Tuesday, July 9, 2013

புரோட்டாவும் நானும் நீரிழிவு வியாதியைத் தருகிறது?!

சமீபத்தில் இந்தியாவில் தோழி ஒருத்தியிடம் பேசும்போது, "மைதாவில் தயாரித்த எதுவும் சாப்பிடாதீர்கள்! அது உடல் நலக்கேட்டை உருவாக்கும்" என்று ஒரு இந்திய மருத்துவரல்ல, பலர் சொன்னதாக என்னிடம் அடித்துக் கூறினாள். அப்படியா?! என்று கேட்டுவிட்டு உண்மை என்ன என்று இணையதளத்தில் தேடிப்பார்த்தால்..

மைதா என்பது என்ன? ஏன் அது வெள்ளையாக இருக்கிறது? என்பதை இன்னொரு முறை படிக்கும்போது..

* மைதா, கோதுமையில் இருந்து தயார் செய்வது.

* கோதுமையை "ப்ளீச்" (ஒரு மாதிரியான ஆக்ஸிடேஷன் தான்) செய்வதால் மைதா வெள்ளையாகி விடுகிறது.

* கோதுமையை ப்ளீச் செத்ய்து மைதாவாக்குவதற்கு  "பென்சாயில் பெராக்ஸைட்" பயன் படுத்துவது உண்டு! அது  நல்லதல்ல! என்பதால் சில நாடுகளில் மைதாவை விற்பதற்கு தடை விதித்து உள்ளார்கள் என்கிற உண்மைகள் தெரிய வந்தது..

அதன் பிறகு, மைதா சாப்பிட்டால், அதில் உள்ள "அல்லாக்ஸான்" என்கிற வேதிப்பொருள், நமது  "பாங்க்ரியாஸ்" (கணையம்?) உள்ள பீட்டா செல்களை எல்லாம் கொன்று விடும். இன்சுளின் சுரக்கும் அந்த பீட்டா செல்கள் இறந்துவிட்டால், நமக்கு நீரிழிவு வியாதியைத்தரும் என்று பலர், முக்கியமாக "இந்தியர்கள்", கருத்து தெரிவித்து உள்ளார்கள்!!

இது சம்மந்தமாக ஆராய்ச்சியும் சரி, கருத்துக்களும் சரி, இந்தியர்கள்தான் தெரிவித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நீரிழிவு வியாதி அதிகம் உள்ளதுக்குக் காரணம் மைதாவை அதிகமாக பயன்படுத்துவதுதான் என்றும் ஒரு சிலர் ஆணித்தனமாக கருத்து தெரிவித்து உள்ளார்கள்.

சரி, இணையதள அறிவியல் விவாதக்களங்களில் இது சம்மந்தமாக என்ன சொல்கிறார்கள் (முக்கியமாக இந்தியரல்லாதவர்கள்) என்று பார்த்தால்..


* நம் பாங்க்ரியாஸில் உள்ள பீட்டா செல்கள், மைதாவில் உள்ள அல்லாக்ஸானால் கொல்லப்பட்டால், ஒருவருக்கு வரவேண்டிய டயபெட்டிஸ், நீரிழிவு வியாதி, டைப் ஒண்ணாக இருக்க வேண்டும்!

* இந்தியாவில் மைதா அதிகமாக சாப்பிடும் மக்களுக்கு வருவது டைப் 2 டயபட்டிஸ் (டைப் 2 நீரிழிவு வியாதி) என்று சொல்கிறார் மேலை நாட்டவர்.

காலங்காலமாக இந்தியர்களுக்கு சாபம்! எந்த எழவையும் ஒழுங்காகப் புரிந்து கொள்ளாமல், மூத்திரத்தை குடிக்கிறது நல்லது, மைதா சாப்பிட்டால் அது குடல்ல மாட்டிக்கும்னு எதையாவது அரைகுறை ஞானத்தை வைத்து உளற வேண்டியது. இதுதான் இந்தியர்கள் அடிக்கடி உலக அளவில் சாதிப்பது!

It is always the case..

They can't do any damn thing correctly! Let it be scientists or doctors or ramar pillai kind alchemists! They all fuck up one way or other!

எல்லாரும் போயி பகவத் கீதா படிங்க! படிச்சுப்புட்டு பரிணாமம் பத்தி வாய் கிழியப் பேசுங்க!

22 comments:

Jayadev Das said...

வரும் முன் காப்பது நல்லது. கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் பண்ணி புண்ணியமில்லை. வெள்ளைக்காரன் எதைக் கேட்டாலும் அதை நிரூபிக்க புள்ளி விவரம் ரெடி பண்ணி குடுப்பான். காசு தான் அவனுக்குத் தேவை. விஸ்கி, ரம்மு, ஏன் புகையிலை கூட நல்லதுன்னு புள்ளி விவரம் குடுத்திருக்கான். இத்தனை சொன்ன நீங்க மைதா எப்படி தயாராவுது, அதனால எப்படியெல்லாம் நல்லதுன்னு சொல்லியிருக்கலாம். அதையும் காணோம். நல்ல யோசனையைத் தர முடியாட்டாலும் கெடுக்காமலாவது இருக்கலாம்.

வருண் said...

நான் சீரியஸா சொல்றேன், ஜெயதேவ். நீங்க இதைப் பத்தி கொஞ்சம் ஆராய்ச்சி செய்து, ஒரு தொடர் பதிவு இல்லைனா எதிர்வினையாக உங்க கருத்தையும், உண்மையையும் எழுதலாம்.

மைதா நல்லதா இல்லை கெட்டதா? என்பது எனக்கு ஒரு பெரிய கேள்விக்குறியாத்தான் இருக்கு!

ப.கந்தசாமி said...

அய்யோ, இப்ப என் தூக்கத்தைக் கெடுத்துட்டாங்களே, பாவிங்க. உங்க தலைல இடி விழ.

மைதா சாப்பிடலாமா, கூடாதா? யாராச்சும் சொல்லீடுங்க.

MANO நாஞ்சில் மனோ said...

கேரளாவில் பரோட்டா யாரும் சாப்பிடுவது இல்லைன்னு கேரளா நண்பன் ஒருவன் சொன்னான், அவன் சொன்னதுக்கும் இதப் பதிவுக்கும் பொருந்திப் போகுதே...!

வருண் said...

***பழனி. கந்தசாமி said...

அய்யோ, இப்ப என் தூக்கத்தைக் கெடுத்துட்டாங்களே, பாவிங்க. உங்க தலைல இடி விழ.

மைதா சாப்பிடலாமா, கூடாதா? யாராச்சும் சொல்லீடுங்க.***

வாங்க சார்!

மைதாவைவிட கோதுமை நல்லது என்பது உண்மைதான் சார். மைதா எப்படி தயாரிக்கிறாங்க என்பதைப் பொருத்து அது நல்லது கெட்டது னு சொல்ல முடியும். அதாவது அதை எப்படி "ப்ளீச்" செய்கிறார்கள் என்பதை பொருத்து.

உங்களுக்கு நான் சொல்வது கோதுமை சாப்பிடுங்கள் என்பதே!

மைதா பற்றி இன்னும் கொஞ்சம் படித்து வந்து சொல்கிறேன். இப்போதைக்கு எதையும் நான் நம்புவதாக இல்லை (கெட்டதுனு சொல்வதை)!

வருண் said...

**** MANO நாஞ்சில் மனோ said...

கேரளாவில் பரோட்டா யாரும் சாப்பிடுவது இல்லைன்னு கேரளா நண்பன் ஒருவன் சொன்னான், அவன் சொன்னதுக்கும் இதப் பதிவுக்கும் பொருந்திப் போகுதே...!***

வாங்க நாஞ்சில் மனோ!

நம்ம ஊர்லயே டாக்டர்கள் மைதா சாப்பிட வேண்டாம் என்கிறார்களாம்ங்க.

கேரளாவில் அதுபோல் ஒரு "புரளி" பரவியிருக்க வாய்ப்பிருக்கு! ஆனால் அதனால் டயபட்டிஸ் வருவது குறைந்து இருக்கா? என்பதற்கு பதில் கிடைக்குமா? :)

Anonymous said...

மைதா மட்டுமல்ல நார்ச்சத்து நீக்கப்பட்ட மாவுப் பொருட்கள் அதிகம் உண்பதால் கொழுப்புக் கூடும், இதய நோய் வரும் அபாயம் உள்ளது. நிற்க மைதா சாப்பிட்டால் நீரிழிவு வருமா? என்ன எழவுடா இது, அப்படி எனில் அதிகம் பஞ்சாப் காரனுக்குத் தான் நீரிழிவு வந்திருக்கும். இந்தியர்களின் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணங்கள் மரபணு மற்றும் உடற்பயிற்சியின்மை, அதிக மன அழுத்தமுள்ள வாழ்வியல் முறைகளே. விவேகானந்தர் ஒருமுறை கீதையை வாசிப்பதை விட கால்பந்து விளையாடுவது நல்லது என, புரிஞ்சுக்கோங்க சாமியோவ்.. விளையாட்டு மைதானத்தை திறவுங்கள், விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

நம்பள்கி said...

கேரளாவில் மைதா சாப்பிடுவதில்லை என்பது உண்மையல்ல!

லக்ஷ்மி மில்ஸ் தயாரிக்கும் மைதா கேரளாவிற்கு மட்டுமே போகிறது. இந்த லக்ஷ்மி மில்ஸ்..திருநெல்வேலி-கோவில்பட்டி இரண்டுக்கும் நட்ட நடுவில் உள்ள ஒரு ஊரில் உள்ளது.

இந்த மைதாவை மொத்தமாக வாங்குவது---கேரளா சேட்டன்கள் தான். அந்த மைதா பிராண்டின் 'பேர் 'குத்து விளக்கு' என்று நினைக்கிறேன்.

அந்த மில்லை மேலும் கீழும் சுத்திப் பார்த்தவன் என்ற முறையில் (மூன்று வருடம் முன்பு) மைதா எப்படி தாயரிக்கப் படுகிறது என்று விலாவரியாக ...அடுத்த இடுகையில்...

மைதாவில் ஒரு மன்னாங்கட்டியும் கலப்பபதில்லை. மைதா கோதுமையின் ஒரு பாகமே. பயப்படவேண்டாம்.

அப்படி இருந்தால் நான் சாப்பிடுவேனா? இல்லை என் மனைவிய தான் செய்து கொடுப்பார்களா?

எங்கள் இரண்டு பெருக்கும் diabetes இல்லை! இனி வருதா என்று பார்ப்போம்.

disclaimer:
லக்ஷ்மி மில்ஸ்க்கும் எனக்கும் ஒரு சம்பந்தம் இல்லை. There is no conflict of interest.

கலாகுமரன் said...

type 1 diabetes டீனேஜ்க்கு கீழே உள்ளவங்களுக்கும் type2 மத்த வயசுக்காரங்களுக்கும் வருவதாக படித்தேன் வியாதி காரர்களுக்கு மைதா வேண்டாம்னுதான டாக்டருங்க அட்வைசு ...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நம்ம ஊர்லயே டாக்டர்கள் மைதா சாப்பிட வேண்டாம் என்கிறார்களாம்ங்க.//



மைதா வேண்டாம்ன்னு சொல்லி எந்த பேச்சும் வந்த மாதிரி தெரியல.,


நெரயா பேஸ்ட் விளம்பரம், ஹெல்த் ட்ரிங் விளம்பரம் இதிலெல்லாம் நிறைய சங்கங்களின் பெயர் சொல்லி சிபாரிசு செய்யறாங்க.., அதில் ஏதாவது ஒரு சங்கம் இத செய்திருக்கலாம்.,

வருண் said...

வாங்க சுரேஷ்!

கீழே உள்ளது தினமலரில் வந்த செய்தி!!!
---------------


பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2013,00:32 IST
கருத்தை பதிவு செய்ய

மதுரை: மைதாவில் ரசாயன கலவை பயன்படுத்தப் படுவதாகவும், உற்பத்தி, விற்பனைக்கு தடை கோரியும் தாக்கலான வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை வக்கீல் மது தாக்கல் செய்த பொதுநல மனு: கோதுமையிலிருந்து மைதா தயாரிக்கப்படுகிறது. மைதாவாக மாற்ற, "பென்சாயில் பெராக்சைடு' மற்றும், "அலோக்சான்ஸ்' ரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். இதனால், மக்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மைதாவிலிருந்து புரோட்டா, பீட்சா உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்கா, சீனாவில் மைதாவிற்கு தடை விதித்துள்ளனர். மைதாவிற்கு தடை கோரி, மத்திய, மாநில அரசுகளுக்கு புகார் செய்தேன். மைதா தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர், மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் ஏ.செல்வம், எம்.சத்தியநாராயணன் பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் எஸ்.முத்துக்கிருஷ்ணன் ஆஜரானார். மத்திய உள்துறை செயலர், தமிழக உணவுத் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை, ஜூன் 6க்கு தள்ளி வைத்தனர்.

----------------------------

Sabapathy Anbuganesan said...

இது தொடர்பான கட்டுரை ஒன்றினை ஏற்கனவே படித்துள்ளேன். இதனைப் பற்றி இணையத்தில் தேடப்போக தலை சுற்றியது. கீழ்க்காணும் ஒரு பதிவைப் பாருங்கள்
http://www.kazhuku.com/2011/11/blog-post_18.html

கவியாழி said...

நல்ல பதிவைப் புரியாமா அதிலுள்ள குறைகளை மட்டும் சொல்லாமல் நீங்களே அதைப் பற்றி விரிவான விளக்கமாக பதிவிடலாமே?.பயனுள்ளத் தகவல் பரிமாறிய வருணுக்கு நன்றி

'பரிவை' சே.குமார் said...

உடல் நலம் காப்போம்...
பரோட்டா மட்டுமல்ல மைதாவில் செய்யும் எல்லாவற்றையும் குறைப்போம்...

சார்வாகன் said...

வணக்கம் மச்சான்,
மைதா நல்லதா இல்லையா என்பதை விட நம்ம மாப்ளே தாசு மிகவும் நல்லவர் என்பதை அறிவேன்.பாவம் வெள்ளந்தியா நல்லதுக்குதானே சொல்ராறு.

நான் திருமணம் முன்பு தினமும் பரோட்டா சாப்பிட்டது உண்டு.இதுவரை எந்த சிக்கலும் வரவில்லை.

பரோட்டா மாதத்தில் சிலமுறை நல்ல உண‌வகம் அல்லது வீட்டில் தயாரித்து உண்பதால் பெரிய சிக்கல் வராது என பொதுவாக சொல்லிவிடுவோம்!! ஹி ஹி!!

நன்றி!!!

வருண் said...

***நிரஞ்சன் தம்பி said...

மைதா மட்டுமல்ல நார்ச்சத்து நீக்கப்பட்ட மாவுப் பொருட்கள் அதிகம் உண்பதால் கொழுப்புக் கூடும், இதய நோய் வரும் அபாயம் உள்ளது. நிற்க மைதா சாப்பிட்டால் நீரிழிவு வருமா? என்ன எழவுடா இது, அப்படி எனில் அதிகம் பஞ்சாப் காரனுக்குத் தான் நீரிழிவு வந்திருக்கும். இந்தியர்களின் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணங்கள் மரபணு மற்றும் உடற்பயிற்சியின்மை, அதிக மன அழுத்தமுள்ள வாழ்வியல் முறைகளே. விவேகானந்தர் ஒருமுறை கீதையை வாசிப்பதை விட கால்பந்து விளையாடுவது நல்லது என, புரிஞ்சுக்கோங்க சாமியோவ்.. விளையாட்டு மைதானத்தை திறவுங்கள், விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.***

வாங்க நிரஞ்சன் தம்பி!

நார்சத்து குறைவு என்பது உண்மைதான். கோதுமை, மைதாவை விட நல்லது என்பதும் உண்மைதான்.

ஆனால், மைதா உடலுக்கு தீங்கு விலைவிக்குமா? அதில் உள்ள வேதிப்பொருள்கள் பல நோய்களை உருவாக்குமா? என்பது பெரிய குழப்பமாகவும் புதிராகவும் இருக்கு!

பஞ்சாபி ஒரு புறம், வெள்ளைக் காரர்கள் எல்லாம் white bread சாப்பிடுறாங்க. அவர்களுக்கும் இதே பிரச்சினை வரலாம்..

வருண் said...

***நம்பள்கி said...

கேரளாவில் மைதா சாப்பிடுவதில்லை என்பது உண்மையல்ல!

லக்ஷ்மி மில்ஸ் தயாரிக்கும் மைதா கேரளாவிற்கு மட்டுமே போகிறது. இந்த லக்ஷ்மி மில்ஸ்..திருநெல்வேலி-கோவில்பட்டி இரண்டுக்கும் நட்ட நடுவில் உள்ள ஒரு ஊரில் உள்ளது.

இந்த மைதாவை மொத்தமாக வாங்குவது---கேரளா சேட்டன்கள் தான். அந்த மைதா பிராண்டின் 'பேர் 'குத்து விளக்கு' என்று நினைக்கிறேன்.

அந்த மில்லை மேலும் கீழும் சுத்திப் பார்த்தவன் என்ற முறையில் (மூன்று வருடம் முன்பு) மைதா எப்படி தாயரிக்கப் படுகிறது என்று விலாவரியாக ...அடுத்த இடுகையில்...

மைதாவில் ஒரு மன்னாங்கட்டியும் கலப்பபதில்லை. மைதா கோதுமையின் ஒரு பாகமே. பயப்படவேண்டாம்.

அப்படி இருந்தால் நான் சாப்பிடுவேனா? இல்லை என் மனைவிய தான் செய்து கொடுப்பார்களா?

எங்கள் இரண்டு பெருக்கும் diabetes இல்லை! இனி வருதா என்று பார்ப்போம்.

disclaimer:
லக்ஷ்மி மில்ஸ்க்கும் எனக்கும் ஒரு சம்பந்தம் இல்லை. There is no conflict of interest.***

நீங்க சொல்றதைப் பார்த்தால் குத்து விளக்கு மைதா தயாரிக்கிறது உங்க சொந்த பந்தமோ, இல்லை நண்பர் வட்டமோனுதான் தோணுது! :)

வருண் said...

***கலாகுமரன் said...

type 1 diabetes டீனேஜ்க்கு கீழே உள்ளவங்களுக்கும் type2 மத்த வயசுக்காரங்களுக்கும் வருவதாக படித்தேன் வியாதி காரர்களுக்கு மைதா வேண்டாம்னுதான டாக்டருங்க அட்வைசு***

முட்டை புரோட்டா, வீச்சுப் புரோட்டா, நான் எல்லாம் சாப்பிட வேணாம்னு சொல்றீங்களா? :)

வருண் said...

***anbu said...

இது தொடர்பான கட்டுரை ஒன்றினை ஏற்கனவே படித்துள்ளேன். இதனைப் பற்றி இணையத்தில் தேடப்போக தலை சுற்றியது. கீழ்க்காணும் ஒரு பதிவைப் பாருங்கள்
http://www.kazhuku.com/2011/11/blog-post_18.html***

நன்றி அன்பு. உங்க தொடுப்பின் மூல இதே விசயத்தை ப்லரும் அலசி இருக்காங்கனு தெரிந்து கொண்டேன்.

குழப்பம்தான் மிஞ்சுகிறது!

வருண் said...

***கவியாழி கண்ணதாசன் said...

நல்ல பதிவைப் புரியாமா அதிலுள்ள குறைகளை மட்டும் சொல்லாமல் நீங்களே அதைப் பற்றி விரிவான விளக்கமாக பதிவிடலாமே?.பயனுள்ளத் தகவல் பரிமாறிய வருணுக்கு நன்றி***

பலவிதமான ஆர்ட்டிக்கிள் படித்த பிறகும் குழப்பம்தான் மிஞ்சுகிறது. நான் எதையும் அடித்துச் சொல்வதாக இல்லை.

மைதாவா கோதுமையா? எது நல்லது? என்றால், நிச்சய்ம் கோதுமைதான் நல்லது. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடிந்தது.

வருண் said...

***சே. குமார் said...

உடல் நலம் காப்போம்...
பரோட்டா மட்டுமல்ல மைதாவில் செய்யும் எல்லாவற்றையும் குறைப்போம்...**

உண்மைதான் குமார்! :)

வருண் said...

***சார்வாகன் said...

வணக்கம் மச்சான்,
மைதா நல்லதா இல்லையா என்பதை விட நம்ம மாப்ளே தாசு மிகவும் நல்லவர் என்பதை அறிவேன்.பாவம் வெள்ளந்தியா நல்லதுக்குதானே சொல்ராறு.

நான் திருமணம் முன்பு தினமும் பரோட்டா சாப்பிட்டது உண்டு.இதுவரை எந்த சிக்கலும் வரவில்லை.

பரோட்டா மாதத்தில் சிலமுறை நல்ல உண‌வகம் அல்லது வீட்டில் தயாரித்து உண்பதால் பெரிய சிக்கல் வராது என பொதுவாக சொல்லிவிடுவோம்!! ஹி ஹி!!

நன்றி!!!***

தாசுவோட ஒரே காமெடிதான். வெள்ளையா இருக்கதை சாப்பிடாதேனு சொன்னாரு. அப்போ மைதா சாப்பிடாதேனுதான் அவர் சொல்லணும்?

ஏதோ வெள்ளைக்காரன் சொன்னான்னு நான் சொன்னதும், அவருக்கு தேசப்பற்று வந்துருச்சு. இப்போ தாசு என்ன சொல்றாருனு நீங்க தான் சொல்லணும் மச்சான்?

வெள்ளையா இருந்தாலும் மைதாவைச் சேர்த்துக்கலாம்னா??

தாசுக்கு புரோட்டா, நான் எல்லாம் ரொம்ப பிடிக்குமோ? :)))