Thursday, August 15, 2013

உங்க பதிவு பலரையும் சென்றடையணுமா? இவைகளைத் தவிருங்கள்!

என்னங்க இது!! என் பதிவில் எந்த கெட்டவார்த்தையும் இல்லை! ஏன் தமிழ்மண சூடான இடுகைகள் முகப்பில் தெரியாமல்ப் போயி ஒளிந்துகொண்டது? என்ற குழப்பம் ஒரு சில பதிவர்களுக்கு வருவதுண்டு. அதன்பிறகு அவர்கள் அந்தக் காரணத்தைப் புரிந்துகொளவதும் உண்டு. "முத்தம்மா"னு பேரு உள்ள பதிவுகள் சமீபத்தில் தமிழ்மண சூடான இடுகைகள் முகப்பிலிருந்து புறந்தள்ளப்பட்டதுக்கு காரணம், முத்தம்மாவில் இருக்கும் "முத்தம்"தான்னு நம்புகிறேன்! கணிணி உங்களைவிட அறிவாளி கெடையாது. ஏதாவது கெட்டவார்த்தைகளை வடிகட்டணும்னு ஒரு சில "வடிகட்டி"களை தமிழ்மணம் திரட்டி பயன்படுத்தும்போது இதுபோல் சில தவறுகள் வருவதைத் தவிர்க்க முடியாது!

18, முத்தம், கவர்ச்சி போன்ற வார்த்தைகள் உங்கள் தலைப்பில் இருந்தால் சூடான இடுகைகள் தமிழ்மண முகப்பில் வராமல் பின் தள்ளப்படும்! யாராவது பதிவர்கள் புரியாமல் இன்னும் குழம்பிக் கொண்டு இருந்தால் அவர்களுக்கு உதவுமேனு ஒரு நல்ல எண்ணத்தில்தான் இந்த சிறு பதிவு! நன்றி, வணக்கம்!

4 comments:

Anonymous said...

ஓ ! இப்படியும் உள்ளதா?! எனது வலைதளமே இணைக்கப்படாமல் நிலுவையில் உள்ளதே..! என் பேரே சிக்கலோ ?!

Yaathoramani.blogspot.com said...

ஓ அப்படியும் வாய்ப்பிருக்கிறதா
சுவாரஸ்யமான தகவுலுடன் கூடிய பதிவுக்கு
வாழ்த்துக்கள்

வருண் said...

*** நிரஞ்சன் தம்பி said...

ஓ ! இப்படியும் உள்ளதா?! எனது வலைதளமே இணைக்கப்படாமல் நிலுவையில் உள்ளதே..! என் பேரே சிக்கலோ ?!***

வாஙக நிரஞ்சன் தம்பி! தமிழ்மண நிர்வாகக் குழுவில் நான் இல்லைங்க. அதனால ஏன் நிலுவையில் இருக்குனு எனக்குத் தெரியலை. :)

வருண் said...

***Ramani S said...

ஓ அப்படியும் வாய்ப்பிருக்கிறதா
சுவாரஸ்யமான தகவுலுடன் கூடிய பதிவுக்கு
வாழ்த்துக்கள்***
வாங்க ரமணி சார்.:) நான் கவனித்த வரைக்கும் தலைப்பில் 18 (பிள்ஸ்), கவர்ச்சி, முத்தம் போன்ற வார்த்தைகளை "கெட்ட வார்த்தையாக" கருதி வடிகட்டி அப்பதிவுகளை சூடான இடுகையில் தமிழ்மண முகப்பில் வராமல் பார்த்துகிறாங்க. இன்னும் பல வார்த்தைகள் அப்படி "கணிக்க"ப் படுகிறது.