரம்பிச்சத ஒழுங்கா முடி, அப்புறம் சொல்றேன்”





******

சிறிது நேரத்திற்கு பிறகு...

“சரி இப்போ சொல்லு. நான் உன்ன எவ்ளோ லவ் பண்ணுறேன்? 1-10 ஒரு நம்பர் சொல்லு!”

“12!”

“அவ்ளோ நல்லா இருந்ததா?”

“ரொம்ப ரொம்ப”னு வெட்கப்பட்டாள் ப்ரியா.

“நீ வெட்கப்படும்போது இந்த வயசுலயும் ஒரு மாதிரி செக்ஸியா இருக்கடா”

“பசங்க வர்ற நேரமாச்சு டார்லிங்”

"சொல்லிட்டு போ!"

"ஐ லவ் யு டா பொறுக்கி!"

“மம்மி!”

"பசங்க வந்துட்டாங்க! நான் போய் அவனுகளை கவனிக்கிறேன் ஸ்வீட் ஹார்ட்!" என்று பிள்ளைகளை நோக்கி ஓடினாள், ப்ரியா!.

**********************

இது ஒரு மீள்பதிவுதான் (கொஞ்சம் எடிட் பண்ணி இருக்கேன்)!

எனக்கு ரோஸ் எல்லாம் வேணாம்டா!

5 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கலகல,கிளுகிளு,குளுகுளு கதை

'பசி'பரமசிவம் said...

நீங்க வயது வந்தவர்தானேன்னு கேட்டீங்கல்ல?

நான் வயதுக்கு வந்து ரொம்ப வருஷமாச்சு.

அஞ்சாறு தடவை படிச்சிட்டேன்.

அசத்தல் பதிவு!

Unknown said...

ஹிஹி பாஸ் சூப்பர்

Anonymous said...

சூப்பர் வருண்.

காதலிக்கிற பையன் எல்லாம் முட்டாளா இருக்கிறதற்கு காரணம் இன்னைக்குதான் எனக்கு தெரிஞ்சது. ஹி...ஹி...

வருண் said...

நன்றி, @முரளி, @திரு. பரமசிவம், @ சக்கர கட்டி & @ ஏலியன்! :-)