Friday, May 3, 2013

விஸ்வரூபம்-2 ஏன் ஃப்ளாப் ஆகும்னா...

இப்போத்தான் விஸ்-2 கன்ஃபர்ம் ஆயிருக்கு! அதுக்குள்ள என்ன? வாயை மூடுடா வருண்! அபசகுனம் பிடிச்சாப்ல ஏண்டா இப்படி? எங்க கமல் மேலே உன் காண்டுக்கு ஒரு அளவே இல்லையா? கேவலமா இல்லை? னு சொல்றேளா?

என்னைத் திட்டுறத நிறுத்திப்புட்டுக் கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாருங்க.

 இன்னும் விஸ்வரூபம் ஒண்ணே, தமிழ் படத்துக்கு தமிழ் சப் டைட்டில் போட்டுப் பார்த்துவிட்டு நம்ம மக்கள் எல்லாம் என்னப்பா ஒரு எழவும் புரியலைனு புலம்பிட்டு.. சரி இன்னொரு தர பார்ப்போம்னு தொடர்ந்து  அஞ்சு தர, பத்துத் தர பார்த்துப்புட்டு, அதுக்கப்புறமும் முதல்தர பார்த்தபோது இருந்த அதே கேள்விகளோட லூசா அலைந்துகொண்டு.. "நல்லாப் படம் எடுத்தான் இந்த நாத்திகன்! இவன் நாசமாப் போகட்டும்! இப்படியா லூசுத்தனமா தமிழனுக்கே தமிழ்ப் படம் புரியாமல் எடுத்து வெளியிடுறது?"னு கொலை வெறியிலே திரிகிறார்கள்.

விஸ்வரூபம் ஒண்ணே இப்படி இருக்கும்போது புத்தியுள்ள எவன் தைரியமா காசப்போட்டு விஸ்வரூபம் ரெண்டைப் பார்ப்பான் சொல்லுங்க?

படம் 10 தரப் பார்த்தும் படம் புரியாதது மரமண்டை ரசிகனுடைய தப்புனே வச்சுக்குவோம்! அதே தப்பை அவன் ஏன் திரும்ப செய்றான், சொல்லுங்க? நல்ல மாட்டுக்கு ஒரு சூடுனு அவன் திருந்திடுவான் னு உங்களுக்கு தோணலையா? ஏன்???

ஆனால் நான் எல்லாரையும் குறைத்து மதிப்பிட மாட்டேன். ஒரு சில தைரியசாலிகள் மட்டும் விஸு ரெண்டையும் ஒரு 25 தர பார்த்துப்புட்டு, "எனக்கு இன்னும் ஒண்ணே புரியலை, ரெண்டு என்னைக்குப் புரிய?" னு தலையை பிச்சுக்கிட்டு அலைஞ்சாலும்.. தனக்கு புரியலைனு சொன்னா அசிங்கம், அதனால ஊர் உலகத்துக்கு மட்டும்,"கமல் மாரி ஒரு கலைஞன் கீழ் லோகத்திலும் இல்லை! மேலோகத்திலும் இல்லை!" பீலா விட்டுக்கிட்டு அலைவா. ஆனா அந்த எண்ணிக்கை நிச்சயம் குறைந்த ஒரு எண் தான்.
அதனால விஸ்வரூபம் ரெண்டும் மொக்கைப் படமா அமைய வாய்ப்புகள் அதிகம் னு நான் நம்புறேன்.

சினிமா தயாரிப்பு என்பது சூதாட்டம் போலதான். சூதாடியவன் போலவே சினிமால சம்பாரிச்சத சினிமாலே விடணும்னு அடம்பிடிக்கும் தயாரிப்பாளர்களை "எந்தக் கடவுளும்" காப்பாத்த முன்வரமாட்டான்!

10 comments:

மருதநாயகம் said...

அட! நீங்க வேற, இரண்டாம் பாகத்தை DTHல பார்க்குறதுக்கு இப்பவே பலர் ஆயிரம் ரூவாய ஓரமா எடுத்து வெச்சிருக்காங்களாம். இரண்டாம் பாகம் என்பதால் இரண்டாயிரம் கூட கொடுக்க ரெடியா இருக்காங்களாம்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

கமல் மீது நீங்கள் வைப்பது விமர்சனம் என்பதைத் தாண்டி வன்மத்திற்குள் நுழைகிறது.

நீங்கள் சொல்லும் அளவிற்கு விஸ்வரூபம் படம் புரிய முடியா அளவிற்கு இல்லை.அப்படிப் புரியவில்லை எனில் பார்ப்பவரிடம் புரிதலில் பிரச்னைகள் இருக்கின்றன என்பதுதான் பொருள்.

கமல் யோக்கிய சிகாமணி,உத்தம்புத்திரன் என்பது எனது பார்வை அல்ல...ஆனால் நீங்கள்,சாரி ரொம்ப ஓவர் !

வருண் said...

***மருதநாயகம் said...

அட! நீங்க வேற, இரண்டாம் பாகத்தை DTHல பார்க்குறதுக்கு இப்பவே பலர் ஆயிரம் ரூவாய ஓரமா எடுத்து வெச்சிருக்காங்களாம். இரண்டாம் பாகம் என்பதால் இரண்டாயிரம் கூட கொடுக்க ரெடியா இருக்காங்களாம்

3 May 2013 7:53 am***

:-))))

நீங்க, கமல் ரசிகர்னு எனக்குத் தெரியும். இருந்தும் என்னுடைய விமர்சனத்தை இவ்ளோ எளிதா எடுத்துக்கிறீங்களே? னு ஆச்சர்ப்பட வைக்கிறீங்க

வருண் said...

| * | அறிவன்#11802717200764379909 | * | said...

***

1) கமல் மீது நீங்கள் வைப்பது விமர்சனம் என்பதைத் தாண்டி வன்மத்திற்குள் நுழைகிறது.

2) நீங்கள் சொல்லும் அளவிற்கு விஸ்வரூபம் படம் புரிய முடியா அளவிற்கு இல்லை.அப்படிப் புரியவில்லை எனில் பார்ப்பவரிடம் புரிதலில் பிரச்னைகள் இருக்கின்றன என்பதுதான் பொருள்.***

அறிவன்: உங்க முதல் (1) குற்றச்சாட்டை நான் மறுக்காமல் ஏற்றுக்கிறேன். ஆனால்..உங்க பாயிண்ட் 2) விவாதத்துக்குரியது..

இந்தியாவில் தமிழ் நாட்டில் வாழும் மக்களில் விஸ்வரூபம் படம் புரியலைனு சொல்ற பெண்கள் என்னுடைய குடும்பத்திலேயே பலர் இருக்காங்க. அதை தெரிந்துகொள்ளுங்கள், ப்ளீஸ்! எங்களுக்கெல்லாம் அறிவு கொஞ்சம் கம்மிதான். அதை வெட்கத்தைவிட்டு ஒத்துக்கிறோம். அது எங்க தப்புதான்.

எங்க அறிவீனத்தால் நாங்க விஸ்வரூபத்தை தவிர்ப்பது தவறா என்ன???

நான் இங்கே கதையெல்லாம் விடவில்லை. ஒரு சாதாரண பாமர ரசிக/ரசிகனின் உணர்வுகளை வெளியிட்டேன்!

எனிவே, உங்க கருத்துக்கும், குற்றச்சாட்டுக்கும் நன்றி!

Jayadev Das said...

\\அபசகுனம் பிடிச்சாப்ல ஏண்டா இப்படி? எங்க கமல் மேலே உன் காண்டுக்கு ஒரு அளவே இல்லையா? கேவலமா இல்லை? னு சொல்றேளா? \\ ஆமாம் வருண் வாயை வச்சா அப்படியே நடக்கும்னு நம்புவதற்கு பேருதானே பகுத்தறிவு.......... உலக்கை நாயகனும் அவரது இரசிகர்களும் பகுத்தறிந்தவர்களாயிற்றே!!

\\விஸ்வரூபம் ஒண்ணே இப்படி இருக்கும்போது புத்தியுள்ள எவன் தைரியமா காசப்போட்டு விஸ்வரூபம் ரெண்டைப் பார்ப்பான் சொல்லுங்க?
\\ அதே........அதே..........

Try 🆕 said...

ஹாஹாஹா நல்லா கழுவி ஊத்துறீங்க

Santhose said...

Varun,

I agreed to your point # 2. This is not because of our T.N people, it is because of our theater sound settings.

I saw this movie first and I couldn't under stand the dialogue first. My friend told me to see this movie in a different theater who has the digital sound (some technical thing I don't know) and I clearly hear the sound and understand the movie.

drogba said...

ஹாய் வருண் நம்மட stupid BJ போன்ற அறிவாளிகள்??????? இல்லையா? விஷ்வரூபம்2 என்ன ஹிந்து கதையா? wait and see it will be another super duper hit

Unknown said...

கமல் எத்தனை தடவ புரியாம எடுத்தாலும் பார்க்க தான் போறோம் விமர்சனம் எழுதவாவது விடுங்க பாஸ்

VOICE OF INDIAN said...

மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்